கூட்டணி தொடர்பில் இறுதித் தீர்மானமில்லை

துமிந்த திஸாநாயக்க திட்டவட்டம்

0 680

மஹிந்த ­ரா­ஜபக்ஷ தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வுடன், ஸ்ரீலங்கா சுதந்­தி­ர­கட்சி இணைந்து கூட்­டணி அமைப்­பது தொடர்பில் இறுதித் தீர்­மானம் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.  இவ்­வாறு கூட்­டணி அமைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக சிலர் தெரி­வித்து வரு­கின்­றமை அவர்­க­ளு­டைய தனிப்­பட்ட  நிலைப்­பா­டாக இருக்­கலாம். எனினும் கட்சி ரீதியில் உத்­தி­யோ­க­பூர்­வ­மான தீர்­மா­ன­மெ­துவும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் துமிந்த திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி வில­கி­யுள்ள நிலையில் அடுத்த கட்­ட­மாக ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்து கூட்­டணி அமைத்து செயற்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­படும் கருத்­துக்கள் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்தும் அவர் குறிப்­பி­டு­கையில்,

கடந்த ஒக்­டோபர் மாதம் 26 ஆம் திக­தியின் பின்னர் நாட்டில் ஏற்­பட்­டி­ருந்த அர­சியல் நெருக்­க­டி­க­ளுக்குத் தீர்வு காணப்­பட்­டுள்­ளது. அதன் பின்னர் அர­சாங்­கத்­திலும் கட்­சி­க­ளுக்­குள்ளும் பல்­வேறு மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன. ஒவ்­வொரு கட்­சி­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஒவ்­வொரு உறுப்­பி­னர்­க­ளுக்கும் தனிப்­பட்ட கருத்­துக்கள், ஆலோ­ச­னைகள் என்­பன காணப்­படும். அது குறித்து எம்மால் எதுவும் கூறமுடி­யாது.

இவ்­வாறு தனித்­த­னி­யாக முன்­வைக்­கப்­பட்ட கருத்­துக்­களின் அடிப்­ப­டை­யி­லேயே பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைதல் தொடர்­பான செய்­தி­களும் வெளி­யி­டப்­ப­டு­கின்­றன. சிலர் ஊட­கங்­களில் குறிப்­பி­டு­வதன் மூலமும், பத்­தி­ரிகை செய்­தி­களின் மூலமே நான் இவ்­வா­றான கருத்­துக்­களை அவ­தா­னித்தேன். எனினும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எந்­த­வொரு தீர்­மா­னமும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

அத்­தோடு பாரா­ளு­மன்­றத்தில் சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­வது குறித்தும் தீர்­மா­னங்கள் எவையும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் என்ற அடிப்­ப­டையில் ஏனைய கட்­சி­க­ளுடன் இணைந்து கூட்டணி அமைத்தல் அல்லது வேறு வழிமுறைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தீர்மானிக்க வேண்டும். அவரது ஆலோசனைகளின் பின்னர் கட்சி உறுப்பினர்கள் என்ற ரீதியில் நாம் எமது நிலைப்பாட்டினை அறிவிப்போம் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.