இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் : கொம்பனித்தெருவில் இளைஞர் ஒருவர் கைது

வெறுப்பூட்டும் பிரசாரம் என கூறி பயங்கரவாத தடுப்பு பிரிவு நடவடிக்கை

0 50

(எப்.அய்னா)
காஸாவில் இடம்­பெறும் அட்­டூ­ழி­யங்­க­ளுக்கு எதி­ராக, கொழும்பு, கொம்­பனித் தெருவில் உள்ள சிடி சென்டர் எனும் பிர­பல வர்த்­தக கட்­டிடத் தொகு­தியின் ‘லொபி’ பகு­தியில் இரு ஸ்டிக்கர்­களை ஒட்­டி­ய‌­தாக கூறப்­படும் இளைஞர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

வெறுப்­பூட்டும் விட­யங்­களை பிரசாரம் செய்­த­மைக்­காக, குறித்த ஸ்டிக்கரை ஒட்­டிய சம்­ப­வத்தை மையப்­ப­டுத்தி பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வினர் அவரைக் கைது செய்­த­தா­கவும், கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபரை தடுத்து வைத்து விசா­ரித்து வரு­வ­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் புத்­திக மன­துங்க தெரி­வித்தார்.

குறித்த இளைஞர், கொம்­ப­னித்­தெரு சிட்டி சென்டர் வர்த்­தக கட்­டிடத் தொகு­தியில் உள்ள கடை ஒன்றில் சேவை­யாற்றும் நிலை­யி­லேயே, பணி நிமித்தம் சென்ற போது அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

குறித்த கட்­டிடத் தொகு­தியின் லொபி பகு­தியில் ‘ f… இஸ்ரேல்’ எனும் வாசகம் தரித்த ஸ்டிக்­கர்­களை ஒட்­டி­யுள்­ள­தா­கவும், காஸாவில் இடம்­பெறும் அட்­டூ­ழி­யங்­க­ளுக்கு எதி­ராக அவர் அதனை செய்­துள்­ள­தா­கவும் கூறப்­ப‌­டு­கின்­ற‌து.

இது குறித்து பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்­றுள்ள தக­வல்­களுக்கு அமைய, கொம்­ப­னித்­தெரு பொலி­ஸா­ருக்கும் அறி­விக்­கப்­பட்டு, பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.