போதிய உடன்பாடின்மை இழுபறியை ஏற்படுத்தியுள்ளது

இரணைமடு விவகாரம் குறித்து ஹக்கீம்

0 704

இர­ணை­மடு நீர்த்­தேக்­கத்தை சூழ­வுள்ள கிளி­நொச்சி மாவட்­டத்தில் விவ­சா­யிகள் குழாய் வழி­யான குடிநீர் விநி­யோகத் திட்­டத்தை எதிர்ப்­பதன் பின்­ன­ணியில்  அர­சி­யல்­வா­திகள் சில­ருக்­கி­டை­யி­லான போதிய உடன்­பா­டின்மை  இழு­பறி நிலையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.  தற்­பொ­ழுது நாட­ளா­விய ரீதியில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நீர் விநி­யோகத் திட்­டங்கள் தொடர்­பான மீளாய்வுக் கூட்டம் நேற்று வியா­ழக்­கி­ழமை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்­ற­போது, அதற்குத் தலைமை தாங்­கிய  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், நகர திட்­ட­மிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்­ச­ரு­மான ரவூப்  ஹக்கீம் இதனை கூறினார்.

இக்­கூட்­டத்தில்  இரா­ஜாங்க அமைச்சர் லக்கி ஜய­வர்­தன, செய­லாளர் பிரி­யந்த மாயா­துன்ன, அமைச்சின் உய­ர­தி­கா­ரிகள், பல்­வேறு பிர­தே­சங்­க­ளுக்கும் பொறுப்­பான தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு சபையின் பிரதிப் பொது முகா­மை­யா­ளர்கள், உதவிப் பொது முகா­மை­யா­ளர்கள் ஆகியோர் கலந்­து­கொண்­டனர். நாடெங்­கிலும் முன்­னெ­டுக்­கப்­படும் 20 பாரிய குழாய் நீர் வழங்கல் திட்­டங்கள் மற்றும்  கழி­வுநீர் சுத்­தி­க­ரிப்பு செயற்­றிட்­டங்கள் என்­பன பற்றி இதன்­போது விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டன.

குறித்த மீளாய்­வுக்­கூட்­டத்தில் அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறி­ய­தா­வது,

அண்­மையில் ஏற்­பட்ட வெள்ள அனர்த்­தத்தின் பாதிப்­பு­களை நேரில் கண்­ட­றி­வ­தற்­காக நாங்கள் கிளி­நொச்சி மாவட்­டத்­திற்கு சென்­றி­ருந்­த­போது இர­ணை­மடு நீர்த்­தேக்­கத்தை நேரில் பார்­வை­யிட்டேன். இப்­பா­ரிய நீர்­தேக்­கத்­தி­லி­ருந்து பெறப்­படும்  நீரின் மூலம், அப்­பி­ர­தேச விவ­சா­யி­க­ளுக்கு பாதிப்­பற்ற விதத்தில் கிளி­நொச்சி மாவட்­டத்­திற்கு மட்­டு­மல்­லாது, யாழ் குடா­நாட்டின் குடிநீர் தேவை­யையும் நிவர்த்தி செய்ய முடியும்.

இரா­ஜாங்­கனை நீர்த்­தேக்கம் போன்­றவை அமைந்­துள்ள பிர­தேங்­களில் நீர்ப்­பா­சன திணைக்­கள அதி­கா­ரி­களின் ஒத்­து­ழைப்பு இன்­மை­யி­னா­லேயே நிலைமை சிக்­க­ல­டைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­படும் அதே­வே­ளையில்,  இர­ணை­மடு நீர்த்­தேக்­கத்தை சூழ­வுள்ள கிளி­நொச்சி மாவட்­டத்தில் குடிநீர் விநி­யோகத் திட்­டத்தை  விவ­சா­யிகள் எதிர்ப்­பதன் பின்­ன­ணியில் அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கி­டை­யி­லான முரண்­பா­டுகள் இழு­பறி நிலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இர­ணை­மடு நீர்த்­தேக்­கத்­திற்கு பதி­லாக,வேறு நீர்த்­தேக்­கங்­க­ளி­லி­ருந்து நீரை பெறு­வது பற்­றியும் எனது கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. எவ்­வா­றா­யினும், இர­ணை­மடு நீர்த்­தேக்­கத்தை மையப்­ப­டுத்தி மேற்­கொள்­ளப்­படும் நீர்­வி­நி­யோக திட்­டத்தைக் கைவிட்­டு­விட முடி­யாது. விவ­சா­யிகள் மற்றும் பொது­மக்கள் மத்­தியில் இது­பற்­றிய தெளிவை ஏற்­ப­டுத்­து­வ­தோடு, அர­சியல் ரீதி­யா­கவும் இணக்­கப்­பாடு எட்­டப்­பட வேண்டும்.

சுத்­த­மான குடி­நீரை பெற்­றுக்­கொள்­வதில் சிர­மத்தை எதிர்­நோக்கும் யாழ்ப்­பாண குடா­நாடு, கற்­பிட்டி ஆகிய பிர­தே­சங்­க­ளுக்கு கடல் நீரை சுத்­தி­க­ரித்து தூய குடி­நீ­ராக வழங்கும் செயற்­றிட்­டத்தை பற்றி கூடுதல் கவனம் செலுத்தி வரு­கிறோம். அம்­பாறை மாவட்­டதில் பொத்­துவில் பிர­தே­சத்­திற்கும் கடல் நீரை சுத்­தி­க­ரித்து குடி­நீ­ராக வழங்­கு­வது பற்றி ஆலோ­ச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டன. ஆனால் பொத்­து­விலை பொறுத்­த­வ­ரையில் ஹெட ஓயா திட்­டத்தின் மூலம் நீரை பெற்­றுக்­கொள்­வதே உகந்­த­தாகும் என்றார்.

மீளாய்வு கூட்­டத்தில் கருத்து தெரி­விக்கும் போது வட­மா­கா­ணத்­திற்கு பொறுப்­பான நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு சபையின் பிரதிப் பொது முகா­மை­யாளர் பார­தி­தாசன் விளக்கிக் கூறினார். கிளி­நொச்சி மற்றும் யாழ். மாவட்ட மக்­களின்  குடிநீர் தேவையை நிவர்த்­திக்­கக்­கூ­டிய மாற்­றுத்­தீர்­வு­க­ளையும் அவர் முன்­வைத்தார்.

குழாய் வழி­யாக நீரை வழங்­கு­வ­தற்கு, இயந்­திர பயன்­பாட்­டுக்கு செலவு கூடிய நீர் மின்­சா­ரத்­திற்கு பதி­லாக சூரிய சக்­தி­யைக்­கொண்டு பெறப்­படும் மின்­சா­ரத்தை பயன்­ப­டுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதன்போது முன்னர் அங்கு பணியாற்றிய பிரதி பொதுமுகாமையாளர் உமர் லெப்பையும் கருத்து தெரிவித்தார். அமைச்சர் ஹக்கீம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பான மேலதிகாரிகளிடம் தனித்தனியாக விளக்கங்களை கோரினார். எஞ்சிய காலப்பகுதிக்குள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு, முன்னெடுக்கப்படுகின்ற செயற்றிட்டங்களை துரிதப்படுத்தி நிறைவு செய்ய வேண்டும் எனவும் அவர் பணிப்புரை விடுத்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.