மாற்றுத்திறனாளிகளை மதிக்க சமூகம் முன்வர வேண்டும்

0 1,673

அக்குறணையில் இயங்கிவரும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான CSM பாடசாலையின் இயக்குநரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான ஏ.எம்.எம்.தெளபீக், தமது பாடசாலையின் செயற்பாடுகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தொடர்பான சமூகத்தின் கண்ணோட்டம் தொடர்பில் வழங்கிய செவ்வியை இங்கு தருகிறோம்.

  • நேர்­காணல் : எஸ்.எப்.எம். ரிஸ்வான்

Q இந்தப் பாட­சா­லையின் ஆரம்பம் பற்றிக் கூறுங்கள்?

இப்­பா­ட­சாலை 2003 ஆம் ஆண்டு அக்­கு­றணை குரு­கொடை பிர­தே­சத்தில் மாற்றுத் திற­னா­ளி­க­ளுக்­கான தனியார் பாட­சா­லை­யாக ஆரம்­பிக்­கப்­பட்­டது. அப்­பி­ர­தே­சத்தில் போதிய இட­வ­ச­திகள்  இன்மையால் 2005ஆம் ஆண்டு தற்­போது இயங்கும் அக்­கு­றணை, குடு­கல பகு­திக்கு மாற்­றப்­பட்­டது. ஆரம்­பத்தில் 5 பேர்ச் காணி­யி­லேயே ஆரம்­பிக்­கப்­பட்­டது. இதற்­கான காணியை எமது அமைப்பின் ஸ்தாபகர்  ஏ. எஸ். எம்.  ஸுபைர்  தனது சொந்த நிதியில் கொள்­வ­னவு செய்து தந்தார். பின்னர் சில கொடை­யா­ளி­களின் நிதியைக் கொண்டு 20 பேர்ச் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டது. போதி­ய­ளவு இட­வ­ச­தியைக் கொண்ட கட்­டிடத் தொகு­தி­யொன்று அமைக்­கப்­பட்டு தற்­போது இப்­பா­ட­சாலை செயற்­பட்டு வரு­கின்­றது.

Q இந்தப் பாட­சா­லையை நடத்திச் செல்­வ­தற்­கான மனித, பௌதீக வளங்கள் போது­மா­ன­ளவு காணப்­ப­டு­கின்­றதா?

இங்கு 110 மாண­வர்­களும் அதிபர் உட்­பட 13 ஆசி­ரி­யர்கள் காணப்­ப­டு­கின்­றனர். ஆசி­ரி­யர்கள் பயிற்­றப்­பட்­ட­வர்கள். மாண­வர்­களின் இய­லு­மைக்கு ஏற்ப வகுப்­ப­றைகள் காணப்­ப­டு­கின்­றன. விடே­மாக ‘பிசி­யோ­தெ­ரபி’ முறையும் காணப்­ப­டு­கின்­றது. மாண­வர்கள் தூர இடங்­க­ளி­லி­ருந்தும் நாளாந்தம் வந்து செல்­கின்­றனர். தற்­போது குறை­யாக இருப்­பது தூர இடங்­க­ளி­லி­ருந்து வந்து செல்லும் மாண­வர்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யில்லை. அத­னையும் எதிர்­கா­லத்தில் செய்­வ­தற்­கான திட்டம் உண்டு.

நாங்கள் மாண­வர்­க­ளி­ட­மி­ருந்து எவ்­வித கட்­ட­ணமும் அற­வி­டு­வ­தில்லை. எந்த இனத்தைச் சேர்ந்த மாண­வர்­களும் இல­வ­ச­மாக அனு­ம­தியைப் பெற­மு­டியும். ஆசி­ரி­யர்­களின் சம்­பளம் மற்றும் ஏனைய நிரு­வாக செல­வு­க­ளுக்­காக மாதம் ரூபா மூன்று இலட்சம் செல­வேற்­ப­டு­கின்­றது. இத்­தொகை கொடை­யா­ளி­க­ளி­ட­மி­ருந்தே பெறப்­ப­டு­கின்­றது. அவர்­க­ளுக்கு நிச்­ச­ய­மாக அல்லாஹ் ஈரு­ல­கிலும் வெற்­றி­ய­ளிப்பான்.

Q இங்கு மாண­வர்கள் எவ்­வாறு அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றார்கள்?

எந்த மாண­வரும் இன, வயது, பால் பாகு­பா­டின்றி சேர்க்­கப்­ப­டு­கின்­றனர். அவர்­களின் ஆற்றல் வேறு­பா­டு­க­ளுக்­க­மைய வகுப்­பு­களில் அனு­ம­திக்­கப்­ப­டுவர். மாண­வர்­களின் ஆற்றல் ஆசி­ரி­யர்கள் மூலமே இனங்­கா­ணப்­படும்.

மாண­வர்கள் அவர்­க­ளது வயது, பால், ஆளுமை என்­ப­வற்­றிற்­கேற்ப தரம் பிரிக்­கப்­ப­டுவர். பொது­வாக வகுப்­ப­றை­களில் மாண­வர்­களின் எண்­ணிக்கை சுமார் 10-–15 இற்கு வரை­ய­றுக்­கப்­பட்­டி­ருக்கும். சில வகுப்­புகள் 02 ஆசி­ரி­யர்­களைக் கொண்டு நடாத்­தப்­படும்.

Q இப் பாட­சா­லைக்­கென தனி­யான பாடப்­புத்­தகம், சீருடை,  என்­பன உள்­ள­னவா?

பாட­சாலை   காலை 8.00 தொடக்கம் நண்­பகல் 12.00 வரை நடக்­கி­றது. திங்கள் தொடக்கம் வியாழன் வரை இவர்­க­ளுக்கும் சம உரிமை உண்டு என்­பதை நினை­வு­ப­டுத்த அர­சாங்க பாட­சாலை போன்று சீருடை, பாட­சாலைச் சின்னம் என்­பன வழங்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக உள ரீதி­யாக பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் பெற்­றோ­ருக்கு கூட இது ஓர் ஆறு­த­லாக அமைய வேண்­டு­மென்­ப­தற்­கா­கவே இவ்­வாறு செய்தோம். போதிக்­கப்­படும் பாடங்கள் பொது­வாக உட­லியல் ரீதி­யா­கவே கூடு­த­லாக உண்டு. சில திற­மை­யான மாண­வர்­க­ளுக்கு அர­சாங்கப் பாடப் புத்­த­கத்­தி­னாலும் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றது.

Q பொது­வாக எப்­பி­ர­தேச மாண­வர்கள் இங்கு கற்­கி­றார்கள்?

அக்­கு­ற­ணையைச் சேர்ந்த அதிக மாண­வர்கள் இருக்­கி­றார்கள். இவர்­க­ளுடன் கல்­ஹின்னை, குரு­நாகல், நீர்­கொ­ழும்பு போன்ற தூரப்­பி­ர­தேச மாண­வர்­களும் இங்கு கல்வி கற்­கி­றார்கள்.

Q இங்கு கட­மை­யாற்றும் ஆசி­ரி­யர்கள்  விசேட தேவை­யு­டைய மாண­வர்­களைப் பயிற்­று­விப்­ப­தற்­கான பயிற்­சி­களைப் பெற்­றி­ருக்­கி­றார்­களா?

குறிப்­பாக ஆசி­ரி­யைகள் இளம்­பெண்கள். இவர்கள் பாராட்­டப்­பட வேண்­டி­ய­வர்கள். தாமா­கவே முன்­வந்து பயிற்­சி­களைப் பெற்று, வீட்டில் பிள்­ளைக்கு பெற்றோர் செய்ய வேண்­டிய பணி­களை இங்கே சிறப்­பாக செய்­கி­றார்கள். எப்­போ­தா­வது கடின வார்த்­தை­களை இப்­பிள்­ளை­க­ளுக்கு பாவித்த வர­லாறு இல்லை. இங்­குள்ள அக­ரா­தியில் நீ, போ, வா என்ற வார்த்தைப் பிர­யோ­கங்கள் இல்லை.

பாட­சாலை வெள்ளிக் கிழமை விடு­மு­றை­யாக இருந்­த­போதும் இப்­பிள்­ளை­களின் வீடு­க­ளுக்கு குறித்த ஆசி­ரி­யைகள் சென்று பிள்­ளை­களின் வீட்டு நட­வ­டிக்­கை­களை அவ­தா­னிப்பர். பெற்­றோ­ருக்குத் தேவை­யான ஆலோ­ச­னை­க­ளையும், ஆறு­தல்­க­ளையும் வழங்­கு­வார்கள். சில வேளை­களில் வெளி­நா­டு­கி­ளி­லி­ருந்து குறிப்­பாக இங்­கி­லாந்து, ஜப்பான், ஓமான் போன்ற நாடு­க­ளி­லி­ருந்தும் இப்­பா­ட­சா­லைக்கு விசேட பயிற்சி பெற்ற நிபு­ணர்கள் எமது ஆசி­ரி­யர்­க­ளுக்கு பயிற்­சி­களை அளிப்­பார்கள். இள­வ­ய­தி­லேயே இத்­து­றையில் ஈடு­பட்­டி­ருக்கும் இவர்­களைப் பாராட்­டு­வார்கள். ஏனைய உலக நாடு­களில் இத்­தொ­ழி­லுக்கு வரு­ப­வர்கள் இளைப்­பா­றி­ய­வர்­க­ளாக இவர்­களைக் கண்டு மெச்­சு­வார்கள்.

Q இப்­பா­ட­சா­லைக்கு ஏதா­வது அரச உத­விகள் கிடைக்­கின்­ற­னவா?

இப்­பா­ட­சாலை பிர­தேச செய­ல­கத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இருந்­த­போதும் எந்­த­வொரு அர­சாங்க உத­வியும் கிடைப்­ப­தில்லை. அதனை நாம் எதிர்­பார்ப்­ப­து­மில்லை. ஏற்­க­னவே சிலரின் உத­வி­யோடு ஓடிக் கொண்­டி­ருக்­கி­றது. அதில் நிதி­யு­தவி செய்யும் சிலர் தமது பெயரைக் கூட குறிப்­பி­டு­வ­து­மில்லை. அவர்­க­ளது  முகம் கூட எமக்குத் தெரி­யாது.

Q இவ்­வா­றான பாட­சா­லை­களில் தமது பிள்­ளை­களை சேர்ப்­பதில் பெற்­றோர்கள் எந்­த­ளவு தூரம் ஆர்வம் காட்­டு­கி­றார்கள்?

இவ்­வா­றான பிள்­ளை­களை சமூ­கத்­திற்கு காட்­டக்­கூ­டாது என்ற பிழை­யான அபிப்­பி­ரா­யத்தில் இன்னும் சில பெற்றோர் இருக்­கி­றார்கள். இது இறை­வனின் தண்­டனை இல்லை. அவ்­வாறு எண்­ணு­வது தவறு. ஆனால் அந்தப் பிள்­ளைக்கு கிடைக்க வேண்­டிய அன்புத் தேவை நிச்­ச­ய­மாக கிடைக்க வேண்டும். அதற்­காக அப்­பிள்­ளைகள் ஏங்­கு­கி­றார்கள். பெற்­றோரும் வீணாக நொந்­து­கொள்ளக் கூடாது. உங்­க­ளது இதயச் சுமையை கூட்­டாக பகி­ர்ந்து கொள்வோம். சந்­தர்ப்­பத்தை பெற்றோர் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும்.

Q இவ்­வா­றான பிள்­ளை­க­ளுக்கு சமூக அங்­கீ­காரம் கிடைப்­ப­தாக நீங்கள் கரு­து­கி­றீர்­களா?

இல்லை. இலங்­கையில் குறிப்­பாக எமது சமூ­கத்தில் அவ்­வா­றில்லை. இன்னும் இவ்­வா­றான மாற்றுத் திறமை கொண்ட பிள்­ளை­க­ளுக்கு தொழில் வாய்ப்­புக்கள் உரிய வீதத்தில் வழங்­கப்­ப­டு­வ­தில்லை. ஆனால் வளர்ச்­சி­ய­டைந்த நாடு­களில் இவர்கள் மதிக்­கப்­ப­டு­கி­றார்கள். உரிய தொழில் வாய்ப்­புக்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. எமது இப்­பா­ட­சா­லையில் கற்றுக் கொண்­டி­ருந்த ஒரு மாணவன் தனது பொற்­றோ­ருடன் ஜப்பான் நாட்­டுக்கு சென்று அங்கு தொடர்ந்து கல்வி கற்று தற்­போது ஒரு நிறு­வ­னத்தில் தொழில் செய்­கிறார். அண்­மையில் விடு­மு­றையில் வந்து எங்­களைச் சந்­தித்­த­போது அவ­ரு­டைய பெற்றோர் இவ்­வி­ட­யத்தைக் கூறினர். எம்­நாட்­டிலும் இந்­நிலை உரு­வாக வேண்டும்.

Q இலங்­கையில் இது­போன்று இயங்கும் ஏனைய பாட­சா­லை­க­ளோடு ஏதா­வது தொடர்பு உண்டா?

இலங்­கையில் இது­போன்ற பதிவு செய்­யப்­பட்ட 11 பாட­சா­லைகள் இருப்­ப­தாக அறி­கிறோம். அவற்றுள் மாவ­னெல்லை, காத்­தான்­குடி பகு­தி­க­ளி­லுள்ள பாட­சா­லை­க­ளோடு தொடர்­புண்டு. அவர்கள் இங்­குள்ள பல விட­யங்­களை பாராட்டி தாமும் பின்­பற்ற ஆலோ­சனை கேட்­பார்கள். வெளி­நாட்டுப் பாட­சா­லை­களின் விட­யங்­களை சமூக வலை­த­ளங்­களின் மூலம் அறிவோம்.

Q நீங்கள் அறிந்­த­வரை இவ்­வா­றான பிள்­ளை­களின் பிறப்­பிற்­கான ஏதா­வது மருத்­துவ ரீதி­யான கார­ணங்கள் உள்­ள­னவா?

நான் அறிந்­த­வரை நெருங்­கிய குடும்ப உற­வுக்குள் திரு­மணம் செய்தல், இள­வ­யது, வயது முதிர்ந்த அதா­வது 18 வய­துக்கு முன் 35 வய­துக்குப் பின்­ன­ரான கருத்­த­ரிப்பு மற்றும் கருத்­த­ரிப்பு காலத்தில் முறை­யான சுகா­தார, மருத்­துவ பரி­சோ­த­னைகள் செய்­யப்­ப­டாமை என்­ப­வற்றை கார­ணங்­க­ளாக அறி­கிறேன். இதில் முக்­கி­ய­மாக கருத்­த­ரித்த காலத்தில் பெற்­றோரின் கவ­ன­மின்மை முக்­கிய கார­ணி­யாகும்.

Q இவ்­வா­றான பிள்ளை பிறப்பு தொடர்­பாக ஏதா­வது சமூக விழிப்­பு­ணர்வுத் திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றதா?

நிச்­ச­ய­மாக செய்­யப்­பட வேண்­டிய விட­யமே இது. எமது பிர­தே­சத்தில் சமூக சேவையில் தம்மை ஈடு­ப­டுத்தி இருக்கும் பல வைத்­தி­யர்கள் இருக்­கி­றார்கள். அவர்­களின் உத­வியைக் கொண்டு திரு­மணம் செய்­ய­வி­ருக்கும் இளைஞர், யுவ­திகள் மற்றும் புதி­தாக திரு­மணம் முடித்­த­வர்­க­ளுக்கும் இவ்­வா­றான விழிப்­பு­ணர்வுத் திட்­டங்­களை தொட­ராக மேற்­கொள்ள இருக்­கிறோம்.

Q இப்­பா­ட­சா­லையை தொடர்ந்து நடாத்­து­வதில் நீங்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள் எவை?

பொது­வாக தூர இடங்­க­ளி­லி­ருந்து வரும் மாண­வர்கள் தங்கிப் படிக்க விடுதி வச­தி­யில்லை. அது உரு­வாக்­கப்­பட வேண்டும். அத்­துடன் தொடர்ந்து நடாத்திச் செல்ல தேவை­யான நிதி வசதி. இவ்­வா­றான பிள்­ளைகள் கற்கும் இப்­பா­ட­சா­லைக்கு சிலர் பெயர், முக­வரி கூட அறி­விக்­காமல் நிதி­யு­தவி செய்து வரு­கி­றார்கள். அல்லாஹ் அவர்­க­ளுக்கு ஈரு­ல­கிலும் அருள்­பு­ரிய வேண்டும். தொடர்ந்தும் இப்­பா­ட­சா­லையைப் பற்றி அறியும் ஒவ்­வொ­ரு­வரும் இப்­பிள்­ளை­க­ளுக்­காக உதவ முன்­வர வேண்டும் என அன்பாய் கேட்டுக் கொள்­கிறேன்.

Q உங்­க­ளு­டைய சேவைக் காலத்தில் இப்­பா­ட­சா­லையில் உங்கள் இத­யத்தைத் தொட்ட நிகழ்­வொன்றை எம்­முடன் பகிர்ந்து கொள்ள முடி­யுமா?

இங்கு அப்­துல்லாஹ் என்­றொரு மாற்­றுத்­தி­ற­னாளி மாணவர் இருந்தார். பொது­வாக எல்­லோ­ரு­டனும் சக­ஜ­மாகப் பழகக் கூடி­யவர். ஏந்­நே­ரமும் கல­க­லப்­பாக இருப்பார். திடீ­ரென அவ­ருக்கு ஏற்­பட்­டி­ருந்த நோயின் நிலை கூடி­யதால் சிகிச்­சைக்­காக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு ஓரிரு தினங்களில் மௌத்தாகி விட்டார். எங்களுக்கு செய்தி கிடைத்ததும் ஏனைய மாணவர்களையும் அழைத்துக்கொண்டு செல்வதற்கு ஆயத்தமானோம். காலை நேரம் என்பதால் ஏனைய மாணவர்களுக்கு காலை உணவை வழங்கி சாப்பிட்ட பிறகு அழைத்துச் செல்வதென முடிவு செய்தோம். சிறிது நேரம் சென்ற பிறகு மாணவர்கள் சாப்பிடத் தயாரா? என ஆசிரியர்கள் கேட்டபோது, “இல்லை” என பதிலளித்தார்கள். காரணம் கேட்டபோது, “அப்துல்லாஹ் மௌத்து; சாப்பிட முடியாது” என அனைவரும் அடம் பிடிக்க, சிலர் அழுதுவிட்டனர். இந்நிகழ்வை என்னால் இன்றுவரை மறக்க முடியாது.

Q இப்பாடசாலையினூடாக சமூகத்திற்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

இவ்வாறான பிள்ளைகளைப் பெற்றவர்களின் மனக்கவலையில்  நாங்களும் சிறிதாவது பங்கு கொள்வோம். மாணவர்கள் இப்பாடசாலையில் தங்கியிருக்கும் குறுகிய நேரத்திற்காவது மன ஆறுதல் கொள்ளட்டும். அந்த நோக்கத்திற்காகத்தான் இப்பாடசாலை அமைக்கப்பட்டது. இதில் இவ்வூர் மக்களும் பங்குகொள்ள வேண்டும்.

குறிப்பாக இவ்வாறான பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்      தயக்கமின்றி தங்களுடைய பிள்ளைகளை சேர்க்க வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.