நிதி மோசடி முறைப்பாடு: இலங்கைக்கு குடும்பத்துடன் அனுப்பப்பட்ட தம்பதி

'சட்டவிரோத நடவடிக்கை' என முறைப்பாடு

0 5

விஜயானந்த் ஆறுமுகம்
பிபிசி தமிழ்

திருச்சி இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த தம்­ப­திக்கு எதி­ராக இலங்­கையில் பல கோடி ரூபாய் நிதி மோசடி புகார் இருப்­பதால், அவர்கள் மீண்டும் கடந்த டிசம்பர் 26 இல் இலங்­கைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டனர். அவர்­களின் 13 வயது மகனும் உடன் அனுப்பி வைக்­கப்­பட்டார். திருச்சி விமான நிலை­யத்தில் இருந்து அவர்கள் இலங்கை சென்­றனர்.

இந்த விவ­கா­ரத்தில் தங்­களை வலுக்­கட்­டா­ய­மாக இலங்­கைக்கு அனுப்­பு­வ­தாக, பிபிசி தமி­ழிடம் பேசிய அந்தப் பெண் தெரி­வித்­தி­ருந்தார். முத­ல­மைச்­சரின் தனிப்­பி­ரிவில் அது­கு­றித்து முறை­யிட்டும் சட்­ட­வி­ரோ­த­மாக இந்­ந­ட­வ­டிக்­கையை மேற்­கொண்­ட­தாகத் தெரி­வித்தார், அப்­பெண்ணின் வழக்­க­றிஞர்.
இலங்­கையில் இவர்கள் மீது பல கோடி ரூபாய் நிதி மோசடிப் புகார் உள்­ளதால், உரிய நடை­மு­றை­க­ளின்­ப­டியே திருப்பி அனுப்ப நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாகக் கூறு­கிறார், முகாமின் துணை ஆட்­சியர்.

திருச்சி முகாமில் இருந்த இந்தத் தம்­பதி மீது இலங்­கையில் முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்டு என்ன?
நாகப்­பட்­டினம் மாவட்டம் வேதா­ரண்­யத்தில் 2020ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி இரவு சுமார் 11 மணி­ய­ளவில் கட­லோர பாது­காப்புப் படை ஆய்­வாளர் செல்­வ­ராசு, கோடி­யக்­கரை பேருந்து நிலை­யத்தில் சிறு­வ­னுடன் ஒரு தம்­பதி இருப்­பதைப் பார்த்­துள்ளார். அவர்­க­ளிடம் விசா­ரித்­த­போது, இலங்­கையில் இருந்து படகு மூல­மாக தமிழ்­நாட்­டுக்கு வந்­த­தாக அவர்கள் கூறி­யுள்­ளனர்.
‘உரிய அனு­ம­தி­யின்றி இலங்­கையில் இருந்து வந்­துள்­ளனர். 1967ஆம் ஆண்டு பாஸ்போர்ட் சட்­டப்­பி­ரிவு 12(1)(c)-இன்­படி அவர்கள் கைது செய்­யப்­பட்­டனர்’ என்று வேதா­ரண்யம் காவல் நிலைய ஆய்­வாளர் நீதி­மன்­றத்தில் சமர்ப்­பித்த ஆவ­ணத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.

கைது செய்­யப்­பட்­ட­வர்கள் முக­மது ஷிஹாப் -– பாத்­திமா பர்­சானா மார்க்கர் தம்­ப­தியர் ஆவர். அவர்­களை நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்தி புழல் சிறையில் அடைத்த காவ­லர்கள், அவர்­களின் பத்து வயது மகனை நாகையில் உள்ள அரசு காப்­ப­கத்தில் தங்க வைத்­தனர்.

இந்த வழக்கில் இரண்டு மாதங்கள் சிறைத் தண்­ட­னையை அனு­ப­வித்த தம்­பதி, திருச்சி மத்­திய சிறை வளா­கத்தில் உள்ள சிறப்பு முகாமில் தனித்­த­னி­யாக அடைக்­கப்­பட்­டனர்.

இலங்­கையில் நிதி மோசடிப் புகார்
இந்த நிலையில், இலங்­கையில் அந்தத் தம்­ப­திக்கு எதி­ராக நிதி மோசடி புகார் இருப்­பதால், அவர்­களை தமிழ்­நாட்டில் இருந்து இலங்­கைக்கு அனுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன.

இது­தொ­டர்­பாக, இலங்­கைக்கு புறப்­ப­டு­வ­தற்கு முன்­பாக டிசம்பர் 25 அன்று பிபிசி தமி­ழிடம் பேசினார், பாத்­திமா பர்­சானா மார்க்கர்.
இதன் பின்­ன­ணியில் தங்கள் மீது இலங்­கையில் நிதி மோசடிப் புகார் ஒன்று நிலு­வையில் உள்­ள­தாக அவர் தெரி­வித்தார்.

கொழும்­பில் இயங்கிய பிரிவெல்த் குளோபல் (Privelth Global) என்ற நிதி நிறு­வனம், இஸ்­லா­மிய சட்­டப்­படி செயல்­ப­டு­வ­தாகக் கூறி முத­லீட்­டா­ளர்­க­ளிடம் வைப்புத் தொகையைப் பெற்று வந்­த­தா­கவும், பொது மக்­க­ளிடம் இருந்து சுமார் 150 கோடி இலங்கை ரூபாய் வைப்புத் தொகையைப் பெற்று மோசடி செய்­த­தா­கவும் அங்­குள்ள காவல்­து­றையில் வழக்குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இலங்­கையின் கிழக்கு மாகாணம், கல்­மு­னையில் உள்ள பிரிவெல்த் குளோபல் நிறு­வ­னத்தின் கிளையில் இந்த மோசடி நடந்­த­தாக அதில் கூறப்­பட்­டுள்­ளது. இந்த நிறு­வ­னத்தின் உரி­மை­யா­ள­ராக முக­ம்மது ஷிஹாபும் இயக்­கு­ந­ராக அவ­ரது மனை­வியும் இருந்தனர்.

இந்த வழக்கின் தக­வல்கள் அடங்­கிய காவல்­துறை தரப்பு ஆவ­ணங்­களை பிபிசி தமிழ் பார்­வை­யிட்­டது.

தமிழ்­நாட்­டுக்கு தப்பி
வந்த தம்­பதி
அந்த வகையில், ஆயி­ரத்­துக்கும் அதி­க­மானோர் ஏமாற்­றப்­பட்­ட­தாக அவர்கள் மீது காவல்­து­றையில் வழக்குப் பதி­வா­கி­யுள்­ளது. கல்­முனை நீதி­மன்­றத்தில் இது­ தொ­டர்­பான வழக்­குகள் நிலு­வையில் உள்ள நிலையில், ஷிஹாப், அவ­ரது மனைவி மற்றும் மகன் தமிழ்­நாட்­டுக்கு வந்­துள்­ளனர்.

இதை அறிந்து தம்­ப­தியை இலங்­கைக்கு வர­வ­ழைக்கும் முயற்­சியில் அந்­நாட்டு அரசு ஈடு­பட்­டது.

தங்கள் மீது நூறு கோடி ரூபாய்க்கும் அதி­க­மாக மோசடி செய்­த­தாக வழக்குப் பதி­வாகி இருப்­ப­தாகக் கூறும் பாத்­திமா, “கொழும்­பில் எங்­க­ளுக்கு இருந்த ஒரே வீட்­டையும் சிலர் அப­க­ரித்­து­விட்­டனர். இது­தொ­டர்­பாக நீதி­மன்­றத்தில் வழக்கு தொடர்ந்­துள்ளேன்” என்றார்.

‘இலங்­கையில் எங்­க­ளுக்கு
பாது­காப்பு இல்லை’
கடந்த வாரம் திருச்சி முகாமில் பாத்­தி­மாவை சந்­தித்த வருவாய் ஆய்­வாளர் ஒருவர், சில நாட்­களில் அவர்­களை இலங்­கைக்கு அனுப்ப உள்­ள­தாகத் தகவல் தெரி­வித்­துள்ளார்.

ஆனால், “அதற்­கான உத்­த­ரவை அவர் காட்­டி­ய­போது, ‘எங்­களால் இலங்­கைக்கு செல்ல முடி­யாது. அங்கே எங்­க­ளுக்குப் பாது­காப்பு இல்லை’ என்றேன். அவர் எனது குறை­களைக் கேட்­க­வில்லை” என்றார் பாத்­திமா.
“இந்த வழக்கு முடி­வுக்கு வர வேண்டும் என்­பது இலங்கை அரசின் நோக்­க­மாக உள்­ளது. வங்கிக் கணக்கு உட்­பட அனைத்து ஆவ­ணங்­க­ளையும் அரசு ஆய்வு செய்­யட்டும். எங்கள் மூல­மாக பணப் பரி­வர்த்­தனை நடந்­தது தொடர்­பாக எந்த ஆதா­ரங்­களும் இல்லை” எனக் கூறு­கிறார் பாத்­திமா.

அய­லக தமிழர் நலத்­துறை
சொன்­னது என்ன?
தங்­களை இலங்­கைக்கு அனுப்பும் முயற்சி நடப்­பதை அறிந்து, தமி­ழக அரசின் தனிப்­பி­ரி­வுக்கு பாத்­தி­மாவின் கணவர் முக­மது ஷிஹாப் முகாமில் இருந்து மனு ஒன்றை அனுப்­பி­யுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி அனுப்­பப்­பட்ட அந்த மனுவில், தங்­களால் இலங்­கைக்கு மீண்டும் செல்ல முடி­யாத கார­ணங்­களை அவர் பட்­டி­ய­லிட்­டுள்ளார்.

இதற்கு அதே ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் திகதி­யன்று தமிழ்­நாடு அய­லக தமிழர் நலன் மற்றும் மறு­வாழ்வுத்துறை ஆணையர் பதில் அளித்­துள்ளார். அதில், ‘முகாம்வாழ் இலங்கைத் தமி­ழர்­களின் விருப்­பத்­தின்­ப­டியே இலங்கை செல்ல வழி­வகை செய்­யப்­ப­டு­கி­றது’ எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

“சட்­ட­வி­ரோ­த­மா­னது”
“ஆணையர் இவ்­வாறு கூறி­னாலும் சட்­ட­வி­ரோ­த­மாக ஷிஹாப் தம்­ப­தியை இலங்­கைக்கு அனுப்­பு­கின்­றனர். இலங்கை செல்­வ­தற்கு அவர்கள் விருப்­பப்­ப­ட­வில்லை” என்றார், பாத்­தி­மாவின் வழக்­க­றிஞர் பா.புக­ழேந்தி.

பிபிசி தமி­ழிடம் பேசிய அவர், “இந்­தியா, இலங்­கைக்கு இடையே கைதிகள் பரி­மாற்ற ஒப்­பந்தம் உள்­ளது. இலங்கை அர­சுக்கு இவர்கள் தேவை என்­பதை நீதி­மன்­றத்தில் நிரூ­பித்தால் மட்­டுமே இவர்­களை அனுப்ப முடியும்” என்றார்.
“ஆனால் அப்­படி எந்த முயற்­சி­களும் நடக்­க­வில்லை” எனக் கூறிய புக­ழேந்தி, “நிதி மோசடிப் புகார் என்­பதால் வெளி­நா­டு­களில் இவர்­க­ளுக்கு அடைக்­கலம் கிடைப்­ப­தற்கு வாய்ப்­பில்லை. அவர்­க­ளுக்கு விருப்பம் இல்­லா­த­போது, இலங்­கைக்கு அனுப்­பு­வது சரி­யா­ன­தல்ல” என்று குறிப்­பிட்டார்.

குற்ற விசா­ர­ணைக்­காக ஒரு­வரை தங்கள் நாட்­டுக்கு அனுப்ப வேண்­டு­மெனில், அவர் ஏன் தங்கள் நாட்­டுக்குத் தேவைப்­ப­டு­கிறார் என்­ப­தற்­கான ஆவ­ணங்­க­ளுடன் அந்­நாட்டு வெளி­யு­றவுத் துறை இந்­திய அரசை அணுக வேண்டும் என்றும் அதை அடிப்­ப­டை­யாக வைத்து இங்­குள்ள நீதி­மன்­றத்தில் வழக்குத் தொடர்ந்து, அதற்­கான உத்­த­ரவைப் பெற வேண்டும் என்றும் வழக்­க­றிஞர் புக­ழேந்தி குறிப்­பி­டு­கிறார்.

ஆனால், ஷிஹாப் தம்­பதி வழக்கில் இவை எதுவும் பின்­பற்­றப்­ப­ட­வில்லை என்றும் இலங்கை அரசு கேட்டுக் கொண்­டதால் சட்­ட­வி­ரோ­த­மாக அவர்­களை அங்கு அனுப்­பு­வ­தா­கவும் புக­ழேந்தி தெரி­வித்தார்.

மேலும், “இந்த விவ­கா­ரத்தில் இந்­திய வெளி­யு­றவு அமைச்­ச­கத்தின் தலை­யீடு இருப்­ப­தாக வெளிப்­ப­டை­யான ஆதா­ரங்கள் ஏது­மில்லை. தமிழ்­நாடு அரசே தன்­னிச்­சை­யாக இந்த நட­வ­டிக்­கையை எடுத்­துள்­ளது,” என்றும் அவர் குற்றம் சாட்­டினார்.

துணை ஆட்­சியர் சொல்­வது என்ன?
பாத்­தி­மாவின் குற்­றச்­சாட்­டு­களை திருச்சி சிறப்பு முகாமின் சிறப்பு துணை ஆட்­சியர் நஜி­முன்­னிஷா முற்­றிலும் மறுக்­கிறார்.
இது­கு­றித்த கேள்­விக்கு பிபிசி தமி­ழிடம் பதி­ல­ளித்த துணை ஆட்­சி
யர், “இந்­திய வெளி­யு­றவுத்­துறை, தமிழ்­நாடு அரசு ஆகியவற்றின உத்தரவுடன் உரிய நடைமுறை களைப் பின்பற்றி அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக,” தெரிவித்தார்.

அதோடு, “தமிழ்நாட்டுக்குள் அவர்கள் சட்டவிரோதமாக நுழைந்தது தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது. புழல் சிறையில் இருந்து அவர்கள் வெளியில் வந்தவுடன் சிறப்பு முகாமில் வைத்திருப்பது வழக்கம். தற்போது தமிழக அரசிடம் இருந்து உத்தரவு வந்ததால் அதன் அடிப்படையில் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

தம்பதியை அனுப்புமாறு கோரி பாஸ்போர்ட் மற்றும் பயண டிக்கெட்டை இலங்கை தூதரகம் அனுப்பியுள்ளதாகக் கூறும் நஜிமுன்னிஷா, “இலங்கை அரசு கேட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.