ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்றும் முயற்சியை அரசாங்கம் நிறுத்த வேண்டும்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சபையில் கோரிக்கை

0 11

(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்)
மியன்­மாரில் இருந்து அக­தி­க­ளாக வந்­தி­ருக்கும் ரோஹிங்­கியா பிர­ஜை­களை மீள திருப்பி அனுப்­பு­வது சர்­வ­தேச மனித உரிமை சட்­டத்தை மீறும் விட­ய­மாகும். அதனால் அவர்­களை வெளி­யேற்றும் முயற்­சியை உட­ன­டி­யாக அர­சாங்கம் நிறுத்­த­வேண்டும் என எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்­று­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற வருட ஆரம்ப நிதி­நிலை தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
மியன்­மாரில் இருந்து ரோஹிங்­கியா பிர­ஜைகள் சிலர் அக­தி­க­ளாக கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் முல்­லைத்­தீவு பிர­தே­சத்­துக்கு வந்­தி­ருக்­கின்­றனர். அவர்­களை உட­ன­டி­யாக வெளி­யேற்றும் கொள்­கையை மேற்­கொள்ள அர­சாங்கம் முயற்­சித்து வரு­வ­தாக எமக்கு அறி­யக்­கி­டைக்­கி­றது. அவ்­வா­றான மனி­த­நே­ய­மற்ற செயற்­பட்­டுக்கு செல்­ல­வேண்டாம் என அர­சாங்­கத்தை கேட்­டுக்­கொள்­கிறேன்.

அக­தி­க­ளாக வந்­தி­ருக்கும் ரோஹிங்­கியா பிர­ஜை­களை மீள திருப்பி அனுப்­பு­வது மனித உரி­மையை மீறும் செய­லாகும். சர்­வ­தேச மனித உரிமை சட்­டத்தை மீறும் விட­ய­மாகும். விசே­ட­மாக முழு உல­கமும் ஏற்­றுக்­கொண்­டுள்ள விட­யம்தான், ரோஹிங்­கிய பிர­ஜைகள் வேறு­பட்ட துன்­பு­றுத்­தல்கள் பாதிப்­புக்­க­ளுக்கு ஆளா­கிய பிரி­வினர். அவர்­களை பல­வந்­த­மாக எங்­க­ளுக்கு வெளி­யேற்ற முடி­யாது.

1951 அக­திகள் ஒப்­பந்தம் இருக்­கி­றது. சர்­வ­தேச மனித உரிமை வரை­புக்குள் இருந்து நாங்கள் செயற்­பட வேண்டி இருக்­கி­றது. அதனால் அவர்­களை வெளி­யேற்றும் முயற்­சியை உட­ன­டி­யாக அர­சாங்கம் நிறுத்­த­வேண்டும். ஐக்­கிய நாடுகள் அக­திகள் அமைப்பு மற்றும் ஏனைய நிறு­வ­னங்­க­ளுடன் கலந்துரையாடி, பாதிக்கப்பட்டிருக்கும் ரோஹிங்கியா பிரஜைகளுக்கு வழங்கவேண்டிய மனிதாபிமான நடவடிக்கைகளை பெற்றுக்கொடுக்க நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.