நாட்டிற்குள் வரும் இஸ்ரேலியர்களால் தேசிய பாதுகாப்பு, நல்லிணக்கத்துக்கு பாதிப்பு

கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டுகிறது தேசிய ஷூரா சபை

0 7

இலங்­கையில் இஸ்­ரே­லிய பிர­ஜைகளின் பிரசன்னம் அதிகரித்திருப்பது தொடர்பில் ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்­க­வுக்­கு ­தே­சிய ஷூரா சபை கடி­த­மொன்றை அனுப்­பி­வைத்­துள்­ளது.

குறித்த கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, அண்மைக் கால­மாக நாட்­டிற்குள் வரும் இஸ்­ரே­லிய பிர­ஜைகள் குறித்தும் சமூக நல்­லி­ணக்கம், தேசிய நலன் மற்றும் தேசிய பாது­காப்பில் அந்த விவ­காரம் ஏற்­ப­டுத்த முடி­யு­மான தாக்­கங்கள் குறித்தும் எமது கவ­லை­களை தெரி­விக்க விரும்­பு­கி­றோம்.

கட்­டுப்­பா­டு­க­ளற்ற சுற்­றுலாத் துறை­யினால் கிடைக்கும் பொரு­ளா­தார நன்­மை­க­ளையும் வெளி­நாட்டுப் பிர­ஜைகள் இலங்­கைக்குள் வரு­வ­தற்­கான உரி­மை­யையும் நாங்கள் ஏற்றுக் கொள்­கிறோம். ஆனால், இஸ்­ரே­லிய இரா­ணு­வத்தில் பணி­யாற்­றிய மற்றும் பணி­யாற்­று­ப­வர்கள் சுற்­றுலாப் பய­ணி­க­ளாக இங்கு வரு­வது பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக ஒரு முக்­கிய பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துள்­ளது.

1. இஸ்­ரேலின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ரான சர்­வ­தே­சத்தின் கண்­டனம்:
தற்­போ­தைய மத்­திய கிழக்கு மோதல்­களில் இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­தினால் மேற­்கொள்­ளப்­பட்டு வரும் மனித உரிமை மீறல்கள் ஐக்­கிய நாடுகள் சபை உள்­ள­டங்­க­லான சர்­வ­தேச சமூ­கத்தின் பர­வ­லான கண்­ட­னத்­திற்கு உட்­பட்­டுள்­ளன. நிரா­யு­த­பா­ணி­க­ளான பலஸ்­தீன பொது­மக்­களை குறி­வைத்து மேற்­கொள்­ளப்­படும் இந்த மோதல்களும் அத்­து­மீறல்­களும் அம்­மக்­களை துன்­பத்­திற்கும் இடப்­பெ­யர்­வுக்கும் ஆளாக்­கி­யுள்­ள­துடன், சர்­வ­தேச ரீதி­யிலும் இலங்கை மக்­க­ளி­டமும் பலத்த அதிர்­வ­லை­களை அவை உரு­வாக்­கி­யுள்­ளன.

2. பலஸ்தீன் விவ­காரம் குறித்த இலங்­கையின் நிலைப்­பாடு: இஸ்­ரேல்-­ பலஸ்தீன் மோத­லுக்கு அமை­தி­யான தீர்­வி­னையும் இரு­நாட்டு தீர்வின் அடிப்­ப­டை­யி­லான சுயா­தீன பலஸ்­தீன தேசத்தை அமைப்­ப­தையும் இலங்கை தொடர்ந்து ஆத­ரித்து வரு­கி­றது. எனினும் இஸ்ரேல் பாரா­ளு­மன்றம் 2024 ஜூலை 18 ஆம் திகதி பலஸ்­தீன தேசம் உரு­வாக்­கப்­ப­டு­வதை மறுத்து ஒரு தீர்­மா­னத்தை நிறை­வேற்­றி­யது. இந்த உத்­தி­யோ­க­பூர்வ நிலைப்­பாடும் பலஸ்­தீ­னத்தை முற்­றாக அழித்­தொ­ழிக்கும் இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­தி­னரின் வரு­கையும் நாட்டு பிர­ஜைகள் மத்­தியில் பாரிய அதி­ருப்­தியை தோற்­று­விக்­கின்­றது.

3. குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும் பாது­காப்பு குறித்த கவ­லைகள்: கடந்த காலங்­களில் இஸ்ரேல் எமது அரச படை­க­ளுக்கு ஆயுதப் பயிற்­சி­களை வழங்­கிய வேளை, ஒரே நேரத்தில் விடு­தலைப் புலி­க­ளுக்கும் இரா­ணுவப் பயிற்­சி­களை வழங்­கி­யி­ருந்­ததை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். தற்­போது சில இஸ்­ரே­லிய பிர­ஜைகள் விஸா காலம் முடி­வ­டைந்த பின்­னரும் அத்­து­மீறி தங்­கி­யி­ருப்­ப­தா­கவும், நிலங்கள் மற்றும் சொத்­துக்­களை வாங்­கு­வ­தா­கவும், அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத வணிக நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தா­கவும், சட்­ட­வி­ரோத மத கட்­ட­மைப்­பு­களை நிர்­மா­ணிப்­ப­தா­கவும் செய்­திகள் வெளி­வந்­துள்­ளன. அதே­வேளை இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­தினர் மேற்­கொண்டு வரும் ‘மன அழுத்­தங்­களைப் போக்­கு­வ­தற்­கான’ சுற்­று­லாக்­களும் அவர்­களின் இரா­ணுவ சேவைக்கு ஊக்­க­ம­ளிப்­பதும் சமூ­கத்­திற்­குள்ளால் பல்­வேறு அதி­ருப்­தி­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

4.சமூக அமை­திக்கு பங்கம் ஏற்­படும் சாத்­தியம்: இந்த விவ­கா­ரத்தின் உணர்­வு­பூர்வ நிலையைப் பயன்­ப­டுத்தி தவ­றான நடத்­தை­களைக் கொண்டோர் சமூக அமை­திக்கு பங்கம் விளை­விக்­கவும் இலங்­கையின் பன்­மைத்­து­வத்­துக்கு சவால் விடும் வகையில் சமூக நல்­லி­ணக்­கத்­திற்கு தீங்­கி­ழைக்­கவும் முற்­ப­டலாம்.

5. மேலும், கடந்த கால அனு­ப­வங்­களின் அடிப்­ப­டையில் பிராந்­திய புவிசார் அர­சியல் சக்­திகள், வெளி­நாட்டு நலன்கள், இஸ்­லா­மிய வெறுப்பு மற்றும் சுய­நலம் மற்றும் அர­சியல் உள்­நோக்­கங்­களால் உந்­தப்­படும் சில உள்­நாட்டு சக்­திகள் இலங்கை விட­ய­மாக தேவை­யற்ற செல்­வாக்கை செலுத்­தலாம். கடந்த காலங்­களில் வங்­கு­ரோத்து நிலை­யி­லி­ருந்த நாட்டை மீட்க மேற்­கொள்­ளப்­படும் முயற்­சி­களை இவை சீர்­கு­லைக்கக் கூடும் என்­பதை நாங்கள் அறிவோம். கடந்த காலங்­களில் இன மோதல்கள் மற்றும் தவ­றான தகவல் பரப்­பு­ரை­களை மேற்­கொண்ட நபர்­களைப் பற்றி உங்­க­ளுக்கு நன்கு தெரியும் என்று நாங்கள் நம்­பு­கிறோம். இந்த முக்­கி­ய­மான சூழ்­நி­லையை வெளிச் சக்­திகள் தமது சொந்த நிகழ்ச்சி நிர­லுக்கு பயன்­ப­டுத்திக் கொள்­ளாமல் இருப்­பதை உறு­தி­செய்­வதன் மூலம், இந்த விஷ­யத்தில் நாம் மிகவும் விழிப்­புடன் இருப்போம் என்றும் நம்­பு­கிறோம்.

6. இவற்றின் அடிப்­ப­டையில் தேசிய ஷூரா சபை பின்­வரும் கோரிக்­கை­களை விடுக்க விரும்­பு­கி­றது:
(அ) குற்­றச்­சாட்­டு­களை விசா­ரித்தல்: இலங்­கைக்கு வந்த இஸ்­ரே­லி­யர்­க­ளுக்கு எதி­ராக ஏற்­க­னவே கூறப்­பட்ட சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக பொதுக் களத்தில் உள்ள பல குற்­றச்­சாட்­டுகள் முன்­னு­ரிமை அடிப்­ப­டையில் மற்றும் தேசிய நலன் கருதி விசா­ரிக்­கப்­பட வேண்டும்.
(ஆ) இஸ்­ரே­லிய வீரர்­க­ளுக்­கான விஸாவை நிரா­க­ரித்தல்: தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தவும் குடி­மக்­களின் சமூக நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்­பவும், உள­வுத்­துறை சேவைகள் மற்றும் இஸ்­ரேலின் ஆயு­தப்­ப­டை­களில் பணி­யாற்றும் அல்­லது பணி­யாற்­றிய நபர்­க­ளுக்கு விஸாவை இஸ்­ரே­லிய பலஸ்­தீனம் போர் முடியும் வரை நிரா­க­ரித்தல்.
(இ) விஸா விண்­ணப்­பங்­களின் ஆய்­வு­களை மேம்­ப­டுத்­துதல்: குடி­யேற்ற விதி­மு­றைகள் மற்றும் தேசிய பாது­காப்பு நலன்­க­ளுக்கு இணங்­கு­வதை உறுதி செய்­வ­தற்­காக இஸ்­ரே­லிய நாட்­டி­ன­ரி­ட­மி­ருந்து விஸா விண்­ணப்­பங்­க­ளுக்கு கடு­மை­யான சோதனை நடை­மு­றை­களை செயல்­ப­டுத்தல்.
(ஈ) சுற்­றுலா நட­வ­டிக்­கை­களைக் கண்­கா­ணித்தல்: அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத கட்­டு­மா­னங்கள் மற்றும் சமூக அமை­தி­யின்­மையைத் தூண்­டக்­கூ­டிய எந்­த­வொரு நடத்தை உட்­பட அனைத்து சட்­ட­வி­ரோதச் செயல்­க­ளையும் தடுக்க சுற்­றுலா நட­வ­டிக்­கை­களின் கண்­கா­ணிப்பை அதி­க­ரித்தல். இவற்­றுடன் இலங்கை தேசிய பாது­காப்­பையும் சமூக ஒற்­று­மை­யையும் பாது­காக்க வேண்­டிய முக்­கி­யத்­து­வமும் உள்­ளது.

7. சம­நி­லை­யான சர்­வ­தேச உற­வு­களைப் பேணுதல் மற்றும் சுற்­று­லாவை மேம்­ப­டுத்­துதல் ஆகி­ய­வற்றின் முக்­கி­யத்­து­வத்தை நாங்கள் அங்­கீ­க­ரிக்­கிறோம். எவ்­வா­றா­யினும், தேசிய பாது­காப்பு, சமூக நல்­லி­ணக்கம் ஆகி­ய­வற்­றைப் பாது­காப்­பதும் இலங்­கையின் விழு­மி­யங்­களை நிலை­நி­றுத்­து­வதும் அதேபோல் முக்­கி­ய­மா­ன­தாகும்.

8. நீங்கள் இந்த எமது கரி­ச­னை­களை உரிய முறையில் பரி­சீ­லித்து அவற்றை நிவர்த்தி செய்ய உரிய நட­வ­டிக்­கை­களை எடுப்­பீர்கள் என நம்­பு­கிறோம்.
இக்­கோ­ரிக்­கை­க­ளுக்­கான உங்­க­ளது பதிலை தேசிய ஷூரா கவுன்­சி­லுக்கு நீங்கள் தரும் பட்­சத்தில் அதன் 12 உறுப்பு அமைப்­பு­க­ளுக்கும் அதன் உறுப்­பி­னர்­க­ளுக்கும் அதனை எமக்கு எத்திவைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.