இலங்கைக்கான புதிய பலஸ்தீனத்தூதுவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தனது நற்சான்றிதழ் பத்திரத்தை கையளித்தார்.
பலஸ்தீன நாட்டுக்கான தூதுவராக இஹாப் ஐ.எம். கலீல் இவ்வாறு ஜனாதிபதியிடம் நற்சான்றிதழை கையளித்ததுடன், அதன் பின்னர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடலையும் மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த திங்களன்று இடம்பெற்ற இந்நிகழ்வின்போது, நேபாளம் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான தூதுவர்களும் தங்களது நற்சான்றிதழை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
இதற்கமைய, பிரான்ஸ் தூதுவராக ரெமி லம்பேர்ட்டும், நேபாள தூதுவராக கலாநிதி பூர்ண பகதூர் நேபாளியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.- Vidivelli