சமஷ்டி பற்றி தெரியாதவர்கள் பிரிவினை வாதத்தை தூண்டி வருகின்றனர்

ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு என்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன

0 1,108

சமஷ்டி என்றால் என்னவென்று தெரியாதவர்களே பிரிவினை வாதத்தை தூண்டிவருகின்றனர். பிரிவினை வாத பிரசாரம் இல்லாமல் இவர்களால் அரசியல் செய்யமுடியாது. ஒற்றையாட்சிக்குள்ளே அதிகார பகிர்வு இடம்பெறும் என சுகாதார மற்றும் போசணை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அர­சாங்கம் சமஷ்டி ஆட்­சியை ஏற்­ப­டுத்தப் போவ­தாக மேற்­கொள்­ளப்­படும் பிர­சாரம் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

அர­சி­ய­ல­மைப்பு வரைபு எதிர்­வரும் காலங்­களில் பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்கப்பட்ட இருக்­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தின் அனு­மதி கிடைத்த பின்­னரே அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிப்பு நட­வ­டிக்­கைகள் இடம்­பெறும். அத்­துடன் ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­காரப் பகிர்வு இடம்­பெ­ற­வேண்டும் என்­பதே பெரும்­பா­லா­ன­வர்­களின் கோரிக்­கை­யாக இருக்­கின்­றது.

என்­றாலும் அதி­காரப் பகிர்வு தொடர்­பாக சிலர் விளங்­கிக்­கொள்­ளாமல் நாட்டை பிரித்து வழங்­கப்­போ­வ­தா­கவும் சமஷ்டி ஆட்­சியை ஏற்­ப­டுத்தப் போவ­தா­கவும் தெரி­வித்து வரு­கின்­றனர். இவர்­க­ள் சமஷ்டி என்றால் என்ன? அதி­கார பகிர்வு என்றால் என்ன? என்று தெரி­யாமல் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்து வரு­கின்­றனர். அதனை விளங்­கிக்­கொள்­ளா­மலே நாட்டை பிரித்து சமஷ்டி ஆட்­சியை ஏற்­ப­டுத்­தப்­போ­வ­தாக பிர­சாரம் செய்­கின்­றனர்.

அத்­துடன் இவர்கள் 1950 முதல் இவ்­வா­றான பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு சென்­ற­தாலே நாட்டில் யுத்தம் ஏற்­படும் நிலைக்கு சென்­றது. மீண்டும் அவ்­வா­றான நிலையை யாரும் விரும்­ப­மாட்­டார்கள். ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­கார பகிர்வு இடம்­பெ­று­வதை எவ்­வாறு சமஷ்டி ஆட்சி என்று தெரி­விக்க முடியும். அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக இவர்கள் என்­ன­வேண்­டு­மா­னாலும் தெரி­விப்­பார்கள்.

அத்­துடன் எதிர்க்­கட்­சிகள் தேர்­த­லுக்கு செல்­ல­வேண்டும் என தெரி­வித்து வரு­கின்­றன. தற்­போ­தைய நிலையில் தேர்­த­லுக்கு செல்­ல­வேண்டும் என்றால் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை உறுப்­பி­னர்­களின் ஆத­ரவு தேவை. அவ்­வா­றில்­லாமல் இவர்களுக்கு தேர்தல் தேவை என்பதற்காக தேர்தலை நடத்த முடியாது. மேலும் நாட்டின் தற்போதைய நிலையில் ஜனாதிபதி தேர்தலே ஆரம்பமாக இடம்பெறும் சாத்தியம் இருக்கின்றது என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.