ஆப்கானிஸ்தான் தொடர்பான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவில்

0 692

ஆப்­கா­னிஸ்தான் தொடர்­பான அடுத்த சுற்றுப் பேச்­சு­வார்த்தை சவூதி அரே­பி­யாவில் எதிர்­வரும் ஜன­வரி மாதம் இடம்­பெறும் சாத்­தி­ய­முள்­ளது.

கடந்த வியா­ழக்­கி­ழமை சவூதி அரே­பிய மன்னர் சல்மான், ஆப்­கா­னிஸ்தான் ஜனா­தி­பதி அஷ்ரப் கானி ஆகி­யோ­ருக்­கி­டை­யே­யான தொலை­பேசி உரை­யா­டலைத் தொடர்ந்து சவூதி அரே­பி­யாவின் வகி­பாகம் தொடர்பில் கடந்த சனிக்­கி­ழமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

ஆப்­கா­னிஸ்­தானில் சமா­தா­னமும் ஸ்திரத்­தன்­மையும் ஏற்­ப­டு­வது தொடர்பில் சவூதி அரே­பி­யாவின் முன்­னணி வகி­பா­கத்­தினை கானி பாராட்­டி­ய­தோடு, அடுத்த கூட்டம் சவூ­தியில் நடை­பெ­று­வது நல்­ல­தொரு நட­வ­டிக்­கை­யாகும். இதைத் தொடர்ந்­து­வரும் முன்­னெ­டுப்­பு­க­ளுக்­கான சிறந்த ஆரம்­ப­மு­மாகும் எனவும் தெரி­வித்தார்.

ஆப்­கா­னிஸ்தான் தலை­மை­யி­லா­னதும், ஆப்­கா­னிஸ்­தா­னுக்கே உ­ரி­ய­து­மான சமா­தான முன்­னெ­டுப்­புக்­க­ளுக்கு சவூ­தியின் ஆத­ர­வுக்கு அவர் நன்றி தெரி­வித்தார். ஆப்­கா­னிஸ்­தானில் சமா­தா­னமும் ஸ்திரத்­தன்­மையும் ஏற்­ப­டு­வ­தற்கு தனது அதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்­து­வ­தா­கவும் மன்னர் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

கடந்த கோடை காலத்தில் ஆப்­கா­னிஸ்தான் யுத்தம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு உல­க­ளா­விய இஸ்­லா­மிய அறி­ஞர்கள் மாநாட்­டிற்­கான ஏற்­பா­டு­களை சவூதி அரே­பியா செய்­தி­ருந்­தது.

சபை அங்­கத்­த­வர்­களும் அர­சாங்கத் தூதுக்­கு­ழு­வி­னரும் எதிர்­வரும் ஜன­வரி மாதம் இடம்­பெ­ற­வுள்ள பேச்­சு­வார்த்­தையில் கலந்­து­கொள்­வார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக ஆப்­கா­னிஸ்தான் அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்ட உயர்­மட்ட சமா­தான சபையின் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்தார்.

கூட்டம் நடை­பெறும் இடம் மற்றும் திகதி தொடர்பில் குழுவின் தலை­வர்­க­ளி­டையே கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்று வரு­வ­தாக தலிபான் பேச்­சாளர் ஸபீ­ஹுல்லாஹ் முஜாஹிட் தெரி­வித்தார்.

இரு வாரங்­க­ளுக்கு முன்னர் அமெ­ரிக்கா, சவூதி, பாகிஸ்தான் மற்றும் அமீ­ரக அதி­கா­ரிகள் ஆப்கான் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்­கான வழி­வ­கைகள் பற்றி கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக அபு­தா­பியில் நடை­பெற்ற கூட்­டத்தில் கலந்து கொண்­டனர்.

மேற்­படி கூட்­டத்தில் ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து அமெ­ரிக்க படை­யினர் வெளி­யே­றினால் மாத்­திரம் ஆப்­கா­னிஸ்தான் அர­சாங்­கத்­துடன் நேரடிப் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட முடி­யு­மென  தலிபான் அமைப்பு தெரி­வித்­தி­ருந்­தது.

அதனைத் தொடர்ந்து ஆப்­கா­னிஸ்­தா­னி­லுள்ள 14,000 அமெ­ரிக்கப் படை­யி­னரை அரை­வா­சி­யாகக் குறைத்து 7,000 ஆக மாற்­ற­வுள்­ள­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால் ட்ரம்ப் அறி­வித்து ஆத­ரவு நாடு­க­ளுக்கு ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தினார்.

அமெ­ரிக்கப் படை­யி­னரை மீண்டும் தாய­கத்­திற்கு வரவழைக்க வேண்டும் என ட்ரம்ப் பிரசாரம் செய்துவரும்  அமெரிக்காவின் நீண்டகால யுத்தமாக 17 ஆண்டுகால ஆப்கானிஸ்தான் யுத்தம் காணப்படுகின்றது. இது தவிர 2017 ஆம் ஆண்டு சமாதான முன்னெடுப்புக்களை துரிதப்படுத்துவதற்காக மேலும் நான்காயிரம் படையினரை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.