ஏப்ரல் அமர்வில் தேசபந்துவை பதவி நீக்கும் யோசனையை நிறைவேற்றிக் கொள்ள முடியும்

அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு

0 28

(எம்.மனோ­சித்ரா)
தேச­பந்து தென்­ன­கோனை பதவி நீக்­கு­வ­தற்­கான யோசனை எந்த வகை­யிலும் நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு இடை­யூ­றாக அமை­யாது. ஏப்ரல் 8 அல்­லது 9ஆம் திகதி பாரா­ளு­மன்ற அமர்­வு­களின் போது குறித்த யோச­னையை நிறை­வேற்றிக் கொள்ள முடியும் என அமைச்­ச­ரவை பேச்­சாளர் அமைச்சர் நளிந்த ஜய­திஸ்ஸ தெரி­வித்தார்.
அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் நேற்­றைய ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் இதனைத் தெரி­வித்த அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

தேச­பந்து தென்­னகோன் பொலிஸ்மா அதி­ப­ராக பணி­யாற்­று­வ­தற்கு நீதி­மன்­றத்தால் தடை­யுத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. 2002ஆம் ஆண்டு 5ஆம் இலக்க அதி­கா­ரி­களை பதவி நீக்கும் சட்ட ஏற்­பா­டு­க­ளுக்­க­மைய சட்­டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதி­பரை பதவி நீக்கும் வழி­மு­றை­க­ளையே அர­சாங்கம் பின்­பற்­று­கின்­றது. அதற்­க­மை­யவே பொலிஸ்மா அதி­பரை பதவி நீக்­கு­வ­தற்­கான யோச­னையும் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.
அதற்­க­மைய 75க்கும் அதி­க­மான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் கையெ­ழுத்­தி­டப்­பட்டு சபா­நா­ய­க­ரிடம் யோச­னையை சமர்ப்­பிக்க வேண்டும். அதற்­க­மைய 115 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரால் கையெ­ழுத்­தி­டப்­பட்ட யோசனை சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அடுத்த கட்­ட­மாக இந்த யோசனை பாரா­ளு­மன்ற ஒழுங்கு பத்­தி­ரத்தில் உள்­வாங்­கப்­படும்.

அத­னை­ய­டுத்து 5 நாட்­களின் பின்னர் பாரா­ளு­மன்ற நிகழ்ச்சி நிர­லுக்குள் உள்­வாங்­கப்­படும். அதற்­க­மைய அடுத்த பாரா­ளு­மன்ற அமர்வு இடம்­பெ­ற­வுள்ள நாளை அண்­மித்த நாளில் அதா­வது ஏப்ரல் 8 அல்­லது 9ஆம் திகதி தேச­பந்து தென்­ன­கோனை பதவி நீக்கும் யோசனை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­படும்.

பாரா­ளு­மன்ற அமர்­வுக்கு வருகை தராத உறுப்­பி­னர்­களும் உள்­ள­டங்­க­லாக 113 பேரது ஆத­ர­வுடன் இந்த யோசனை நிறை­வேற்­றப்­பட வேண்டும். அந்த வகையில் 113 வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வது அர­சாங்­கத்­துக்கு எந்த வகை­யிலும் சிக்­க­லா­காது. எனவே இதனை ஏப்ரல் 8 அல்­லது 9ஆம் திக­தி­களில் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்ற முடியும்.
இவ்­வாறு இந்த யோசனை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­ட­தை­ய­டுத்து மூவ­ர­டங்­கிய ஒழுக்­காற்று விசா­ர­ணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­படும். பிர­தம நீதி­ய­ர­சரால் நிய­மிக்­கப்­படும் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் ஒரு­வரின் தலை­மையின் கீழ் பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் தலைவர் , பிர­தமர் மற்றும் எதிர்க்­கட்சி தலைவர் ஆகி­யோரின் இணக்­கப்­பாட்­டுடன் நிய­மிக்­கப்­படும் நிர்­வாக அறி­வு­டைய அதி­காரி ஆகியோர் நிய­மிக்­கப்­ப­டுவர்.
இந்த விசா­ர­ணைக்­கு­ழு­வினால் சமர்ப்­பிக்­கப்­படும் அறிக்கை சபா­நா­ய­க­ரிடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டதன் பின்னர் பதவி நீக்கும் யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து 113 அல்லது அதற்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவுடன் அதனை நிறைவேற்ற முடியும். இந்த நடைமுறையையே அரசாங்கம் பின்பற்றி வருகிறது. பாராளுமன்றத்தின் இந்த நடைமுறை எந்த வகையிலும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறாக அமையாது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.