பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதற்கான 35 வழிமுறைகள்

0 56

எம்.எஸ்.எம். நுஸ்ரி (நளீமி)

பெரு­நாட்கள் அல்­லது பண்­டி­கைகள் அரபு மொழியில் “ஈத்” என அழைக்­கப்­ப­டு­கின்­றன. ஈத் என்றால் மீண்டும் மீண்டும் வருதல் என்ற கருத்தை கொடுக்­கின்­றது. ஆண்டு தோறும் வரு­வதால் பெரு­நாட்­க­ளுக்கு இவ்­வாறு பெயர் வந்­தது. இஸ்­லாத்தில் வரு­டத்­துக்கு ஈதுல் பித்ர், ஈதுல் அழ்ஹா எனும் இரண்டு பெரு­நாட்கள் மட்­டுமே அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளன. நோன்பு, ஹஜ் எனும் இரு இபா­தத்­க­ளுக்குப் பின்னர் அல்லாஹ் இப்­பெ­ரு­நாட்­களை ஆக்­கி­யி­ருப்­பது பெரு­நாட்­களின் நோக்­கத்தை தெளி­வு­ப­டுத்­து­கின்­றன. அல்­லாஹ்­வுக்கு நன்றி செலுத்­து­வதும் மக்கள் சந்­தோ­ச­மாக பொழுதைக் கழிப்­பதும் சமூக உற­வு­களை வலுப்­ப­டுத்­து­வதும் பெரு­நாட்­களின் நோக்­கங்­க­ளாகும். இஸ்­லாத்தில் பெருநாள் கொண்­டா­டு­வதும் இபா­தத்தே ஆகும். மார்க்­கத்தில் அனு­ம­திக்­கப்­பட்ட வழி­மு­றை­க­ளுக்­கூ­டாக பெரு­நாட்­களை மகிழ்ச்­சி­யாக சிறப்­பாகக் கொண்­டாட முடியும்.
மாதம் முழுக்க பகலில் நோன்பு நோற்று இர­வு­களில் நின்று வணங்கி உயர்­த­ர­மான அல்­லாஹ்வின் கட­மையை நிறை­வேற்றி களைப்­புற்ற அடி­யார்­க­ளுக்கு களிப்­பூட்டி மகிழ்­வித்து பாவங்­களை கழு­விய அல்­லாஹ்­வுக்கு நன்றி செலுத்தி மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்தி கொண்­டாடி மகி­ழவே ஈதுல் பித்ர் வரு­கி­றது. அந்த வகையில் எம்மை எதிர்­கொள்ள இருக்கும் ஈதுல் பித்ர் நோன்புப் பெரு­நாளை பெரு­நாளின் நோக்­கங்­களை நிறை­வேற்றும் வகை­யிலும் பெருநாள் தினங்­களை சந்­தோ­ச­மாகக் கொண்­டாடும் வகை­யிலும் எவ்­வா­றான வழி­மு­றை­களை பின்­பற்­றலாம் என்­பதை நோக்­குவோம்.

பெரு­நா­ளுக்கு முன்­ன­ரான கொண்­டாட்ட தயார்­ப­டுத்தல் வழி­மு­றைகள்

1.பெரு­நாளை முன்­கூட்­டியே திட்­ட­மிட்டு கொள்ளல்
இஸ்லாம் எந்­த­வொரு விட­யத்­தையும் திட்­ட­மிட்டு செய்ய வேண்டும் என்றே விரும்­பு­கி­றது. அந்த வகையில் பெரு­நா­ளையும் நாம் திட்­ட­மிட வேண்டும். பெரு­நா­ளுக்­கான செல­வீ­னங்கள், ஏற்­பா­டுகள், பய­ணங்கள், உணவு, ஆடை ஒழுங்­குகள் என்­ப­வற்றை நன்கு திட்­ட­மிட்­டுக்­கொள்­ளலாம். பெருநாள் தினங்­க­ளுக்­கான நேர­சூ­சி­யையும் தயா­ரித்துக் கொள்­ளலாம். இதன் மூலம் நேர விர­யத்­தையும் பண விர­யத்­தையும் தடுக்க முடியம். மேலும் பெருநாள் கால அனாச்­சா­ரங்கள் பாவங்­களை விட்டும் தவிர்ந்­தி­ருக்­கவும் இது உதவும்.
2.வீட்­டையும் சூழலை சுத்­தப்­ப­டுத்தி வீடு­களை அலங்­க­ரித்தல்
பெருநாள் நமது இல்­லங்­க­ளுக்கு வரும் விருந்­தா­ளி­யாகும். எனவே அதனை வர­வேற்க வீடு­களை சுத்தம் செய்து வீண்­வி­ர­ய­மில்­லாத வகையில் அலங்­கா­ரங்­களை மேற்­கொள்ள முடியும். ஏனெனில் அல்லாஹ் அழ­கையும் சுத்­தத்­தையம் விரும்­பு­கிறான்.
3.வாழ்த்து அட்­டை­களை, பிரார்த்­தனை அட்­டை­களை செய்து நண்­பர்­க­ளுக்கு அனுப்பி வைத்தல்
அடுத்­த­வர்­க­ளுக்­காக பிரார்த்­திப்­பதை இஸ்லாம் வலி­யு­றுத்­து­கி­றது. எனவே கழிவுப் பொருட்­களைக் கொண்டு புத்­தாக்­க­மாக வாழத்­துக்கள், துஆக்கள் அடங்­கிய அழ­கிய அட்­டை­களை தயா­ரித்து வெளி­யூர்­களில், வெளி­நா­டு­களில் வாழும் சொந்­தங்­க­ளுக்கு பெருநாள் தினம் அது கிடைக்கக் கூடிய வகையில் அனுப்பி வைக்­கலாம். இதன் மூலம் உற­வுகள் வலுப்­படும். நமது புத்­தாக்­கத்­திறன் வளரும்.

இபா­தத்கள் மூல­மாக சந்­தோ­ச­ம­டையும் கொண்­டாட்ட வழி­மு­றைகள்

4.அல்­லாஹ்வை அதி­க­மாக நினைவு கூர்ந்து திக்ர் செய்தல்
பொது­வா­கவே திக்ர்கள் எப்­போதும் செய்ய முடியும். அதிலும் குறிப்­பாக சந்­தோச வேளை­களின் போது இறை­நி­னைவு வர­வேண்­டி­யது அவ­சியம். எனவே பெருநாள் தினங்­க­ளிலும் அதிகம் அல்­லாஹ்வை நினைவு கூறலாம். அதன் மூலம் உள்­ளத்தில் நிம்­மதி தோன்றும்.
பெரு­நாளைத் தொடர்ந்து வரும் நாட்கள் உண்­ப­தற்கும் பரு­கு­வ­தற்கும் இறை­வனை நினைவு படுத்­து­வ­தற்­கு­மான நாட்­க­ளாகும் (முஸ்லிம்)
ஆனால் பெருநாள் தினத்­துக்­கென்று எந்­த­வொரு விசேட திக்ரும் நபி­ய­வர்­களால் கற்­றுத்­த­ரப்­ப­ட­வில்லை.
5.அல்­லாஹ்­வுக்கு நன்றி செலுத்தல்
குறிப்­பிட்ட நாட்கள் (நோன்பில் விடு­பட்டுப் போனதைப்) பூர்த்தி செய்­யவும், உங்­க­ளுக்கு நேர்­வழி காட்­டி­ய­தற்­காக அல்­லாஹ்வின் மகத்­து­வத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்­து­வ­தற்­கா­க­வுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடு­கிறான்). (சூறதுல் பகறா : 185)
இந்த அல்­குர்ஆன் வச­னத்தில் பெருநாள் தினம் அல்­லாஹ்­வுக்கு நன்றி செலுத்தும் தினம் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ரம­ழானை சிறப்­பாக கழிக்க உத­வி­ய­மைக்­கா­கவும் பெருநாள் கொண்­டாடும் மகிழ்ச்­சி­யான சந்­தர்ப்­பங்­களைத் தந்­த­மைக்­கா­கவும் எமது நல்ல செயற்­பா­டுகள் மூலம் நன்றி தெரி­விக்க முடியும்.
6. பெருநாள் தொழுகை -ஸலாது ஈதில் பித்ர்- தொழுதல்
பெருநாள் தொழுகை பெரு­நாளின் பிர­தான அடை­யா­ள­மாகும். இஸ்­லா­மிய ஷரீஅத்தில் ஹிஜ்ரி முதலாம் ஆண்டு பெருநாள் தொழுகை ஆரம்­பிக்­கப்­பட்­டது. இது சுன்னத் முஅக்­கதா வகையை சேர்ந்­த­தாகும். நபி (ஸல்) அவர்­களும் ஸஹா­பாக்­களும் தொடர்ந்து இதனை தொழுது வந்­தி­ருக்­கி­றார்கள். எனவே உரிய நேரத்­துக்குச் சென்று பெருநாள் தொழு­கையில் பூர­ண­மாகக் கலந்து கொண்டு மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­தலாம்.
7.பெருநாள் குத்­பாவை செவி­ம­டுத்தல்
நபி­ய­வர்கள் பெருநாள் தினத்தில் குத்பா நிகழ்த்­தி­யுள்­ளார்கள். நாம். தொழு­கையில் கலந்து கொள்­வதைப் போலவே குத்­பா­விலும் கலந்து கொள்ள வேண்டும். பெருநாள் தினத்தில் கொண்­டாட்­டங்­க­ளுக்­காக அதிக நேரத்தை செல­விடும் நாம் பதி­னைந்து நிமி­டங்கள் ஒதுக்கி குத்­பாவை செவி­ம­டுக்க பின்­நிற்கக் கூடாது.
8.தக்பீர் கூறுதல்
பெருநாள் தினங்­களில் அல்­லாஹ்வை மகத்­து­வப்­ப­டுத்தும் வகையில் தக்பீர் கூறு­வது சந்­தோ­சத்தை வெளிப்­ப­டுத்தும் மற்­றொரு வழி­மு­றை­யாகும். ஆனால் தக்பீர் என்­பது நபி­ய­வர்கள் கற்­றுத்­தந்த வாச­கங்­களைக் கொண்டு சொல்­லப்­பட வேண்டும்.
பெண்கள் (தொழும் திட­லுக்குச் சென்று) ஆண்­க­ளுக்குப் பின்னால் இருந்து கொண்டு ஆண்கள் தக்பீர் சொல்லும் போது அவர்­களும் தக்பீர் சொல்­வார்கள். (அறி­விப்­பவர் : உம்மு அத்­திய்யா (ரலி), நூல் : புகாரி 971)
9.பிரா­ர்த்­த­னை­களில் ஈடு­படல்
பெருநாள் தினங்­களில் நமக்­காக, நமது குடும்­பத்­தி­ன­ருக்­காக, முஸ்லிம் சமூ­கத்­துக்­காக பிரார்த்­த­னை­களில் ஈடு­ப­ட­வேண்டும்.

(பெண்கள் தொழும் திட­லுக்குச் சென்று) ஆண்கள் பிரார்த்­திக்கும் போது அவர்­களும் பிரார்த்­திப்­பார்கள். அந்த நாளின் பரகத் எனும் அரு­ளையும், புனி­தத்­தையும் எதிர்­பார்ப்­பார்கள்.
(அறி­விப்­பவர் : உம்மு அத்­திய்யா (ரலி), நூல் : புகாரி 971)
10.இறை­வனின் ஞாபகம் வரக்­கூ­டிய இடங்­க­ளுக்கு செல்லல்
இறை­வனை ஞாப­கப்­ப­டுத்­து­வது பெரு­நாளின் ஒரு நோக்கம் என்ற அடிப்­ப­டையில் அல்­லாஹ்­வு­டைய அருள்­களை நினை­வு­ப­டுத்தக் கூடிய இடங்­க­ளுக்கு சற்று நேரம் ஒதுக்கி செல்ல முடியும். பெரு­நாளை குடும்­பத்­தா­ருடன் மகிழ்­வாக கொண்­டாட முடி­யாத நிலையில் வைத்­தி­ய­சா­லையில், சிறைச்­சா­லை­களில், அகதி முகாம்­களில், முதியோர் இல்­லங்­களில் இருப்­போ­ருடன் எமது பெருநாள் சந்­தோ­சங்­களை பகிர்ந்து கொள்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை செய்ய முடியும்.
11.கட­மை­யான தொழு­கை­களை உரிய நேரத்தில் நிறை­வேற்றல்
12.தராவீஹ் மற்றும் நோன்பு கால வணக்­கங்­களை ஒழுங்­கு­ப­டுத்த உத­விய பள்­ளி­வாசல் இமாம் மற்றும் முஅத்­தின்­க­ளுக்கு நன்றி தெரி­வித்து அன்­ப­ளிப்­பு­களை பரி­மாறல்

சமூக உற­வு­களை வலுப்­ப­டுத்தும்
கொண்­டாட்ட வழி­மு­றைகள்

13.தான தரு­மங்கள் செய்தல்
பொது­வா­கவே ஸதகா செய்­வ­தற்கு நேர வரை­யறை கிடை­யாது. பெருநாள் தினங்­களில் நாம் சந்­தோ­ச­மாக இருக்கும் போது அடுத்;த தேவை­யு­டை­ய­வர்­க­ளையும் சந்­தோ­சப்­ப­டுத்த அதி­க­மாக ஸதகா செய்து கொள்ள முடியும். ஓர் ஏழையை மகிழ்ச்­சிப்­ப­டுத்­து­வது நமது உள்­ளத்­திலும் அள­விலா மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்தும்
பெருநாள் தொழு­கைக்கு முன்பு யார் அதை வழங்­கி­வி­டு­கி­றாரோ அது ஏற்றுக் கொள்­ளப்­பட்ட தர்­ம­மாகும். யார் அதை தொழு­கைக்குப் பின் வழங்­கு­கி­றாரோ அது பொது­வான ஸத­கா­வாகும்.
அறி­விப்­பாளர்: இப்னு அப்பாஸ் (ஆதாரம்:அபூ தாவுத்)
எனவே பெருநாள் தொழு­கைக்கு பின்­னரும் அதிகம் ஸதகா செய்ய முடியும்.
14.ஸகாதுல் பித்ர் வழங்­குதல்
இது பெருநாள் தொழு­கைக்கு முன் நிறை­வேற்­ற­வேண்­டிய ஒரு வலி­யு­றுத்­தப்­பட்ட தர்­ம­மாகும். இதனை ஒழுங்­கு­ப­டுத்தி கூட்­டா­கவும் நிறை­வேற்­றலாம். இதுவும் மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்தும் மற்­றொரு வழி­யாகும். நமது வீட்டில் பல்­சுவை சமையல் இடம்­பெறும் போது அதே போல ஏழைகள் வீட்­டிலும் பெருநாள் உண­வுகள் இருக்க வேண்டும் என இஸ்லாம் விரும்­பு­கி­றது.
அடி­மைகள், அடி­மைகள் அல்­லா­த­வர்கள், ஆண்கள் பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்­லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்­மத்தை நபிகள் நாயகம் கட­மை­யாக்­கி­னார்கள். பேரீச்சம் பழம், தீட்­டப்­ப­டாத கோதுமை ஆகி­ய­வற்­றி­லி­ருந்து ஒரு “ஸாவு” எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்­ண­யித்­தார்கள். மேலும் (பெருநாள்) தொழு­கைக்கு மக்கள் புறப்­ப­டு­வ­தற்கு முன்பே அதை வழங்கி விட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்­ட­ளை­யிட்­டார்கள். (அறி­விப்­பாளர் இப்னு உமர் (ஆதாரம்: புகாரி முஸ்லிம்)
15.நல் வாழ்த்­துக்­களை பரி­மாறிக் கொள்ளல்
பெருநாள் தினத்தில் வாழ்த்துக் கூறும் பழக்கம் ஸஹா­பாக்கள் காலத்தில் இருந்­துள்­ளது. ஆனால் அவை வெறும் பகட்­டான வாழ்த்­துக்­க­ளாக இல்­லாமல் அர்த்­த­முள்ள பிரார்த்­த­னை­க­ளாக அமைந்­தி­ருந்­தன.

முஹம்மத் இப்னு ஸியாத்(ரஹ்) அவர்கள் அறி­விக்­கின்­றார்கள்.’ நான் அபூ உமா­மதுல் பாஹிலீ மற்றும் சில நபித்­தோ­ழர்­க­ளுடன் இருந்தேன். அவர்கள் பெருநாள் திடலில் இருந்து வந்தால் ஒருவர் மற்­ற­வ­ருக்கு ‘தகப்­பல்­லாஹு மின்னா வமின்கும்’ என்று கூறு­வார்கள். என்று குறிப்­பி­டு­கின்­றார்கள்.

16.நல்­லி­ணக்­கத்­தையும் சகோ­த­ரத்­து­வத்­தையும் வலி­மை­யாக்கிக் கொள்ளல்.
பெருநாள் கொண்­டாட்­டங்­களில் முஸ்லிம் அல்­லாத சகோ­த­ரர்­க­ளையும் அழைத்து நமது கலா­சார உண­வு­களைப் பரி­மாறி நமது பெருநாள் நடை­மு­றை­களை அறியச் செய்­வதன் மூலம் சமய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கலாம்
17.பகையும் குரோ­தமும் களைந்து உற்றார் உற­வி­னர்­களை சந்­தித்து உற­வு­களை பலப்­ப­டுத்திக் கொள்ளல்
குடும்ப உற­வு­களைப் பேணு­வது அடிப்­ப­டைக்­க­ட­மை­யாகும். அதற்கு பெருநாள் தினம் நல்ல சந்­தர்ப்­ப­மாகும். உற­வு­களைத் தரி­சித்து இனிப்­பு­களை உண்டு மகிழ்ந்து வாழ்த்­துக்­களைப் பரி­மாறி சந்­தோ­சத்தைப் பகி­ரலாம்.

18.நோயா­ளி­களை நலன் விசா­ரித்தல்
பெருநாள் கொண்­டாட முடி­யாத நிலை­யி­லுள்ள நோயா­ளி­களை தரி­சித்து நோய் விசா­ரித்து ஆறுதல் கூறி பெருநாள் தினத்தில் அவர்­க­ளது கவ­லை­களை மறக்­க­டிக்கச் செய்­யலாம்.
19.அண்டை அய­லா­ரோடு பரஸ்­பரம் அன்பைப் பரி­மாறிக் கொள்ளல்
அய­ல­வர்­க­ளுடன் பெருநாள் உண­வுகள் வாழ்த்­துக்கள் என்­ப­வற்றை பரி­மாறி உறவை வலுப்­ப­டுத்­திக்­கொள்­ளலாம்.
20.பகை கொண்ட உள்­ளங்­களை சேர்த்து வைத்தல்.
கடந்த காலங்­களில் உற­வில்­லாமல் இருக்கும் நண்­பர்­களை உற­வி­னர்­களை பெருநாள் தினங்­களில் ஒன்று சேர்க்கும் முயற்­சியில் ஈடு­ப­டலாம். அவ்­வாறு ஒற்­று­மைப்­ப­டுத்­து­வது ஈமானின் முக்­கிய வெளிப்­பா­டாகும் என அல்­குர்ஆன் குறிப்­பி­டு­கி­றது.
21.பெற்­ற­வர்­களை மனம் குளி­ரச்­செய்தல்
பொது­வா­கவே பெற்­றோ­ருக்கு உப­காரம் செய்­வது வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்கும் நிலையில் பெருநாள் தினங்­களில் விசே­ட­மாக அவர்­களை கௌர­வப்­ப­டுத்த வேண்டும். அவர்கள் மர­ணித்­தி­ருப்பின் அவர்­க­ளது கப்ர்­களை ஸியாரத் செய்து பிரார்­த­னையில் ஈடு­ப­டவும் முடியும்.
22.ஊர் மக்கள் அனை­வரும் ஒரே இடத்தில் ஒன்று சேர்தல்
ஊரின் ஒற்­று­மையை வெளிக்­காட்டும் வகையில் திடலில் பெருநாள் தொழு­கையை நடத்தி வாழ்த்­துக்­க­ளையும் பிரார்த்­த­னை­க­ளையும் பரி­மாறிக் கொள்­ள­மு­டியும். வரு­டத்தில் இரு­மு­றைகள் மாத்­தி­ரமே இவ்­வா­றான ஒரு சந்­தர்ப்பம் அமையும்.
“நபி (ஸல்) அவர்கள் நோன்பு மற்றும் ஹஜ்ஜுப் பெரு­நாட்­களில் முஸல்லா எனும் மைதா­னத்­திற்கு செல்­ப­வர்­க­ளாக இருந்­தார்கள்.”
(அறி­விப்­பவர் : அபு ஸயிது அல் குத்ரி(ரலி) நூல்: புஹாரி)
23.சிறு­வர்­க­ளுக்கு பெருநாள் தர்மம் வழங்­குதல்
வீடு­களில், அய­ல­வர்­களில் உள்ள சிறார்­க­ளுக்கு பெருநாள் பணம் வழங்கி அவர்­களை மகிழ்ச்­சிப்­ப­டுத்­தலாம். அல்­லது அநாதை விடு­தி­களில் உள்ள சிறு­வர்­களை சந்­தித்து அன்­ப­ளிப்­பு­களை வழங்­கலாம்.
24.முஸா­பஹா முஆ­னகா செய்தல்
பெருநாள் தினத்தில் சந்­திக்கும் மனி­தர்­களை கட்டி அணைத்து கைலாகு செய்து முக­மனும் வாழ்த்தும் தெரி­வித்து சகோ­த­ரத்­து­வத்தை பலப்­ப­டுத்­திக்­கொள்­ளலாம்.
25.பெருநாள் அன்­ப­ளிப்­பு­களை பரி­மாறல்
பெருநாள் தினத்தில் குடும்ப அங்­கத்­த­வர்­க­ளுக்கும் நண்­பர்­க­ளுக்கும் ஹதிய்யா எனும் அன்­ப­ளிப்­பு­களை வழங்கி மகிழ்­வித்து உற­வு­களை வலுப்­ப­டுத்­தலாம்
26.காலையில் பேரீத்தம் பழங்கள் உண்­ணுதல்
“நோன்புப் பெருநாள் அன்று நபி (ஸல்) அவர்கள் காலை உண­வாக பேரித்தம் பழங்­களை ஒற்­றைப்­ப­டை­யாக உண்­பார்கள்.”
(அறி­விப்­பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி-953)
27.சுவை­யான காலை உணவு உண்­ணுதல்
பெருநாள் தினங்­களில் சந்­தோ­ச­மாக உண்டு மகி­ழலாம். ஆனால் வீண்­வி­ரயம் தவிர்க்கப் பட வேண்டும்.
“நோன்பு பெருநாள் தினத்தில் எதை­யேனும் உண்­ணாமல் நபி(ஸல்) தொழும் திட­லுக்கு புறப்­பட மாட்­டார்கள் என்று புரைதா (ரலி) அறி­விக்­கி­றார்கள்.”” (திர்­மிதி, தார­குத்னி)

28.சுவை­யான பக­லு­ணவு உண்­ணுதல்
பெரு­நாளைத் தொடர்ந்து வரும் நாட்கள் உண்­ப­தற்கும் பரு­கு­வ­தற்கும் இறை­வனை நினைவு படுத்­து­வ­தற்­கு­மான நாட்­க­ளாகும் (முஸ்லிம்)

பொழுது போக்கு அம்­சங்­களூ­டாக
பெரு­நாளை கொண்­டாடும் வழி­மு­றைகள்

29.நல்ல இஸ்­லா­மிய கீதங்­களை செவி­ம­டுத்தல்
பாடல் பாட முடி­யாத போது நல்ல பாடல்­களை செவி­ம­டுக்­கவும் முடியும்
“தப்ஸ் எனும் பறை அடித்து பாடிக்­கொண்­டி­ருந்த இரண்டு சிறு­மி­களைப் பார்த்து அபூ­பக்கர் (ரலி) அதட்­டி­னார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த சிறு­மிகள் பாடு­வதை விட்டு விடுங்கள். இது பெரு­நா­ளைக்­கு­ரிய தின­மாகும் என்­றார்கள்.” (அறி­விப்­பவர் : ஆயிஷா (ரலி) புகாரி)
30.கலை நிகழ்­வு­களை நடாத்­துதல்
ஊரில் உள்ள சங்­கங்கள், கழ­கங்கள் பெருநாள் இஸ்­லா­மிய கலை நிகழ்­வு­களை ஏற்­பாடு செய்­வதன் மூலம் அநாச்­சா­ர­மான ஹரா­மான கேளிக்­கை­க­ளுக்கு மக்கள் செல்­வதைத் தடுக்க முடியும்.

31.பெருநாள் குடும்ப ஒன்­று­கூடல் நடாத்­துதல்
பெரு­நாளை அடுத்து வரும் தினங்­களில் குடும்­பங்கள்; ஒன்று சேர்ந்து உண்டு, விளை­யாடி மகி­ழலாம்.
32.குடும்ப சுற்­றுலா செல்லல்
சுற்­று­லாக்கள் செல்­வதன் மூலம் அல்­லாஹ்வின் அத்­தாட்­சி­களைப் பார்­வை­யி­டவும் அதன் மூலம் படிப்­பினை பெறவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் சந்தர்ப்பமாக அமையும்.
33.நல்ல இடங்களை பார்வையிடச் செல்லல்
பெருநாள் தினங்களில் கடற்கரை, பூங்காக்கள், நூதனசாலைகள் என அருகில் உள்ள நல்ல இடங்களுக்கு குடும்பமாகச் சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம்.
34.குழந்தைகளை விளையாட்டுப் பூங்காக்களுக்கு அழைத்துச் செல்லல்
குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக இது அமையும்.
35.பெண்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளை, கலைநிகழ்வுகளை பிரேத்தியேகமாக ஏற்பாடு செய்தல்
பெருநாள் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சி ஆண், பெண், சிறுவர், ஏழை, செல்வந்தர் என அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என இஸ்லாம் விரும்புகிறது. அந்த வகையில்

பெருநாள் தினங்களின் போது தவிர்ந்துகொள்ள வேண்டிய
கொண்டாட்ட வழிமுறைகள்
மது அருந்துதல்
சூதாட்டத்தில் ஈடுபடல்
வீதிகளில் வன்முறையை ஏற்படுத்தி சண்டைசச்சரவுகளில் ஈடுபடல்
வீண் கேளிக்கைகளில் ஈடுபடல்
சினிமாவில் மூழ்கி கிடத்தல்
அவசியமற்று வீதி ஒழுங்குகளை மீறி வாகனங்களில் ஊர் சுற்றுதல்
நண்பர்களோடு வீண் அரட்டை அடித்தல்
பட்டாசு கொழுத்துதல்
இஸ்லாமிய வரையறை பேணாத ஆடைகளுடன் வெளிச்செல்லல்
வரையின்றிய ஆண், பெண் கலப்பில் ஈடுபடல்
எனவே எதிர்வரும் பெருநாளை இஸ்லாமிய வழிமுறையில் கொண்டாடுவோம் இன்ஷா அல்லாஹ்.

  • VIdivelli

Leave A Reply

Your email address will not be published.