ரமழான் காலத்து உபந்­நி­யா­சங்­களும் ஏனைய அமல்­களும்

சில வழி­காட்­டல்கள்

0 105

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமீ)

நல்­ல­மல்கள் செய்ய ரமழான் நல்­ல­தொரு பரு­வ­கா­ல­மாகும். மற்­றைய காலங்­க­ளை­விட ரமழான் காலத்தில் பொது­மக்கள் மார்க்க விட­யங்­களில் அக்­கறை காட்­டு­வார்கள். உல­மாக்­களும் இந்த வாய்ப்­பு­களைப் பயன்­ப­டுத்தி அதி­க­பட்சம் அவர்­களை நெறிப்­ப­டுத்தி அதிகம் அமல் செய்­ப­வர்­க­ளாக அவர்­களை மாற்ற திட­சங்­கற்பம் பூண­வேண்டும்.
அதேபோல் பயான்கள் செய்ய ரம­ழானில் சந்­தர்ப்­பங்கள் அதிகம் உள்­ளன. தரா­வி­ஹுக்குப் பிறகு, இப்தார் வேளைகள், ளுஹ­ருக்கு பிறகு என்று இவற்றைப் பட்­டி­யல்­ப­டுத்­தலாம். வழக்­க­மாக ரமழான் கால ஜும்ஆப் பிர­சங்­கங்­களும் இதில் சேர்க்­கப்­ப­டலாம். இருப்­பினும் ரம­ழானில் மக்­க­ளுக்கு தேவை­யான அடிப்­ப­டை­யான அம்­சங்­களை போதிப்­பதில் திட்­ட­மிட்ட வழி­மு­றைகள் எதுவும் வழக்­க­மாக பின்­பற்­றப்­ப­டாமல் பயான்கள் செய்­யப்­ப­டு­வது கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

பல இடங்­களில் குர்ஆன் மத்­ர­ஸாக்­களில் போதிக்­கப்­பட வேண்­டிய சாதா­ரண பிக்ஹ் அம்­சங்கள் கூட திரும்பத் திரும்ப மீட்­டப்­ப­டு­வ­தையும் இன்னும் பல பள்­ளி­வா­யல்­களில் பயான்கள் பண்­ணப்­ப­டா­ம­லேயே சந்­தர்ப்­பங்கள் நழுவ விடப்­ப­டு­வ­தையும் பார்க்க முடி­கி­றது. சில போது ஒரு சில விட­யங்கள் மாத்­திரம் திரும்பத் திரும்ப மீட்­டப்­ப­டு­கின்­றன. இது இலங்­கையில் மட்­டு­மல்ல உல­கெங்­கிலும் அவ­தா­னிக்­கப்­படும் குறை­பா­டாகும்.

நம் நாட்­டிலும் ரமழான் காலம் வந்­து­விடும் போது ரம­ழானின் முத­லா­வது பிறை­யையும், ஷவ்­வாலின் முதலாம் பிறை­யையும் தீர்­மா­னிப்­பதில் எமக்கு மத்­தியில் சர்ச்சை தோன்றும். சர்­வ­தேச பிறை தான் சரி­யென சிலரும் தேசியப் பிறையின் படியே நோன்பு பிடிப்­பதும் பெருநாள் கொண்­டா­டு­வதும் அமைய வேண்­டு­மென்று வேறு சிலரும் கார­சா­ர­மாக விவா­திப்பர். வேறு சிலர் நாம் ‘நுஜூ­மீக்கள்’ என்று கூறி மூன்­றா­வது நிலைப்­பாட்­டை­யெ­டுப்பர். இவர்கள் இவ்­வாறு வாதித்துக் கொண்­டி­ருக்­கையில் சமூ­கத்தில் உள்ள 90% ஆன பொது­மக்கள் மிகுந்த குழப்­பத்தில் மூழ்­கி­வி­டுவர். ரம­ழானின் வரு­கையை ஆவ­லாக எதிர்­பார்த்து அமல் செய்ய காத்­தி­ருக்கும் அவர்கள் இந்த சர்ச்­சை­களின் முன் திக்­குப்­பி­ர­மை­யுடன் நிற்­பார்கள். முஸ்லிம் அல்­லா­த­வர்­களோ இந்த சண்­டை­களைப் பார்த்து எக்­கா­ள­மிட்டு சிரிப்­ப­துடன் எமது போயாக்கள், திரு­வி­ழாக்­க­ளது திக­தி­களை தீர்­மா­னிப்­பதில் இவ்­வ­ளவு பெரிய சண்­டைகள் இடம்­பெ­று­வ­தில்­லையே எனக்­கூறி அவர்­க­ளது மார்க்­கமே சரி­யென்­ப­தற்கு இத­னையும் ஆதா­ர­மாக காட்­டு­வார்கள்.

எனவே ரம­ழானின் வருகை எமது சமூ­கத்­துக்கு மத்­தியில் சச்­ச­ர­வு­க­ளையும் பிற­ச­ம­யத்­த­வ­ரது மனங்­களில் அதி­ருப்­தி­யையும் வர­வ­ழைப்­ப­தாயின் இதனைப் பற்றி நாம் தீவி­ர­மாக சிந்­திக்க வேண்டும். முத­லா­வது பிறையை தீர்­மா­னிப்­பது சம்­பந்­த­மாக வர­லாறு நெடு­கிலும் கருத்­து­வே­று­பாடு இருந்து வந்­தி­ருப்­ப­தி­லி­ருந்து எவரும் எவர் மீதும் தனது கருத்தை திணிக்க முடி­யாது என்­பதைக் காட்­டு­கி­றது. ஆனால், அகில இலங்கை ஜம்­இத்துல் உலமா கூறு­வது போல் நடந்து கொள்­வது தற்­போ­தைய சூழலின் எல்லா வகை­யிலும் பாது­காப்­பா­ன­தாகும். கருத்து வேறு­பா­டு­க­ளுக்கு உட்­படும் அம்­சங்­களை பொது­மக்­க­ளது சபை­க­ளிலும் குத்­பாக்­க­ளிலும் பயான்­க­ளிலும் பேசு­வது எவ்­வ­கை­யிலும் பொருத்­த­மா­ன­தல்ல. அவை விட­ய­மாக நல்ல அறிவுத் தெளி­வுள்ள துறை சார்ந்­த­வர்கள் மட்டும் ஓர் இடத்தில் ஒன்­று­கூடி ஆதா­ரங்­க­ளு­டனும் நிதா­ன­மா­கவும் பரஸ்­பர அன்­பு­டனும் அல்­லாஹ்­வுக்கு பதில்­கூற வேண்­டுமே என்ற பயத்­து­டனும் யாரு­டைய வாயி­லி­ருந்­தேனும் உண்மை வெளி­வந்தால் போது­மென்ற உணர்­வு­டனும் இதில் ஈடு­படும் போது மட்­டுமே சுமு­க­மான முடி­வு­களைப் பெற­மு­டியும்.

முத­லா­வது பிறையைத் தீர்­மா­னிப்­பது, தரா­வீஹின் ரக­ஆத்­து­க­ளது எண்­ணிக்கை, நோன்பின் நிய்­யத்து போன்ற விட­யங்­களை நோன்பு காலத்தில் விவா­திப்­பதும் பயான்­க­ளது பேசு­பொ­ரு­ளாக கொள்­வதும் முற்­று­மு­ழு­தாக தவிர்க்­கப்­பட வேண்டும். இவற்றை சிலர் விவா­தித்துக் கொண்­டி­ருக்­கையில் பல இலட்சம் மக்கள் நோன்பின் கட­மையை உண­ராமல் நோன்பு பிடிக்க வச­தி­யி­ருந்தும் நோன்பு பிடிக்­கா­தி­ருக்­கின்­றார்கள். வேறு சிலர் நோன்பு நோற்­ப­தற்­கான வச­தி­வாய்ப்­புக்கள் இல்­லாமல் வறு­மையின் கொடூ­ரத்தில் சிக்­கி­யி­ருக்­கி­றார்கள். இவர்­களைப் பற்றி கவ­லைப்­ப­டு­வ­தற்கும் கரி­சனை எடுப்­ப­தற்கும் அதிக முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­படல் வேண்டும். அதிக கவ­ன­யீர்ப்­பிக்கு உள்­ளாக வேண்­டி­யது சிறிய விட­யமா? பெரிய விட­யமா? என நாம் சிந்­திக்க வேண்டும். தரா­விஹின் ரக­ஆத்­துக்கள் பற்றி சர்ச்­சைப்­படும் போது பல இலட்சம் பேர் ஐவேளை தொழு­கை­யின்றி வாழ்­கின்­றார்கள். அத்­த­ஹி­யாத்தில் விரல் அசைப்­பது பற்றி வாதிப்­ப­வர்கள் ‘அஸ்­ஹது அல்­லா­இ­லாஹ இல்­லல்லாஹ்’ எனப்­படும் வாச­கத்தை வாழ்­கையில் ஒரு தட­வை­யேனும் உச்­ச­ரிக்­காமல் காபிர்­க­ளாக வாழ்ந்­து­வரும் கோடிக்­க­ணக்­கானோர் பற்றி சிந்­திக்­கலாம்.

எமது கால நேரங்­களை இரண்­டாம்­பட்ச அம்­சங்­களில் செல­விட்டு ரம­ழானின் பிர­தான இலக்­கு­களில் மக்கள் தவ­றி­வி­டு­வ­தற்கு காரண கர்த்­தாக்­க­ளாக அமைந்­து­வி­ட­லா­காது.
அதேபோல் சில தலைப்­புக்­களில் நாம் பேசும் போது அதனுள் அடங்கும் விட­யங்கள் ஏற்­ப­டுத்தும் சாத­க­மான விளை­வு­க­ளையும் பாத­க­மான விளை­வு­க­ளையும் சீர்­தூக்கிப் பார்க்க வேண்டும். பாத­கங்கள் அதிகம் விளை­யு­மாயின் அத்­த­கைய தலைப்­புக்­களை தவிர்ப்­பதே சாலச் சிறந்­த­தாகும். அலி (ரலி) அவர்கள் “மக்­க­ளோடு அவர்­க­ளது அறிவுத் தரங்­க­ளுக்­கேற்ப பேசுங்கள். அல்­லாஹ்வும் அவ­னது தூதரும் பொய்ப்­பிக்­கப்­ப­டு­வதை நீங்கள் விரும்­பு­கி­றீர்­களா?” என்­றார்கள். இமாம் புஹாரி அவர்கள் “நாம் தெரிவு செய்­துள்ள சில தலைப்­புக்கள் மக்­களால் கிர­கிக்க முடி­யாத அம்­சங்­களை கொண்­டி­ருக்­கு­மாயின் அவற்றை நாம் பேசு பொரு­ளாகக் கொண்டால் அவர்கள் இருக்கும் நிலையை விட மோச­மான ஓர் நிலைக்கு போய்­வி­டு­வார்கள் எனக் கரு­தினால் அப்­ப­கு­தி­களைத் தவிர்ப்­பது” என்று ஓர் தலைப்பை இட்டு சில ஹதீஸ்­களை அதன் கீழ் இட்­டி­ருக்­கி­றார்கள். இதற்கு விளக்கம் கூறும் இமாம் இப்னு ஹஜர் அல்­அஸ்­க­லானி “ஒரு தீமையை தடுக்கப் போய் அதனை விட மோச­மான ஓரு தீங்­கிற்குள் மக்கள் வீழ்ந்து விடு­வார்­களோ எனப்­ப­யந்தால் அதனை தடுக்­காது விடலாம் என்­ப­தற்கு இதனை ஆத­ர­மாகக் கொள்­ளலாம்” என எழு­து­கி­றார்கள். மேலும் இமாம் புஹாரி அவர்கள் “சிலர் சில விட­யங்­களை புரி­ய­மாட்­டார்­க­ளாயின் அவற்றைத் தவிர்து அவற்றை புரிய முடி­யு­மா­ன­வர்­க­ளுக்கு மட்டும் அவற்றைப் போதிப்­பது” என்று வேறு ஒரு தலைப்பை தனது ஸஹீஹுல் புகா­ரியில் இட்டு அதன் கீழ் சில ஹதீஸ்­களை இட்­டி­ருக்­கி­றார்கள்.

எனவே மக்­க­ளது அறி­வுத்­தரம், வயது, பால் வித்­தி­யாசம், பிர­தேச வேறு­பா­டுகள், அவ்வப் பிர­தேச தேவைகள், கொள்கைப் பின்­ன­ணிகள், உட­னடித் தேவைகள் போன்­ற­வற்றை கவ­னத்தில் எடுத்து உபந்­நி­யா­சங்கள் அமைக்­கப்­பட வேண்டும். இருக்கும் பிரச்­சி­னை­க­ளது வீரி­யத்தை பேச்­சா­ளர்கள் மேலும் அதி­க­ரிக்­கா­மலும் சிந்­தனைச் சிக்­க­லையும் மார்க்­கத்தில் அவ­நம்­பிக்­கையும் தோற்­று­விக்­கா­மலும் இருக்க வேண்டும்.

தற்­கால சூழலில் இளைஞர் சமு­தாயம் கல்­வி­யிலும் ஒழுக்­கத்­திலும் வீழ்ச்­சி­யி­லி­ருக்­கி­றது. குடும்ப உற­வுகள் சீர்­கு­லைந்­தி­ருக்­கின்­றன. அல்லாஹ், மறுமை, குர்ஆன், ஸுன்னா மீதான விசு­வாசம் தளர்­வ­டைந்­துள்­ளது. இதற்­கெல்லாம் தொலைத் தொடர்பு சாத­னங்கள் பெரிதும் பங்­க­ளித்­துள்­ளன. மக்கள் சட­வாதம், நாஸ்­தீகம், சுய­நலம், அற்ப இன்­பங்கள் என்­ப­வற்றில் மூழ்கித் திழைக்­கி­றார்கள். அறி­ஞர்­க­ளுக்கும் அறி­வுக்கும் சமூக சேவ­கர்­க­ளுக்­கு­முள்ள முக்­கி­யத்­துவம் குறைந்து, நடி­கர்கள், விளை­யாட்டு வீரர்கள், அர­சி­யல்­வா­திகள், பணம்­ப­டைத்­த­வர்கள் தான் “ரோல் மொடல்­க­ளாக” ஆக்­கப்­பட்­டு­விட்­டார்கள். இபா­தத்­களில் ஈடு­ப­டு­வோ­ரது தொகை ஓர­ளவு அதி­க­ரித்­தி­ருந்­தாலும் அவற்றை அறிவுத் தெளி­வோடும் பய­பக்­தி­யோடும் அவை தரப்­பட்ட நோக்­கத்தை புரிந்த நிலை­யிலும் மேற்­கொள்­வோ­ரது தொகை குறை­வாகும். நோன்பு, தொழுகை, ஹஜ், உம்ரா என்­பன வெறும் சடங்­கு­க­ளாகத் தான் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தாகத் தெரி­கி­றது. எனவே, ரமழான் காலத்து பயான்கள் விட­ய­மாக நல்­ல­தொரு திட்­ட­மிடல் அவ­சியம் என்­ப­தையே இங்கு வலி­யு­றுத்த விரும்­பு­கிறோம்.

இறு­தி­யாக, ரமழான் காலத்தில் பள்­ளி­வா­சலை மைய­மாகக் கொண்டு பின்­வரும் வேலைத் திட்­டங்­களை மேற்­கொள்ள முடியும் என பணி­வுடன் முன்­மொ­ழி­கிறோம்:-
1. பயான்கள்: மேற்­கூ­றப்­பட்­ட­வாறு குத்­பாக்­க­ளையும் ஏனைய பயான்­க­ளையும் ஒழுங்­கு­ப­டுத்­து­வது.
2. பொரு­ளா­தார மேம்­பாடு : நோன்பில் ஸகாத், ஸதகா, ஸத­கதுல் பித்ர் ஆகி­யன பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தால் ஒன்று திரட்­டப்­பட்டு பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும்.
3. அல்­குர்­ஆ­னுக்கு முன்­னு­ரிமை: குர்ஆன் இறங்­கிய மாத­மாக ரமழான் இருப்­பதால் அது தொடர்­பான பிரத்­தி­யே­க­மான ஏற்­பா­டுகள் தேவை.குர் ஆன் விளக்கம், தஜ்வீத், ஹிஃப்ழ் வகுப்­பு­க­ளுடன் ஹிஸ்பு மஜ்­லி­ஸு­க­ளையும் ஏற்­பாடு செய்­யலாம்.
4. போட்டி நிகழ்ச்­சிகள்: அல்­குர்ஆன், ஹதீஸ் ,சந்­தர்ப்ப துஆக்கள் என்­ப­வற்றை மனனம் செய்­வ­தற்­கான போட்டி நிகழ்ச்­சிகள், புத்­த­கங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட கேள்வி பதில்கள் என்­ப­வற்றை ளுஹர், இஷா தொழு­கையைத் தொடர்ந்து ஏற்­பாடு செய்­யலாம். இவற்றை நேர­டி­யா­கவோ சமூக ஊட­கங்கள் வாயி­லா­கவும் நடாத்­தலாம்.
5. ரமழான் மாதத்­துக்­கான சிறார் முஹா­ஸபா: முன், பின் ஸுன்­னத்கள், திலா­வதுல் குர்ஆன், மனனம், தாய் தகப்­ப­னுடன் அன்­பாகப் பழ­கு­வது, ஸதகா, காலை மாலை அவ்­ரா­துகள், உடை, உடல், இடம் சுத்தம், தமது வேலை­களை தாமே செய்­கொள்­வது போன்­ற­வற்றில் சிறார்­களும் இளை­ய­வர்­களும் ஈடு­ப­டு­வதை ஊக்­கு­விக்கும் வகையில் (முஹா­ஸபா) அட்­டை­களை தயா­ரித்துக் கொடுத்து ரமழான் மாத இறு­தியில் பரி­சில்­களை வழங்கி ஊக்­கு­விக்­கலாம்.
6. கலந்­து­ரை­யா­டல்கள்: சமூக சேவை வேலைத் திட்­டங்­க­ளுக்­கான கலந்­து­ரை­யா­டல்கள், கூட்டுச் செயல்பாடுகள் போன்றவற்றுக்கு ரமழான் மிகப்பொருத்தமான காலமாகும்.பள்ளிக்கு வருவோரின் தொகை அதிகரிப்பதுடன் ஏனைய காலங்களுடன் ஒப்பிடுகையில் மக்கள் ரமழானில் சற்று ஓய்வாக இருப்பர். பாடசாலைகள், கிதாபு மத்ரஸாக்கள் என்பன விடுமுறைக்காக மூடப்பட்டிருப்பதால் உஸ்தாதுமார்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் போன்றோரை நற்பணிகளுக்காக நன்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

எனவே, ரமழான் காலத்தில் மட்டுமன்றி ஏனைய காலங்களிலும் குத்பாக்கள், பயான்களது தலைப்புக்களை தெரிவு செய்யும் போது அடிப்­ப­டை­யான தேவை­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்கி ஈமான், இபா­தத்கள், அஹ்­லாக்­குகள், அறி­வு­ஞானம், குடும்ப உற­வுகள் போன்ற அம்­சங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிப்­போ­மாக! ரமழான் எம்மை ஒழுங்­கு­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­காக தரப்­பட்ட அரு­மை­யான சந்­தர்ப்பம் என்­பதால் இது­வி­ட­ய­மாக உல­மாக்கள், பள்ளி நிரு­வா­கிகள் மற்றும் சமூகத் தலை­வர்கள் அனை­வரும் நாளை மறு­மையில் அல்­லாஹ்­வுக்கு பொறுப்புக் கூற­வேண்டும் என்ற உணர்­வுடன் செயல்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். வல்லவன் அல்லாஹ் எம் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக! – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.