இஸ்ரேலின் தாக்குதல்களை அரசாங்கம் கண்டிக்க வேண்டும்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்து

0 13

இஸ்­ரேலின் மிலேச்­சத்­த­ன­மான இனப்­ப­டு­கொலை, தொடர்ச்­சி­யான ஆக்­கி­ர­மிப்பு மற்றும் அழிவுச் செயல்­களை இலங்கை அர­சாங்கம் வெளிப்­ப­டை­யாகக் கண்­டிக்க முன்­வர வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இது தொடர்பில் நேற்று முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளி­யிட்ட அறிக்­கையில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

சர்­வ­தேச சட்­டத்தை மீறி இஸ்ரேல் நடத்­தி­யுள்ள அதிர்ச்­சி­யூட்டும் வான்­வழித் தாக்­கு­தல்கள் மூலம் அந் நாட்டு சியோ­னிச ஆட்­சியின் அப்­பட்­ட­மான போர் நிறுத்த மீறலை நாங்கள் வன்­மை­யாகக் கண்­டிக்­கிறோம். முஸ்­லிம்கள் நோன்பு நோற்று வரும் புனித ரமழான் மாதத்தில் காஸாவில் 400க்கும் மேற்­பட்ட உயிர்­களைக் காவு கொண்ட குண்­டு­வெ­டிப்­பு­களை இஸ்ரேல் மீண்டும் ஆரம்­பித்து, இரண்டு மாத கால போர்­நி­றுத்­தத்தை மீறி­யுள்­ளமை எங்­களால் வன்­மை­யாகக் கண்­டிக்­கப்­ப­டு­கின்­றது. இஸ்ரேல் ஒரு­த­லைப்­பட்­ச­மாக போர்­நி­றுத்­தத்தின் முதல் கட்­டத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­துள்­ளது.

காஸா மற்றும் பிராந்­தி­யத்தின் பிற பகு­தி­களில் அமை­தியை சீர­ழிக்கும் காரி­யங்­களில் அறவே ஆர்­வ­மில்­லா­தி­ருக்கும் அப்­பாவிப் பொது­மக்கள் மீது மிரு­கத்­த­ன­மான தாக்­கு­தல்­க­ளையும், இன ஒழிப்பு நட­வ­டிக்­கை­க­ளையும் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரு­கின்­றது. யெமன், சிரியா மற்றும் லெபனான் ஆகி­ய­வற்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்­திய அண்­மைய தாக்­கு­தல்­களின் மூலம் பொது­மக்­க­ளையும், பெண்­க­ளையும், சிறு­வர்­க­ளையும் குழந்­தை­க­ளையும் காயப்­ப­டுத்­து­வ­தையும், படு­கொலை செய்­வ­தையும், நிவா­ரணப் பணி­யா­ளர்­களை நோக்கி இடை­வி­டாமல் தாக்­குதல் தொடுப்­ப­தையும் நாங்கள் கடு­மை­யாகக் கண்­டிக்­கிறோம். மக்­க­ளுக்கு வழங்கும் நிவா­ரண உத­வி­களைக் கூட இஸ்ரேல் சட்­டத்தை மீறி தொடர்ந்து தடுத்து வரு­கின்­றது.

இஸ்­ரேலின் கடு­மை­யான நிலைப்­பாட்­டிற்கு அமெ­ரிக்கா ஆத­ர­வ­ளிப்­பது மிகவும் கவ­லை­ய­ளிக்­கின்­றது, இது இஸ்­ரேலின் தண்­ட­னை­யி­லி­ருந்து தப்­பிக்கும் செயல்­களை தீவி­ரப்­ப­டுத்­து­கி­றது. இது அமை­திக்­கான பாதையில் , இரா­ணுவ மோதல்­களை அதி­க­ரிப்­ப­தோடு பிராந்­தி­யத்தின் இயல்­பான ஆற்றல் திறனை கடு­மை­யாகக் குறை­ம­திப்­பீட்­டுக்கு உட்­ப­டுத்­து­கி­றது.

இஸ்­ரே­லிய சியோ­னிச ஆட்­சியின் நட­வ­டிக்­கைகள் குறித்து அமெ­ரிக்கா கையாண்­டு­வரும் தவ­றான கொள்­கை­க­ளுக்கு எதி­ராக அவ­ச­ர­மாக கருத்­தொ­ரு­மைப்­பாட்டை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும், சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு அழைப்பு விடுக்­கவும் அரபுத் தலை­வர்­களை நாங்கள் வேண்டிக் கொள்­கின்றோம்.

இஸ்­ரே­லிய சியோ­னிச ஆட்சி, சர்­வ­தேச சட்­டங்­களை தொடர்ந்து மீறு­வ­தையும், காஸாவில் அது மேற்­கொண்­டு­வ­ரு­கின்ற மிலேச்­சத்­த­ன­மான இனப்­ப­டு­கொலை, தொடர்ச்­சி­யான ஆக்­கி­ர­மிப்பு மற்றும் அழிவுச் செயல்­களை இலங்கை அர­சாங்கம் வெளிப்­ப­டை­யாகக் கண்­டிக்க முன்­வர வேண்டும் என்றும் நாங்கள் வலி­யு­றுத்­து­கிறோம்.
இறை­மை­யுள்ள அயல் நாடுகள் மீதான இஸ்­ரேலின் அச்­சு­றுத்தல், அவற்­றிற்கு ஏற்­ப­டுத்­தி­வரும் பேரழிவு மற்றும் ஐ.நா. தீர்மானங்களை மீறிச் செயற்படுவது என்பவை சமமாகக் கண்டிக்கப்பட வேண்டியவை. சர்வதேச சட்டங்களை மீறிவருவதற்கும், பிராந்தியத்தில் அதிகரித்துவரும் பதட்டங்களுக்கும் இஸ்ரேலை பொறுப்பேற்குமாறு இலங்கை அரசாங்கம் பாதுகாப்புக் கவுன்சிலிடம் முறையிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.