நான் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றேன்

தேசிய மட்டத்தில் மூன்றாமிடம் பெற்ற ஹக்கீம் கரீம்

0 1,254

உயிரியல் விஞ்ஞானத்தில் அகில இலங்கை மட்­டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்­ட­மைக்கு  நான் அல்­லாஹ்­வுக்கு நன்றி செலுத்­து­கின்றேன். நான் ஆங்­கில மொழி  மூலத்தில் முதலாம் இடத்­தையும் மாவட்ட மட்­டத்தில் முதலாம் இடத்­தையும் பெற்­றுள்ளேன்.  இது என்­னு­டைய தனி முயற்­சி­யல்ல. என்­னு­டைய பாட­சாலை அதிபர், ஆசி­ரி­யர்கள், பெற்­றோர்கள் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றார்கள். எதிர்­கா­லத்தில் வைத்­தி­யத்­து­றையில் எமது சமூ­கத்­துக்கு சேலை­யாற்­றுவேன் என்­ப­துடன் இதில்  பல சாத­னை­க­ளையும் படைக்­க­வுள்ளேன் என்று எம். ஆர். எம். ஹக்கீம் கரீம் தெரி­வித்தார்.

க.பொ.த.  உயர்­தரப் பிரிவில் உயி­ரியல் துறையில் அகில இலங்கை மட்­டத்தில் மூன்றாம் இடத்தை மாணவன்  எம். ஆர். எம். ஹக்கீம் கரீம் பெற்­றுக்­கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவரது தந்தை வீதி அபி­வி­ருத்தி திட்­டத்தின் பொறி­யி­ய­லாளர்  எம். சீ. எம். ரிஸ்மி கருத்துத் தெரி­விக்­கையில்,

நாங்கள் அவ­ரு­டைய படிப்­புக்குத் துணை­யாக இருந்­தாலும் பாட­சாலை அதிபர், ஆசி­ரியர் குழாத்­தி­ன­ரு­டைய பங்­க­ளிப்பு அளப்­ப­ரி­யது. இந்த சந்­தர்ப்­பத்தில் அவர்­க­ளுக்கும் அல்­லாஹ்­வுக்கும் நன்­றியைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன் என்று அவர் தெரி­வித்தார்.

மாத்­தளை ஸாஹிரா அதிபர்  டி. அப்துல் கலாம் கருத்துத் தெரி­விக்­கையில்,

இன்று மாத்­தளை ஸாஹி­ரா­வுக்கு வர­லாற்று சிறப்­பு­மிக்க ஒரு  நாளாகும். அகில இலங்­கையில் மூன்றாம் இடத்­தையும் மாத்­தளை மாவட்­டத்தில் முதலாம் இடத்­தையும் பெற்­றுள்ளார். இது எமது பாட­சா­லைக்கு மட்­டு­மல்ல, மாத்­தளை மாவட்­டத்தில் அனைத்துப் பாட­சா­லை­க­ளுக்கும் பெருமை தரும் விட­ய­மாகும்.  ஏனென்றால் இதற்­குமுன் மாத்­தளை மாவட்­டத்தில் இந்த பெறு­பேறை எந்தப் பாட­சா­லையும் பெற­மு­டி­ய­வில்லை. அந்த வகையில் எமது பாட­சாலை சமூகம் மிகவும் சந்­தோ­சத்­துடன் உள்­ளது.

அவ­ரு­டைய பெறு­பேற்றின் பின்­ன­ணியில் பலர் உந்து சக்­தி­யாக இருந்­துள்­ளனர். விசே­ட­மாக இந்தப் பாட­சா­லையில் கல்வி கற்­பிக்­கின்ற ஆசி­ரி­யர்கள் இம்­மா­ண­வனின் வெற்­றிக்கு பெரிதும் உடந்­தை­யாக இருந்­துள்­ளார்கள். இந்த மாண­வ­னு­டைய பெற்­றோர்கள் இந்த மாண­வனின் வெற்­றிக்கும் நல்­லொ­ழுக்­கத்­திற்கும் துணை­யாக இருந்து அய­ராது பாடு­பட்­டி­ருக்­கின்­றார்கள். இந்த மாணவர் கற்­ற­லோடு மட்­டு­மல்ல நல்ல ஒழுக்­க­சீல குண­மு­டைய மாண­வ­ரா­கவும் இருந்­தி­ருக்­கின்றார். அது மட்­டு­மல்­லாமல் இலங்­கை­யி­லுள்ள அனைத்துப் பாட­சா­லை­களின் பரீட்சை வினாத் தாள்­க­ளையும் செய்து கடு­மை­யான பயிற்­சியைப் பெற்றார். இதற்கு ஆசி­ரி­யர்கள், பெற்­றோர்கள், குறித்த மாண­வ­னு­டைய அய­ராத உழைப்­புதான் இந்த உயர்­தர அரிய பெறு­பேற்றைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான காரண மாகும்.

இவர் மாத்தளை நகரில் வசிக்கின்ற பொறியியலாளர்  சீ.எம். ரிஸ்மி மற்றும் வைத்திய அதிகாரி நிஹாரா ரிஸ்மி தம்பதியின் மூத்த புதலவனுமாவார். எம். ஆர். ருஸ்தா எம். ஆர். எம். ஆதில் ஆகியோருடைய சகோதரருமாவார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.