வக்பு சட்டத்தை கணக்கிலெடுக்காத பள்ளி நிர்வாகங்கள்

0 100

நாட்­டி­லுள்ள அனைத்து பள்­ளி­வா­சல்­களும் வக்பு சட்­டத்தின் கீழ் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதி­வு­செய்­யப்­பட வேண்டும். இதன் ஊடாக பள்­ளி­வா­சல்­க­ளுக்குத் தேவை­யான சட்ட அங்­கீ­காரம் கிடைக்­கின்­றது.

பள்­ளி­வா­சல்­களை பதி­வு­செய்­கின்ற சம­யத்தில் அதன் நிர்­வாக சபை உறுப்­பி­னர்­க­ளினால் இந்த சட்­டத்­திற்கு வழங்­கப்­ப­டு­கின்ற முக்­கி­யத்­துவம், பதி­வு­செய்­யப்­பட்ட பின்னர் வழங்­கப்­ப­டு­வ­தில்லை என்­பது யாவரும் அறிந்த உண்­மை­யாகும்.
இதனால் நாட்­டி­லுள்ள பெரும்­பா­லான பள்­ளி­வா­சல்­களில் பாரிய நெருக்­க­டிகள் தோன்­றி­யுள்­ளன. இதற்கு பிர­தான காரணம் வக்பு சட்­டத்தில் காணப்­ப­டு­கின்ற குறை­பா­டு­க­ளாகும்.

1956ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட இந்த சட்­டத்தில் 1962 மற்றும் 1982 ஆகிய ஆண்­டு­களில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

அதன் பின்னர் எந்­த­வொரு திருத்­தமும் இது­வரை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இதனால், சட்­டத்­தி­லுள்ள குறை­பா­டு­களைப் பயன்­ப­டுத்தி பள்­ளி­வாசல் நிர்­வாக சபை­யினர் பல்­வேறு மோச­டி­களை தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.
இதனால், நாட்­டி­லுள்ள பல பள்­ளி­வா­சல்­க­ளுக்கு எதி­ராக வக்பு சபை, வக்பு நியாய சபை, இணக்க சபை, நீதவான் நீதி­மன்றம், மாவட்ட நீதி­மன்றம் மற்றும் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் போன்ற இடங்­களில் பல்­வேறு வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்டு விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

கொழும்பு மாந­க­ரி­லுள்ள பல பள்­ளி­வா­சல்­க­ளுக்கு எமது மூதா­தை­யர்­க­ளினால் பல கோடி ரூபா பெறு­ம­தி­யான சொத்­துக்கள் வக்பு செய்­யப்­பட்­டுள்­ளன. அது போன்று ஜமாத்­தார்­க­ளி­னாலும் பல்­வேறு வகை­யான நன்­கொ­டைகள் தொடர்ச்­சி­யாக வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

அல்­லாஹ்வின் பெய­ரினால் வழங்­கப்­ப­டு­கின்ற இந்த சொத்­துக்கள் மற்றும் நன்­கொ­டை­களில் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளினால் பல்­வேறு மோச­டிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக வக்பு சபை­யினால் வழங்­கப்­பட்­டுள்ள பல தீர்ப்­புக்­களில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன.
அதே­வேளை, சில பள்­ளி­வா­சல்கள் அதன் நிர்­வா­கி­களின் குடும்பச் சொத்துப் போன்று நடத்­தப்­ப­டு­கின்­றன. மரத்தின் வேர் போன்று பல பள்ளி நிர்­வா­கிகள் இப்­ப­த­வி­யினை மர­ணிக்கும் வரை கட்­டிப்­பி­டித்துக் கொண்­டி­ருக்­கவும் முயற்­சிக்­கின்­றனர்.

இது போன்ற பல்­வேறு கார­ணங்­க­ளினால், இரத்­ம­லானை பள்­ளி­வாசல், தெவட்­ட­கஹ பள்­ளி­வாசல், பம்­ப­லப்­பிட்டி பள்­ளி­வாசல், கொள்­ளுப்­பிட்டி பள்­ளி­வாசல், கொலன்­னாவ பள்­ளி­வாசல், ஜாவத்த பள்­ளி­வாசல், சதாம் வீதி பள்­ளி­வாசல் போன்ற பல பள்­ளி­வா­சல்­க­ளுக்கு எதி­ராக வக்பு சபையில் வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன.

மேற்­படி பள்­ளி­வா­சல்­களில் சில­வற்­றுக்கு விசேட நம்­பிக்­கை­யா­ளர்­களும் வக்பு சபை­யினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். எனினும், இந்த விசேட நம்­பிக்­கை­யா­ளர்­களை ஏற்க பழைய நிர்­வா­கி­க­ளுக்கு விருப்­ப­மில்லை என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

பள்­ளி­வா­சல்­களின் நிர்­வாக சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு வக்பு சட்டம் என்றால் என்ன?, வக்பு சபை என்றால் என்ன? என்று கூட தெரி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது.
இது தொடர்­பாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் பல்­வேறு விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சிகள் நாட­ளா­விய ரீதியில் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தாலும், அதனை பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் கணக்­கி­லெ­டுப்­ப­தாக தெரி­ய­வில்லை.

வக்பு சபையின் அனு­ம­தி­யின்றி எந்­த­வொரு பாரிய நட­வ­டிக்­கை­யினை பள்ளி நிர்­வாக சபை­யினால் மேற்­கொள்ள முடி­யாது. எனினும், நாட்­டி­லுள்ள பெரும்­பா­லான பள்­ளி­வா­சல்கள் வக்பு சபையின் அனு­ம­தி­யின்­றியே பல கோடி ரூபா பெறு­ம­தி­யான செயற்­திட்­டங்­களை தொடர்ச்­சி­யாக மேற்­கொண்டு வரு­கின்­றன.

அதே­வேளை, நாட்­டி­லுள்ள பெரும்­பா­லான பள்­ளி­வா­சல்கள் வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஆகி­ய­வற்­றுடன் எந்தத் தொடர்­பி­னையும் பேணு­வ­தில்லை.

எதுவும் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­கின்ற சந்­தர்ப்­பத்தில் மாத்­தி­ரமே பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தினர் வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஆகி­ய­வற்­றினை தொடர்­பு­கொள்­கின்­றனர்.

கொழும்பின் புற­ந­க­ரி­லுள்ள பிர­ப­ல­மான பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபை ஜமாத்­தாரின் பங்­கு­பற்­ற­லுடன் கடந்த 2022ஆம் ஆண்டு தெரி­வு­செய்­யப்­பட்­டி­ருந்­தது.

எனினும், அது தொடர்­பான எந்தத் தக­வலும் வக்பு சபைக்கு கடந்த டிசம்பர் மாதம் வரை அனுப்­பப்­பட்­டி­ருக்­க­வில்லை. இதனால், முறை­யான நிய­ம­ன­மின்றி சட்­ட­வி­ரோ­த­மா­கவே குறித்த நிர்­வாகம் பல வரு­டங்­க­ளாக செயற்­பட்டு வந்­தது. இந்தப் பள்­ளி­வா­சலில் அண்மையில் ஏற்பட்ட சர்ச்சையொன்றினை அடுத்தே புதிய நிர்வாகத்திற்கான நியமனம் வக்பு சபையிடமிருந்து பெறப்பட்டது. இது போன்ற பல தவறுகளையும் மோசடிகளையும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த விடயத்தில் பள்ளிவாசல் ஜமாத்தார்கள் அவதானமாக இருக்க வேண்டும். அல்லாஹ்வின் இல்லமான பள்ளிவாசலில் நல்லது செய்கின்றோம் எனக் கூறிக் கொண்டு நிர்வாக சபை உறுப்பினர்களினால் பல்வேறு மோசடிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.