தேசிய, முஸ்லிம் ஊடக பரப்பில் சிறப்புற பரிணமித்த ஆளுமை தாஹா முஸம்மில்

0 47

என்.எம்.அமீன்
தலைவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்

பன்­முக ஆளு­மை­மிகு மூத்த ஊட­க­வி­ய­லாளர் அல்ஹாஜ் தாஹா முஸம்மில் கடந்த 23 ஆம் திகதி தனது 74 ஆவது வயதில் கொழும்பில் கால­மானார். கொழும்பை சேர்ந்த இவர், கொழும்பு அல்­ஹி­தாயா கல்­லூ­ரியில் கல்வி பயின்ற பின் கணக்­கா­ள­ராக பொது­வாழ்வை ஆரம்­பித்து, ஊட­கத்­து­றைக்குப் பிர­வே­சித்தார். ஊட­கத்­து­றைக்கு பிர­வே­சிக்க முன் லேக் ஹவுஸ் மற்றும் வீர­கே­சரி நிறு­வ­னத்தில் பல படி­களில் பணி­பு­ரிந்­துள்ளார். முஸ்­லிம்­க­ளது கட்­டுப்­பாட்டில் பத்­தி­ரிகை ஒன்றை ஆரம்­பிக்கும் முயற்­சியில் முன்­னா­டி­களில் ஒரு­வ­ராக முஸம்மில் திகழ்ந்தார். 1996 ஆம் ஆண்டு நவ­மணிப் பத்­தி­ரிகை ஆரம்­பிக்கும் பணியில் மூத்த ஊட­க­வி­ய­லாளர் மர்ஹும் எம்.பி.எம். அஸ்ஹர், எம்.ரீ.எம். றிஸ்வி ஆகி­யோ­ருடன் இணைந்து இவர் பணி­யாற்­றினார். நவ­ம­ணியின் செயற்­பாட்டுப் பணிப்­பா­ள­ரா­கவும், வெளி­நாட்டு விவ­காரச் செய்­தி­யா­ள­ரா­கவும் பணி­யாற்­றினார். நவ­மணி ஆரம்­பிப்­ப­தற்கு முன் எழுச்­சிச்­குரல் என்ற வாரப் பத்­தி­ரிகை ஆரம்­பிக்­கப்­பட்­டது. மர்ஹும் எம்.பி. எம். அஸ்­ஹரை ஆசி­ரி­ய­ராகக் கொண்ட இப்­பத்­தி­கையை எம்.ரீ.எம். றிஸ்­வி­யுடன் இணைந்து வெளி­யிட்டார். எழுச்­சிக்­குரல் மற்றும் நவ­மணிப் பத்­தி­ரி­கை­களில் அச்­சுப்­பி­ரி­வுக்கு இவரே பொறுப்­பாக இருந்தார்.

1970களில் நாட்டில் சிறப்­பாக இயங்­கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் மாணவர் சங்­கத்தின் மூலம் பொதுப்­ப­ணிக்கு பிர­வே­சித்தார். சட்­டத்­த­ரணி ரீ.கே. அசூர், கணக்­காளர் றியாஸ் மிஹ்லார், அமீன் மசூத், எம்.ரீ.எம்.றிஸ்வி போன்­ற­வர்­க­ளுடன் இணைந்து முஸ்லிம் மாணவர் சம்­மே­ள­னத்தை அக்­கா­ல­கட்­டத்தில் பல­மான அமைப்­பாக கட்­டி­யெ­ழுப்ப உத­வினார். 1995 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தை உரு­வாக்கும் முன்­னோ­டி­களில் ஒரு­வ­ராக இவர் திகழ்ந்தார். அதன் உப தலைவர், பொதுச்­செ­ய­லாளர் உட்­பட பல முக்­கிய பத­வி­களை வகித்து அந்த அமைப்­பினை பல­மான அமைப்­பாக உரு­வாக்­கு­வ­தற்கு முஸம்மில் ஆற்­றிய பங்­க­ளிப்பை நன்­றி­யுடன் நினைவு கூர்­கின்றேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நாட­ளா­விய ரீதியில் நடாத்­திய ஊடகக் கருத்­த­ரங்­கு­களில் முக்­கிய வள­வா­ள­ராக முஸம்மில் பணி­பு­ரிந்தார். அவ­ரது இறுதிக் கால­கட்­டத்தில் அவர் சுதந்­திர ஊடக அமைப்பில் முக்­கிய பத­வி­களை வகித்து, ஊடக சுதந்­தி­ரத்­துக்­கா­கவும், மனித உரி­மைக்­கா­கவும் பங்­க­ளிப்புச் செய்தார். இவ­ரது மறைவு குறித்து சுதந்­திர ஊடக அமைப்பு வெளி­யிட்­டுள்ள அனு­தாபச் செய்­தியில் குறிப்­பிட்டு இருப்­ப­தா­வது, தாஹா முஸம்மில் ஜன­நா­யகம், கருத்துச் சுதந்­திரம் மற்றும் மனித உரி­மைகள் ஆகி­ய­வற்­றுக்­காக உறு­தி­யாக போரா­டிய, வெளிப்­ப­டைத்­தன்­மையும், உள்­ள­டக்கத் தன்­மையும் சமூக அமைப்­பு­க­ளிலும் நிலைத்­தன்­மைக்­கான முக்­கிய கார­ணி­களை அவர் நம்­பினார். நீதிக்­கா­கவும், நேர்­மைக்­கா­கவும் அவர் எடுத்த அடை­யாளம் பல­ருக்கு ஊக்­க­ம­ளித்­தது. சுதந்­திர ஊடக அமைப்பு இவ­ரது சேவைக்கு அளித்த அங்­கீ­கா­ர­மா­கவே இதனைக் குறிப்­பி­டு­கின்றேன். சுதந்­திர ஊடக அமைப்பின் பொரு­ளாளர், தொழிற்­சங்க நிர்­வாகக் குழு உறுப்­பினர் பத­வி­களை வகித்தார். இலங்­கையின் பத்­தி­ரிகை முறைப்­பாட்டு ஆணைக் குழுவின் பணிப்­பாளர் சபை அங்­கத்­த­வ­ராக பல வரு­டங்­க­ளாகப் பணி­பு­ரிந்தார். சப்மா என்ற தெற்­கா­சிய சுதந்­திர ஊடக அமைப்பின் இலங்கை அலு­வ­லக இணைப்­பா­ள­ராகப் பணி­பு­ரிந்தார். இதன் மூலம் தெற்­கா­சிய நாடு­களின் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுடன் நெருங்கிச் செயற்­படும் வாய்ப்பு இவ­ருக்குக் கிடைத்­தது. இதன் மூலம் தெற்­கா­சிய நாடு­களின் தலை­ந­க­ரங்­களில் நடை­பெற்ற சகல மாநா­டு­க­ளிலும் இலங்கை சார்பில் இவர் பங்­கு­பற்­றினார். சகோ­தரர் முஸம்மில், 1979 முதல் ஈரான் இஸ்­லா­மியப் புரட்­சியின் தீவிர ஆத­ர­வா­ள­ராகச் செயற்­பட்டார். புரட்­சி­யினை ஆத­ரித்து தொட­ராக எழுதி வந்தார். ஈரான் புரட்­சியை ஆத­ரிப்­ப­தனை தவ­றாகப் புரிந்து கொண்டு, இவ­ரது செயற்­பாட்டை விமர்­சித்­தனர். தலை­ந­கரில் உள்ள பள்­ளி­வாசல் ஒன்றில் ஜும்ஆப் பிர­சங்கம் ஒன்றில் இவ­ரது பெயரை குறித்து விமர்­சித்த போது தான் அதே பள்­ளி­வா­சலில் ஜும்­ஆவில் கலந்து கொண்­ட­தாக இவர் ஒரு முறை என்­னிடம் தெரி­வித்தார்.

சிறந்த ஆங்­கில அறிவும் கணினி அறிவும் இவ­ரிடம் இருந்­த­தனால் இவ­ரது சேவை எல்லா அமைப்­பு­க­ளுக்கும் தேவைப்­பட்­டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் சுதந்­திர ஊடக அமைப்பு போன்­ற­வற்றில் இவ­ரது பிர­சன்னம் அத்­தி­யா­வ­சி­ய­மான ஒன்­றாக இருந்­தது. இவர் வெளிப்படைத் தன்மை கொண்­ட­வ­ரா­கவும் செயற்­பட்டார். நேர்­மை­யாகச் செயற்­படும் அமை­தி­யான போக்­கு­டைய ஒரு­வ­ராக சகோ­தரர் முஸம்­மிலைக் குறிப்­பி­டலாம்.

ஆறு பிள்­ளை­களின் தந்­தை­யான இவ­ரது மனைவி மூன்று வரு­டங்­க­ளுக்கு முன் இறந்த பின் இவ­ரு­டைய போக்கில் சற்று தளர்ச்சி காணப்­பட்­டது. என்­றாலும், சிறிது காலத்தில் தனது மனதை தேற்றிக் கொண்டு குழந்­தை­க­ளுக்குத் தாயா­கவும் தந்­தை­யா­கவும் இவர் செயற்­பட்டார்.

உலகின் பல நாடு­க­ளுக்கும் சென்று சர்­வ­தேச மாநா­டு­களில் இவர் கலந்து கொண்டு இருக்­கிறார்.

ஈரான் இஸ்­லா­மிய குடி­ய­ரசில் நடைபெற்ற பல மாநா­டு­களில் இவர் கலந்து கொண்­டுள்ளார். இவ­ரு­டைய இறு­திக்­கி­ரி­யைகள் நடை­பெற்ற போது, நாட்டின் முக்­கிய பல சிங்­கள ஊட­க­வி­ய­லா­ளர்­களும் தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­களும் கலந்து கொண்­டனர். இது இவ­ரது சேவைக்குக் கிடைத்த அங்­கீ­கா­ர­மா­கவே கரு­தப்­ப­டலாம். சுதந்­திர ஊடக அமைப்பு மற்றும் தெற்­கா­சிய அமைப்பின் முக்­கி­யஸ்­தர்கள் பிர­சன்­ன­மாகி, தமது இறுதி மரி­யா­தையை சகோ­தரர் முஸம்­மி­லுக்குத் தெரி­வித்­தி­ருந்­தனர்.

முஸம்மில் உண்மையிலேயே ஒரு போராளி. தான் கொண்ட நிலைப்­பாட்டில் அசை­யாது நம்­பிக்கை வைத்­தி­ருந்தார். எல்­லோ­ரு­டனும் இணங்கிச் செயற்­ப­டு­கின்ற ஒரு தன்மை அவ­ரிடம் காணப்­பட்­டது. அந்த வகையில் எங்­க­ளுக்குச் சிறந்­த­தொரு வழி­காட்­டி­யா­கவே அவர் இருந்தார்.

அவ­ரது மறைவு எங்­களைப் பொறுத்­த­வ­ரையில் இந்த கட்­டத்தில் ஒரு பேரிழப்பாகும். அவர் இந்தப் புனித ரமழானில் எங்களை விட்டு பிரிந்திருக்கின்றார். அவருடைய பாவங்களை மன்னித்து, அவருடைய மறுமை வாழ்வை சிறப்பாக அமைக்க எல்லோரும் பிரார்த்திப்போமாக! ஆமீன்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.