சவூதியினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 50 தொன் பேரீச்சம் பழத்துக்கு வரி திணைக்கள நிதியால் செலுத்தப்பட்டது

0 15

(றிப்தி அலி)
புனித ரமழான் மாதத்தில் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிப்­ப­தற்­காக சவூதி அரே­பி­யா­வினால் அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்ட 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்­க­ளுக்கு சுங்கத் திணைக்­க­ளத்­தினால் 33 மில்­லியன் ரூபா வரி விதிக்­கப்­பட்­டுள்­ளது.

திறை­சே­ரி­யினால் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு ஒதுக்­கப்­பட்ட நிதி­யி­லி­ருந்து குறித்த வரி செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­யொ­ருவர் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், கடந்த டிசம்பர் மாதம் கொழும்புத் துறை­மு­கத்­தினை வந்­த­டைந்த இந்த பேரீச்சம் பழங்­க­ளுக்­கான வரி தற்­போது செலுத்­தப்­பட்­டுள்­ள­மை­யினால் இன்னும் ஓரிரு தினங்­களில் இவை திணைக்­க­ளத்­தினை வந்­த­டையும். நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள பள்­ளி­வா­சல்­களின் ஊடாக இந்த பேரீச்சம் பழங்­களை முஸ்லிம் மக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஒரு கிலோ பேரீச்­சம்­பழ இறக்­கு­ம­திக்கு 60 ரூபா வரி முன்னர் விதிக்­கப்­பட்­டது. எனினும், நாட்டில் ஏற்­பட்ட பொரு­ளா­தார நெருக்­க­டி­யினை அடுத்து இந்த வரி 200 ரூபா­வாக அதி­க­ரிக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில், வெளி­நாட்டு அர­சாங்­கங்கள், நிறு­வ­னங்கள், வணிக நிறு­வ­னங்கள், தொண்டர் அமைப்­புகள் மற்றும் நலன்வி­ரும்­பி­க­ளி­ட­மி­ருந்து எந்­த­வித அந்­நியச் செலா­வ­ணியும் தொடர்­பு­ப­டாமல் பரி­சாக அல்­லது நன்­கொ­டை­யாக அனுப்­பப்­படும் பேரீச்சம் பழங்­க­ளுக்கு வரிச் சலுகை வழங்­கப்­ப­டு­வது வழ­மை­யாகும்.

இதற்­க­மைய, கடந்த 2022, 2023 மற்றும் 2024ஆம் ஆண்­டு­களில் 199 ரூபா வரிச் சலுகை நிதி அமைச்­சினால் தொடர்ச்­சி­யாக வழங்­கப்­பட்டு வந்­தது. எனினும், இந்த வருடம் குறித்த வரிச் சலுகை வழங்­கப்­ப­ட­வில்லை.

இதன் கார­ண­மா­கவே சவூதி அரே­பி­யா­வினால் அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்ட பேரீச்சம் பழங்­களை விடு­விப்­ப­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் பாரிய தொகை பணம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.
இவ்­வா­றான நிலையில் எதிர்­வரும் புனித ரமழான் மாதத்தில் வெளி­நாட்டு அர­சாங்­கங்கள், நிறு­வ­னங்கள், வணிக நிறு­வ­னங்கள், தொண்டர் அமைப்­புகள் மற்றும் நலன்வி­ரும்­பி­க­ளி­ட­மி­ருந்து எந்தவித அந்நியச் செலாவணியும் தொடர்புபடாமல் பரிசாக அல்லது நன்கொடையாக அனுப்பப்படும் பேரீச்சம் பழங்களுக்கும் இது போன்று பாரிய தொகை வரி செலுத்த வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.