அரச அதிகாரிகளின் துணையின்றி அரசியல்வாதிகளால் திருடமுடியாது

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

0 43

(நா.தனுஜா)
அரச அதி­கா­ரிகள் அவர்­க­ளது செயற்­தி­ற­னின்மை மற்றும் தோல்வி என்­ப­வற்றை மறைத்­துக்­கொள்­வ­தற்கு ‘அர­சியல் ஊழலை’ ஒரு கேட­ய­மாகப் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது என வலி­யு­றுத்­தி­யி­ருக்கும் முன்னாள் வெளி­வி­கார அமைச்சர் அலி சப்ரி, அரச அதி­கா­ரிகள் எவ்­வித அச்­சமும், பக்­கச்­சார்­பு­மின்றி அவர்­க­ளது பணி­களை முன்­னெ­டுப்­பார்­க­ளாயின், எந்­த­வொரு அர­சி­யல்­வா­தி­யி­னாலும் அரச சொத்­துக்­களைக் கொள்­ளை­யி­ட­மு­டி­யாது எனத் தெரி­வித்­துள்ளார்.

ஊழல் மோச­டி­களில் அரச அதி­கா­ரிகள் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­ப­தாக முன்னாள் கணக்­காய்­வாளர் நாய­கத்­தினால் வெளி­யி­டப்­பட்ட கருத்து தொடர்பில் எக்ஸ் தளப்­ப­தி­வொன்றைச் செய்­தி­ருக்கும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, அதில் பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்­டுள்ளார்:
அரச அதி­கா­ரிகள் ஊழல் மோச­டி­களில் தொடர்­பு­பட்­டி­ருப்­ப­தாக முன்னாள் கணக்­காய்­வாளர் நாயகம் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். இதனை நாம் நீண்­ட­கா­ல­மாகக் கூறி­வ­ரு­கிறோம். ஊழல் மோச­டி­களில் அர­சி­யல்­வா­திகள் ஒரு அங்­க­மாக இருக்­கி­றார்கள் என்­பதில் மாற்­றுக்­க­ருத்­தில்லை. இருப்­பினும் இம்­மோ­ச­டி­களில் அர­சி­யல்­வா­திகள் மாத்­திரம் தனித்து ஈடு­ப­ட­மு­டி­யாது என்­பதைத் தெளி­வாகப் புரிந்­து­கொள்­ள­வேண்டும்.

ஊழல் மோச­டிகள் பல்­வேறு மட்­டங்­களில் இடம்­பெ­றக்­கூடும். அவற்றில் பெரும்­பங்­கா­னவை அர­சி­யல்­வா­தி­க­ளுக்குத் தெரி­யா­மலோ அல்­லது அவர்­களின் நேர­டித்­தொ­டர்­பின்­றியோ நடை­பெ­று­கின்­றன. பொது­மக்கள் அர­சி­யல்­வா­திகள் மீது கொண்­டி­ருக்கும் கோபத்தின் பின்னால் ஒளிந்­து­கொள்­ளக்­கூ­டிய திறன்­மி­குந்த ஊழல் அரச அதி­கா­ரிகள் பலர் இருக்­கி­றார்கள். இதன் அர்த்தம் அர­சி­யல்­வா­திகள் ஊழ­லற்­ற­வர்கள் என்­ப­தல்ல.
இருப்­பினும் அரச அதி­கா­ரிகள் எவ்­வித அச்­சமும், பக்­கச்­சார்­பு­மின்றி அவர்­க­ளது பணி­களை முன்­னெ­டுப்­பார்­க­ளாயின், எந்­த­வொரு அர­சி­யல்­வா­தி­யி­னாலும் அரச சொத்­துக்­களைக் கொள்­ளை­யி­ட­மு­டி­யாது. நிர்­வாக மட்­டத்தில் நிலவும் நேர்­மைத்­தன்­மையும், தொழில்­சார்­நேர்த்­தியும் மிக­வ­லு­வான தடுப்பு அரண்­க­ளாகும் என வலியுறுத்தியுள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.