ஸகாத் – கூட்டு நடைமுறையின் அவசியம்

0 374

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி), பீடாதிபதி,
இஸ்லாமிய கற்கைகள் பீடம், ஜாமிஆ நளீமிய்யா

பொது­வாக ஸகாத் கொடுப்­ப­வர்­களில் அனே­க­மா­ன­வர்கள் தனிப்­பட்ட முறை­யி­லேயே ஸகாத் கட­மையை நிறை­வேற்றி வரு­கின்­றனர். அதா­வது, தமது உற­வி­னர்கள், அயல்­வீட்டார் அறி­மு­க­மா­ன­வர்­க­ளுக்கு இவ்­வாறு நேர­டி­யாக கொடுப்­பதை இவர்கள் வழக்­க­மாக்கிக் கொண்­டுள்­ளனர். இது இஸ்­லா­மிய முறை­யல்ல என்­ப­துடன் இதனால் ஸகாத் மூலம் எதிர்­பார்க்­கப்­படும் முழுப் பலன்­க­ளையும் அடை­யவும் முடி­யா­துள்­ளது.

கூட்டு ஸகாத்தை வலி­யு­றுத்தும்
இஸ்லாம்
ஸகாத் கட­மை­யா­ன­வர்கள் தனித்­த­னி­யாக அதனை நிறை­வேற்­றாமல் நிறு­வன ரீதி­யாக அதா­வது, அந்த ஸகாத்தை கூட்­டாக சேக­ரித்து விநி­யோ­கிக்கும் பணியில் ஈடு­ப­டு­வோ­ருக்கு அதனை வழங்கி அதனை அவர்கள் ஸகாத் பெறத் தகு­தி­யா­ன­வர்­க­ளுக்கு வழங்க வேண்டும் என்று தான் குர்­ஆனும் ஹதீஸ்­களும் நேர­டி­யாக வலி­யு­றுத்­தி­யுள்­ளன. அதற்கு பின்­வரும் ஆதா­ரங்­களை முன்­வைக்­கலாம்:-

1. ‘எடுங்கள்’ என்ற குர்­ஆ­னிய கட்­டளை : “(நபியே!) அவர்­க­ளு­டைய செல்­வத்­தி­லி­ருந்து தர்­மத்தை (ஸகாத்தை) எடுத்­துக்­கொண்டு, அதைக் கொண்டு அவர்­களைத் தூய்­மை­யாக்கி, அவர்­களைப் பரி­சுத்­தப்­ப­டுத்­து­வீ­ராக, இன்னும், அவர்­க­ளுக்­காகப் பிரார்த்­தனை செய்­வீ­ராக, நிச்­ச­ய­மாக உம்­மு­டைய பிரார்த்­தனை அவர்­க­ளுக்கு நிம்­மதி அளிக்கும். அல்லாஹ் (யாவற்­றையும்) செவி­யு­று­வோ­னா­கவும், அறி­ப­வ­னா­கவும் இருக்­கின்றான்.”(9:103)

இந்த வச­னத்தில் அல்லாஹ் ஸகாத்தை வச­தி­யுள்­ள­வர்­க­ளி­ட­மி­ருந்து ‘எடுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்­க­ளுக்கு கட்­ட­ளை­யி­டு­கிறான் .அதா­வது தன­வந்­தர்கள் தனிப்­பட்ட முறையில் ஏழை­க­ளுக்கு வழங்க வேண்டும் என்று இந்த வசனம் கூறாமல், நபி­களார்(ஸல்) ஸகாத்தை தன­வந்­தர்­க­ளி­ட­மி­ருந்து எடுத்து அவர்கள் தான் பொருத்­த­மா­ன­வர்­க­ளுக்கு பங்­கீடு செய்ய வேண்டும் என்ற கருத்தைக் கூறு­கி­றது.

இமாம் இப்னு கதீர் அவர்கள் இந்த வச­னத்­திற்கு விளக்கம் கூறும் போது:- ‘(அபூ­பக்கர் ரலி) அவர்­க­ளது கிலா­பத்தின் போது ஸகாத் வழங்க மறுத்த அரபுக் கோத்­தி­ரங்­களைச் சேர்ந்த சிலர் தமது நிலைப்­பாட்டை நியா­யப்­ப­டுத்த “அவர்­களின் செல்­வங்­களில் இருந்து ஒரு பகு­தியை ஸதகா (ஸகாத்) ஆக எடுங்கள்” என்ற வச­னத்தை எடுத்­துக்­காட்­டினர். அது அல்­லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்­க­ளுக்கு மட்டும் உரிய கட்­டளை என்றும் ஸகாத்தை இமா­முக்கு (நபி­ய­வர்­க­ளுக்கு பின்னர் வந்த கலீ­பா­வுக்கு) வழங்­கு­வது அவ­சி­ய­மில்லை என்றும் நம்­பினர்.

ஆனால், அவர்­களின் இந்த தவ­றான விளக்கம் மற்றும் புரி­தலை அபூ­பக்கர் (ரலி)அவர்­களும் மற்றும் ஏனைய சஹா­பாக்­களும் மறுத்­தார்கள். அவர்கள் ஸகாத்தை இதற்கு முன்னர் அல்­லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்­க­ளுக்கு கொடுத்­தது போலவே கலீ­பா­வுக்கும் கொடுக்கும் வரை அவர்­க­ளுக்கு எதி­ராக போரா­டி­னார்கள்.

எனவே, அபூ­பக்கர்(ரலி) அவர்கள்:- ‘அவர்கள் அல்­லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்­க­ளுக்கு வழங்­கி­யி­ருந்த (ஒட்­டகை கட்டும்) கயிற்றை அல்­லது மற்றோர் அறி­விப்பில்: பெண் வெள்­ளாட்டை வழங்க மறுத்­தாலும், அதை அவர்கள் எனக்குத் தராமல் தவிர்ந்து கொண்டால் அவர்­க­ளுக்கு எதி­ராக கட்­டா­ய­மாக போரா­டுவேன்’ என்­றார்கள்.” (தப்ஸீர் இப்னு கதீர்)

அந்­த­வ­கையில், ஸகாத்தை கலீ­பா­வி­னூ­டா­கவே சமூ­கத்­துக்கு வழங்க வேண்டும் என்ற அபூ­பக்கர் (ரலி) அவர்­க­ளது கண்­டிப்­பான நிலைப்­பா­டா­னது நிறு­வ­ன­ம­யப்­ப­டுத்தி ஸகாத்தை கூட்­டாக திரட்டி விநி­யோகம் செய்­வதன் அவ­சி­யத்தை உணர்த்தப் போது­மா­ன­தாகும்.

மேலும் இந்த வச­னத்தின் இறு­தியில் அல்லாஹ் “இன்னும், அவர்­க­ளுக்­காகப் பிரார்த்­தனை செய்­வீ­ராக!” என்று தனது தூத­ருக்கு கூறு­வ­தி­லி­ருந்து மற்­றொரு கருத்து கூட்டு ஸகாத்தின் ஆன்­மீகப் பகு­தியை துல்­லி­ய­மாகப் புலப்­ப­டுத்­து­கி­றது. ஸகாத்தை தன­வந்­த­ரி­ட­மி­ருந்து பெறும் நபி(ஸல்) அவர்கள் அல்­லது கலீபா அல்­லது கூட்டு ஸகாத் பொறுப்பை ஏற்­றி­ருப்போர் ஸகாத்தை வழங்­கு­ப­வ­ருக்கு அல்­லாஹ்­விடம் துஆச் செய்ய வேண்டும். இது ஒரு பெரிய பாக்­கி­ய­மாகும். தன­வந்தர் தனது ஸக்­காத்தை நேர­டி­யான ஏழைக்கு வழங்கும் போது இந்தப் பாக்­கியம் கிடைக்­க­மாட்­டாது.

2. ஆமில் பங்கு:- அல்­குர்­ஆனில் அல்லாஹ் ‘ஆமிலூன்’ எனப்­படும் ஒரு கூட்­டத்­தாரும் ஸகாத் பெறத் தகு­தி­யான எட்டுக் குழுவில் ஒரு சாரார் எனக் கூறி­யுள்ளான். ‘ஆமில்கள்’ பல பொறுப்­புக்­களை சுமந்­தி­ருப்பர். அவர்கள், சமூ­கத்தில் ஸகாத் யார் மீது கட­மை­யாகும், அந்த ஒவ்­வொ­ருவர் மீதும் எவ்­வ­ளவு கட­மை­யாகும், ஸகாத்தை பெறத் தகு­தி­யானோர் யார், அவர்­க­ளுக்கு எவ்­வ­ளவு, எவற்றை ஸகாத்­தாக வழங்­கு­வது பொருத்தம் போன்ற ஆய்­வு­களை துல்­லி­ய­மாகச் செய்­வ­துடன் ஸகாத்தை திரட்டி, தேவைப்­படின் களஞ்­சி­யப்­ப­டுத்தி, பொருத்­த­மான நபர்­க­ளுக்கு, பொருத்­த­மான காலங்­களில், பொருத்­த­மான அள­வு­களில் விநி­யோ­கித்தல் போன்ற பாரிய பொறுப்­பான பணி­களை நிறை­வேற்றும் தகுதி படைத்த குழு­வி­ன­ராவர். இவர்கள் சமூ­கத்தின் எந்த மட்­டத்தை சேர்ந்­த­வர்­க­ளாக இருப்­பினும் அவர்­க­ளுக்கு அவர்­க­ளது பணியின் மகத்­து­வத்தை கரு­தியும், ஸகாத் நிறு­வனம் தொடர்ந்தும் அத­னு­டைய பணி­களை சீரும் சிறப்­பு­மாக கன­கச்­சி­த­மாக தங்­கு­த­டை­யின்றி செய்ய வேண்டும் என்ற நோக்­கத்­தோடும், தேவைப்­படும் அளவில் ஊதியம் வழங்­கப்­பட வேண்டும். அப்­ப­டி­யானால் இதற்­கென தனி­யான குழு­வினர் இருக்க வேண்டும் என்­ப­தி­லி­ருந்து கூட்டு ஸகாத்தின் முக்­கி­யத்­து­வத்தை தெளி­வாகப் புரிந்து கொள்ள முடியும்.

3. செல்­வந்­தர்­க­ளி­ட­மி­ருந்து பெறப்­பட்டல்: நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) அவர்­களை யமன் நாட்­டுக்கு தூது­வ­ராக அனுப்­பிய வேளையில் அங்­கி­ருந்த மக்­க­ளுக்கு சில விட­யங்­களைச் செய்யும் படி கட்­ட­ளை­யிடும்படி வேண்டிக் கொண்­டார்கள். அவற்றில் ஒன்று ஸகாத் பற்­றிய வழி­காட்­ட­லாகும்.

“அல்லாஹ் அவர்கள் மீது ஸகாத்தை கட­மை­யாக்­கி­யுள்ளான். அது அவர்­க­ளுக்கு மத்­தியில் உள்ள செல்­வந்­தர்­க­ளி­ட­மி­ருந்து பெறப்­பட்டு அவர்­க­ளுக்கு மத்­தியில் உள்ள ஏழை­க­ளுக்கு வழங்­கப்­படும் என்­பதை நீங்கள் அவர்­க­ளுக்கு அறி­விக்க வேண்டும்” என்று கூறி­னார்கள்.

4. தொழு­கை­யிலும் ஸகா­திலும் ஜமாஅத்:- ஐங்­காலத் தொழு­கைகள் இஸ்­லாத்தின் தூண்­களில் ஒன்­றாகும். ஆனால், அவற்றை வீட்­டிலோ வேறு இடங்­க­ளிலோ தனித்து நிறை­வேற்­று­வதை விட ஜமா­அத்­தாக – கூட்­டாக நிறை­வேற்­று­கின்ற பொழுது 27 மடங்கு நன்மை கிடைக்­கி­றது. அது மட்­டு­மன்றி, ஐங்­காலத் தொழு­கை­களை வீடு­களில் தனி­யாக நிறை­வேற்­று­ப­வர்­க­ளுக்கு எதி­ராக நபி­ய­வர்கள் கடு­மை­யான கண்­ட­னத்தை தெரி­வித்­தி­ருப்­பது மாத்­தி­ர­மல்ல அத்­த­கை­ய­வர்­க­ளு­டைய வீடு­களை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்றும் விரும்­பி­னார்கள்.(புகாரி 2420)

தொழு­கை­யினால் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற சமூகப் பலனை அடைந்து கொள்ள ஜமாஅத் தொழுகை இன்­றி­ய­மை­யாத ஒன்­றாகும் என்­ப­தனால் அது அவ்­வாறு வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. தொழு­கை­யுடன் இணைத்துக் கூறப்­பட்­டுள்ள ஸகாத் என்ற இபாதத் கூட்­டாக செய்­யப்­படும் போது தான் அதனால் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற உச்ச கட்டப் பலனை அடைந்து கொள்ள முடியும். எனவே, தொழு­கையும் ஸகாத்தும் கூட்டுக் கட­மைகள் என்ற முடி­வுக்கு வர முடியும்.

பயன்­களும் அனு­கூ­லங்­களும்
இவ்­வாறு ஸகாத்தை நிறு­வன ரீதி­யாக சேக­ரித்து விநி­யோ­கிப்­ப­தனால் பல பயன்கள் ஏற்­பட வாய்ப்­புள்­ளது.
1.அல்­லாஹ்வின் கட்­டளை, நபி­க­ளாரின் வழி­முறை
கூட்­டாக சகாத்தை திரட்டி விநி­யோ­கிக்கும் படி அல்லாஹ் கட்­ட­ளை­யிட்­டி­ருப்­ப­தாலும் நபி(ஸல்) அவர்கள் அதனை நடை­மு­றையில் காட்­டி­யி­ருப்­ப­தாலும் அந்த இபாதத்தை அதே முறையில் நிறை­வேற்றும் போது அல்­லாஹ்­விடம் கூலி கிடைப்­ப­துடன் அவ­னது அருளும் கிட்­டு­கி­றது.

2. திட்­ட­மிட்ட பகிர்ந்­த­ளிப்பு
கூட்டு முறையில் ஸகாத் சேக­ரிக்­கப்­படும் போது, அதனை தொழில் வாய்ப்பு, கடன் நிவா­ரணம் என பகுதி பகு­தி­யாகப் பிரித்து, தேவை­யு­டையோர் இனங்­கா­ணப்­பட்டு, திட்டமிட்டுப் பகிர்ந்­த­ளிக்கும் வாய்ப்பு ஏற்­ப­டு­கின்­றது.

3. அனை­வ­ரையும் சென்­ற­டையும்
கூட்டு முறையில் பகிர்ந்­த­ளிக்கும் போது தேவை­யு­டைய அனை­வ­ரையும் ஸகாத் சென்­ற­டையும் வாய்ப்பு அதி­க­முள்­ளது. தனித் தனி­யாக வழங்கும் போது குறிப்­பிட்ட சிலர் மட்­டுமே பெரும்­பாலும் பய­ன­டைவர்.

4. சுய கௌரவம் பாது­காக்­கப்­படும்
தேவை­யு­டையோர் தனித்­தனி நபர்­களை அணுகி ஸகாத் பெற முயற்­சிக்கும் போது ஏழை­களின் சுய கௌரவம் பாதிக்­கப்­ப­டு­கின்­றது. நிர்­வாக ரீதி­யாக ஸகாத் விநி­யோகம் நடந்தால் ஏழைக்கும் தனவந்­த­ருக்­கு­மான நேரடித் தொடர்பு ஏற்­ப­டு­வ­தில்லை. அதே­நேரம் தனித்­த­னி­யாக ஸகாத் வழங்­கு­ப­வர்­க­ளிடம் தற்­பெ­ருமை எழ வாய்ப்­புள்­ளது. தன்­னிடம் ஸகாத் வாங்­கி­யவன் தன்னைக் கண்டால் ஸலாம் சொல்­ல­வேண்டும் தலை குனிய வேண்டும் போன்ற எதிர்­பார்ப்­புக்கள் எழ வாய்ப்­புண்டு. கூட்­டு­மு­றையில் செல்­வந்­தர்கள் தற்­பெ­ரு­மை­யி­லி­ருந்து பாது­காக்­கப்­ப­டு­கின்­றனர்.

5. ஸகாத்தின் நோக்கம் நிறை­வேறும்
தனித் தனியாய் சிறு தொகைப் பணத்தை வழங்­கு­வதை விடவும் கூட்­டாக இணைந்து தொழில் செய்­வ­தற்­கான ஏற்­பாடு செய்து கொடுக்கும் போது ஸகாத்தின் நோக்கம் நிறை­வே­று­கின்­றது.

6. கணக்குப் பார்க்­காத ஸகாத்
தனித்­த­னி­யாக வழங்­கு­ப­வர்கள் ஏதோ சில்­ல­றை­களை மாற்றி வைத்து வழங்­கி­விட்டு, ஸகாத்தை நிறை­வேற்றி விட்­ட­தாக எண்­ணு­கின்­றனர். கூட்டு நடை­மு­றை­யூ­டாக இந்தத் தவ­றான நடை­மு­றையை நீக்க முடியும்.

7. யாசிப்போர் தொகையை குறைக்க முடியும்
தனித் தனி­யாக ஸகாத் வழங்கும் நடை­முறை யாசிப்­போரின் தொகையை அதி­க­ரிக்­குமே தவிர குறைக்­க­மாட்­டாது. பிச்­சை­யெ­டுப்போர் ரமழான் காலங்­க­ளிலும் ஏனைய காலங்­க­ளிலும் ஹதியா, பித்ரா சேக­ரித்தல் என்ற பெயரில் பள்­ளி­க­ளுக்கு முன்னால் அலங்­கோ­ல­மாக நிற்­ப­தையும் வீடு­க­ளுக்கும் கடை­க­ளுக்கும் ஏறி இறங்­கு­வ­தையும் காண முடி­கி­றது. இந்த யாசக முறையை கூட்டு ஸகாத்தின் மூலம் கணி­ச­மான அளவு குறைக்­கலாம்.

8. சுய கௌர­வ­முள்­ள­வர்­களும் பய­ன­டைவர்
தனித் தனி­யாக ஸகாத் வழங்கும் நடை­மு­றையால் சுய கௌர­வ­முள்ள, அதே வேளை ஸகாத்தைப் பெற தகு­தி­யுள்ள ஏழைகள் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். அடுத்­த­வர்­க­ளிடம் கையேந்தக் கூடாது என்று தன்­மா­னத்­துடன் வாழ்­ப­வர்கள் வறு­மையில் தொடர்ந்து வாழும் நிலை அல்­லது தமது நிலை­யி­லி­ருந்து மேலும் தாழ்ந்து செல்லும் துர்ப்­பாக்­கியம் தொட­ரு­கின்­றது. கூட்டு முறையில் வழங்கும் போது இவர்­களும் அப்­பங்கைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்­ளது.

9. பரஸ்­பரம் புரிந்­து­ணர்வு
கூட்­டு­மு­றையில் பணம் சேக­ரிக்­கப்­பட்டு திட்­ட­மிட்டுப் பகி­ரப்­படும் போது, ஓர் ஊரி­லுள்ள அத்­தனை செல்­வந்­தர்­க­ளுக்கும் இடையில் ஒரு தொடர்பும், பரஸ்­பரம் நெருக்­கமும் ஏற்­ப­டு­கின்­றன. இந்­நெ­ருக்கம் ஊர் விவகாரங்களில் அவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்களையும் உணர்வுகளையும் ஏற்படுத்தும்.

10. அதிக மூலதனம்
ஓர் ஊரில் ஸகாத் வழங்கத் தகு­தி­யுள்­ள­வர்கள் ஐம்­பது பேர் இருந்து, அவர்கள் அனை­வ­ரது ஸகாத்தும் ஒன்று திரட்­டப்­பட்டால் ஸகாத்தின் தொகை அதி­க­மா­கின்­றது. இதன் மூலம் குறைந்­தது வரு­டத்­திற்கு ஊரிலுள்ள பத்துப் பேருடைய பிரச்சினைகளாவது தீர்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இதற்கு மாற்றமாக, தனித் தனியாக நம்மிடம் வருபவர்களுக்குப் பகிர்ந்து அளிப்பதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

சுருங்கக் கூறின், ஸகாத்தை கூட்டாக நிறைவேற்றும் படி இஸ்லாம் பணிக்கிறது.அதன் மூலம் ஸகாத்தின் மூலம் எதிர்பார்க் கப்படும் ஆன்மீக,லெளகீகப் பலன்களை இன்ஷா அல்லாஹ் அடைந்து கொள்ள முடியும். இவ்வடிப்படையில் ஸகாத்தை அவரவர் தனித் தனியாக அன்றி, ஒரு குழுவாக இணைந்து திட்டமிட்டு பகிர்ந்த ளிக்கும் முயற்சியை ஒவ்வொரு மஸ்ஜித் நிர்வாகமும் அல்லது ஸகாத் கமிட்டிகளும் தூய எண்ணத்துடன் முன்னெடுக்க வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.