பலஸ்தீன மக்களுக்காக பிரார்த்திக்குக

0 12

பலஸ்தீன் மற்றும் காஸா மக்­க­ளுக்­காக துஆக்­களில் ஈடு­ப­டுமாறு அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. இது குறித்து உலமா சபையால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, கடந்த சில தினங்­க­ளாக பலஸ்­தீனில் நடை­பெற்­று­வரும் தாக்­கு­தலின் கார­ண­மாக நூற்­றுக்­க­ணக்­கான அப்­பாவி முஸ்­லிம்கள் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் அதி­க­மா­ன­வர்கள் காயத்­துக்­குள்­ளா­கி­யி­ருப்­ப­தையும் நாம் அறிவோம். அல்­லாஹு தஆலா உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு ஜன்­னத்துல் ஃபிர்­தௌ­ஸையும் காய­முற்­ற­வர்­க­ளுக்கு அவ­ச­ர­மாக சுகத்­தையும் கொடுத்­த­ருள்­வா­னாக.

இவ்­வா­றான நெருக்­க­டி­யான சோத­னைகள் ஏற்­படும் பொழுது அவை நீங்­கு­வ­தற்கு அல்­லாஹ்வின் அடி­யார்­க­ளா­கிய நாம் தொழுகை, நோன்பு, ஸதகா, தௌபா, இஸ்­திஃபார் மற்றும் துஆ போன்ற நல்­ல­மல்கள் மூலம் அவன் பக்கம் நெருங்க வேண்டும்.
ஆகவே, புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று இருக்கும் நாம், இம்­மா­தத்தில் மேற்­கொள்ளும் ஒவ்­வொரு நல்­ல­மல்­க­ளுக்குப் பின்­னரும் பலஸ்தீன், காஸா மற்றும் உலக நாடுகள் அனைத்­திலும் அமை­தியும் சமா­தா­னமும் நில­வவும் நீதி நிலை­நாட்­டப்­ப­டவும் துஆக்­களில் ஈடு­ப­டு­மாறும் குறிப்­பாக பஜ்ருத் தொழு­கையின் குனூத்­திலும் வித்ருத் தொழு­கையின் குனூத்­திலும் மஃமூம்­க­ளுக்கு சடை­வில்­லா­த­வாறு பிரார்த்­த­னையில் ஈடு­ப­டு­மாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இலங்கைவாழ் முஸ்லிம்களையும் மஸ்ஜித் இமாம்களையும் வேண்டிக்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.