பேருவளை அப்ரார் கல்வி நிலைய தலைவர் காலமானார்

0 52

(பேரு­வளை பீ.எம் முக்தார்)
பேரு­வளை மரு­தானை அரப் வீதியைச் சேர்ந்த மூத்த சமூக சேவை­யா­ளரும் அகில இலங்கை சமா­தான நீதி­வா­னு­மான எம்.ஜே.எம் நிஸாம் ஹாஜியார் (வயது 81) 30ஆம் திகதி இரவு கால­மானார்.

மூன்று ஆண் பிள்­ளை­க­ளுக்கும், மூன்று பெண் பிள்­ளை­க­ளுக்கும் தந்­தை­யான இவர் பேரு­வளை அப்ரார் கல்வி நிலைய தலை­வ­ராவார்.

ஓய்வு பெற்ற முஸ்லிம் விவாகப் பதி­வா­ள­ரான இவர் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணிகள் சம்­மே­ளன உறுப்­பி­ன­ரா­கவும், களுத்­துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணிகள் சம்­மே­ளன மூத்த உறுப்­பி­னரும் ஷாது­லிய்யாத் தரீக்­காவின் முகத்­த­முஷ்­ஷா­து­லி­யு­மாவார்.

முன்னாள் சபா­நா­யகம் தேச­மான்ய அல்-ஹாஜ் எம்.ஏ பாக்கீர் மாக்கார், முன்னாள் அமைச்சர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகி­யோ­ரோடு மிக நெருக்­க­மாக பழ­கிய இவர் பிர­பல சமூக சேவை­யா­ள­ரு­மாவார்.

கல்வி, சமய, சமூக மற்றும் ஆண்­மீக பணிக்­காக தன்­னையே அர்ப்­ப­ணித்த மர்ஹும் நிஸாம் ஹாஜியார் இப் பகுதி மக்­களால் பெரிதும் மதிக்­கப்­பட்டார்.
இவ­ரது ஜனாஸா இலங்­கையின் முத­லா­வது பள்­ளி­வா­ச­லான பேரு­வளை மரு­தானை மஸ்­ஜிதுல் அப்ரார் பள்­ளி­வாசல் மைய­வா­டியில் 31ஆம் திகதி நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

ஜனாஸா நல்­ல­டக்­கத்தில் ஸதாத்­மார்கள், உல­மாக்கள், ஷாது­லிய்யா கலீ­பாக்கள், அர­சி­யல்­வா­திகள், ஊட­க­வி­ய­லா­ளர்கள், புத்­தி­ஜீ­விகள் முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணிகள் சம்­மே­ளன, அப்ரார் கல்வி நிலைய முக்­கி­யஸ்­தர்கள் பெரு­ம­ள­வி­லான மக்கள் பங்கு பற்­றினர்.

இவ­ரது மறைவு குறித்து முன்னாள் அமைச்சர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணிகள் சம்­மே­ளன தலைவர் சாம் நவாஸ், களுத்­துறை மாவட்ட சம்­மே­ளன பதில் தலைவர் தாஹிர் பாஸி, அப்ரார் கல்வி நிலைய செயலாளர் கலாநிதி. மெளலவி அஸ்வர் அஸாஹிம் (அல்-அஸ்ஹரி) ஆகியோர் அனுதாபம் தெரிவித்து செய்திகளை வெளியிட்டுள்ளனர். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.