இலங்கை மத்ரஸா சீர்திருத்தமும் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளும்

0 224

அஷ்ஷெய்க் அஷ்கர் அரூஸ் நளீமி, எம்.ஏ
சிரேஷ்ட விரிவுரையாளர்,
ஜாமிஆ நளீமியா

இலங்கை முஸ்­லிம்கள் வர­லாறு நெடு­கிலும் பெரும்­பான்மை சிங்­க­ள­வர்கள், மற்றும் சிறு­பான்மை தமி­ழர்­க­ளுக்கு மத்­தியில் வாழ்ந்து வரும் ஒரு சிறு­பான்மை சமூகம். அவர்கள் தமது அடை­யா­ளத்­தையும் தனித்­து­வத்­தையும் பாது­காக்கும் பய­ணத்தில் பல்­வேறு சிந்­தனா படை­யெ­டுப்­புக்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ளனர். சுதேச மக்­க­ளோடும் மன்­னர்­க­ளோடும் முஸ்­லிம்கள் நெருங்­கிய உறவைப் பேணி, தேசத்­துக்குப் பங்­காற்­றிய போதிலும் (L. Dewaraja, The Muslims of Sri Lanka: One Thousand Years of Ethnic Harmony 900-1915 1994) தமது பாரம்­ப­ரிய கல்­வி­மு­றையில் தேவை­யான சீர்­தி­ருத்­தங்­களை மேற்­கொள்ள அவர்கள் காட்­டிய ஆர்வம் போத­வில்லை என்ற வலு­வான குற்­றச்­சாட்டு நில­வு­கின்­றது.
இந்த நாட்­டிலே கால­னித்­தவ ஆட்­சியின் போது (1505–1948) முஸ்­லிம்கள் கல்­வியில் பாரிய பின்­ன­டைவை எதிர்­கொண்­டனர். சுமார் நான்கு தசாப்த காலத்தில் இறுதி நூற்­றாண்டு மிகப் பெரும் சவ­ாலாக அமைந்­தது. கிறிஸ்­த­வ­ம­ய­மாக்கல் நாட்டின் கல்விக் கொள்­கை­யி­னூ­டாக ஊடுருவத் தொடங்­கி­யது. இந்­நி­லையில் முஸ்லிம் தலை­வர்­க­ளுக்கு முன்னால் இரு தெரி­வு­களே காணப்­பட்­டன. ஒன்று பாரம்­ப­ரிய மத்­ரஸா கல்வி முறை­மையை நவீ­ன­ம­யப்­ப­டுத்தல், மற்­றது மேற்­கத்­தேய கல்வி முறை­மை­யோடு இணைந்­த­தாக இஸ்­லா­மிய கல்­வி­யையும் வழங்­குதல். இவ்­விரு அணு­கு­மு­றை­மைக்கும் தனித் தனி­யான ஆத­ர­வா­ளர்­களும் அறி­ஞர்­களும் முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களில் தோற்றம் பெற்­றனர். முத­லா­வது அணு­கு­மு­றையால் பாரம்­ப­ரிய உல­மாக்­களும், இரண்­டா­வது அணு­கு­மு­றையால் இளம் முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களும் கவ­ரப்­பட்­டனர்.

இலங்கை மத்­ர­ஸாக்கள் பற்றி ஆய்வு செய்­கின்ற அப்துல் நாஸர் அவர்கள் இலங்கை மத்­ர­ஸாக்­களின் வர­லாற்றை ஆறு காலங்­க­ளாக வகுத்து நோக்­கு­கின்றார் (A. Nasar, H. Arabic Colleges of Sri Lanka: Past, Present & Future. Sri Lanka 2009, p.4-7).

1-. தோற்றக் காலம் (1870-1925): மத்­ர­ஸாக்கள் நாட­ளா­விய ரீதியில் உரு­வான காலம். இக்­கா­லத்தில் தரீக்கா பின்­ன­ணியில் தோற்றம் பெற்­ற­தோடு இந்­திய இஸ்­லா­மிய அறி­ஞர்­களே இதற்கு முன்­னோ­டி­க­ளாக இருந்­துள்­ளனர்.
2.- கபூ­ரிய்யா மத்­ரஸா வின் தோற்றக் காலம் (1931-1950): இக்­கா­லத்தில் மத்­ர­ஸாக்­களின் பாடத்­திட்­டத்­திலும் நிர்­வாக அமைப்­பிலும் சில மாற்­றங்கள் தோற்றம் பெற்­றன.
3.- முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் கிழக்கு இலங்­கையில் மத்­ர­ஸாக்­களின் தோற்றம் (1954-1959): இக்­கா­லத்தில் கிழக்­கி­லங்­கையில் மத்­ர­ஸாக்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­தோடு மார்க்கக் கல்­விக்­காக காலி, வெலி­கம போன்ற தெற்குப் பிர­தே­சங்­க­ளுக்கு அவர்கள் வர­வேண்­டிய தேவை இல்­லாமல் போனது.
4-. பெண்கள் அரபுக் கல்­லூ­ரியின் தோற்றம்: 1959 இல் கல் ­எளிய­விலும் 1961 இல் அரக்­கி­யால மற்றும் காத்­தான்­கு­டியில் பெண்கள் மத்­ர­ஸாக்கள் தோற்றம் பெற்­றன. இதனால் பெண்கள் மார்க்கக் கல்­வியைப் பெறு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் உரு­வா­கின.
5-. 1960-1970 காலப் பகு­தியில் அரச பாட­சா­லை­களில் மௌலவி ஆசி­ரியர் நிய­மனம் வழங்­கப்­பட்­டதால் மத்­ர­ஸாக்­களின் எண்­ணிக்கை காளாண் முளைப்­ப­தைப்போல் நாடு பூரா­கவும் தோன்­றின.
6-. 1970 ஐத் தொடர்ந்து இஸ்­லா­மிய இயக்­கங்­களின் செல்­வாக்கால் இயக்கப் பின்­ன­ணி­களைக் கொண்ட மத்­ர­ஸாக்கள் தோற்றம் பெற்­றன. குறிப்­பாக தப்லீக் பின்­ன­ணியைக் கொண்ட இயக்க மத்­ர­ஸாக்கள் தோற்றம் பெற்­றன.

அத்­தோடு 1970 ஐத் தொடர்ந்து பொது­வாக இல்­லா­வி­டினும் ஒரு சில மத்­ர­ஸாக்­களின் கல்வி முறையில் சில மாற்­றங்கள் உரு­வா­கி­யதை மறுக்க முடி­யாது. அவர்­களும் பாட­சாலைக் கல்­வியை தமது கற்கை நெறியில் ஒன்­றாக இணைத்துக் கொண்­டார்கள். மாண­வர்­களை O/L மற்றும் A/L பரீட்­சை­க­ளுக்குத் தயார்­ப­டுத்­தி­னார்கள். 1976 இலி­ருந்து இலங்கை பரீட்­சசை திணைக்­க­ளத்தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அல்­ஆலிம் பரீட்­ச­சைக்கு மாண­வர்­களை தயார்­ப­டுத்­து­வ­திலும் கவனம் செலுத்­தி­னார்கள் (I. Karunathilaka, Role of Education in Forming the Cultural Identity: A Case Study on Sri Lankan Muslim Community, 2019, p.20).
அண்­மிய காலத்தில் ஈஸ்டர் தாக்­கு­தலின் பின்னர் பெரும்­பா­லான மத்­ர­ஸாக்கள் தமது பாடத்­திட்­டத்தில் மாண­வர்­களை O/L, A/L பரீட்­சை­க­ளுக்கு தயார்­ப­டுத்தும் செயற்­திட்­டத்தை அமு­லாக்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்­துக்கு முகங்­கொ­டுத்­துள்­ளனர்.

இந்­த­வ­கையில் பொது­வாக இலங்கை மத்­ர­ஸாக்­களில் அமு­லி­லுள்ள கல்­வித்­திட்டம் ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யுள்­ளது. காலத்­தி­னதும் சமூ­கத்­தி­னதும் தேவைக்­கேற்ப மறு­சீ­ர­மைக்­கப்­பட வேண்­டிய அவ­சியம் எழுந்­துள்­ளது. அரச மட்­டத்­திலும் மத்­ரஸா மறு­சீ­ர­மைப்பு செயற்­திட்­டங்கள் ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­கின்­றன. சம­கா­லத்தில் இதனைப் பற்றி பல்­வேறு ஆய்­வுகள் வெளி­வந்­துள்­ளன. ஆய்­வாளர் Ameer Ali, “Modernising Madrasas for New Padideia,” (2019); பேரா­சி­ரியர் I. Karunathilaka, “Role of Education in Forming the Cultural Identity: A Case Study on Sri Lankan Muslim Community,” (2019); மற்றும் Community Association of Professionals ntspapl;l “A study on Contemporary Madrasah Education System in Sri Lanka,” (2020); கலா­நிதி Rauff zain, “இலங்­கையில் மத்­ரஸா கல்வி” (2024) போன்­றன அண்­மையில் வெளி­யான முக்­கிய ஆய்­வு­க­ளாகும். இவற்றின் பின்­ன­ணியில் மத்­ர­ஸாக்கள் வர­லாறு நெடு­கிலும் எதிர்­கொண்டு வரு­கின்ற முக்­கிய சவால்­க­ளாக பின்­வ­ரு­வ­ன­வற்றைக் குறிப்­பி­டலாம்.

(1) பாடத்­திட்­டத்தின் உள்­ள­டக்கம் சுமை­யா­ன­தா­கவும், நடை­முறை உல­குக்கு பொருத்­த­மற்­ற­தா­கவும் இருத்தல்
(2) தொழில் கல்வி வழி­காட்­டல்கள் இன்மை
(3) வெளிக்­கள ஆளுமை விருத்தி செயற்­பா­டுகள் போதாமை
(4) இயக்க சிந்­த­னை­களின் ஆதிக்கம்
(5) குறித்த பாடத்­திட்­டத்­துக்கு அரச அங்­கீ­காரம் இன்மை
(6) நாட்டின் அறி­வுசார் பொரு­ளா­தா­ரத்­துக்குப் பங்­காற்­றாமை
(7) நாட்டின் மத சக­வாழ்­வுக்கு அச்­சு­றுத்­த­லாக பார்க்­கப்­படுகின்­றமை
(8) ஆங்­கிலம், சிங்­களம், தமிழ் போன்ற மொழிப் பாடங்­க­ளுக்கு போதிய கவனம் செலுத்­தாமை
(9) நவீன தொழி­நுட்ப கற்­கை­நெ­றி­களை அமுல்­ப­டுத்த போதிய மனித வளமோ, பொரு­ளா­தார வளமோ இன்மை
(10) தேசிய பாடத்­திட்­டத்­துக்கோ (O/L, A/L & Degree), தேசத்­துக்­கான பாடத்­திற்கோ போதிய முக்­கி­யத்­துவம் வழங்­காமை.(Sri Lankan Studies என இதனைக் குறிப்­பிட முடியும்.

இதில் இலங்கை வர­லாறு, அதில் வாழும் மதங்­களின் வர­லாறு, சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான சக­வாழ்வு மற்றும் சமா­தானக் கல்வி போன்­ற­வற்றைக் குறிப்­பிட முடியும்.)
இந்­த­வ­கையில் இலங்­கையில் இஸ்­லா­மிய கல்­விக்குப் பணி­யாற்­றி­வ­ரு­கின்ற மத்­ர­ஸாக்­களை ஒரு முறை­யான கட்­ட­மைப்­புக்குள் கொண்டு வரு­வது அவ­சி­யப்­ப­டு­கின்­றது. ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய தலைமைத்துவத்தின் வழிகாட்டலின் கீழ் குறைந்தது பின்வரும் ஐந்து பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

(1) மத்ரஸாக்களின் பாடத்திட்டம் மற்றும் அதன் பௌதீக வசதி (Curriculum and Infrastructure)
(2) ஆசிரியர் வலுவூட்டல் மற்றும் உளவளத் துறை(Teacher Empowerment)
(3) பரீட்சை மற்றும் தர நிர்ணயப் பிரிவு (Examination and Quality Esurance)
(4) ஆய்வு மற்றும் வெளியீட்டுப் பகுதி (Research and Publication)
(5) நிதி மற்றும் புலமைப் பரிசில் பகுதி (Finance and Scholarship).

இத்தகைய கிளைகள் பொதுத் தலைமைத்துவத்தின் கீழ் அரச கொள்கைகளோடு இணைந்து தேசிய ரீதியில் பயணிக்கும் போது எதிர்பார்க்கின்ற மாற்றங்களை இஸ்லாமிய கல்விப் பாரம்பரியத்திற்குள் ஏற்படுத்த முடியும் என்ற பரிந்துரையை ஆய்வாளர் முன்வைக்கின்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.