மருதமுனை ஷம்ஸ் உருவாக்கத்தில் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானாவின் வரலாற்றுப் பங்களிப்பு

0 51

ஏ.ஜே.எல்.வஸீல்
சிரேஷ்ட விரிவுரையாளர்,
தென்கிழக்கு பல்கலைக்கழகம்

அபுல்­கலாம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா அவர்கள் நாட­றிந்த கல்­விமான், சமூகத் தலைவர் (Community Leader). கொழும்பு ஸாஹி­ராவில் கற்ற அவர் கலா­நிதி ரீ.பி. ஜாயா அவர்­களின் மாண­வ­ராவார். மரு­த­மு­னையில் பிறந்த அவர் இன, மத, பிர­தேச வேறு­பா­டு­க­ளுக்­கப்பால் இலங்­கையின் நாலா­பு­றமும் இருக்­கின்ற பல பிர­தே­சங்­களில் பார­பட்­ச­மற்ற கல்வித் தொண்­டாற்றி உள்ளார். உதவி ஆசி­ரி­ய­ராக தனது பணியை ஆரம்­பித்த அவர் அதி­ப­ராக, கல்வி அதி­கா­ரி­யாக பரி­ண­மித்தார். அன்னார் மறைந்து 25.02.2025 அன்­றுடன் 12 ஆண்­டுகள் நிறை­வுறும் நிலையில் இன்று வேர் விட்டு பெரு­வி­ருட்­ச­மாக தலை­நி­மிர்ந்து நிற்­கின்ற மரு­த­முனை ஷம்ஸ் மத்­திய கல்­லூ­ரியின் உரு­வாக்­கத்தில் அன்­னா­ரது வர­லாற்­றுப்­பங்­க­ளிப்­பினை இக்­கட்­டுரை பகுப்­பாய்வு செய்­கின்­றது.

தர­மு­யர்த்­தப்­பட்ட மரு­த­முனை ஷம்ஸ்
மத்­திய கல்­லூ­ரியின் முத­லா­வது அதிபர்
1978ஆம் ஆண்டில் ஏற்­பட்ட சூறா­வளி அனர்த்­தத்­திற்­குப்பின் மரு­த­மு­னையில் இரண்­டா­வது மகா­வித்­தி­யா­லயம் ஒன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டிய தேவை பொது­மக்­க­ளாலும் புத்­தி­ஜீ­வி­க­ளி­னாலும் உண­ரப்­பட்­டது. இம்­முன்­னெ­டுப்பு தொடர்­பாக மரு­த­முனை மக்கள் மத்­தியில் வாதப்­பி­ர­தி­வா­தங்­களும் கருத்து முரண்­பா­டு­களும் உரு­வாகி பெரும் இழு­பறி நிலை­யொன்று தோற்­று­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் பலத்த எதிர்ப்­பிற்கு மத்­தியில் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்­க­ளினால் 1979.02.28ம் திகதி இடப்­பட்ட தர­மு­யர்­வுக்­கான அனு­ம­திக்­க­டிதம் பாட­சா­லைக்கு வழங்­கப்­பட்­டது. ஏனைய பாட­சா­லை­களில் இருந்து மாண­வர்கள் புதிய மகா­வித்­தி­யா­ல­யத்தில் பெற்­றோர்­க­ளினால் சேர்க்­கப்­பட்­டனர். இந்­நிலை மேலும் உக்­கி­ர­ம­டைந்து மரு­த­முனைக் கிராமம் பிள­வு­படும் நிலை­யேற்­பட்­டது. இவ்­வி­ழு­பறி நிலையை சம­ர­சப்­ப­டுத்­து­மு­க­மாக ஏ.ஆர்.மன்சூர் அவர்­களின் தலை­மையில் சம­ர­சக்­கூட்டம் 19.03.1979அன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. புல­வர்­மணி ஆ.மு.ஷரி­புத்தீன் அவர்கள் “புதிய மகா­வித்­தி­யா­ல­யத்தின் அவ­சியம் தற்­போது இல்லை” எனும் அணியைத் தலைமை தாங்­கினார். பழீல் மௌலானா அவர்கள் “புதிய மகா­வித்­தி­யா­லயம் தேவை, அது மரு­த­மு­னையின் கல்வி எழுச்­சியை எவ்­வி­தத்­திலும் பாதிக்­காது மாறாக மரு­த­மு­னையின் கல்வி மென்­மேலும் அதி­க­ரிக்க புதிய மகா­வித்­தி­யா­லய உரு­வாக்கம் வழி­ச­மைக்கும்” என­கோ­ரி­நின்ற அணியை தலை­மை­யேற்று வழி­ந­டாத்தி நின்றார். கூட்­டத்தின் இறு­தியில் புதிய மகா­வித்­தி­யா­லயம் உரு­வாக்­கப்­பட வேண்டும் எனும் வர­லாற்றுத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­தாக ஏ.எம். சமது அதிபர் அவர்கள் தெரி­விக்­கின்றார்.

புதிய மகா­வித்­தி­யா­லயம் உரு­வா­கி­யமை மக்கள் மத்­தியில் எழுச்­சி­யையும் புத்­து­ணர்­வையும் ஊட்டி நின்­றது. புதிய ஆசி­ரி­யர்­க­ளுக்கும் மாண­வர்­க­ளுக்கும் பேரார்வம் கொண்ட பெற்­றோர்­க­ளுக்கும் ஷம்ஸ் அபி­மா­னி­க­ளுக்கும் இவ்­வெற்­றியை முன்­கொண்­டு­செல்ல அனு­பவம் மிக்க வலு­வான தலை­மைத்­துவம் ஒன்று தேவைப்­பட்­டது. இப்­பின்­ன­ணியில் தன்­னார்­வ­மாக உந்­தப்­பட்ட சுற்­று­வட்டக் கல்வி அதி­காரி பழீல் மௌலானா அவர்கள் தர­மு­யர்த்­தப்­பட்ட ஷம்சுல் இல்ம் மகா­வித்­தி­யா­ல­யத்தின் முத­லா­வது அதி­ப­ராக பொறுப்­பேற்­றதன் மூலம் அவ்­வ­ர­லாற்றுப் பாத்­தி­ரத்தை அவர் ஏற்­றுக்­கொண்டார். ஷம்ஸின் முக­வெற்­றி­லை­யாக அவர் இருந்தார்.கல்­முனை கல்வி வல­யத்தின் கல்வி அதி­கா­ரி­யாக பணி­யாற்­றிய காலப்­ப­கு­தியில் இக்­கல்­லூ­ரிக்கு 24.09.1965 இல் ஸம்ஸ்-­உல்-இல்ம் என அவரே பெய­ரிட்டார்.

மிகுந்த சவால்­க­ளுக்கும் எதிர்ப்­பு­க­ளுக்கும் மத்­தியில் உரு­வாக்­கப்­பட்ட ஸம்ஸ் மத்­திய கல்­லூரி தற்­போது நிமிர்ந்து நின்று புகழ் பெற்று தனித்­து­வ­மான நிலையை அடைய வலு­வான அடித்­த­ளத்­தை­யிட்டு அதனை ஸ்திரப்­ப­டுத்­திய பெருமை ஆரம்ப அதி­ப­ராக நிய­மிக்­கப்­பட்ட பழீல் மௌலானா அவர்­களைச் சாரும்.

பெண் மாண­வி­களின் பாது­காப்­பினை கருத்தில் கொண்டு கல்­விச்­ச­மூ­கத்­தி­னதும் இர­வு­ப­க­லாக செயற்­பட்ட தொண்­டர்­க­ளி­னதும் பங்­க­ளிப்­பினை பெற்று இர­வோ­டி­ர­வாக பல நூற்­றுக்­க­ணக்­கான அடி தூரம் வேலி, கற்­சுவர், கழிப்­பி­டங்கள் என்­ப­வற்­றையும் அமைத்தார். மேலும் மசூர்­மௌ­லானா விளை­யாட்டு மைதா­னத்­தையும் மாண­விகள் விளை­யா­டு­வ­தி­லுள்ள அசௌ­க­ரி­யத்தை கருத்தில் கொண்டு ஒரு­மாத காலத்­தினுள் கல்­லூரி வளா­கத்­தி­னுள்­ளேயே வலைப்­பந்து மைதானம் ஒன்றை அமைத்தார். மாலை வேளை­களில் சிர­ம­தான பணி­களில் ஈடு­பட்ட பெற்­றோர்கள், அபி­மா­னிகள் என்­போ­ருடன் இணைந்து சிர­ம­தான பணி­க­ளிலும் தன்­னையும் ஈடு­ப­டுத்தி ஒட்டு மொத்த ஸம்ஸ் கல்­விச்­ச­மூ­கத்­திற்கு பெரும் இயங்கு சக்­தியை அவர் அளித்தார்.

ஷம்ஸ் மத்­திய கல்­லூ­ரியின் 03.06.1995யில் வெளி­யி­டப்­பட்ட எழுவான் சஞ்­சி­கையில் அதிபர் வீ.எம். இஸ்­மாயில் அவர்கள் பழீல் மௌலானா அவர்­களின் அதிபர் கால பணி­களை பின்­வ­ரு­மாறு விளக்­கு­கின்றார்.

“கல்­முனை கல்­விக்­கா­ரி­யா­லய சுற்­று­வட்டக் கல்வி அதி­கா­ரி­யாக இருந்த ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா அவர்கள் கல்­விப்­ப­ணிப்­பாளர் எஸ்.எம். ஏ கபூர் அவர்­களின் வாய்­மொழி அனு­ம­தி­யுடன் அதிபர் பொறுப்பை ஏற்­றார்கள். அன்­னா­ரது தலைமை காப்­ப­ர­ணாக அமைந்­தது. என்­னையும் ஏ.எம். அபூ­பக்கர் (இங்லீஸ்) அவர்­க­ளையும் இட­மாற்றம் செய்து எடுத்தார். என்னைத் தனது பிர­தி­அ­தி­ப­ராக வைத்துக் கொண்டார். புதி­தாக ஆசி­ரியர் நிய­மனம் பெற்ற ஆறு இளை­ஞர்­களை ஸம்சுல் இல்மில் நிய­மித்துக் கொண்டார். தொடர்ந்து எஸ்.எல்.எம் ஜலால்டீன், ஏ.எம்.ஏ.சமது இரு­வ­ரையும் இட­மாற்­றி­யெ­டுத்தார். 02.04.79யில் பழீல் மௌலானா அவர்கள் உத்­தி­யோ­க­பூர்­வ­மான அதி­ப­ராகப் பொறுப்­பேற்­றார்கள். நான் க.பொ.த.(சா/த) வகுப்­பிற்கு தமிழ், சமூ­கக்­கல்வி, வர­லாறு ஆகிய பாடங்­களைப் படிப்­பித்தேன். மாணவர் பெறு­பேறும் திருப்­தி­யாக இருந்­தது. நினைக்க பிரம்­மிப்­பாக இருக்­கின்­றது. மகிழ்ச்­சி­யா­கவும் இருக்­கின்­றது. தொடர்ந்து ஐ.எல்.ஏ. றஹீம், எம். ஏ. ஜப்பார், லத்தீப் முகி­தீயின் ஆகிய விசேட பயிற்சி பெற்ற ஆசி­ரி­யர்­க­ளையும் பழீல் மௌலானா அவர்கள் முயன்று கொண்டு வந்­தார்கள். க.பொ.த. (உ/த) கலை, வர்த்­தக வகுப்பும் ஆரம்­பிக்­கப்­பட்­டது.”

ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மௌலானா அவர்கள் கொழும்பு ஸாஹி­ராவில் தொடங்­கிய தனது கல்விப் பணி­யினை 1980ஆம் ஆண்டு மரு­த­முனை ஷம்ஸ் மத்­திய கல்­லூ­ரியில் நிறைவு செய்தார். சுற்­று­வட்­டக்­கல்வி அதி­காரி எனும் உயர் பத­வி­யி­லி­லி­ருந்து விலகி மீண்டும் ஒரு அதி­ப­ராக பணி­யாற்ற முடி­வெ­டுத்­த­மை­யா­னது அவ­ருக்கு பத­விகள் ஒரு பொருட்­டல்ல இலக்­கு­களே முக்­கி­ய­மா­னவை எனும் இலட்­சி­யத்­தன்­மையை துலாம்­ப­ர­மாக காட்டி நிற்­கின்­றது. ஷம்ஸ் மத்­திய கல்­லூ­ரியை “நீலக்­க­ட­லோ­ரத்தில் ஒரு அலிகார்” என்றே அவர் பழீல் மௌலானா அவர்கள் குறிப்பிடுகிறார். ஷம்ஸ் குறித்து அவருக்குள் ஒரு கனவு குடியிருந்திருக்க வேண்டும். ஷம்ஸில் ஒரு குறுகிய காலமொன்றில் அவரது தலைமையில் புரட்சியொன்று நிகழ்ந்துள்ளமைளை யாரும் மறுத்து விட முடியாது.
அவ நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்ட ஷம்ஸின் எழுச்சி “முளையிலேயே கருகிவிடும்” , “ஆறுமாதம் கூடத் தாக்குப்பிடிக்காது” என சிலர் எதிர்வுகூறிய போதிலும் பழீல் மௌலானா அவர்களின் தலைமைத்துவமும் சாதுர்யமும் எடுத்த சவாலை வெற்றிகொள்ளும் தீரமும் ஷம்ஸ் சமூகத்தின் உணர்வெழுச்சியுடன் ஒன்றித்து அவ் விமர்சனங்களையும் சந்தேகங்களையும் அவர் தவிடுபொடியாக்கி ஷம்ஸை எழுச்சியுறச்செய்தார் என்பது வரலாறாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.