அரபுக்கல்லூரி ஆசிரியர்கள், இமாம்களுக்கு பயிற்சி நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை

ஹிஸ்புல்லாஹ் எம்.பி.யின் கேள்விக்கு அமைச்சர் சுனில் செனவி பதில்

0 43

(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
அர­புக்­கல்­லூ­ரிகள் மற்றும் முஸ்லிம் பள்­ளி­வா­சல்­களில் சேவை­யாற்றும் ஆசி­ரி­யர்கள் மற்றும் இமாம்­க­ளுக்கு பயிற்சி நிலையம் என ஒன்று இல்லை. எதிர்­கா­லத்தில் இவர்­க­ளுக்கு முறை­யான பயிற்சி வழங்­கு­வ­தற்­கான பயிற்சி மத்­திய நிலையம் அமைப்­ப­தற்கு எதிர்­பார்க்­கிறோம் என புத்­த­சா­சன, சமய, மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் சுனில் செனவி தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதின்­கி­ழமை இடம்­பெற்ற வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தில் எதிர்க்­கட்சி உறுப்­பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்­லா­வினால் கேட்­கப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

ஹிஸ்­புல்லா எம்.பி. தனது கேள்­வியில், முஸ்லிம் சமய மற்றும் பண்­பாட்டு அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் கீழ் பதிவு செய்­துள்ள அர­புக்­கல்­லூ­ரி­களில் சேவை­யாற்றும் ஆசி­ரி­யர்­க­ளுக்கும் முஸ்லிம் பள்­ளி­வா­சல்­களில் சேவை­யாற்றும் இமாம்­க­ளுக்கும் முஅத்­தின்­க­ளுக்கும் முறை­யான பயிற்­சியை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான பயிற்சி நிலையம் இல்­லா­மையால் அவர்­களின் சேவையை முறை­யாக மேற்­கொள்ள தேவை­யான பயிற்­சி­யினை பெற்­றுக்­கொள்ள இய­லாமல் உள்­ளது.

அதனால் அர­புக்­கல்­லூ­ரிகள் மற்றும் முஸ்லிம் பள்­ளி­வா­சல்­களில் சேவை­யாற்றும் ஆசி­ரி­யர்கள் மற்றும் இமாம்­க­ளுக்கு முறை­யான பயிற்­சியை வழங்­கு­வ­தற்­கான பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்­ப­தற்கு நட­வடிக்கை மேற்­கொள்­ளுமா என கேட்­கிறேன்?
இதற்கு அமைச்சர் தொடர்ந்து பதி­ல­ளிக்­கையில்,

அரபுக் கல்­லூ­ரிகள் மற்றும் முஸ்லிம் பள்­ளி­வா­சல்­களில் சேவை­யாற்றும் ஆசி­ரி­யர்கள் மற்றும் இமாம்­க­ளுக்கு பயிற்சி நிலையம் என ஒன்று இல்லை. இவ்­வாறு முறை­யான பயிற்சி நிலையம் இல்­லா­விட்­டாலும் அரபு கல்­லூ­ரி­களில் சேவை­யாற்றும் ஆசி­ரி­யர்­க­ளுக்­காக முஸ்லிம் சமய மற்றும் பண்­பாட்டு அலு­வல்கள் திணைக்­களம் ஊடாக வரு­டாந்தம் பல்­வேறு பயிற்சி நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

அதே­நேரம் அர­புக்­கல்­லூ­ரி­க­ளுக்­கான புதிய பாடத்­திட்டம் தற்­போது திருத்­தப்­பட்டு வரு­கி­றது. அது அனு­ம­திக்­கப்­பட்ட பின்னர் இந்த பயிற்­சி­யளிப்­பதை எமது கல்வி வரை­புக்குள் முறை­யாக இணைத்­துக்­கொள்­வ­தற்கு திட்­ட­மிட்­டி­ருக்­கிறோம். இந்த பாடத்­திட்டம் தற்­போது கல்வி அமைச்சில் இறுதி கட்­டத்தில் இருக்­கி­றது.

அதே­போன்று முஸ்லிம் பள்­ளி­வா­சல்­களில் சேவை­யாற்றும் இமாம்கள் மற்றும் முஅத்­தின்­க­ளுக்கும் பயிற்சி நிலையம் ஒன்று இல்லை. அவ்­வாறு இல்­லா­விட்­டாலும் குறித்த இமாம்கள் கல்வி கற்ற அரபு கல்­லூ­ரி­களில் தேவை­யான பயிற்­சியை வழங்­கிய பின்னர், இமாம்­களை பள்­ளி­வா­சல்­க­ளுக்கு இணைத்­துக்­கொள்­வதன் மூலம் அவர்­க­ளுக்கு அவர்­களின் கடமை பொறுப்பை மேற்­கொள்ள சில பயிற்­சிகள் கிடைக்­கப்­பெற்று வரு­கின்­றன என்­பதே எமது கருத்து.

புதிய பாடத்­திட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­வதன் மூலம் எதிர்­கா­லத்தில் அரபு கல்­லூ­ரி­களின் கல்­வித்­து­றையை முன்­னேற்­று­வ­தற்­காக ஆசிரியர்களுக்கு மிகவும் ஆரோக்கியமான பயிற்சியை வழங்குவதே எமது எதிர்பார்ப்பு. இதன்போது தற்போது மேற்கொள்ளப்படும் வருடாந்த பயிற்சி வேலைத்திட்டத்துக்கு மேலதிகமாக அவர்களுக்கு பயிற்சி மத்திய நிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.