இஸ்லாத்துக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: ஞானசார தேரரின் மேன் முறையீட்டு மனு குறித்து சட்ட மா அதிபர் ஆட்சேபனை முன்வைக்க தீர்மானம்

0 57

(எப்.அய்னா)
பொது­பல சேனா அமைப்பின் தலைவர் கல­கொட‌ அத்தே ஞான­சார தேரர் இஸ்­லாத்தை அவ­ம­தித்­தமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டு தண்­டனை அளிக்­கப்­பட்­டுள்ள நிலையில், அதற்கு எதி­ராக அவர் செய்­துள்ள மேன் முறை­யீட்டு மனு தொடர்பில் ஆட்­சே­ப­னை­களை முன் வைக்க சட்ட மா அதிபர் தீர்­மா­னித்­துள்ளார்.

ஞான­சார தேரர் சார்பில் முன் வைக்­கப்­பட்­டுள்ள திருத்தல் மனு, நேற்று முன் தினம் (11) கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி மாபா பண்­டார முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது ஞான­சார தேரர் சார்பில் மன்றில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி காமினி அல்விஸ், மனு குறித்த விசா­ர­ணைக்கு திகதி குறிக்­கு­மாறு கோரினார்.
எனினும் சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜ­ரான அரச சட்­ட­வாதி, அதற்கு ஆட்­சே­பனை முன் வைத்த நிலையில், குறித்த ஞான­சார தேரரின் மேன் முறை­யீட்டு திருத்தல் மனு குறித்து சட்ட மா அதிபர் ஆட்­சே­ப­னை­களை முன்­வைக்க எதிர்பார்ப்­ப­தாக கூறினார்.

இத­னை­ய­டுத்து ஆட்­சே­ப­னை­களை முன்­வைக்க அனு­ம­தி­ய­ளித்த நீதி­மன்றம் இம்­மாதம் 25 ஆம் திகதி ஆட்­சே­ப­னை­களை சமர்ப்­பிக்க சட்ட மா அதி­ப­ருக்கு அவ­கா­ச­ம­ளித்­தது.
ஞான­சார தேர­ருக்கு எதி­ராக கொழும்பு குற்­றத்­த­டுப்பு பிரி­வினால் இந்த விவ­கா­ரத்தில் நீதிவான் நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. அவ்­வ­ழக்கின் இறு­தி­யி­லேயே ஞான­சார தேர­ருக்கு 9 மாத கால சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அத்­துடன் 1500 ரூபா அப­ரா­தமும் செலுத்த உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வ­ழக்கின் தீர்ப்பு கடந்த ஜன­வரி 9 ஆம் திகதி கொழும்பு மேல­திக நீதிவான் பசன் அம­ர­சே­ன‌வால் அறி­விக்­கப்­பட்­டது. குறித்த தீர்ப்பு ஏற்­க­னவே மூன்று முறை ஒத்திவைக்­கப்­பட்ட நிலையில் கடந்த ஜன­வரி 9ஆம் திகதி, தீர்ப்­ப­றி­விப்­ப­தற்­காக‌ கொழும்பு மேல­திக நீதவான் பசன் அம­ர­சேன முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­தது.

அதற்கு முன்­னைய வழக்கு திக­தியில் மன்றில் ஞான­சார தேரர் ஆஜ­ரா­காமல் இருந்த போதும், ஜன­வரி 9 ஆம் திகதி பிர­தி­வா­தி­யான ஞான­சார தேரர் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

இஸ்லாம் ஒரு புற்று நோய் என ஞான­சார தேரர் வெளி­யிட்ட கருத்­துக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் பொரளை ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் ரிகாஸ் முன் வைத்த முறைப்­பாட்­டுக்கு அமைய, கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் மேல­திக நீதிவான் (3 ஆம் இலக்க அறை) முன்­னி­லையில் வழக்குப் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

கடந்த 2016 ஜூலை 8, அன்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போது, இஸ்லாம் தொடர்­பான அறிக்கை மத நல்­லி­ணக்­கத்தை மீறு­வ­தா­கவும், அதன்­படி, குற்­ற­வியல் சட்­டத்தின் 291 (பி) பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் இழைக்­கப்­பட்­ட­தா­கவும் குற்றம் சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

“கடந்த 2016 ஜூலை 8 ஆம் திகதி அன்று கொழும்பில் நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் பிர­தி­வா­தி­யான ஞான­சார தேரர் தெரி­வித்த சில கருத்­துக்கள் முஸ்­லிம்­களின் மத நம்­பிக்­கை­களை அவ­ம­தித்­த­தாகக் கூறி இந்த வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டது. அர­சி­ய­ல­மைப்பின் விதிகள் மற்றும் தண்­டனை சட்டக் கோவையின் 291 (அ) பிரிவின் படி, மத நம்­பிக்­கை­களைப் புண்­ப­டுத்தும் வகையில் செயல்­பட முடி­யாது. முஸ்­லிம்­களின் மத நம்­பிக்­கைகள் அவ­ம­திக்­கப்­பட்­டுள்­ளமை பிர­தி­வாதி தொடர்­பு­டைய ஊடக மாநாட்டில் வெளி­யிட்ட கருத்­துக்கள் ஊடாக‌ தெளி­வாகத் தெரி­கி­றது. அந்த கருத்­துக்கள் அலட்­சி­யத்தால் செய்­யப்­பட்­டவை அல்ல, மாறாக பிர­தி­வா­தியால் வேண்­டு­மென்றே வெளி­யி­டப்­பட்­டன என்­பதும் தெளி­வா­கி­றது. அதன்­படி, பிர­தி­வாதி வேண்­டு­மென்றே தொடர்­பு­டைய இந்த குற்­றத்தைச் செய்­த­தாக வழக்கு விசா­ர­ணையில் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி, பிர­தி­வா­திக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுகள் நியா­ய­மான சந்­தே­கத்­திற்கு இட­மின்றி முறைப்­பாட்­டாளர் தரப்பால் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. அதனால் பிரதிவாதியை குற்றவாளி என இந்த நீதிமன்றம் தீர்மானிக்கின்றது.’ என நீதிவான் பசன் அமரசேன தீர்ப்பறிவித்து குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி காமினி அல்விஸ், இந்த முடிவை எதிர்த்து மேல் நீதிமன்றில் மேன் முறையீட்டு திருத்தல் மனுவை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.