ஞாயிறன்று ஷவ்வால் தலைப்பிறை மாநாடு

0 31

ஹிஜ்ரி 1446 புனித ஷவ்வால் மாத தலைப்­பிறை பற்றி தீர்­மா­னிப்­ப­தற்­கான மாநாடு எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை 30ஆம் திகதி (ரமழான் – பிறை 29) மஃரிப் தொழு­கையின் பின் கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் இடம்­பெ­ற­வுள்­ளது.

கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் பிறைக்­குழு தலைவர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.ஹிஷாம் (அல் பத்­தாஹி) தலை­மையில் இடம்­பெறும் இம்­மா­நாட்டில், கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் மற்றும் அதன் பிறைக்­குழு உல­மாக்கள், அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய கலா­சார திணைக்­கள அதி­கா­ரிகள், இலங்கை வளி­மண்­ட­ல­வியல் சிரேஷ்ட அதி­காரி உள்­ளிட்டோர் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

இம்­மா­நாட்டின் இறுதித் தீர்­மானம் இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவை ஊடாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக மாநாட்டின் தலை­வ­ரினால் அறி­விக்­கப்­படும் என கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வாகம் தெரி­வித்­துள்­ளது. அத்­துடன், தலைப்­பிறை சம்­பந்­த­மான ஊர்­ஜி­த­மற்ற தக­வல்­க­ளையோ, வதந்­தி­க­ளையோ பகிர்­வதை தவிர்ந்து கொள்­ளு­மாறும் பெரிய பள்­ளி­வாசல் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.
மேலும், பிறை சம்­பந்­த­மாக மேல­திக தக­வல்­க­ளுக்கு 0112432110, 0112451245, 0777316415 ஆகிய தொலைபேசி இலக்கங்களில் கொழும்பு பெரிய பள்ளிவாசலுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.