அடிமையாதலின் அறிகுறிகள்

0 7

தகவல் தேடு­வ­த­லுக்கு அடி­மை­யாதல்
தோண்டத் தோண்ட மேற்­கி­ழம்பும் ஊற்­றுப்­போல புதுப் புதுத் தக­வல்கள் இணை­யத்தில் வெளி­வ­ரு­கின்­றன. இந்தத் தகவல் வெள்­ளத்தை யாரும் தடுக்க முடி­யாது. இதில் சிலர் சுய கட்­டுப்­பாட்டை மீறி தகவல் திரட்­டு­வதில் ஈடு­ப­டு­கின்­றனர். எவ்­வ­ள­வுதான் தக­வல்­களைத் திரட்­டி­னாலும் அவர்­க­ளுக்கு அதில் திருப்தி ஏற்­ப­டு­வ­தே­யில்லை. இதனால், எப்­போதும் தக­வல்­களை தேடிக் கொண்­டி­ருக்­கின்­றனர். திரட்டிக் கொண்­டி­ருக்­கின்றனர். தக­வல்கள் தேவை­யோ தேவை­யில்­லையோ – அவர்கள் எப்­போதும் தக­வல்­களைத் திரட்டிக் கொண்டே இருப்­பார்கள். இதனால், அவர்­க­ளு­டைய ஆக்­கத்­திறன் பாதிப்­ப­டை­கி­றது. இதனால் கல்வி, தொழில், மற்றும் சமூக கட­மைகள் பாதிக்­கப்­ப­டலாம். இது உச்ச நிலைக்கு செல்­கின்­ற­போது பெரு­வி­ருப்ப கட்­டாய மனப்­பி­றழ்வு (Ob­s­e­s­si­v­e–­C­o­mp­u­l­si­ve Dis­o­r­d­er — OCD) அல்­லது எண்ண சுழற்சி நோய் ஏற்­ப­டு­கின்­றது. அத்­தோடு, அவர் திரட்டிக் கொண்­டி­ருக்கும் தக­வல்­களைப் பற்றி மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்­டி­ருப்பார். மிகை எண்­ணங்கள் அவரை ஆட்­கொண்டு விடும். இத­னையே தகவல் திரட்­டு­த­லுக்கு அடி­மை­யாதல் என்­கின்றோம்.

இன்­றைய இணைய உலகம் ஒருவர் தகவல் திரட்­ட­லுக்கு அடி­மை­யா­வ­தற்­கான அதிக வாய்ப்­பினை ஏற்­ப­டுத்தி விடு­கி­றது. விரல் நுனியில் தக­வல்கள் கிடைக்­கின்­றன. சில வினா­டி­களில் எந்த ஒரு தக­வ­லையும் திரட்டிக் கொள்ள முடியும். தக­வல்­களை திரட்டிக் கொள்­வ­தற்கு அதிகம் செல­வ­ழிக்க வேண்­டி­யதும் இல்லை. இவ்­வாறு, ஒரு குழந்தை அல்­லது இளைஞர் தன்­னு­டைய சுய கட்­டுப்­பாட்டை இழந்து டிஜிட்டல் கரு­வி­களை பயன்­ப­டுத்தி எப்­போதும் தக­வல்­களை தேடிக் கொண்­டி­ருப்­பதும் ஒரு­வகை அடி­மை­யா­த­லாகும்.

கணினி விளை­யாட்­டுக்கு அடி­மை­யாதல்
இது நிகழ்­நி­லையில் அல்­லது நிகழ் நிலைக்கு வெளியில் கணி­னியை பயன்­ப­டுத்தி பல்­வேறு விளை­யாட்­டு­களில் ஈடு­பட்டு சுய கட்­டுப்­பாட்டை மீறி, நேரத்தை வீண­டிப்­பதைக் குறிக்கும். இப்­போது கணினி மாத்­தி­ர­மன்றி கைபே­சி­யிலும் பல இணைய வழி விளை­யாட்­டுக்கள் கிடைக்­கின்­றன. கைய­டக்கத் தொலை­பே­சி­களும் கணி­னி­களும் பெரும்­பாலும் சகல இடங்­க­ளிலும் கிடைப்­பதால் சிறு­வர்கள் மற்றும் இளை­ஞர்கள் அவற்றைப் பயன்­ப­டுத்தி ஆயி­ரக்­க­ணக்­கான விளை­யாட்­டு­களில் ஈடு­ப­டு­கின்­றனர். So­l­it­a­ir­e, Te­t­r­is, மற்றும் Mines­w­e­ep­er போன்ற விளை­யாட்­டுக்கள் டிஜிட்டல் கரு­வி­க­ளி­லேயே உள்­ள­டக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன. அவற்றை இல­குவில் விளை­யாட முடியும். கணினி விளை­யாட்­டு­களின் மூலம் புள்­ளிகள் கிடைப்­ப­தாலும் போட்டித் தன்மை ஏற்­ப­டு­வ­தாலும் திகில் தன்மை நிறைந்­தி­ருப்­ப­தாலும், இதனை சகல வயதுத் தரப்­பி­னரும் மெய்­ம­றந்து விளை­யா­டு­வ­துண்டு. கணி­னியை அல்­லது வேறு டிஜிட்டல் கரு­வி­களைப் பயன்­ப­டுத்தி நிகழ்­நி­லையில் அல்­லது அதற்கு வெளியில் விளை­யாட்­டு­களில் ஈடு­ப­டு­வது முற்­றிலும் ஆபத்­தா­ன­தல்ல. ஆனால், எல்லா விளை­யாட்­டு­களும் அறி­வாற்­றலை வளர்ப்­ப­தில்லை. எல்லா விளை­யாட்­டுக்­களும் மூளைக்கு தீனி­யாக அமை­வ­தில்லை. எல்லா விளை­யாட்­டுக்­க­ளிலும் சிறு­வர்­களின் கிர­கித்தல் இய­லுமை வளர்ச்சி அடை­வ­தில்லை. சில விளை­யாட்­டுக்கள் மிகவும் ஆபத்­தா­னவை. சில விளை­யாட்­டுக்கள் தீய எண்­ணங்­களை நோக்கி சிறு­வர்­களின் சிந்­த­னையை திசை திருப்ப முடியும். சில விளை­யாட்­டுக்கள் தற்­கொலை உணர்வு தூண்­டப்­ப­டும்­வரை சிறு­வர்­களில் ஆதிக்கம் செலுத்தும். எனினும், கணினி விளை­யாட்­டுக்கு அடி­மை­யாதல் மூலம், சுய கட்­டுப்­பாட்டை இழத்தல் மிகவும் ஆபத்­தா­னது என்­பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

அடி­மைப்­ப­டு­தலைக் குறிக்கும் அடை­யா­ளங்கள்
அப­ரி­மி­த­மான பயன்­பாடு : இணையப் பாவ­னைக்கு அடி­மை­யான ஒருவர் எப்­போதும் அதனை பயன்­ப­டுத்தும் தேவை­யு­டை­ய­வ­ராக இருப்பார். சில போது இலத்­தி­ர­னியல் கரு­வி­களை பிரிந்து நேரத்தை செல­விட முடி­யாத நிலையில் அவர் இருப்பார். சில சந்­தர்ப்­பங்­களில் இணை­ய­த­ளத்தில் பிர­வே­சிக்க முடி­யாத போது மனம் அது பற்­றிய யோச­னை­யி­லேயே இருக்கும். இலத்­தி­ர­னியில் கரு­வி­களின் திரை­களை பார்க்­கும்­போது மகிழ்ச்சி ஏற்­படும்.

கட்­டுப்­பா­டற்ற நிலை : இணையப் பாவ­னைக்கு அடி­மைப்­பட்ட ஒரு­வரால் இலத்­தி­ர­னியல் கரு­வி­களின் திரை நேரத்தை குறைக்க முடி­வ­தில்லை. எவ்­வ­ள­வுதான் முயன்­றாலும் கரு­வி­க­ளி­லி­ருந்து வில­கி­யி­ருக்க முடி­யாது. திரை நேரத்தை தவிர்த்­துக்­கொள்ள முயன்று முயன்று தோற்றுப் போகும் நிலை உரு­வாகும்.

விலகிச் செல்லும் அறி­கு­றிகள் : இது யாரா­வது தலை­யிட்டு இணை­ய­தள பாவ­னையை கட்­டுப்­ப­டுத்தும் போது, நெறிப்­ப­டுத்தும் போது, அல்­லது இணை­ய­த­ளப்­பா­வ­னைக்­கு­ரிய நேர ஒதுக்­கீட்டை குறைக்கும் போது அதிக எரிச்சல் ஏற்­ப­டு­வதைக் குறிக்கும். மன அமை­தி­யின்மை ஏற்­படும். எதிலும் பிடிப்­பில்­லாத நிலை தோன்றும். அய­ல­வர்கள் சொல்லும் விட­யங்கள் இல­குவில் காது­களில் புகு­வ­தில்லை. கிர­கிக்க முடி­யாத நிலை உரு­வாகும். பொதுக்­க­ட­மை­களில் நாட்­ட­மின்மை தோன்றும்.

பொறுப்­புக்­களை தட்டிக் கழித்தல் : இணை­ய­தள பாவ­னையால் கிடைக்கும் போதை நிலை­யினால் குடும்ப, பாட­சாலை, சமூகம் பொறுப்­புக்­களில் அக்­கறை குறைந்து அவற்றை தட்டிக் கழிக்­கின்ற நிலை ஏற்­படும். பொதுக் கட­மை­களில் இருந்து விலகிச் செல்லத் தோன்றும்.

போகப்­போக நேரம் அதி­க­ரிக்கும் : இணை­ய­தள பாவ­னைக்கு அடி­மைப்­பட்­டவர் தினமும் அதி­க­தி­க­மான நேரத்தை செல­வி­டு­வ­துடன் நேர அளவு தினமும் அதி­க­ரிக்கும். இதில் மன நிறைவு கிடைப்­பது போல் தோன்றும். திருப்தி உணர்வு ஏற்­படும். சுய கட்­டுப்­பாட்டை மீறி தொடர்ந்தும் டிஜிட்டல் கரு­வி­களைப் பயன்­ப­டுத்த ஆர்வம் ஏற்­படும்.

உற­வு­களை பேணிக் கொள்ள முடி­யாத நிலை ஏற்­ப­டுதல் : முன்னர் குறிப்­பிட்­டது போன்று, இணை­ய­தள பாவ­னைக்கு அடி­மைப்­பட்ட ஒருவர் நேரடித் தொடர்­பா­டலில் நாட்டம் குறைந்­த­வ­ராக காணப்­ப­டுவார். இணை­ய­வழி உற­வு­களை முக்­கி­ய­மா­ன­தாகக் கரு­வ­துவார். அவர்­க­ளுடன் அரட்­டையில் ஈடு­ப­டு­வதில் அதிக மன­நி­றைவு கிடைப்­ப­தாக உணர்வார். அவ­ருக்கு குடும்­பத்­தா­ரு­டனும் உற­வி­னர்­க­ளு­டனும் பேசப்­பி­டிக்­காது. உற­வி­னர்­க­ளுடன் பேசு­வது அல்­லது உற­வி­னர்கள் பேசு­வதைக் கேட்­பது ஒரு சிரம­மான அனு­ப­வ­மாகத் தோன்றும்.

பௌதீக உட­லியல் அடை­யா­ளங்கள் : நீண்ட நேர திரை பயன்­பாட்டால் சோர்வு, தலை­வலி, கண் வறட்சி, மற்றும் தோள், பல் வலி, இடுப்பு வலி என்­பன அடிக்­கடி ஏற்­ப­டலாம்.

யதார்த்­தத்தில் இருந்து தப்­பிக்க இணை­யத்­த­ளத்தை பயன்­ப­டுத்தல் : இணை­யத்­தள பாவ­னைக்கு அடி­மை­யா­ன­வர்கள் மன அழுத்தம், தனிப்­பட்ட பிரச்­சி­னைகள், குடும்பச் சுமைகள் மற்றும் இதர பிரச்­சி­னைகள் என்­ப­வற்­றி­லி­ருந்து வில­கு­வ­தற்­காக திரை நேரத்தை பயன்­ப­டுத்­து­வ­துண்டு. இலத்­தி­ர­னியல் கரு­வி­களின் திரை­நே­ரத்தில் மூழ்­கு­வதன் மூலம் மன­துக்கு ஆறுதல் கிடைப்­ப­தாகத் தோன்றும்.

தூக்கம் பாதிக்­கப்­ப­டுதல் : அதிக திரை நேரம் தூக்­கத்தை பாதிக்கும். இரவு முழுக்க அல்­லது பகலில் அதிக நேரம் திரை நேரத்தில் செல­வி­டு­வதால் தூக்கம் குறைந்து போகும். சில போது தூங்க முடி­யாத நிலையும் ஏற்­படும்.

இணைய அடி­மை­யாதல் ஒரு உள­வியல் பிறழ்வா?
உட­லியல், உள­வியல் மற்றும் சமூகப் பிரச்­சி­னை­களை பொருட்­ப­டுத்­தாமல் அல்­லது இத்­த­கைய பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தியில் இலத்­தி­ர­னியல் கரு­வி­களின் திரை பாவ­னையில் வலிந்து, தொடர்ச்­சி­யாக ஈடு­பட்­டி­ருத்­தலை சிலர் பிறழ்வு எனவும் கரு­து­கின்­றனர். எனினும், இது பற்­றிய விவா­தங்கள் உள்­ளன. உள­வியல் பிறழ்­வுக்­கான மருத்­துவ மற்றும் புள்­ளி­வி­பர ஆய்­வோடு (DMS-5) இணையப் பாவ­னைக்கு அடி­மை­யா­தலை உள­வியல் பிறழ்­வாக கரு­து­வ­தில்லை எனினும் DMS-5 இணைய வழி விளை­யாட்டு பிறழ்வை (Int­e­r­net Ga­ming) உள­வியல் வியா­தி­யாக அங்­கீ­க­ரித்­துள்­ளது. எனினும் இணைய அடி­மை­யாதல் என்­பதை ஒருவர் உள­வியல் பிறழ்­வுக்கு உட்­ப­டு­வ­தற்கு சற்று முன்னர் உள்ள நிலைப்­பா­டாக வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. முன்னர் குறிப்­பிட்ட இணைய அடிமையாதல் குறித்து இன்னமும் மிகத் திருத்தமான மருத்துவ ஆதாரங்கள் கிடைக்காமையால் இத்தகைய பிரச்சினைகளை DMS-5 இன்னும் பிறழ்வாக உள்வாங்கிக் கொள்ளவில்லை. எனினும் நூற்றுக் கணக்கான உளவியல் ஆய்வுகளில் இணையப் பாவனைக்கு அடிமையாதலை திட்டவட்டமாகவே பிறழ்வாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையதள பாவனைக்கு அடிமையாதல் எவ்வாறு ஏற்படுகின்றது என்பது பற்றிய பிரக்ஞை சகலருக்கும் கட்டாயமானது. அடிமைப்பட்டிருப்பவர்கள் முதலில் தம்மைத் தாமே சுயவிசாரணை செய்து கொள்வதற்கான கருவிகளையும் உத்திகளையும் அறிந்து கொள்ள வேண்டும். அத்துடன் தேவைப்பட்டால் சமூக மற்றும் தொழில்சார் நிபுணர்களின் உதவியைப் பெற்றுக்கொள்வதும் முக்கியமானது. மிக முக்கியமாக தமது பராமரிப்பில் உள்ள சிறுவர்களிடம் அடிமையாதலுக்குரிய அறிகுறிகள் உள்ளனவா என்பதை அவதானிக்க வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.