முஸ்லிம் பெண்கள் பின்­தங்­கிய நிலையில் இருக்­கி­றார்கள் என்ற காலா­வ­தி­யான கருத்தை மாற்­றுவோம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

0 38

இலங்­கையில் உள்ள அனைத்து பெண்­களும் சிறப்­பான முன்­னேற்­றத்தை அடை­யவும் தங்கள் ஆற்­றல்­களை முழு­மை­யாகப் பங்­க­ளிப்­ப­தற்கும் ஏற்ற சூழலை உரு­வாக்­கு­வ­தற்கு எமது அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் உள்­ளது என்று பிர­தமர் கலா­நிதி ஹரிணி அம­ர­சூ­ரிய தெரி­வித்தார்.

ஏப்ரல் 07 ஆம் திகதி கொழும்பில் உள்ள கிங்ஸ்­பரி ஹோட்­டலில் நடை­பெற்ற IMRA மன்­றத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட “IMRA சிறப்பு விருது விழா 2025” நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே பிர­தமர் இதனைத் தெரி­வித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரி­வித்த பிர­தமர், “நாம் இங்கு கூடி­யி­ருப்­பது, சாத­னை­களைக் கொண்­டா­டு­வ­தற்­காக மட்­டு­மன்றி, இலங்கை முழு­வதும் உள்ள முஸ்லிம் பெண்­களின் வியத்­தகு பங்­க­ளிப்­பு­களை அங்­கீ­க­ரிப்­ப­தற்­கா­கவும் ஒன்­று­கூ­டி­யி­ருக்­கிறோம். இந்த சாதனைப் பெண்கள் தங்கள் ஆற்­றல்கள், உறு­திப்­பாடு மற்றும் சிறந்து விளங்­கு­வ­தற்­கான அவர்­களின் அசைக்க முடி­யாத அர்ப்­ப­ணிப்பை வெளிப்­ப­டுத்த ஒரு தளத்தை வழங்க IMRA மன்றம் மேற்­கொண்­டி­ருக்கும் முயற்­சி­க­ளை­யிட்டு நான் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன்.

சட்டம் மற்றும் சுகா­தாரப் பரா­ம­ரிப்பு முதல் கல்வி, ஊடகம் மற்றும் தொழில்­மு­யற்சி வரை பல்­வேறு துறை­களில் திற­மை­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்கும் இந்த பெண்கள் எமது சமூ­கத்தில் வெறும் பங்­கேற்­பா­ளர்கள் மட்­டுல்ல. அவர்கள் அதன் எதிர்­கா­லத்தை வடி­வ­மைப்­ப­வர்கள்.

ஏனைய பல துறை­க­ளுக்கு மத்­தியில் எமது கல்வி மற்றும் சுகா­தாரத் துறை­களில் தொழில்­மு­யற்­சி­யா­ளர்­களில் குறிப்­பி­டத்­தக்க புத்­தாக்­கத்­தையும், ஊக்­க­ம­ளிக்கும் அர்ப்­ப­ணிப்­பையும் நாம் கண்­டுள்ளோம். சமூ­கத்தில் பல்­வேறு சவால்கள் இருந்­த­போ­திலும், இந்த பெண்கள் குறிப்­பி­டத்­தக்க வெற்­றியைப் பெற்­றுள்­ளனர் என்­பது தெளி­வா­கி­றது, இது அவர்கள் தேர்ந்­தெ­டுத்த தொழில்­களில் எமது தேசத்தில் ஒரு குறிப்­பி­டத்­தக்க சக்­தி­யாக மாறு­வதைக் காட்­டு­கி­றது.

முஸ்லிம் பெண்கள் பின்­தங்­கிய நிலையில் இருக்­கி­றார்கள் என்ற காலா­வ­தி­யான கருத்தை அகற்­றுவோம். மாறாக, அவர்கள் முன்­ன­ணியில் உள்­ளனர், வலிமை, ஞானம் மற்றும் கனி­வுடன் முன்­ன­ணியில் உள்­ளனர். அவர்கள் முன்­மா­தி­ரிகள், அவர்கள் தங்­க­ளது சமூ­கங்­க­ளுக்கு மட்­டு­மன்றி, முழு இலங்கை தேசத்­தையும் ஊக்­கு­விக்­கி­றார்கள். நான் புரிந்­து­கொண்­ட­படி, IMRA மன்­றத்தின் நோக்கம், இந்த சிறப்­பு­வாய்ந்த குழுவின் அசா­தா­ரண திற­மைகள் மற்றும் பங்­க­ளிப்­பு­களைக் கொண்­டா­டு­வதன் மூலமும் அங்­கீ­க­ரிப்­பதன் மூலமும், எதிர்­ம­றை­யான படி­வார்ப்பு சிந்­த­னைகள் எவ்­வ­ளவு தவ­றாக வழி­ந­டத்தும் என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தாகும், இதன் மூலம் பரந்த சமூ­கத்­திற்கு முன்­மா­தி­ரி­களை உரு­வாக்­கு­வ­தாகும்.

முஸ்­லிம்கள் பற்­றிய ஒரு­ப­டித்­தான கருத்­துக்­களை (stereotypes) அகற்­று­வது எவ்­வ­ளவு முக்­கி­யமோ, அதே நேரத்தில் இலங்­கையில் பொது­வாகப் பெண்கள் பற்­றிய பல கருத்­துக்­களை பெண்­ணின வெறுப்பு நம்­பிக்­கைகள் வடி­வ­மைக்­கின்­றன என்­பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அதி­க­ரித்து வரும் வீட்டு வன்­முறை, இணைய துஷ்­பி­ர­யோகம், அர­சி­யலில் மற்றும் அதிக அள­வி­லான முடி­வெ­டுப்­பதில் பெண்­களின் குறைந்த பங்­க­ளிப்பு மற்றும் அர­சியல், வர்த்­தகம் அல்­லது வேறு எந்தத் துறை­யாக இருந்­தாலும், பெண்கள் மீதான கடு­மை­யான தாக்­கு­தல்கள் அதி­க­ரித்து வரு­வதைக் கருத்தில் கொள்­ளும்­போது இது தெளி­வா­கி­றது.

இதனை ஒரு குறிப்­பிட்ட இனக்­கு­ழு­மத்தின் பிரச்­சி­னை­யா­க­வன்றி ஒரு மொத்த சமூகப் பிரச்­சி­னை­யாக அங்­கீ­க­ரிப்­பது முக்­கியம் – இதனை ஒரு இனக்­கு­ழு­மத்தின் பிரச்­சி­னை­யாக பார்ப்­ப­துவும் ஒரு படி­வார்ப்பு சிந்­த­னை­யாகும்.

நாம் இச்­சந்­த­ர்ப்­பத்தில் தனிப்­பட்ட சாத­னை­களை மட்­டு­மன்றி, இலங்கை முஸ்லிம் பெண்­களின் கூட்டு வலி­மை­யையும், மீளாற்­ற­லையும் கொண்­டா­டு­கிறோம். ஒரு பிள்­ளையை வளர்ப்­ப­தற்கு ஒரு கிரா­மமே தேவை என்­பது எங்­க­ளுக்குத் தெரியும், பெண்­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கு அத­னைப்­பார்க்­கிலும் கூடிய ஆத­ரவு தேவை. இங்கு நாம் கொண்­டாடும் இந்த அடை­வுகள் நம்­பிக்­கையின் கலங்­கரை விளக்­க­மாக இருக்­கின்­றன, அவை எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்­கான பாதையை ஒளிரச் செய்­கின்­றன.
நாம் முன்­னேறிச் செல்­கின்றோம் என்ற வகையில், ஒவ்­வொரு பெண்ணும் தனது கன­வு­களைத் தொட­ரவும், தடை­களைத் தகர்க்­கவும், எமது இந்த அழ­கிய தேசத்­திற்கு வளம் சேர்க்­கவும் வலு­வூட்­டப்­பட்­ட­வர்­க­ளாக உணரும் ஒரு சூழலை உரு­வாக்க நாம் தொடர்ந்து பாடு­ப­டுவோம்.

இன்று நாம் கொண்­டாடும் இந்த சாத­னைகள் அனை­வ­ரையும் வலு­வூட்­டு­வ­தையும் முன்­னேற்­றத்தை ஊக்­கு­விப்­ப­தையும் உறுதி செய்வோம்.”
இவ்­வி­ழாவில், பிர­தமர் கலா­நிதி ஹரிணி அம­ர­சூ­ரிய பின்­வரும் விரு­து­க­ளையும் வழங்­கி­வைத்தார்.

IMRA சிறப்பு விரு­துகள்
சட்­டத்­துறை திரு­மதி சஈதா பாரி, கலை மற்றும் கலா­சாரம் – அமீனா ஹுசைன், புல­மைப்­ப­ரிசில் மற்றும் கல்வி – ரமோலா ரசூல், சுகா­தாரம் மற்றும் மருத்­துவம் – பேரா­சி­ரியர் பசீஹா நூர்தீன், கட்­டி­டக்­கலை – ஷெஹெலா லத்தீஃப், ஊடகம் மற்றும் தொடர்­பாடல் சியாமா யாகூப், IMRA வளர்ந்து வரும் நட்சத்திர விருது விளையாட்டுத் துறை – ஹம்னா கிசார், கல்வி – சாஜிதா ராசிக், ரிஸ்கா நௌஷாத், மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் சந்ரா வந்துராகல, சிவநந்தினி துரைசாமி, சுனேலா ஜெயவர்தன மற்றும் அன்பேரியா ஹனிஃபா ஆகியோருக்கு வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், மேல் மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப், முன்னாள் அமைச்சர் ஃபெரியல் அஷ்ரப் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏராளமான தொழில்முயற்சியாளர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.