விரும்பியோ விரும்பாமலோ பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது

அமைச்­ச­ரவை பேச்­சாளர் அமைச்சர் நளிந்த ஜய­திஸ்ஸ

0 46

(எம்.மனோ­சித்ரா)
விரும்­பி­னாலும் விரும்­பா­விட்­டாலும் பயங்­க­ர­வாதத் தடை சட்­டத்தை பயன்­ப­டுத்த வேண்­டிய நிலை­மையே தற்­போது காணப்­ப­டு­கி­றது. திட்­ட­மிட்ட குற்­றச்­செ­யல்கள் தொடர்­பான விசா­ர­ணை­களின் போது சந்­தே­க­ந­பர்கள் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பதே தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள சட்­ட­மாகும் என அமைச்­ச­ரவை பேச்­சாளர் அமைச்சர் நளிந்த ஜய­திஸ்ஸ தெரி­வித்தார்.

நேற்­று­முன்­தினம் செவ்­வாய்­கி­ழமை இடம்­பெற்ற அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

பயங்­க­ர­வாதத் தடை சட்டம் நீக்­கப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் நாம் ஸ்திர­மா­க­வுள்ளோம். எவ்­வா­றி­ருப்­பினும் தற்­போது சில குற்றச் செயல்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக வேறு சட்­ட­மொன்று நாட்டில் இல்லை. திட்­ட­மிட்ட குற்­றச்­செ­யல்கள் தொடர்­பான விசா­ர­ணை­களின் போது சந்­தே­க­ந­பர்கள் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பதே தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள சட்­ட­மாகும்.

எனவே பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் என்­பது எமது விருப்பம் அல்­லது விருப்­ப­மின்­மைக்கு அப்பால் குற்­றங்­களைத் தடுப்­ப­தற்­காக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாகும். அது நடை­மு­றை­யி­லுள்ள சட்­ட­திட்ட ங்களுக்­க­மை­யவே பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. அதற்­காக மாத்­தி­ரமே இந்த சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றதே அன்றி இதனை தொடர்ந்தும் நடை­மு­றையில் வைத்­தி­ருப்­ப­தற்கு நாம் எதிர்­பார்க்­க­வில்லை.

எனவே இந்த சட்­டத்தை நீக்­கு­வ­தற்­கான முத­லா­வது சந்­தர்ப்பம் கிடைக்கும் போது அப்­போதே அதற்­கு­ரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். திட்­ட­மிட்ட குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­ப­வர்கள், போதைப்­பொருள் கடத்­தல்­கா­ரர்கள், குறிப்­பாக தேசிய பாது­காப்­புடன் தொடர்­பு­டைய குற்­றங்­களின் போது இதனை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய கட்­டாயம் ஏற்படுகிறது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.