கிழக்கின் அபிவிருத்தியை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளமை வெட்கக்கேடானது

வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு புறக்கணிப்பு என்கிறார் நிசாம்

0 46

(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
கிழக்கு மாகா­ணத்தின் அபி­வி­ருத்­தியை அர­சாங்கம் இந்­தி­யா­விடம்  பொறுப்­பாக்­கி­யுள்­ளது. இது வெட்­கக்­கே­டா­னது. அவ்­வா­றாயின் கிழக்கு மாகாண உறுப்­பி­னர்கள் அனை­வரும் இந்­திய தூது­வரை சந்­தித்து பிரச்­சி­னை­களை குறிப்­பிட வேண்டும். நிதி­ய­மைச்சின் செய­லாளர் மஹிந்த சிறி­வர்­தன எழு­திய  2025 ஆம் ஆண்­டுக்­கான வரவு  செலவுத் திட்­டத்தில்  கிழக்கு மாகா­ணத்தின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. இந்த பாதீட்டை தூக்­கி­யெ­றிய வேண்டும் என  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நிசாம் காரி­யப்பர்  வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கடும் அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்­று­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற 2025 ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தின் முதல் நாள் விவா­தத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் உரை­யாற்­றி­ய­தா­வது,
2025 ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்டம்  கிழக்கு மாகா­ணத்தை முற்­றாக புறக்­க­ணித்­துள்­ளது என்றே குறிப்­பிட வேண்டும்.ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க முன்­வைத்த வரவு செலவுத் திட்ட உரையில் ‘ கிழக்கு மாகாணம் பொரு­ளா­தார வல­யங்­களில் மிகவும் முக்­கி­ய­மான மாகாணம்.அந்த மாகா­ணத்தின் கல்வி,சுகா­தாரம்,  விவ­சாயம், கடற்­றொழில், சுற்­று­லாத்­துறை,சமூக வலு­வூட்டல் ஆகிய துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. உட்­கட்­ட­மைப்பு மற்றும் ஜீவ­னோ­பா­யத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக இந்­திய கூட்டு நிறு­வ­னத்தின் ஒத்­து­ழைப்­புடன் கிழக்கு மாகா­ணத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்’ என்று குறிப்­பிட்­டுள்ளார்.

கிழக்கு மாகா­ணத்தின் அபி­வி­ருத்­தியை இந்­தி­யா­விடம் இந்த அர­சாங்கம் பொறுப்­பாக்­கி­யுள்­ளது.இது வெட்­கக்­கே­டா­னது.அவ்­வா­றாயின் கிழக்கு மாகாண உறுப்­பி­னர்கள் அனை­வரும் இந்­திய தூது­வரை சந்­தித்து எமது பிரச்­சி­னை­களை குறிப்­பிட வேண்டும்.அண்­மையில்  ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்­கினால் கிழக்கு மாகா­ணமே மிக மோச­மாக பாதிக்­கப்­பட்­டது.

வெள்­ளப்­பெ­ருக்­கினால் கிழக்கு மாகா­ணத்தில் விவ­சாய நிலங்கள் நாச­ம­டைந்­தன. அம்­பாறை சேனா­நா­யக்க சமுத்­தி­ரத்தின் கட்­டு­மானம் உடைவால் இந்த நிலை ஏற்­பட்­டுள்­ளது. இந்த பிரச்­சி­னைக்கு தீர்வு காணா­விடின்  எதிர்­வரும் காலங்­களில் சிறந்த விளைச்­சலை பெற முடி­யாது. கிழக்கு மாகா­ணத்தில் தற்­போது குடிநீர் பிரச்­சினை தீவி­ர­ம­டைந்­துள்­ளது.இது பாரி­ய­தொரு பிரச்­சி­னை­யாகும்.

நிதி­ய­மைச்சின் செய­லாளர் மஹிந்த சிறி­வர்­தன எழு­திய  2025 ஆம் ஆண்­டுக்­கான வரவு  செலவுத் திட்­டத்தில்  கிழக்கு மாகா­ணத்தின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு முன்­வைக்­கப்­ப­ட­வில்லை..இந்த பாதீட்டை தூக்­கி­யெ­றிய வேண்டும். எமது மக்­களை நாங்கள் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கிறோம். வரவு செலவுத் திட்­டத்தை  பிர­தேச ரீதி­யாக பார்க்க வேண்டாம் என்று  ஆளும் தரப்பின் உறுப்­பினர் குறிப்­பி­டு­கிறார்.இது என்ன மடத்­த­ன­மான பேச்சு, மக்­களின் பிரச்­சி­னை­களை பேசவே  மக்கள் தமது பிர­தி­நி­தி­களை தெரிவு செய்து பாரா­ளு­மன்­றத்­துக்கு  அனுப்­பு­கி­றார்கள்.

தேசிய வரவு செலவுத் திட்­டத்தில் கிழக்கு மாகா­ணத்­துக்­கான அபி­வி­ருத்தி நிதியை இந்­தி­யா­விடம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்­பி­டு­வது வெட்­க­மில்­லையா, கிழக்கு மாகா­ணத்தில் வாழும் முஸ்லிம்- தமிழ் மக்கள் அர­சாங்­கத்­துக்கு முழு­மை­யான ஆத­ரவு வழங்­கி­னார்கள். எங்கு சென்று யாரிடம் நிதி கேட்க சொல்­கின்­றீர்கள்.

கிழக்கு மாகா­ணத்தில் ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்­கினால் தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அருகில் உள்ள பாலம் உடைந்­தது, அங்கு தற்­கா­லி­க­மாக பாலமே அமைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த பாலத்தை புன­ர­மைப்­ப­தற்கு வரவு செலவுத் திட்­டத்தில் நிதி ஒதுக்­க­வில்லை. ஏன் இந்த நிலைமை? வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணத்தில் கால­நிலை மாற்­றத்தால் பாரிய இடர்கள் தோற்றம் பெற்­றுள்­ளன. இதற்கு என்ன தீர்வு வரவு செலவுத் திட்­டத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஏதும் இல்லை முழு­மை­யாக அதி­ருப்­தி­ய­டை­கிறேன்.

கிழக்கு மாகா­ணத்தை புறக்­க­ணித்து விட்டு இந்­தி­யா­விடம் நிதி கேட்­பது முறை­யற்­றது.
கிழக்கு மாகா­ணத்தில் அரு­கம்பை, பொதுத்­துவில், பாசிக்­குடா மற்றும் மட்­டக்­க­ளப்பு ஆகிய பகு­திகள்  பிர­தான சுற்­றுலாத் தலங்­க­ளாக உள்­ளன.இந்த பகு­திகள் ஊடாக  அதி­க­ளவில் வெளி­நாட்டு வரு­வாயை பெற்றுக் கொள்­ளலாம். ஆனால் அதற்­கான எந்த திட்­டங்­களும் வரவு செலவுத் திட்­டத்தில் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. கிழக்கு மாகா­ணத்தில் புகை­யி­ரத சேவையை மேம்­ப­டுத்த எந்த திட்­டங்­களும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.
கொழும்பில் இருந்து மட்­டக்­க­ளப்­புக்கு அண்­மையில் புகை­யி­ர­தத்தில் உறங்கல் வகுப்பில் சென்றேன். 4800 கட்­டணம் அற­வி­டப்­ப­டு­கி­றது.உறங்கல் வகுப்பில் அமைக்­கப்­பட்­டுள்ள படுக்­கைக்கு ஏறு­வ­தற்கு 3 அடி அளவில்  ஏணி ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. வெளி­நாட்டு பயணிகள் எவ்வாறு இவற்றை பயன்படுத்துவார்கள். அத்துடன் மலசலகூட வசதிகள் மிக மோசமாகவுள்ளது.

மஹவ புகையிரத சந்தியில அரை மணித்தியாலம் புகையிரதம் நிறுத்தி வைக்கப்படும்.புகையிரத என்ஜினை மாற்றுவதற்கு அரை மணி நேரம் செலவழிக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் எவ்வாறு சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வது. கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே இந்த வரவு செலவுத் திட்டம் குறித்து கடும் அதிருப்தியடைகிறோம் என்றார்.

2025 ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தில் உரை­யாற்­றிய மு.கா. செய­லாளர் நிசாம் காரி­யப்பர், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட கிழக்கு மாகா­ணத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் எதிர்க்­கட்­சி­களின் உறுப்­பி­னர்கள் வரவு செலவுத் திட்­டத்தில் கிழக்கு மாகாணம் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ள­தாக குற்­றஞ்­சாட்­டினர். இதற்கு பதி­ல­ளிக்கும் வித­மாக நிதி பிரதி அமைச்சர் ஹர்­ஷன சூரி­ய­பெ­ரும நேற்­றைய வரவு செலவு திட்டம் விவா­தத்­தின்­போது பதி­ல­ளித்தார்.

இதன்­போது, 2025 ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தில் கிழக்கு மாகாணம் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அந்த மாகா­ணத்தின் அபி­வி­ருத்தி பிறி­தொரு நாட்­டுக்கு கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் எதிர்க்­கட்­சி­களின் உறுப்­பி­னர்கள் குறிப்­பி­டு­வதை அவ­தா­னித்­துள்ளோம்.

ஜனா­தி­பதி தனது வரவு செலவுத் திட்ட உரையில் கிழக்கு மாகாண அபி­வி­ருத்தி குறித்து விசே­ட­மாக மேற்­கோள்­காட்­டி­யுள்ளார்.கிழக்கு மாகாண அபி­வி­ருத்­திக்கு போது­மான நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. அத்­துடன் வெளி­நாட்டு முத­லீட்­டுடன் விசே­ட­மாக அபி­வி­ருத்தி பணி­களும் மேற்­கொள்­ளப்­படும். இதற்கு மேல­தி­க­மாக இந்­திய அரசின் ஒத்­து­ழைப்­பிலும் கிழக்கு மாகாண அபி­வி­ருத்­திக்கு நிதி­யு­தவி கிடைக்கும்.

இந்த சிறப்பு ஒத்­து­ழைப்­புக்கு மேல­தி­க­மாக வரவு செலவுத் திட்­டத்தின் மொத்த ஒதுக்­கீட்டில் பெரும்­பா­லான பங்கு கிழக்கு மாகா­ணத்­துக்கு கிடைக்கும்.கிரா­மிய , கல்வி, சுகா­தாரம், கடற்­றொழில் உட்­பட பல துறை­க­ளுக்­காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி கிழக்கு மாகாணத்துக்கு கிடைக்கப்பெறும்.ஆகவே வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படவில்லை என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.