முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் ஐ.நா. கரிசனை

0 61

(நா.தனுஜா)
இலங்­கை­யினால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் பெண்கள், சமா­தானம் மற்றும் பாது­காப்பு தொடர்­பான தேசிய நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் தமது பாராட்டை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்கும் பெண்­க­ளுக்கு எதி­ரான ஒடுக்­கு­மு­றை­களை முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்­கான ஐக்­கிய நாடுகள் குழு, முஸ்லிம் விவாக,விவா­க­ரத்து சட்டம் தொடர்பில் தீவிர கரி­ச­னையை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இலங்கை தொடர்­பான ஒன்­ப­தா­வது காலாந்­தர அறிக்­கையை பரி­சீ­லித்­ததன் பின்­ன­ரேயே பெண்­க­ளுக்கு எதி­ரான ஒடுக்­கு­மு­றை­களை முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்­கான ஐக்­கிய நாடுகள் குழு மேற்­கண்­ட­வாறு கருத்­து­ரைத்­துள்­ளது.

நெருக்­க­டி­க­ளுக்கு முகங்­கொ­டுத்­தி­ருக்கும் பெண்­களின் தேவை­களை பூர்த்­தி­செய்­வதை இலக்­காகக் கொண்ட நேர்­மறை நகர்­வாக பெண்கள், சமா­தானம் மற்றும் பாது­காப்பு தொடர்­பான தேசிய நிகழ்ச்சித் திட்டம் அமைந்­தி­ருப்­ப­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்ள அக்­குழு,இந்­நி­கழ்ச்சித் திட்டம் தொடர்பில் நடுத்­த­ர­கால மீளாய்வு மேற்­கொள்­ளப்­பட்­டதா? என கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்­ளது.

அதே­வேளை கடந்த 2022 ஆம் ஆண்டு முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருப்­பினும், அச்­சட்டம் இன்­னமும் கரி­ச­னைக்­கு­ரிய பல­கூ­று­களை உள்­ள­டக்­கி­யி­ருப்­ப­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்ள அக்­குழு, சிறுவர் திரு­ம­ணத்தை நீக்­குதல் உள்­ள­டங்­க­ளாக இச்­சட்­டத்தை மேலும் திருத்­து­வ­தற்­கான திட்­டங்கள் உள்­ள­னவா என வின­வி­யுள்­ளது.

அதே­போன்று ‘இலங்­கையில் ஐவரில் ஒருவர் என்ற விகி­தா­சா­ரத்தில் பெண்கள் தமது மிக நெருங்­கிய துணை­வரின் வன்­முறைத் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கு­கின்­றனர்.இருப்­பினும் அவற்றில் பெரும்­பா­லான சம்­ப­வங்கள் குறித்து முறைப்­பா­ட­ளிக்­கப்­ப­டு­வ­தில்லை.இந்­நி­லையில் வீட்டு வன்­மு­றையை தடுப்­ப­தற்­கான சட்­டத்தில் உத்­தேச திருத்­தங்­களை மேற்கொள்வதற் கான காலப்பகுதி நிர்ணயிக்கப் பட்டுள்ளதா? அத்தகைய வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எவ்வாறான பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது?’ எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்படி குழு வினயெழுப்பியுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.