நோன்புகால இலவச பேரீச்சம் பழ விநியோகம் : திணைக்களம் முறையாக நிர்வகிக்குமா?

0 33

றிப்தி அலி

புனித ரமழான் மாதம் ஆரம்­ப­மா­வ­தற்கு இன்னும் ஒரு மாதம் மாத்­தி­ரமே உள்­ளது. இந்த புனித மாதத்தில் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு இல­வ­ச­மாக பகிர்ந்­த­ளிப்­ப­தற்­காக சவூதி அரே­பியா, குவைத், கட்டார், ஐக்­கிய அரபு ராஜ்­ஜியம் மற்றும் ஈரான் போன்ற மத்­திய கிழக்கு முஸ்லிம் நாடுகள் ஒவ்­வொரு வரு­டமும் பேரீச்சம் பழங்களை அன்­ப­ளிப்புச் செய்­வது வழ­மை­யாகும்.

இதற்­க­மைய, இந்த வருடம் வழமை போன்று சவூதி அரே­பியா முத­லா­வ­தாக 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்­களை அன்­ப­ளிப்புச் செய்­துள்­ளது. இலங்கை முஸ்­லிம்­க­ளுக்குத் தேவை­யான பேரீச்சம் பழத்தில் 10 சத­வீ­தமே இந்த நன்­கொடை என கணிக்­கலாம்.
இதனால், முஸ்லிம் நாடு­க­ளி­லி­ருந்து இன்னும் பல மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்­களை நன்­கொ­டை­யாக பெற வேண்­டி­யுள்­ளது. இதற்­காக அர­சாங்­கத்­தினால் ஒரு கிலோவுக்கு199 ரூபா வரிச் சலுகை தற்­போது வழங்­கப்­பட்­டுள்­ளது.

வெளி­நாட்டு அர­சாங்­கங்கள், நிறு­வ­னங்கள், வணிக நிறு­வ­னங்கள், தொண்டர் அமைப்­புகள் மற்றும் நலன்­வி­ரும்­பி­க­ளி­ட­மி­ருந்து எந்­த­வித அந்­நியச் செலா­வ­ணியும் தொடர்­பு­ப­டாமல் பரி­சாக அல்­லது நன்­கொ­டை­யாக அனுப்­பப்­படும் பேரீச்சம் பழங்­க­ளுக்கு மாத்­தி­ரமே இந்த வரிச் சலுகை பொருந்தும்.

எதிர்­வரும் மார்ச் 31ஆம் திகதி வரை அமு­லி­லுள்ள இந்த வரிச் சலு­கை­யினை பெறு­வ­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் சிபா­ரிசுக் கடிதம் அவ­சி­ய­மாகும்.

இதனால் பேரீச்சம் பழ விட­யத்தில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு பாரிய பொறுப்புள்ளது. அண்­மையில் சவூதி அரே­பி­யா­வினால் அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்ட பேரீச்சம் பழங்­களை துறை­மு­கத்­தி­லி­ருந்து விடு­விக்­கின்ற விடயத்தில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளம் வினைத்திறனாக செயற்படவில்லை என அதன் மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டன.

அதே­வேளை, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் நன்­கொ­டை­யாக கிடைக்கப் பெறும் பேரீச்சம் பழங்­களை விடு­விப்­ப­தற்கும் விநி­யோ­கிப்­ப­தற்கும் தேவை­யான Standard Operating Procedures (SOP) ) இல்லை என்ற குற்­றச்­சா­ட்டொன்று ஆளும் கட்­சியின் மாத்­தறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அர்க்கம் இல்­யா­ஸினால் முன்­வைக்­கப்­பட்­டது.

மேலும், மாவட்ட ரீதி­யாக உள்ள பள்­ளி­வா­சல்­களில் பதி­வு­செய்­யப்­பட்­டுள்ள குடும்­பங்­களின் புதுப்­பிக்­கப்­பட்ட தர­வு­களும் திணைக்­க­ளத்­திடமில்லை என புத்­த­சா­சன, சமய விவ­கார மற்றும் கலா­சார அமைச்சர் ஹினி­தும சுனில் சென­வி­யிற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எழு­திய கடி­தத்தில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

மேற்­படி கார­ணங்­க­ளினால் இந்த வருடம் பேரீச்சம் பழ விநி­யோகம் தொடர்பில் அனைத்து தரப்­பி­னரும் அவ­தானம் செலு­தி­யுள்­ளனர். இதனால், அன்­ப­ளிப்பு செய்­யப்­ப­டு­கின்ற பேரீத்தம் பழங்­களை வினைத்­தி­ற­னாக விநி­யோ­கிக்க வேண்­டிய பொறுப்பு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் மீது சுமத்­தப்­பட்­டுள்­ளது.
இதே­வேளை, இந்த வருட பேரீத்தம் பல விநி­யோகம் வெளிப்­படைத் தன்­மை­யா­கவும், நாட்­டி­லுள்ள அனைத்து முஸ்­லிம்­க­ளுக்கும் கிடைக்கும் வகையில் பகிர்ந்­த­ளிக்­கப்­படும் என அமைச்சர் ஹினி­தும சுனில் செனவி தெரி­வித்தார்.

இதற்­காக விசேட திட்­ட­மொன்று தயா­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இதன் ஊடாக 25 மாவட்­டங்­க­ளி­லுள்ள 2,741 பள்­ளி­வா­சல்கள் ஊடாக அன்­ப­ளிப்­பாக கிடைக்கப் பெற்ற பேரீச்சம் பழங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பேரீத்தம் பழ விநி­யோக விட­யத்தில் அமைச்­சரின் இக்­க­ருத்து வர­வேற்­கத்­தக்­க­தாகும். கடந்த பல தசாப்­தங்­க­ளாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் ஊடா­கவே பேரீத்தம் பழ விநி­யோக இடம்­பெற்று வரு­கின்­றது.எனினும் ஒவ்­வொரு வரு­டமும் இந்த விட­யத்தில் புதுப் புதுப் பிரச்­சி­னைகள் தோன்­று­கின்­றன. இதனால், பேரீச்சம் பழ விநி­யோகம் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தொன்­றாகும்.

இவ்­வாறு ஒழுங்­கு­ப­டுத்­தப்­ப­டு­வது இந்த வரு­டத்­திற்கு மாத்­தி­ர­மல்­லாது, எதிர்­கா­லத்­திற்கு பொருத்­த­மா­ன­தாக அமைய வேண்டும். இதன் ஊடாக பேரீத்தம் பழ விநி­யோ­கத்­தினை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினை முறையாக நிர்வகிக்க முடியும்.

அதே­வேளை, நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள பள்­ளி­வா­சல்­களை பதி­வு­செய்­கின்ற நட­வ­டிக்கை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பொறுப்­பி­லுள்­ளது. இதனால் ஒவ்வொரு பள்­ளி­வா­சலின் கீழுள்ள குடும்­பங்­களின் எண்­ணிக்கை ஒவ்­வொரு வரு­டமும் கணக்­கி­டப்­பட வேண்டும். இதன் ஊடா­கவும் பேரீச்சம் பழ விநி­யோ­கத்­தினை ஒழுங்­கு­ப­டுத்த முடியும்.

நாட்­டி­லுள்ள அனைத்து தரப்­பி­னரும் பேரீச்சம் பழ விநி­யோ­கத்­தினை ஒழுங்­கு­ப­டுத்­து­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திடம் தொடர்ச்­சி­யாக கோரிக்கை விடுத்து வரு­கின்­றனர்.

இதற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக முன்­னெ­டுக்க வேண்­டிய பொறுப்பு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் கைக­ளி­லேயே உள்­ளது.

ஏனெனில், புனித ரமழான் மாதம் அண்­மிக்­கின்ற காலப் பகு­தியில் வெளி­நாட்டு அர­சாங்­கங்கள், நிறு­வ­னங்கள், வணிக நிறு­வ­னங்கள், தொண்டர் அமைப்­புகள் மற்றும் நலன்­வி­ரும்­பி­க­ளி­ட­மி­ருந்து பேரீச்சம் பழங்கள் நன்­கொடையாகக் கிடைக்கும். அச்­ச­ம­யத்தில் விநி­யோக திட்­டங்­களை தயார்­ப­டுத்­தாமல் இப்­போ­தி­ருந்தே அதற்­காக தயா­ராக வேண்­டி­யுள்­ளது.

கடந்த காலங்களில் திணைக்கள்திற்கு கிடைக்கும் பேரீச்சம் பழத்தில் ஒர தொகையை முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி பெற்றுக் கொண்ட சம்பவங்களும் நடந்தன. எனினும் இம்முறை முஸ்லிம் எம்.பி.க்கள் இதுவிடயத்தில் தலையிடமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அன்பளிப்பாக கிடைக்கும் பேரீச்சம் பழத்தை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் புனித ரமழான் மாதம் ஆரம்பிப்பதற்கு முன்னரே விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த வேண்டியது முஸ்லிம் சமய திணைக்களத்தின் கடப்பாடாகும். இந்தப் பணியை இப்போதே ஆரம்பிப்பதுடன் ரமழான் ஆரம்பிக்கும் தருணத்திலேயே அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் காலத்தின் தேவையாகும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.