அக்குறணையில் தொடரும் வெள்ளம்: பொறியியலாளர்கள் சங்கம் கூறுவது என்ன?

0 79

எல்.எம்.ஸுபைர்,
C.Eng.,Ph.D (Yale)

பிங்கா ஓயாவின் துணை ஆறு­களில் இருந்து அக்­கு­ற­ணையில் அடிக்­கடி வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­ப­டு­வது குறித்து அக்­கு­றணை பொறி­யி­ய­லா­ளர்கள் சங்கம் (EAA) ஆழ்ந்த கவலை தெரி­வித்­துள்­ளது. 1990களின் பிற்­ப­கு­தியில் இருந்து ஆற்றின் மேற்­ப­கு­தி­களில் கட்­டு­மா­னங்­களின் அதி­க­ரிப்பு, கழிவு நீர் மற்றும் பிற கழி­வு­களை கொட்­டுதல், ஆற்றின் சம­வெ­ளிப்­ப­கு­தி­களின் இழப்பு மற்றும் பிங்கா ஓயாவின் வெள்­ளநீர் ஊடுருவாத மேற்­ப­ரப்­புக்கள் போன்­றன வெள்ளம் ஏற்­பட முக்­கிய கார­ணங்­க­ளா­கு­கின்­றன. இங்கு, அக்­கு­றணை பொறி­யி­ய­லா­ளர்கள் சங்கம் சமீ­பத்­திய வெள்­ளக்­கு­றைப்பு நட­வ­டிக்­கைகள், அதன் குறை­பா­டுகள், தற்­போ­தைய சிறந்த வெள்ளக் குறைப்பு நட­வ­டிக்­கைகள் மற்றும் ஆற்றின் மறு­சீ­ர­மைப்பு ஆகி­ய­வற்றை உரு­வாக்­கு­வ­தற்­கான கொள்­கைகள் என்­ப­ன­வற்றை முன்­மொ­ழி­கின்­றது.

திடீர் வெள்­ளப்­பெ­ருக்கின் பிர­தான கார­ணங்கள்:

  • நதி மற்றும் அதன் ஓரங்­களில் எழுப்­பப்­படும் தொடர்ச்­சி­யான கட்­டு­மானம்.
  • வெள்­ளப்­பெ­ருக்கு அதி­க­மாக ஏற்­படும் இடங்­களை நிரப்­புதல்.
  • மண் மற்றும் தாவ­ரங்­க­ளுக்குப் பயன்­படும் நிலப்­ப­ரப்பு நீர் நிலத்தில் ஊடு­ரு­வு­வ­தற்குப் பயன்­படும் நீர்ப்­பி­டிப்புப் பகுதி வேக­மாகக் குறைக்­கப்­ப­டுதல்.
  • திடக்­க­ழி­வுகள் மற்றும் கட்­டு­மான குப்­பை­களை ஆற்றில் கொட்­டுதல்.

பொல்­கொல்ல நீர்­தேக்­கத்தின் பங்கு
பொல்­கொல்ல தடுப்­ப­ணையின் தாக்­கத்­தினால் அக்­கு­ற­ணையில் வெள்ளம் ஏற்­ப­டு­வ­தாக சிலர் கூறு­கின்­றனர். இந்தக் கூற்றை ஆத­ரிக்கும் எந்த அறி­வியல் ஆதா­ரத்­தையும் இது­வரை யாரும் வழங்­க­வில்லை. அதற்குப் பதி­லாக, ஆத­ர­வா­ளர்கள் அனு­பவக் கதை­களைக் கூறி, அவற்றை கார­ணங்­க­ளாக அல்­லாமல் சம்­ப­வங்­க­ளாக விளக்­கு­கி­றார்கள்.
பொல்­கொல்ல ஏன் குறைந்­த­ளவு பங்கை மாத்­திரம் வகிக்­கின்­றது என்­ப­தற்­கான வாதங்கள்:

  • பொல்­கொல்­லயின் மேல் தடுப்­பணை வாயில்கள் அக்­கு­ற­ணையின் வீதி மட்­டத்­தி­லி­ருந்து சுமார் 10 மீற்­ற­ருக்கு கீழே உள்­ளன. எனவே, தடுப்­பணை வாயில்­களை மூடு­வ­தனால், வெள்­ளநீர் சாலை மட்­டத்­திற்கு இட்­டுச்­செல்­வதை தடுக்­கின்­றது.
    பொல்­கொல்ல தடுப்­பணை மீண்டும் நிரப்­பப்­பட்டால் கட்­டு­கஸ்­தோட்டை, அம்­ப­தென்ன பிர­தே­சங்­களும் அக்­கு­றணை போன்ற தாழ்­வான பகு­தி­களும் வெள்­ளத்தில் மூழ்­கக்­கூடும்.
  • அனைத்து திடீர் வெள்­ளப்­பெ­ருக்கு நிகழ்­வு­க­ளிலும் அக்­கு­றணை ஆற்றில் உள்ள நீர் கடு­கஸ்­தோட்டை நோக்கி வேக­மாகப் பாய்­கி­றது. 1980 களில் தடுப்­பணை அமைக்­கப்­பட்ட பின்னர், முதல் 10 ஆண்­டு­களில் வெள்ளம் எதுவும் பதி­வா­க­வில்லை. மற்றும், 1990 களில் இருந்து சுமார் 10 ஆண்­டு­க­ளுக்குள் ஒரே­யொரு வெள்­ளப்­பெ­ருக்குச் சம்­ப­வமே பதி­வா­கி­யுள்­ளது.
  • நீர்த்­தேக்­கத்தில் வண்டல் மண் படிந்­துள்­ளது என்று சிலர் வாதி­டு­கின்­றனர். வண்டல் மண் குவி­வதால் பாதிப்­புகள் ஏற்­படும் இருப்­பினும் ஆற்­றுப்­ப­டு­கையில் கட்­டு­மான குப்­பைகள், சேறு மற்றும் வீட்டுக் கழி­வுகள் குவிந்து கிடப்­பது குறித்து கவனம் செலுத்­தப்­ப­டவோ, அதனை குறைக்க நட­வ­டிக்கை எடுக்­கவோ முயற்­சிக்­க­வில்லை.
  • மேலும், மண்ணை வெட்டிக் குவி க்கும் போது அது சேறாக மாறி அடித்­துச்­செல்­லப்­ப­டு­கின்­றது.

கால­நிலை மாற்­றத்தின் தாக்கம்
கால­நிலை மாற்றம் ஒரு கார­ண­மாக இருக்­கலாம் என்று சிலர் ஊகிக்­கின்­றார்கள். மழைப்­பொ­ழிவு பற்­றிய பதி­வு­களின் அடிப்­ப­டையில் அதற்­கான ஆதா­ரங்கள் ஏது­மில்லை. கடந்த இரண்டு தசாப்­தங்­களில் மழையின் தீவிரம் அதி­க­ரிக்­க­வு­மில்லை. ஆனால் எதிர்­கா­லத்தில் இது தீவி­ர­ம­டையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

வெள்ளம் ஏன் குறைக்­கப்­ப­ட­வில்லை?
துர­திர்ஷ்­ட­வ­ச­மாக தவ­றான தக­வல்கள், தவ­றான வழி­காட்­டு­தல்கள், அறி­வியல், பொறி­யியல் புறக்­க­ணிப்பு மற்றும் பொது அறிவு இல்­லாமை போன்­ற­வற்­றினால் பய­னுள்ள வெள்ளக் குறைப்புக் கொள்­கைகள் பின்­வாங்­கப்­பட்­டுள்­ளன. தற்­போது,

  • அதி­கா­ரி­க­ளினால் பின்­பற்­றப்­படும் விதி­மு­றை­களில் குறை­பா­டுகள் உள்­ள­துடன் அவர்­களின் கண்­கா­ணிப்பு, விதி­மு­றை­களை அமுல்­ப­டுத்­து­வது போன்ற விட­யங்­களும் மோச­மாக உள்­ளன.
  • பொது­மக்­களால் ஆறு மற்றும் அதன் நீர்ப்­பி­டிப்பு நிர்­வா­கங்­களில் பங்கு பெற முடி­ய­வில்லை.
  • சம்­பந்­தப்­பட்ட நிபு­ணர்கள், வழக்­க­றி­ஞர்கள் மற்றும் பிறரின் பங்­கேற்பு, தெளி­வான தகவல் பகிர்­வுகள் குறை­வாக உள்­ளன.
  • கடு­மை­யான பொறி­யியல் மற்றும் அறி­வியல் பகுப்­பாய்­வுகள், தீர்­வுகள் மற்றும் கொள்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

சமீ­பத்தில் முன்­மொ­ழி­யப்­பட்ட வெள்ளக் குறைப்பு நட­வ­டிக்­கைகள்:
2022 டிசம்பர் மாதத்தில் ஏற்­பட்ட பெரிய வெள்­ளத்­திற்குப் பிறகு, (நாளாந்த மழை­வீழ்ச்­சிப்­ ப­திவு 120 மி.மீ) மாவட்ட செய­லா­ளரின் தலை­மையில் அரச அதி­கா­ரிகள் அறி­வித்த வெள்ளக் குறைப்பு நட­வ­டிக்­கைகள் பின்­வ­ரு­மாறு:
ஆற்றின் அடித்­த­ளத்தில் உள்ள வண்டல் மண்ணை அகற்­றுதல்.
ஆற்றின் மீது உள்ள சில கட்­டு­மா­னங்­களை அகற்­று­வது.
a.9 கி.மீ. தொலை­விலும் அக்­கு­றணை அடை­யாளப் பல­கைக்கு அரு­கிலும் உள்ள குறு­கிய (மாங்கோஸ் வாட்) பாலத்தை விரி­வு­ப­டுத்த வேண்டும்.
b.10 கி.மீ அரு­கே­யுள்ள நீரெல்ல செல்லும் பாலத்தை விரி­வு­ப­டுத்த வேண்டும்.
அக்­கு­ற­ணையில் வெள்ளம் ஏற்­படும் வேளையில் பொல்­கொல்ல தடுப்­ப­ணையின் தடுப்பு வாயில்­களைத் திறக்கும் வகையில் எச்­ச­ரிக்கை அமைப்பு ஒன்றை அமைத்தல். இவற்றில்,2023 டிசம்பர் மாதத்­திற்குள் செயற்­ப­டுத்­தப்­பட்­டவை:
1.2023 ஆம் ஆண்டின் தொடக்­கத்தில் வெள்ளம் சூழ்ந்த சில பகு­தி­களில் ஆற்றில் வண்டல் மண் அகற்­றப்­பட்­டது.
2.உடைந்­தி­ருந்த மாங்கோஸ் வாட் பாலத்தின் மைய பகு­தியும் அகற்­றப்­பட்­டது.

முன்­மொ­ழி­யப்­பட்ட வெள்ளக் குறைப்பு நட­வ­டிக்­கைகள் சில­வற்றை செயற்­ப­டுத்­திய பிறகு,
எவ்­வா­றா­யினும், இத்­த­கைய வெள்ளக் குறைப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தாலும், 2023 இல் நாளாந்த மழைப்­ப­திவு 70மி.மீ ஆக இருந்­தப்­போ­திலும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ள­தாக பதி­வா­கி­யுள்­ளது. இது டிசம்பர் 2022 இல் பதி­வான 120 மி.மீ நாளாந்த மழைப்­பொ­ழிவை விட குறை­வாகும்.
மேலும், ஆறு மற்றும் அதன் கரை­க­ளிலும், நீர்ப்­பி­டிப்புப் பகு­தி­க­ளிலும் மேற்­கொள்­ளப்­படும் பல்­வேறு கட்­டு­மா­னங்கள் மற்றும் மண் குவிப்­புகள் வெள்ளம் ஏற்­ப­டு­வ­தற்­கான கார­ணங்­களை அதி­க­ரித்­துள்­ளன.
ஆற்றில் வண்டல் மண் அகழ்­வது அடுத்த வெள்ளம் வரும் வரை சில மாதங்­க­ளுக்கு மட்­டுமே உத­வி­யாக இருக்கும். பெரும்­பாலும் கட்­டுப்­பா­டின்றி உரு­வாக்­கப்­பட்ட கூடு­த­லான கட்­டு­மா­னங்கள் மண்ணில் நீர் உறிஞ்­சு­தலை குறைத்து, அதிக வேகத்தில் நீர் ஓட்­டத்தை அதி­க­ரிக்­கின்­றன. இதனால் வெள்ள அபாயம் மேலும் மோச­மா­க்கு­கின்­றது.

அக்குறணையில் மிக அதிகமான வெள்ளப் பெருக்குப் பாதிப்பு உள்ள இடங்கள்.

பொறி­யி­ய­லா­ளர்கள் சங்­கத்தின் பரிந்­து­ரைகள்
சான்­று­களை மீளாய்வு செய்த பின்னர் அக்­கு­றணை பொறி­யி­ய­லா­ளர்கள் சங்கம், பின்­வ­ரு­வ­ன­வற்றைப் பரிந்­து­ரைக்­கி­றது:
நிர்­வாகச் சிக்­கல்­களில் உள்ள குறை­பா­டு­களைச் சரி செய்தல்
பிங்கா ஓயா மற்றும் அதன் நீர்ப்­பி­டிப்புப் பகு­தியில் சிறந்த தக­வ­ல­றிந்த நிர்­வாகம் காணப்­ப­டு­வது முக்­கிய தேவை­யாகும்.
ஆறு மற்றும் அதன் நீர்ப்­பி­டிப்பு பகு­தியை பற்­றிய விதிகள் மற்றும் ஒழுங்­குகள் அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும்.
அரச அதி­கா­ரிகள், பொறி­யி­ய­லா­ளர்கள், விஞ்­ஞா­னிகள் மற்றும் நிலப் பயன்­பாட்டு திட்­ட­மிடல் பணி­யா­ளர்கள் வெளிப்­ப­டை­யாக இருக்க வேண்டும்.

வெளிப்­ப­டைத்­தன்மை மற்றும் பொது ஈடு­பாடு
ஆற்றின் நிர்­வாகம், அதன் ஓரங்கள் மற்றும் அதன் நீரூற்றுப் பரப்பு பற்­றிய தக­வல்கள் பர­வ­லாக கிடைக்க வேண்டும். குறிப்­பாக பெண்கள், இளை­ஞர்கள் மற்றும் ஆர்­வ­முள்ள நபர்கள், உதா­ர­ண­மாக (பொறி­யி­ய­லா­ளர்கள், விஞ்­ஞா­னிகள், சூழ­லி­ய­லா­ளர்கள் மற்றும் வழக்­க­றி­ஞர்கள்).
மக்கள், மாசு­பாடு அத்­துடன் சூழ­லியல் பரா­ம­ரிப்­பையும் கருத்தில் கொண்ட முழு­மை­யான நதி மேலாண்மை
கழு­வுதல், குளித்தல் மற்றும் பொழு­து­போக்­கிற்­காக ஆற்றின் பொது­வான அணு­கலை மீட்­ட­மைத்து முன்­னு­ரிமை அளித்தல்.
மாசு மற்றும் குப்­பை­களை கொட்­டு­வதை தடுத்தல் மற்றும் குறைத்தல்.
சூழ­லியல் ஆரோக்­கி­யத்தை ஆத­ரிக்க உயி­ரி­னங்­க­ளையும் தாவ­ரங்­க­ளையும் பாது­காத்தல்.

சிறந்த தொழில்­நுட்பத் திட்­டங்கள் மற்றும் வெளிப்­ப­டை­யான அமுல்­ப­டுத்­தல்கள்
சிறந்த பொறி­யியல் மற்றும் அறி­வியல் பகுப்­பாய்வை வழி­ந­டத்த வேண்டும்.
இப்­ப­கு­தியில் இருக்கும் பொறி­யி­ய­லா­ளர்கள், விஞ்­ஞா­னிகள் மற்றும் நிர்­வா­கிகள் இத­னைப்­பற்றி தமது வாழ்க்­கையில் தொடர்ச்­சி­யான அனு­ப­வங்­களை கொண்­ட­மையால் இதில் இவர்கள் பங்­கேற்க வேண்டும். அப்­போது தான் இதனை தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்க முடியம்.
10. திட­மான நீண்­ட­கால பிராந்­திய திட்­ட­மிடல் முன்­னு­ரிமை வேண்டும்.

பின் குறிப்பு
ஆறு மற்றும் அதன் துணை நீர்ப்­பி­டிப்புப் பகு­தியில் சூழல் மோச­ம­டைந்து வரும் நிலையில், சட்­ட­வி­ரோத கட்­டி­டங்கள் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதியின் மேலதிக சேதத்தைத் தடுப்பது அவசியம்.
முன்னதாக செய்யப்பட்ட சட்டவிரோத கட்டிடங்களை கண்டறிந்து, அதிகாரிகளிடமிருந்து கிடைத்த சட்டவிரோத அனுமதிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
பொதுமக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் தனிநபர்களின் செயல்கள் ஆற்றின் நன்மைக்கு எதிராக இருப்பதைத் தடுக்க வேண்டும்.
பொதுமக்கள் பொதுச் சலுகைக்காக குரல் கொடுக்க வேண்டும், அப்போதுதான் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் தனிநபர்களின் ஆற்றை அழிக்கும் செயற்பாடுகள் புத்திசாலியான மேலாண்மையால் பாதிக்கப்படாது.
ஊழலை குறைப்பது போன்ற மேம்படுத்தப்பட்ட நிர்வாகம் இன்றி, எந்த தொழிநுட்பத் தீர்வையும் திறம்பட செயற்படுத்த முடியாது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.