பங்களாதேஷ் தேர்தல் கலவரத்தில் ஒருவர் பலி; 10 பேர் காயம்

0 628

பங்­க­ளாதேஷ் பொதுத்­தேர்­த­லுக்­கான வாக்குப் பதிவு நேற்று காலை ஆரம்­ப­மாகி நடை­பெற்று வரு­கி­றது. இதில் பிர­தமர் ஷேக் ஹசி­னாவின் அவாமி லீக் மற்றும் பங்­க­ளாதேஷ் தேசி­ய­வாத கட்­சி­க­ளுக்கு இடையே கடும் போட்டி நில­வு­கி­றது.

இந்­நி­லையில் ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் பங்­க­ளாதேஷ் தேசி­ய­வாத கட்சி (பி.என்.பி.) ஆத­ர­வா­ளர்­க­ளி­டையே திடீ­ரென மோதல் ஏற்­பட்­டது. இதன்­போது ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன், 10 பேர் காய­ம­டைந்­துள்­ள­தாக அந்­நாட்டு ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

மொத்­த­முள்ள 300 தொகு­தி­களில் 299 தொகு­தி­களில் நடை­பெறும் தேர்­தலில் 1,848 வேட்­பா­ளர்கள் போட்­டி­யி­டு­கின்­றனர்.

10.41 கோடி பேர் வாக்­க­ளிக்க தகுதி பெற்­றுள்­ள­துடன், 40,183 மையங்­களில் வாக்­குப்­ப­திவு நடை­பெற்று வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. கல­வ­ரங்கள் தீவி­ர­மாக நடை­பெறும் பகு­தி­களில் இரா­ணு­வத்­தினர் தீவிர பாது­காப்பு பணியில் ஈடு­ப­டுத்தப் பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

இதற்­கி­டையே, பங்­க­ளாதேஷ் பிர­தமர் ஷேக் ஹசினா, பாகிஸ்­தானின் ஐ.எஸ்.ஐ., பங்­க­ளாதேஷ் தேசிய கட்சி (பி.என்.பி.) தலை­வர்­களின் உத­வி­யுடன் பொதுத் தேர்­தலை சீர்­கு­லைக்க முயற்­சிப்­ப­தாக குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

பங்­க­ளா­தேஷில் பொதுத்­தேர்தல் நடை­பெ­று­கின்ற  இந்­நி­லையில், அந்­நாட்டின் பல்­வேறு பகு­தி­களில் இரா­ணு­வத்­தினர் தீவிர பாது­காப்பு பணியில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இது­தொ­டர்­பாக ராணுவ அதி­கா­ரிகள் கூறு­கையில், “பங்­க­ளா­தேஷில் சட்டம் ஒழுங்கை பாது­காக்கும் வகையில் பொதுத்­தேர்­தலை அமை­தி­யாக நடத்தி முடிக்க தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கிறோம். நாட்டின் பல்­வேறு பகு­தி­களில் தீவி­ர­மாக பாது­காப்பு பணி­களை மேற்­கொண்டு வரு­கிறோம்“ என தெரி­வித்­தனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத்தேர்தலை பங்களாதேஷ் தேசிய கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததால், ஆளும் அவாமி லீக் கட்சி 150 இற்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.