அர்ச்சுனா எம்.பியின் கூற்றுக்களால் தேசிய ஒற்றுமைக்கு பாதிப்பு

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவிப்பு; மார்ச், ஏப்ரலில் உரைகளை நேரலையாக ஒலி, ஒளிபரப்பவும் தடை

0 18

(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்)
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராம­நாதன் அர்ச்­சு­னா­வினால் தொடர்ச்­சி­யாக தெரி­விக்­கப்­பட்டு வந்­துள்ள கூற்­றுக்கள் தொடர்­பாக மிக ஆழ­மாக ஆராய்ந்து, அவற்றை பரி­சீ­லித்­ததன் பின்னர் தேசிய ஒற்­று­மைக்கும், நல்­லி­ணக்­கத்­திற்கும் ஏற்­படும் அச்­சு­றுத்­தலைக் கருத்திற் கொண்டு சபா­நா­யகர் என்ற வகையில் எனக்­க­ளிக்­கப்­பட்­டுள்ள தத்­து­வங்­களின் பிர­காரம், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்­களில் இடம்­பெறும் பாரா­ளு­மன்ற அமர்­வு­க­ளின்­போது அவரின் எந்­த­வொரு கூற்­றையும் செவிப்­புல, கட்­புல மற்றும் சமூக ஊட­கங்­களில் நேர­டி­யாக ஒலி, ஒளி­ப­ரப்புச் செய்­வதை இடை­நி­றுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு கட்­ட­ளை­யி­டு­கிறேன் என்று சபா­நா­யகர் ஜகத் விக்­ர­ம­ரத்ன தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்றம் நேற்று புதன்­கி­ழமை கூடி­ய­போது சபா­நா­ய­கரின் அறி­விப்­பின்­போதே அவர் இவ்­வாறு உத்­த­ர­விட்டார்.

இது­தொ­டர்­பாக சபா­நா­யகர் மேலும் தெரி­விக்­கையில்,
பாரா­ளு­மன்ற உறுப்­பினர் (வைத்­தியர்) இரா­ம­நாதன் அர்ச்­சுனா, இந்தச் சபை­யிலும் சபைக்கு வெளி­யிலும் குறிப்­பாக, சமூக ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்தி தனி நபர்­க­ளுக்கும், தனி நபர் குழுக்­க­ளுக்கும் மற்றும் பல­த­ரப்­பட்ட அமைப்­பு­க­ளுக்கும் எதி­ராக மிகவும் இழி­வான சொற்­ப­தங்­களைப் பிர­யோ­கித்து மேற்­கொண்­டுள்­ளதும் மேற்­கொண்டு வரு­வ­து­மான சர்ச்­சைக்­கு­ரிய மற்றும் இழி­வுக்­குட்­ப­டுத்தும் கூற்­று­களால், தனிப்­பட்ட முறையில் பல்­வேறு நபர்­க­ளுக்கும் பல்­வேறு சமூக மற்றும் இனக் குழு­மங்­க­ளுக்கும் மன அமை­தியை குலைக்கும் நிலை ஏற்­ப­டு­கின்­ற­தென பல்­வேறு வழி­மு­றை­களில் எனக்கு முன்­வைக்­கப்­பட்­டுள்ள முறைப்­பா­டுகள் குறித்து இந்தச் சபைக்கு தெளி­வுப்­ப­டுத்த விரும்­பு­கிறேன்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் (வைத்­தியர்) இரா­ம­நாதன் அர்ச்­சுனா, தனிப்­பட்ட முறையில் பெண்கள் உட்­பட பல்­வேறு நபர்கள், பல்­வேறு சமூக குழுக்கள் மற்றும் சமயக் குழுக்­களை இலக்கு வைத்து முன்­வைத்­துள்ள பல்­த­ரப்­பட்ட, இழி­வுக்­குட்­ப­டுத்­து­கின்­றதும் அநா­க­ரி­க­மா­னதும் அத்­தோடு கடு­மை­யான சர்ச்­சை­க­ளுக்கு வித்­தி­டு­கின்­ற­து­மான கூற்­றுகள் சம்­பந்­த­மாக பல்­வேறு நபர்கள், பல்­வேறு சமூக அமைப்­புகள் அதேபோல், இந்தச் உயர் சபையை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் அர­சாங்க கட்­சி­யையும் எதிர்க்­கட்­சி­யையும் சேர்ந்த பல மக்கள் பிர­தி­நி­திகள் உட்­பட்ட பல்­வேறு தரப்­பினர் தனிப்­பட்ட முறையில் என்­னிடம் முறைப்­பாடு செய்து அத்­த­கைய கூற்­றுகள் சம்­பந்­த­மாக அவர்­க­ளி­னது கடு­மை­யான அதி­ருப்­தி­யையும் கவ­லை­யையும் வருத்­தத்­தையும் தெரி­வித்­துள்­ளனர், இந்த உயர் சபையின் தலைவர் என்ற வகையில் அத்­த­கைய செயற்­பா­டுகள் குறித்து உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஏற்­க­னவே என்­னிடம் பல கோரிக்­கை­களை முன்­வைத்­துள்­ளார்கள். எனும் விட­யத்தை இச்­ச­பைக்கு அறி­யத்­தர விரும்­பு­கிறேன்.

குறிப்­பாக, இந்த உயர் சபையைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மக்கள் பிர­தி­நிதி என்ற வகையில் தனக்­கு­ரிய சிறப்­பு­ரி­மை­களைப் பயன்­ப­டுத்தி, இந்தச் சபைக்கு வந்து பதி­ல­ளிக்க முடி­யாத தரப்­பினர் சம்­பந்­த­மா­கவும் இச்­ச­பையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஏனைய மக்கள் பிர­தி­நி­திகள் சம்­பந்­த­மா­கவும் அத்­துடன் பிற பல்­வேறு வெளி­மட்ட சமூக மற்றும் சமய அமைப்­புகள் உட்­பட பல்­வேறு இனக் குழு­மங்­க­ளையும் இனப் பிரி­வி­ன­ரையும் இலக்கு வைத்து மிகவும் இழி­வான சொற்­ப­தங்­களைப் பிர­யோ­கித்து, அவர்­களின் தனிப்­பட்ட வாழ்வில் பாரி­ய­தொரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றதும் அப­கீர்த்­தியை விளை­விக்­கின்­ற­து­மான கூற்­று­க­ளுக்கு சபா­நா­யகர் என்ற வகையில் எனது கடு­மை­யான அதி­ருப்­தியை தெரி­வித்­துக்­கொள்­கிறேன்.

இந்த உயர் சபையைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மக்கள் பிர­தி­நிதி என்ற வகையில், அவர் மேற்­கொள்­கின்ற இவ்­வ­கை­யான இழி­வு­ப­டுத்தும் மற்றும் அநா­க­ரி­க­மான கூற்­று­களால் சபையின் உயர் தன்­மைக்கு பாரிய களங்­கமும் அவ­ம­திப்பும் ஏற்­ப­டு­கி­றது என்­பதை நான் வலி­யு­றுத்த விரும்­பு­கின்றேன். மேலும், இது தேசிய ஒற்­று­மைக்கும் நல்­லி­ணக்­கத்­திற்கும் பாரிய குந்­தக நிலையை ஏற்­ப­டுத்­து­கின்­றது என்­ப­தையும் குறிப்­பிட விரும்­பு­கிறேன்.

சம்­பந்­தப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்கு பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில், இவ்­வா­றான கூற்­று­களைத் தவிர்க்­கு­மாறு பல வழி­களில் கடிந்­து­ரைத்­த­போ­திலும், அந்த அறி­வு­றுத்­தல்­களை ஏற்று நடப்­ப­தற்கு குறித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முற்­றாகத் தவ­றி­யி­ருப்­ப­த­னையும் நான் அவ­தா­னிக்­கின்றேன்.

குறித்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரின் இத்­த­கைய செயற்­பா­டுகள் பாரா­ளு­மன்ற நிலை­யியற் கட்­ட­ளை­களின் ஏற்­பா­டுகள், பாரா­ளு­மன்ற (தத்­து­வங்­களும் சிறப்­பு­ரி­மை­களும்) சட்­டத்தின் ஏற்­பா­டுகள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான நடத்தைக் கோவையின் ஏற்­பா­டுகள் மற்றும் தொன்­று­தொட்டு பேணப்­பட்டு வரு­கின்ற தொன்­மை­யான பாரா­ளு­மன்ற மர­புகள் ஆகி­ய­வற்­றுக்கு முற்­றிலும் முர­ணா­கவும் இசைந்­தொ­ழு­காத வகை­யிலும் இருக்­கின்­ற­தென இங்கு விசே­ட­மாக வலி­யு­றுத்­திக்­கூற விரும்­பு­கிறேன்.

தொடர்ச்­சி­யாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் (வைத்­தியர்) இரா­ம­நாதன் அர்ச்­சுனா வினால் முன்­வைக்­கப்­படும் இக்­கூற்­றுக்கள் தொடர்­பாக மிக ஆழ­மாக ஆராய்ந்து, அவற்றை பரி­சீ­லித்­ததன் பின்னர் அதன் மூலம் தேசிய ஒற்­று­மைக்கும், நல்­லி­ணக்­கத்­திற்கும் ஏற்­படும் அச்­சு­றுத்­தலைக் கருத்திற் கொண்டு, நிலை­யியற் கட்­டளை ஏற்­பா­டு­களின் பிர­காரம், சபா­நா­யகர் என்ற வகையில் எனக்­க­ளிக்­கப்­பட்­டுள்ள தத்­து­வங்­களின் பிர­காரம், 2025ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 20 மற்றும் 21ஆந் திக­தி­க­ளிலும், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 08, 09 மற்றும் 10ஆம் திக­தி­க­ளிலும், 2025 ஆம் ஆண்டு மே மாதம் 06, 07 மற்றும் 08ஆம் திக­தி­க­ளிலும் என மொத்­த­மாக எட்டு நாட்கள் நடை­பெற உள்ள பாரா­ளு­மன்ற அமர்­வு­க­ளின்­போது, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா­ம­நாதன் அர்ச்­சு­னாவின் எந்­த­வொரு கூற்­றையும் செவிப்­புல, கட்­புல மற்றும் சமூக ஊட­கங்­களில் நேர­டி­யாக ஒலி, ஒளி­ப­ரப்புச் செய்­வதை இடை­நி­றுத்­து­வ­தற்­கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கட்டளையிடுகிறேன்.

மேலும், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப, அவ்வாறான இழிவுக்குட்படுத்தும், அநாகரிகமான மற்றும் கீழ்த்தரமான சொற்பதங்களைப் பிரயோகித்து, பாராளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்படும் அனைத்து கூற்றுக்களையும் ஹன்சாட் அறிக்கையிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என இந்த உயர் சபைக்கு அறியத்தர விரும்புகிறேன்.

அத்துடன், இவ்வாறு நேரடி ஒலி, ஒளிபரப்பை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் காலப்பகுதியில், பாராளுமன்ற உறுப்பினர் ஆற்றும் உரைகளின் உள்ளடக்கம் மற்றும் தெரிவிக்கப்படும் கூற்றுக்கள் சம்பந்தமாக ஆராய்ந்து, இத்தற்காலிக தடையை நீக்குவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.