சவூதி அன்பளிப்பாக வழங்கிய பேரீத்தம் பழத்துக்கு அதிக வரி செலுத்தியது ஏன்?

பணத்தை மீளப்பெற நடவடிக்கை எடுக்குமாறு அர்கம் எம்.பி. கோரிக்கை

0 222

(றிப்தி அலி)
புனித ரமழான் மாதத்தில் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிப்­ப­தற்­காக சவூதி அரே­பி­யா­வினால் அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்ட 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழத்­திற்கு செலுத்த வேண்­டிய வரித் தொகை­யினை விட அதிக வரிப்­பணம் செலுத்­தப்­பட்­டுள்­ளமை தொடர்பில் கவனம் செலுத்­து­மாறும் மேல­தி­க­மாக செலுத்­தப்­பட்­டுள்ள கட்­ட­ணத்­தினை மீளப் பெறு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக முன்­னெ­டுக்­கு­மாறும் ஆளும் கட்­சியின் முஸ்லிம் எம்.பி.க்கள் சார்பில் மாத்­தறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான அர்கம் இல்யாஸ், புத்­த­சா­சன, சமய விவ­கார மற்றும் கலா­சார அமைச்சர் ஹினி­தும சுனில் சென­வி­யிடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

“ரம­ழா­னுக்­காக அன்­ப­ளிப்புச் செய்­யப்­படும் பேரீச்சம் பழங்­களை விடு­வித்தல், வரி செலுத்தல் மற்றும் விநி­யோ­கித்தல் ஆகி­ய­வற்­றினை ஒழுங்­கு­ப­டுத்தல்” எனும் தலைப்பில் நேற்று (15) புதன்­கி­ழமை புத்­த­சா­சன, சமய விவ­கார மற்றும் கலா­சார அமைச்சர் ஹினி­தும சுனில் சென­வி­யிற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான அர்கம் இல்யாஸ் கடிதம் அனுப்­பி­யுள்ளார். அக் கடி­தத்தில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது

நோன்பு காலத்­திற்­கான பேரீச்சம் பழங்­களை இறக்­கு­மதி செய்தல் மற்றும் விநி­யோ­கித்தல் ஆகி­ய­வற்­றுக்­காக 2025ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க குறை­நி­ரப்பு மதிப்­பீட்டின் ஊடாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு 4 கோடி 63 இலட்­சத்து 75 ஆயி­ரத்து 800 ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இதில் சவூதி அரே­பி­யா­வினால் அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­பட்ட 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்­க­ளுக்­கான வரி­ மற்றும் தாமதக் கட்டணமாக 3 கோடி 28 இலட்­சத்து 61 ஆயி­ரத்து 109 ரூபா முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் சுங்கத் திணைக்­க­ளத்­திற்கு செலுத்­தப்­பட்­டுள்­ளது.

இலங்­கை­யி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்கு ரமழான் மாதத்­திற்­கென 500 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழம் தேவைப்­ப­டு­கி­றது. இதில் 10 வீத­மான தொகை­யான 50 மெட்ரிக் தொன்னைப் பெற்றுக் கொள்­ளவே 3 கோடி 28 இலட்­சத்து 61 ஆயி­ரத்து 109 ரூபா செல­வி­டப்­பட்­டுள்­ளதை உங்கள் கவ­னத்­திற்குக் கொண்டு வரு­கிறேன். இதற்­க­மைய சவூதி அரே­பி­யா­வினால் அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­பட்ட 50 மெட்ரிக் தொன்னை விடு­விப்­ப­தற்கு ஒரு கிலோ பேரீச்சம் பழத்­திற்கு 657 ரூபாவும் 22 சதமும் செல­வி­டப்­பட்­டுள்­ளது. இதில் இவற்றை ஏற்றி இறக்கும் செல­வுகள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை.

மேலும் பேரீச்சம் பழத்­திற்­கான 08041020 எனும் எச்.எஸ். குறி­யீட்­டுக்கு பதி­லாக உலர்ந்த விவ­சாயப் பொருட்­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­படும் 08042020 எனும் எச்.எஸ்.குறி­யீட்­டினை பயன்­ப­டுத்­தி­ய­மை­யி­னா­லேயே மேல­திக கட்­டணம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே, வெளி­நாட்டு அர­சாங்­கங்கள், நிறு­வ­னங்கள், வணிக நிறு­வ­னங்கள், தொண்டர் அமைப்­புகள் மற்றும் நலன் விரும்­பி­க­ளி­ட­மி­ருந்து எந்­த­வித அந்­நியச் செலா­வ­ணியும் தொடர்­பு­ப­டாமல் பரி­சாக அல்­லது நன்­கொ­டை­யாக அனுப்­பப்­படும் பேரீச்சம் பழங்­க­ளுக்கு 199 ரூபா வரிச் சலுகை வழங்­கு­வ­தற்­கான அனு­ம­தி­யினை கடந்த டிசம்பர் 31ஆம் திகதி அமைச்­ச­ரவை வழங்­கி­யுள்ள போதிலும் இவ்­வாறு அதிக தொகைப் பணம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக ஊட­கங்­களும் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

அதே­வேளை, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் நன்­கொ­டை­யாக கிடைக்கப் பெறும் பேரீச்சம் பழங்­களை விடு­விப்­ப­தற்கும் விநி­யோ­கிப்­ப­தற்கும் தேவை­யான Standard Operating Procedures (SOP) இல்லை என்ற விடயம் ஆரம்ப கட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக குறித்த கடி­தத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அர்கம் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
மேலும், மாவட்ட ரீதி­யாக உள்ள பள்­ளி­வா­சல்­களில் பதி­வு­செய்­யப்­பட்­டுள்ள குடும்­பங்­களின் புதுப்­பிக்­கப்­பட்ட தர­வு­களும் திணைக்­க­ளத்­திடம் இல்லை எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் பின்­வரும் பரிந்­து­ரை­க­ளையும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அர்க்கம் தனது கடி­தத்தில் உள்­ள­டக்­கி­யுள்ளார்.
1. இந்த விவ­காரம் தொடர்பில் தெளி­வு­ப­டுத்தி வெளி­வி­வ­கார அமைச்­ச­ரினால் ஊடக அறிக்கை ஒன்று வெளி­யி­டப்­பட வேண்டும். இந்த விட­யத்­தினால் ஏதேனும் அசெ­ள­க­ரி­யங்கள் ஏற்­பட்­டி­ருப்பின் அதற்­காக சவூதி அரே­பிய தூது­வ­ரிடம் மன்­னிப்புக் கோர வேண்டும்
2. எச்.எஸ். குறி­யீட்­டினை தவ­றாகப் பிர­யோ­கித்­ததன் மூலம் மேல­தி­க­மாக செலுத்­தப்­பட்­டுள்ள கட்­ட­ணத்தை மீளப் பெற வேண்டும்
3. அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­படும் பேரீச்சம் பழங்­களை உரிய காலத்தில் விநி­யோ­கிக்கும் பொருட்டு துறை­மு­கத்­தி­லி­ருந்து உட­ன­டி­யாக விடு­விப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.
4. இல­வ­ச­மாக பகிர்ந்­த­ளிக்­கப்­படும் நோக்கில் இறக்­கு­மதி செய்­யப்­படும் பேரீத்தம் பழங்­க­ளுக்கு வரி விலக்கு அல்­லது குறைந்த வரி விதிக்­கப்­பட வேண்டும்
5. செலவு குறைந்­ததும் வினைத்­தி­ற­னா­ன­து­மான விநி­யோ­கத்­திற்­காக உள்ளூர் தொண்டு நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து செயற்­பட வேண்டும்.
6. பேரீச்சம் பழ விநி­யோ­கத்­தின்­போது தேவை­யு­டைய குடும்­பங்­க­ளுக்கு முன்­னு­ரி­மை­ய­ளிக்­கப்­பட வேண்டும். இதற்­காக அஸ்­வெ­சும பய­னா­ளிகள் பட்­டி­ய­லையும் பயன்­ப­டுத்த முடியும்.
7. அன்­ப­ளிப்­பாக கிடைக்கப் பெறும் பேரீத்தம் பழங்­களை அர­சி­யல்­வா­திகள், அரச அதி­கா­ரிகள், செல்­வாக்­கு­மிக்க நபர்­க­ளுக்கு வழங்கும் நடை­மு­றைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்
8. புனித ரமழான் மாத பாவ­னைக்­காக 01.02.2025 முதல் இரண்டு மாதங்­க­ளுக்கு இறக்­கு­மதி செய்யப்படும் பேரீத்தம் பழங்களுக்கான வரியை 10 வீதம் வரையோ அல்லது ஒரு கிலோவுக்கான விலையை 30 ரூபாவினாலோ குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனும் விடயங்களும் இக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர் அர்க்கம் அனுப்பி வைத்துள்ள இந்த கடிதத்தின் பிரதிகள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், ஆளும் கட்சியிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த விவகாரம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் முஸ்லிம் எம்.பி.க்கள் அனைவரும் ஒன்றிணைந்து அமைச்சருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.