புத்த பெருமானின் சிலைகளை பொருத்தமான இடங்களில் மாத்திரமே வைக்கவேண்டும்
மாவனெல்லை சம்பவத்தின் பின்னணியில் அரசியல் என்கிறார் கலகம தம்மரங்சி தேரர்
புத்தரின் சிலைகளை பொருத்தமான இடங்களில் மாத்திரமே வைக்கவேண்டும். கண்ட இடங்களில் வைப்பது புத்த பெருமானுக்கு செய்யும் அகெளரவமாகும்.
அத்துடன் மாவனெல்லை சம்பவத்துக்கு பின்னணியில் குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்கள் இருக்கலாம். அதனால் சிங்கள – முஸ்லிம் மக்கள் முரண்பட்டுக்கொள்ளாமல் சிந்தித்து செயற்படவேண்டும் என கலகம தம்மரங்சி தேரர் தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், சகல இன மக்களும் தங்கள் மதத்தை பின்பற்றி வாழும் உரிமை இந்த நாட்டில் இருக்கின்றது.
அதனால் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அச்சமின்றி அவர்களின் மதப்போதனைகளின் பிரகாரம் செயற்பட முடியும். அதனை யாராலும் தடுக்க முடியாது.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாவனெல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றிந்தது. இதனால் அந்த பிரதேசத்தில் சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் அச்சமான சூழல் ஏற்பட்டுள்ளது. பெளத்த மதத்தை பொறுத்தவரையில் புத்த சிலைகள் சுத்தமான, கெளரவமான இடங்களிலே வைக்கப்படவேண்டும். ஆனால் இன்று அனைத்து தெருக்களிலும் சிலைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இது புத்த அதனால் சிங்கள முஸ்லிம் மக்கள் இவ்வாறான சம்பவங்கள் மூலம் ஆத்திரம் கொள்ளாமல் நிதானமாக செயற்படவேண்டும் என்றார்.
-Vidivelli