மாவனெல்லை சம்பவத்துக்கும் பெரும்பான்மை முஸ்லிம்களுக்கும் தொடர்பில்லை: பொதுபலசேனா

0 1,253

மாவ­னெல்ல சம்­ப­வங்­களில் பெரும்­பான்மை முஸ்­லிம்­களின் தொடர்பு இல்லை. அடிப்­ப­டை­வாத முஸ்­லிம்கள், சில அர­சி­யல்­வா­திகள் மற்றும் சர்­வ­தேச உத­விகள் மூலமே இவ்­வா­றான செயல்­களை முன்­னெ­டுக்­கின்­றனர்.

இச்­சந்­தர்ப்­பத்தில் சிங்­கள பௌத்­தர்கள் குறிப்­பாக பௌத்த இளை­ஞர்கள் மிகவும் புத்­தி­யுடன் தங்­க­ளது கண்­ட­னங்­களை வெளி­யிட வேண்டும், செயற்­ப­ட­வேண்டும் என பொது­ப­ல­சேனா வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது. அவ் அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, மாவ­னெல்­லையில் முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களால் புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­டமை தொடர்பில் நாம் ஆச்­ச­ரி­யப்­ப­ட­வில்லை. குழப்­பங்­க­ளுக்­குள்­ளா­க­வில்லை. ஏனென்றால் முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் பற்றி நாம் நன்கு அறிந்து வைத்­தி­ருந்தோம். இந்த அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ராக நாம் பொறுப்­புடன், புத்திக் கூர்­மை­யு­டனே செயற்­ப­ட­வேண்டும்.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க 2001இல் பத­வி­யேற்­றதும் புத்­த­சா­சனம் தொடர்பில் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வொன்­றினை நிய­மித்தார். அந்த ஆணைக்­கு­ழுவின் அறிக்கை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கீழ் 2002 ஆம் ஆண்டில் வெளி­யி­டப்­பட்­டது. அவ்­வ­றிக்­கையில் முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களின் செயற்­பா­டுகள் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தன. 2009 ஆம் ஆண்டில் முன்னாள் ஆளுநர் அலவி மௌலா­னாவும் முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் பற்றி பகி­ரங்­க­மாக கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். இது­பற்றி அப்­போ­தைய அர­சாங்கம் எது­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கா­மை­யி­னா­லேயே பொது­ப­ல­சேனா இது பற்றி மக்கள் மத்­தியில் பிர­சாரம் செய்­தது.

இந்த சம்­ப­வங்­களில் பெரும்­பான்மை முஸ்­லிம்­களின் தொடர்பு இல்லை. அடிப்­ப­டை­வாத முஸ்­லிம்கள் சில அர­சி­யல்­வா­திகள் மற்றும் சர்­வ­தேச உத­விகள் மூலம் இந்த செயல்­களை முன்­னெ­டுக்­கின்­றனர். இந்தக் குழு­வினர் அளுத்­கம, பேரு­வளை, கிந்­தோட்டை, திகன மற்றும் கம்­பளை பகு­தி­களில் வன்­மு­றை­களை ஏற்­ப­டுத்தி அவற்றை பொது­ப­ல­சேனா மீது சுமத்­தி­னார்கள்.

இச்­சந்­தர்ப்­பத்தில் சிங்­கள பௌத்­தர்கள் குறிப்­பாக பௌத்த இளை­ஞர்கள் மிகவும் புத்­தி­யுடன் இதற்கு எதி­ராக தங்­க­ளது கண்­ட­னங்­களை வெளி­யிட வேண்டும். செயற்­பட வேண்டும். மாவ­னெல்­லையில் புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­டமை திடீ­ரென நிகழ்ந்த சம்­ப­வ­மல்ல. எமது ஆட்­சி­யா­ளர்­களின் அசி­ரத்தை மற்றும் மடமைத் தனம் கார­ண­மாக உரு­வெ­டுத்த முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களின் திட்­ட­மிட்ட செய­லாகும்.

முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் தற்­போது அழிக்­கப்­பட முடி­யாத பாரிய விருட்­ச­மாக வளர்ந்துள்ளது. இதனை ஆரம்பத்திலே கிள்ளி எறிந்திருக்க வேண்டும்.

இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதிருக்க 2002 ஆம் ஆண்டின் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சிபாரிசுகளை உடன் அமுல்படுத்த வேண்டும். இந்தக்கோரிக்கை எதிர்வரும் தேர்தல் காலங்களில் மக்களால் முன்வைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.