இன, மத பேதங்களுக்கு இடமளிக்கமாட்டோம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் உறுதியளிப்பு

0 27

(நா. தனூஜா)
நாட்டில் பிரி­வி­னையை தோற்­று­விக்­கக்­கூ­டிய இன­வாதம் மற்றும் மத அடிப்­ப­டை­வாதம் என்­பன மேலோங்­கு­வ­தற்கு நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை என அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 58 ஆவது கூட்­டத்­தொடர் கடந்த திங்­கட்­கி­ழமை (24) ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­னது. இக்­கூட்­டத்­தொ­டரின் அமர்வில் இலங்கை சார்பில் உரை­யாற்­றும்­போதே வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித்த ஹேரத் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது: இன, மத, வர்க்க, சாதி பேதங்­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்ட பிரி­வி­னை­களோ, ஒடுக்­கு­மு­றை­களோ அற்ற, பல்­லி­னத்­தன்­மைக்கு மதிப்­ப­ளித்து, அதனைக் கொண்­டா­டக்­கூ­டிய ஒரு­மித்த இலங்­கையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதை இலக்­கா­கக்­கொண்டு பணி­யாற்­று­வதில் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க தலை­மை­யி­லான அர­சாங்கம் உறு­தி­யாக இருக்­கி­றது.

நாட்டில் பிரி­வி­னையை தோற்­று­விக்­கக்­கூ­டிய இன­வாதம் மற்றும் மத அடிப்­ப­டை­வாதம் என்­பன மேலோங்­கு­வ­தற்கு நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. நாட்­டு­மக்கள் அனை­வ­ரி­னதும் மனித உரி­மை­களைப் பாது­காக்கும் அதே­வேளை, எமது அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ஜன­நா­யகம் மற்றும் சுதந்­திரம் ஆகி­ய­வற்றின் அடிப்­படைக் கோட்­பா­டுகள் வலுப்­ப­டுத்­தப்­படும். சகல பிர­ஜை­களும் எவ்­வித அச்­சமோ, ஒடுக்­கு­மு­றையோ இன்றி தாம் விரும்­பிய மதத்தைப் பின்­பற்­று­வ­தற்கும், தமது மொழியைப் பேசு­வ­தற்கும், தமது கலா­சார விழு­மி­யங்­க­ளுக்கு அமை­வாக வாழ்­வ­தற்­கு­மான சுதந்­தி­ரத்தைக் கொண்­டி­ருக்­க­வேண்டும். எவரும் தமது நம்­பிக்கை, கலா­சாரம் மற்றும் அர­சியல் நிலைப்­பா­டு­களின் விளை­வாகத் தாம் இலக்­கு­வைக்­கக்­கூடும் என அஞ்­சக்­கூ­டாது.

எமது நாட்டில் கடந்த ஆண்டு நடை­பெற்­று­மு­டிந்த தேர்­தல்­களின் ஊடாக அர­சியல், பொரு­ளா­தார மற்றும் சமூக மறு­சீ­ர­மைப்பை ஏற்­ப­டுத்தும் நோக்கில் நாட்டின் சகல பாகங்­க­ளையும் சேர்ந்த மக்கள் பெரும்­பான்மை வாக்­குகள் ஊடாக எம்மைத் தெரி­வு­செய்­தனர். அத­னை­ய­டுத்து இலங்கை வர­லாற்­றி­லேயே எம்மால் கட்­ட­மைக்­கப்­பட்ட பாரா­ளு­மன்­றமே மலை­ய­கத்­தைச்­சேர்ந்த இருவர் உள்­ள­டங்­க­லாக அதி­க­ளவு பெண் பிர­தி­நி­தி­க­ளையும், மாற்­றுத்­தி­ற­னாளி ஒரு­வ­ரையும் உள்­ள­டக்­கிய சகல தரப்­பி­ன­ருக்­கு­மான பிர­தி­நி­தித்­து­வத்­து­டன்­கூ­டிய பாரா­ளு­மன்­ற­மாகத் திகழ்­கி­றது. தற்­போது நாட்டின் பொரு­ளா­தாரம் ஸ்திர­ம­டைந்­தி­ருப்­ப­துடன், அதனை சக­ல­ருக்­கு­மான சம­பங்­கீட்டை உறு­திப்­ப­டுத்­தக்­கூ­டிய பொரு­ளா­தா­ர­மாக நிலை­மாற்­ற­ம­டை­யச்­செய்­வதை நோக்கி நாம் பய­ணிக்­கிறோம்.

அதே­போன்று எமது அர­சாங்கம் சமர்ப்­பித்­துள்ள 2025 ஆம் ஆண்­டுக்­கான வரவு, செல­வுத்­திட்­டத்தில் சமூ­கப்­பா­து­காப்பு செயற்­திட்­டங்­க­ளுக்கு அதி­க­ள­வான நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டி­ருப்­பதன் ஊடாக நெருக்­க­டிக்கு முகங்­கொ­டுத்­தி­ருக்கும் மக்­க­ளுக்­கான நிவா­ர­ணத்தை வழங்­கி­யி­ருக்­கிறோம். அது­மாத்­தி­ர­மன்றி வட, கிழக்கு மாகா­ணங்­களில் மீள்­கு­டி­யேற்றம், வீட­மைப்பு மற்றும் நட்­ட­ஈடு வழங்கல் ஆகி­ய­வற்­றுக்கு அவ­சி­ய­மான நிதி­யொ­துக்­கீடும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

அதே­வேளை நாம் புதி­தாக அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ செயற்­திட்­டத்தின் ஊடாக நேர்­மைத்­தன்மை வாய்ந்­ததும், பொறுப்­புக்­கூ­றத்­தக்­க­து­மான ஆட்­சி­நிர்­வாக முறை­மை­யொன்றை நாட்டில் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு உத்­தே­சித்­துள்ளோம்.

அடுத்­த­தாக தேசிய ஒற்­றுமை, நல்­லி­ணக்கம் ஆகி­ய­வற்றை மேம்­ப­டுத்­து­வதை இலக்­கா­கக்­கொண்டு எமது அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் செய­லாற்­று­வ­தற்கு உறு­தி­பூண்­டி­ருக்­கி­றது. அதன்­பி­ர­காரம் காணா­மல்­போனோர் பற்­றிய அலு­வ­லகம், இழப்­பீட்­டுக்­கான அலு­வ­லகம், தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க அலு­வ­லகம் உள்­ளிட்ட உள்­ள­கப்­பொ­றி­மு­றைகள் மேலும் வலுப்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன், அவை சுயா­தீ­ன­மா­னதும், நம்­ப­கத்­தன்மை வாய்ந்த முறை­மை­யிலும் இயங்­கு­வது உறு­தி­செய்­யப்­படும். அதே­போன்று சகல தரப்­பி­ன­ரதும் நம்­பிக்­கையை வென்­றெ­டுக்­கக்­கூ­டி­ய­வ­கையில் உண்மை மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு தொடர்­பான கலந்­து­ரை­யா­டல்கள் சம்­பந்­தப்­பட்ட சகல தரப்­பி­ன­ரையும் உள்­ள­டக்கி முன்­னெ­டுக்­கப்­படும். இலங்­கையில் இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில் விசா­ரிப்­ப­தற்­கான ஆணை அக்­கட்­ட­மைப்­புக்கு வழங்­கப்­படும். இவ்­வாறு நாட்டின் அர­சி­ய­ல­மைப்­புக்கு அமை­வாக ஸ்தாபிக்­கப்­படும் உண்மை மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு சுயா­தீ­ன­மா­கவும், நம்­ப­க­மான முறை­யிலும் இயங்கும்.

மேலும் எமது நாடு ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேரவை உள்­ள­டங்­க­லாக ஐக்­கிய நாடுகள் சபையின் முக­வ­ர­மைப்­புக்­க­ளிலும், உப­கு­ழுக்­க­ளிலும் அங்கம் வகிக்­கின்­றது. அக்­கு­ழுக்­க­ளினால் மேற்­கொள்­ளப்­படும் கூட்­டங்கள் மற்றும் மீளாய்­வு­களில் முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்கிப் பங்கேற்கிறது. நாட்டின் தேசிய சட்டதிட்டங்களுக்கு அமைவாக இந்த ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.

சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும். இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரிப்பதற்கான ஆணை அக்கட்டமைப்புக்கு வழங்கப்படும். இவ்வாறு நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக ஸ்தாபிக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாகவும், நம்பகமான முறையிலும் இயங்கும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.