காஸா பற்றிய ட்ரம்பின் தீர்மானத்தை இலங்கையும் எதிர்க்க வேண்டும்

0 78

காஸா­வி­லி­ருந்து மக்­களை வெளி­யேற்­றி­விட்டு அதனை அமெ­ரிக்கா கைப்­பற்றப் போவ­தா­கவும் அங்கு புனர் ­நிர்மாணப் பணி­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியாக மீண்டும் பத­வி­யேற்­றுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ள கருத்து உலக மக்­களை அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது.

ட்ரம்ப் பத­வி­யேற்­றது முதல் அமெ­ரிக்­காவின் எதிர்­காலம் தொடர்பில் பல்­வேறு தீர்­மா­னங்­களை மேற்­கொண்டு வரு­வ­துடன் அது தொடர்­பான உத்­த­ரவுப் பத்­தி­ரங்­க­ளிலும் கையெ­ழுத்­திட்டு வரு­கிறார். ஐக்­கிய நாடுகள் சபையின் முக்­கிய சபை­களின் அங்­கத்­து­வத்­தி­லி­ருந்து வெளி­யே­றுதல், சர்­வ­தேச அமெ­ரிக்க உதவி நிறு­வ­னத்தின் செயற்­பா­டு­களை முடக்­குதல், சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சி­களை நாடு கடத்­துதல், அயல் நாடு­க­ளு­ட­னான சர்ச்­சை­களை முன்­னி­றுத்தி வரி­களை விதித்தல், இரா­ஜ­தந்­திர தொடர்­பு­களை இறுக்­க­மாக்­குதல் என அவ­ரது அறி­விப்­புகள் தினம் தினம் அமெ­ரிக்க மக்­களை மாத்­தி­ர­மன்றி உலக நாடு­க­ளையும் அதிர்ச்­சி­யிலும் அதி­ருப்­தி­யிலும் ஆழ்த்­தி­யுள்­ளன. இதன் தொட­ரி­லேயே தற்­போது காஸா விவ­காரம் தொடர்­பிலும் தனது முட்­டாள்­த­ன­மா­னதும் நகைப்­புக்­கி­ட­மா­ன­து­மான அறி­விப்பை அவர் வெளி­யிட்­டுள்ளார்.

பல நாடுகள் குறிப்­பிட்­டுள்­ளதைப் போல இது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயலே அன்றி வேறில்லை எனலாம். காஸாவில் கடந்த 450 நாட்­க­ளுக்கும் மேலாக மோதல் நீடித்த நிலையில் கடந்த ஜன­வரி 19 ஆம் திகதி முதலே அங்கு போர் நிறுத்தம் அமுல்­ப­டுத்­தப்­பட்டு அமைதி திரும்­பி­யுள்­ளது. போர் நிறுத்த உடன்­பா­டு­க­ளின்­படி ஹமா­ஸினால் பிடிக்­கப்­பட்ட பணயக் கைதிகள் ஒவ்­வொ­ரு­வ­ராக விடு­விக்­கப்­பட்டு வரு­வ­துடன் இஸ்­ரே­லிய சிறை­க­ளி­லுள்ள பலஸ்­தீன கைதி­களும் விடு­விக்­கப்­பட்டு வரு­கின்­றனர். போரினால் இடம்­பெ­யர்ந்த காஸா மக்­களும் தற்­போது தமது இடங்­க­ளுக்கு மீளத்­தி­ரும்பி வரு­கின்­றனர். சர்­வ­தேச மனி­தா­பி­மான உத­வி­களும் அங்கு வந்­த­வண்­ண­முள்­ளன. நிலைமை இவ்­வா­றி­ருக்க ட்ரம்ப் மீண்டும் காஸாவைக் கைப்­பற்றப் போவ­தாக அறி­வித்­தி­ருப்­பது பிராந்­தி­யத்தில் தொடர்ந்தும் பதற்­றத்தை நீடிக்கச் செய்­வ­தற்­கான தந்­தி­ர­மே­யன்றி வேறில்லை.

ட்ரம்பின் இந்த அறி­விப்பை அமெ­ரிக்­காவின் பல்­வேறு அர­சியல் தரப்­பு­களும் மனித உரிமை அமைப்­பு­களும் கூட கண்­டித்­துள்­ளன. பிரித்­தா­னியா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா போன்ற நாடு­களும் இதனை எதிர்க்­கின்­றன. ஐக்­கிய நாடுகள் சபையும் இந்த யோச­னையை நிரா­க­ரித்­துள்­ளது. “ட்ரம்பின் காஸா திட்டம் சர்­வ­தேச குற்­றத்தின் கீழ் வரும். இது சட்­ட­வி­ரோ­த­மா­னது, ஒழுக்­கக்­கே­டா­னது மற்றும் முற்­றிலும் பொறுப்­பற்­றது. அத்தோடு, ட்ரம்ப் கூறியிருப்­பது முட்­டாள்­த­ன­மா­னது. கட்­டாய இடப்­பெ­யர்­வுக்கு தூண்­டு­வது ஒரு சர்­வ­தேச குற்றம். சர்­வ­தேச சமூகம் 193 நாடு­களால் ஆனது. அமெ­ரிக்­காவின் விருப்­பத்தை, புறக்­க­ணிக்க வேண்­டிய நேரம் இது.” என்று பலஸ்­தீனுக்கான ஐ.நா. சிறப்பு பிர­தி­நிதி பிரான்­செஸ்கா அல்­பானீஸ் தெரி­வித்­துள்ளார்.

சவூ­தியும் இதனை கண்­டித்­துள்­ளது. அமெ­ரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அறி­விப்­புக்கு பதில் அளித்­துள்ள சவூதி அரே­பிய வெளி­யு­றவு அமைச்­சகம், “பலஸ்­தீ­னர்­களை அவர்­களின் நிலத்­தி­லி­ருந்து வெளி­யேற்றும் எந்­த­வொரு முயற்­சி­யையும் நாங்கள் நிரா­க­ரிக்­கிறோம். பலஸ்­தீன அரசை நிறு­வாமல் இஸ்­ரே­லுடன் உற­வு­களை ஏற்­ப­டுத்­த­மாட்டோம். பலஸ்­தீன அரசு குறித்த சவூதி அரே­பி­யாவின் நிலைப்­பாடு உறு­தி­யா­னது மற்றும் அசைக்க முடி­யா­தது. பலஸ்­தீன மக்­களை இடம்­பெ­யர வைக்கும் முயற்­சிகள் மூலம், பலஸ்­தீன மக்­களின் சட்­ட­பூர்­வ­மான உரி­மைகள் மீறப்­ப­டு­மானால் அதனை சவூதி அரே­பியா சந்­தே­கத்­துக்கு இட­மின்றி நிரா­க­ரிக்­கி­றது. சவூதி அரே­பி­யாவின் இந்த நிலைப்­பாடு பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கோ, சம­ர­சங்­க­ளுக்கோ உட்­பட்­டது அல்ல” என்றும் தெரி­வித்­துள்­ளது. சவூதி மாத்­தி­ர­மன்றி எந்­த­வொரு மத்­திய கிழக்கு நாடு­களும் ட்ரம்பின் இந்த கேலிக்­கூத்­தான திட்­டத்­திற்கு துணை­போகப் போவ­தில்லை என்பது யதார்த்தமாகும்.

இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சும் விரைவில் இந்த நகர்வை எதிர்த்து அறிக்­கையை வெளி­யிடும் என எதிர்­பார்க்­கிறோம். பலஸ்­தீனின் நீண்ட கால நட்பு நாடான இலங்கை ஒரு­போதும் காஸா மக்­களை அங்­கி­ருந்து நிரந்­த­ர­மாக வெளி­யேற்­று­வதை ஆத­ரிக்க முடி­யாது. தற்­போது ஆட்­சி­யி­லுள்ள தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் பலஸ்தீன மக்களுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுப்பவர்கள் என்ற வகையில் இந்த விடயத்தில் காட்டமான ஒரு அறிக்கையை வெளியிடுவதுடன் ஏனைய நாடுகளுடன் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைச் சாத்தியமற்றதாக்குவதற்கான முயற்சிகளிலும் இறங்க வேண்டியது அவசியமாகும். இதற்கான அழுத்தங்களை இலங்கையிலுள்ள பலஸ்தீன ஆதரவு அமைப்புகள் அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.