அதிகரித்த ஹஜ் கட்டணம்! அதிருப்தியில் ஹாஜிகள்!!

0 66

றிப்தி அலி

இலங்­கையில் ஹஜ் யாத்­திரை ஏற்­பா­டுகள் ஆண்­டு­தோறும் பல்­வேறு சிக்­கல்­களை சந்­தித்து வரு­கின்­றன. குறிப்­பாக, ஹஜ் யாத்­திரை ஏற்­பாட்டுப் பொதிக்­கான செலவு நிர்­ணயம், ஹஜ் முகவர் நிறு­வ­னங்­களின் செயற்­பா­டுகள், ஹாஜிகள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் போன்­றவை தொடர்ந்தும் விவாதப் பொரு­ளாக உள்­ளன. 2025ம் ஆண்­டுக்­கான ஹஜ் ஏற்­பா­டு­க­ளிலும் இதே நிலைமை இருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. ஹஜ் குழுவின் பரிந்­து­ரைக்கே அப்­பாற்­பட்ட தொகையை பெரும்­பா­லான ஹஜ் முகவர் நிறு­வ­னங்கள் அறி­வித்­தி­ருப்­பது புதிய முரண்­பா­டு­க­ளுக்கு வழி­வ­குத்­துள்­ளது.

புனித ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­வ­தற்­காக இந்த வரு­டத்­திற்­கான ஹஜ் முகவர் நிறு­வ­னங்­களின் பயணக் கட்­டணம் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதில் 30 நாட்­க­ளுக்­கான ஹஜ் பொதிக்கு 21 இலட்சம் ரூபா அறி­வி­டு­மாறும் ஹஜ் குழு சிபா­ரிசு செய்­துள்­ளது. ஹஜ் முகவர் நிறு­வ­னங்­க­ளுக்கு சிறிய இலாபம் கிடைக்கும் வகை­யி­லேயே இந்த பொதியில் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ள­தாக ஹஜ் குழு தெரி­விக்­கின்­றது.

எனினும் ஹஜ் குழுவின் சிபா­ரி­சுக்­க­மைய ஒரே­யொரு ஹஜ் முகவர் நிறு­வனம் மாத்­தி­ரமே 30 நாட்­க­ளுக்­கான ஹஜ் பொதிக்கு 21 இலட்சம் ரூபா அறி­வி­டு­வ­தாக அறி­வித்­துள்­ளது.

ஏனைய 91 ஹஜ் முகவர் நிறு­வ­னங்­களும் ஹஜ் குழு­வினால் சிபா­ரிசு செய்­யப்­பட்ட தொகை­யினை விட அதிக தொகை­யினை அறி­வி­ட­வுள்­ள­தாக திணைக்­களம் வெளி­யிட்ட முக­வர்கள் மற்றும் அவர்கள் அற­விடும் தொகை பற்­றிய விபரப் பட்­டியல் தெரி­விக்­கின்­றது.

ஹஜ் பொதிக்­கான விலை நிர்­ண­யத்­தி­லேயே ஹஜ் குழு­விற்கும் ஹஜ் முகவர் நிறு­வ­னங்­க­ளுக்கும் இடையில் முரண்­பாடு ஏற்­பட்டால், எப்­படி அடுத்த கட்ட பணி­களை குறித்த இரண்டு தரப்­பி­னரும் இணைந்து முன்­னெ­டுப்­பார்கள் என்ற கேள்வி தற்­போது எழுந்­துள்­ளது.

ஏற்­க­னவே ஹஜ் கோட்டா பங்­கீட்டின் போது ஹஜ் முகவர் நிறு­வ­னங்­க­ளுக்கும் அரச ஹஜ் குழு­விற்கும் இடையில் முரண்­பாடு ஏற்­பட்­டது. பின்னர் அது மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் வரை சென்று இணக்கம் ஏற்­பட்­டது.

இவ்­வா­றான நிலை­யி­லேயே ஹஜ் பொதிக்­கான விலை நிர்­ண­யத்தில் தற்­போது முரண்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. புனித கட­மை­யினை நிறை­வேற்றச் செல்­கின்ற ஹாஜி­க­ளுக்கு அசௌ­க­ரியம் ஏற்­ப­டாத வகையில் ஒழுங்­கு­களை மேற்­கொள்ள வேண்­டி­யது ஒவ்­வொரு ஹஜ் முகவர் நிறு­வ­னங்­களின் பொறுப்­பாகும்.

இதனை கண்­கா­ணிக்க வேண்­டி­யது ஹஜ் குழுவின் பிர­தான பணி­யாகும். எனினும், குறித்த இரண்டு தரப்­பி­னரும் இந்தப் பணி­யினை ஒழுங்­காக முன்­னெ­டுக்­கின்­றார்­களா என்­பது இன்று வரை கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது.

காரணம், இலங்­கை­யி­லி­ருந்து செல்லும் ஹாஜிகள் ஒவ்­வொரு வருடம் வெவ்­வேறு வகை­யான பிரச்­சி­னை­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர். இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கு இது­வரை நிரந்தத் தீர்­வுகள் எதுவும் பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை. அதே­வேளை, மோச­டியில் ஈடு­பட்ட ஹஜ் முகவர் நிறு­வ­னங்கள் தண்­டிக்­கப்­பட்­ட­தாக எந்த அறிக்­கை­யு­மில்லை.

இதே­வேளை, இந்த வருடம் ஹஜ் யாத்­தி­ரைக்கு செல்­ல­வுள்ள ஹாஜி­களின் நன்மை கருதி மினாவில் 2 ஆவது வல­யத்தின் பீ பிரி­வி­லேயே கூடாரம் வழங்­கப்­பட வேண்டும் என அரச ஹஜ் குழு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

வழ­மை­யாக இலங்கை ஹாஜிகள் மினா­வி­லேயே அதிக நெருக்­க­டி­களை எதிர்­நோக்­கு­வது வழ­மை­யாகும். இதனை நிவர்த்தி செய்யும் வகை­யி­லேயே மினாவில் 2ஆவது வல­யத்தின் பீ பிரிவு தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது.
இலங்­கை­யி­லி­ருந்து அழைத்துச் செல்­லப்­படும் ஹாஜிகள் அசீ­ஸி­யாவில் தங்­க­வைக்­கப்­ப­டு­வது வழ­மை­யாகும். அது தொடர்­பிலும் ஹஜ் குழு அதிக கவனம் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

இந்த வருடம் கிடைக்கப் பெற்ற 3,500 ஹஜ் கோட்­டாக்கள் 92 முகவர் நிறு­வ­னங்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளன. குறித்த 92 முகவர் நிறு­வ­னங்­களும் எவ்­வாறு செயற்­படப் போகின்­றது என்­பதை உற்­று­நோக்க வேண்­டி­யது ஹஜ் குழுவின் முக்­கிய கட­மை­யாகும்.
இதே­போன்று 35 பேஸா விசாக்­களும் இலங்­கைக்கு கிடைக்கப் பெற்­றுள்­ளன. கடந்த காலங்­களில் அர­சியல் செல்­வாக்­கு­டை­ய­வர்கள் இந்த விசாக்­களை பயன்­ப­டுத்தி வந்­தனர். இந்த வருடம் குறித்த விசாக்கள் எப்­படி பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வுள்ள முறையில் வெளிப்­ப­டைத்­தன்மை பேணப்­பட வேண்டும்.

இதே­வேளை, ஹஜ் முகவர் நிறு­வ­னங்கள் இரண்டு சங்­கங்­க­ளாக பிரிந்து செயற்­பட்டு வரு­கின்­றன. குறித்த இரண்டு சங்­கங்­களும் ஹஜ் குழுவில் அதிக செல்­வாக்குச் செலுத்­து­வதை எம்மால் அவ­தா­னிக்க முடி­கி­றது. முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் அண்­மையில் இடம்­பெற்ற ஹஜ் குழுவின் ஊடக மாநாட்டில் இதனை அவ­தா­னிக்க முடிந்­தது.

இவ்­வாறு ஹஜ் முகவர் நிறு­வ­னங்­களின் சங்­கங்கள் ஹஜ் குழுவின் சில பணி­களை முன்­னெ­டுத்தால், புதிய ஹஜ் குழுவின் சுயா­தீனத் தன்மை கேள்­விக்­கு­றி­யாகும். ஏற்­க­னவே செயற்­பட்ட ஹஜ் குழுக்­களின் சுயா­தீனம் தொடர்பில் பல்­வேறு விமர்­ச­னங்கள் முன்னர் எழுந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஹஜ் கட­மை­யினை ஒழுங்­கு­ப­டுத்­து­வது போன்று ஹஜ் சட்­டத்­தினை அமுல்­ப­டுத்த வேண்­டிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யதும் ஹஜ் குழுவின் பணி­யாகக் காணப்­ப­டு­கின்­றது. இதற்குத் தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­களை இந்த வரு­டத்­திற்­கான ஹஜ் குழு உட­ன­டி­யாக முன்­னெ­டுக்க வேண்டும். ஹஜ் சட்­டத்­தினை நிறை­வேற்­று­வதன் மூலம் ஹஜ் கட­மைக்­கான ஏற்­பா­டு­களை நிச்­ச­ய­மாக ஒழுங்­கு­ப­டுத்த முடியும்.

புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்றச் செல்லும் ஹாஜி­க­ளுக்கு பாது­காப்­பான மற்றும் வச­தி­யான அனுபவத்தை உறுதிசெய்ய வேண்டியது ஹஜ் குழுவின் அடிப்படை பொறுப்பாகும். ஆனால், வருடந்தோறும் ஏற்படும் முரண்பாடுகள், முகவர் நிறுவனங்களின் செல்வாக்கு, மற்றும் சட்டமுறை ஏற்பாடுகள் குறித்த அதிருப்திகள், ஒரு நிலையான தீர்வு தேவை என்பதை தெளிவாக காட்டுகின்றன. ஹஜ் தொடர்பான ஒரு சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் இந்தச் சூழ்நிலையை ஒழுங்குபடுத்த முடியும். மேலும், முகவர் நிறுவனங்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, அவர்களின் முறைகேடுகள் தடுக்கப்பட்டால், எதிர்காலத்தில் ஹஜ் யாத்திரை மிகச் சீராக நடைபெற வழிபிறக்கும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.