வெளிவிவகார அமைச்சரை சந்தித்தது உலமா சபை

0 6

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­வுக்கும் வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித ஹேரத்­துக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று கடந்த சனிக்­கி­ழமை வெளி­வி­வ­கார அமைச்சில் இடம்­பெற்­றுள்­ளது.

வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித ஹேரத், உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், உதவிப் பொதுச் செய­லா­ளர்­ அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், ஒத்­து­ழைப்­புக்கும் ஒருங்­கி­ணைப்­புக்­கு­மான குழுவின் செய­லாளர் அஷ்-ஷைக் எம். பாஸில் பாறூக், ஊடகக் குழுவின் செய­லாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், ஆகி­யோ­ருடன் செய­லக நிர்­வாகி அஷ்-ஷைக் டி. நுஃமான் உள்­ளிட்டோர் இதன்­போது கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.
இதன்­போது ஜம்­இய்­யாவின் பொதுச் செய­லாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் சபையின் செயற்­பா­டுகள் குறித்த அறி­முகத்தை வழங்­கியதுடன், அனைத்து இலங்­கை­யர்­களும் ஒற்­று­மை­யு­டனும் நல்­லி­ணக்­கத்­து­டனும் வாழ்­வ­தற்­கான வழி­காட்­டு­தல்­களை ஜம்­இய்யா எப்­போதும் வழங்கி வரு­வது குறித்தும் தெளி­வு­ப­டுத்­தினார்.

மேலும், இலங்கை முஸ்­லிம்­களின் சமய, பண்­பாட்டு மற்றும் மனித உரி­மைகள் தொடர்­பிலும், ஜம்­இய்யா இது­வரை தேசிய அளவில் மேற்­கொண்ட செயல்­பா­டுகள் தொடர்­பிலும் விரி­வான கலந்­து­ரை­யாடல் நடை­பெற்­றது.
இத­னை­ய­டுத்து வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித ஹேரத், தனது அதி­கா­ரத்தின் கீழ் இன, மத வேறு­பா­டு­களை கடந்து முக்­கிய சில விட­யங்­களை மேற்­கொள்­வ­தற்கு சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளிடம் கலந்­து­ரை­யாடி நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வுள்­ள­தாக உறு­தி­ய­ளித்தார்.

சந்­திப்பின் இறு­தியில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் மேலும் சில வெளியீடுகளும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.