அபிவிருத்தி திட்டங்களுக்கு ஜனாதிபதி மீண்டும் தடை ஏற்படுத்தின் முதலில் ஜனாதிபதி தேர்தலே

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்

0 762

அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளுக்கு ஜனா­தி­பதி மீண்டும் தடை ஏற்­ப­டுத்தின் முதலில் ஜனா­தி­பதி தேர்­தலே நடை­பெறும் என ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் தெரி­வித்தார்.

கிண்­ணி­யாவில் நேற்று மாலை இடம்­பெற்ற மக்கள் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய அவர்,

ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளா­கிய நாம் முதலில் ஜனா­தி­பதி மைத்­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ­ஷ­வுக்கும் நன்றி கூற­வேண்டும். கடந்த ஐம்­பது நாட்­க­ளாக இவர்கள் அர­சியலமைப்­புக்கு மாற்­ற­மாக செய்த வேலை­களால் ஐக்­கிய தேசிய கட்­சியின் பலம் அதி­க­ரித்­துள்­ளது. தூங்­கி­கொண்­டி­ருந்த யானை­களை இவர்கள் தட்டி எழுப்பி விட்­டார்கள்.

கடந்த மூன்று வரு­டங்­க­ளாக நல்­லாட்சி என்ற பெயரில் மஹிந்த ராஜ­பக் ­ஷவின் விசு­வா­சி­களே அமைச்­சர்­க­ளாக இருந்­தனர். இவர்­களே நல்­லாட்­சியின் செயற்­பா­டு­க­ளுக்கு தடை­யாக இருந்­தனர். உதா­ர­ண­மாக எமது மாவட்­டத்தில் ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சே­னவின் வெற்­றிக்­காக உழைத்த நாங்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவும் ஜனா­தி­ப­திக்கு எதி­ராக உழைத்­தவர் பிரதி அமைச்­ச­ரா­கவும் இருந்தார்.

இவ்­வா­றான நிலை நாடு முழு­வதும் காணப்­பட்­ட­தனால் எமக்கு மக்­க­ளுக்கு திருப்­தி­க­ர­மான சேவையை செய்ய முடி­ய­வில்லை.

திரு­டர்­களை பிடிக்க முடி­ய­வில்லை, அர­சியல் பழி­வாங்கலை நிறுத்த முடி­ய­வில்லை, வேலை­வாய்ப்பு வழங்­க­மு­டி­ய­வில்லை, பட்­ட­தா­ரிகள், விளை­யாட்டு பயிற்­று­விப்­பா­ளர்­க­ளுக்கு நிய­மனம் வழங்க முடி­ய­வில்லை.

இதற்கு துணை­யாக ஜனா­தி­பதி இருந்­ததை கடந்த ஐம்­பது நாள் மக்­க­ளுக்கு வெளிச்சம் போட்டு காட்­டி­விட்­டது. தற்­போது ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் தனி அர­சாங்கம் அமைக்­கப்­பட்டு எமக்கு எதி­ராக செயற்­பட்ட கறுப்­பா­டுகள் துரத்­தப்­பட்­டுள்­ளார்கள்.

எனவே, ஜன­வரி மாதத்தில் இருந்து நாடு முழு­வதும் பாரிய அபி­வி­ருத்தி பணி­களை முன்­னெ­டுக்­க­வுள்ளோம். இந்தப் பணி­க­ளுக்கு ஜனா­தி­பதி தடைகளை ஏற்படுத்தினால் அடுத்த வருடம் முதலில் நடைபெறுவது ஜனாதிபதி தேர்தலாகவே இருக்கும்.

ஜனாதிபதி தேர்தலை நடாத்தி ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதியை கொண்டு அந்த பணிகளை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.