வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறை

0 30

வட­மத்­திய மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவ­ரது தனிப்­பட்ட செய­லா­ள­ராக செயற்­பட்ட சாந்தி சந்­தி­ர­சேன ஆகி­யோ­ருக்கு தலா 16 ஆண்­டுகள் கடூ­ழிய சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்­கு­ழுவால் தாக்கல் செய்­யப்­பட்ட ஊழல் குற்­றச்­சாட்­டு­களில் அவர்கள் குற்­ற­வா­ளிகள் என நிரூ­பிக்­கப்­பட்­டதை அடுத்து, கொழும்பு மேல் நீதி­மன்றம் இந்த தீர்ப்பை வழங்­கி­யுள்­ளது.
அத்­துடன் பிர­தி­வா­தி­க­ளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

வட­மத்­திய மாகாண முத­ல­மைச்­ச­ராக பதவி வகித்த காலப்­ப­கு­தியில் சட்­ட­வி­ரோ­த­மாக எரி­பொருள் கொடுப்­ப­ன­வாக 2,080,500 ரூபாவை பெற்றுக் கொண்­டதன் ஊடாக ஊழல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.