ஜனாஸா எரிப்பு: குற்றவியல் விசாரணை சாத்தியமா?

0 63

எப்.அய்னா

கொரோனா தொற்­றுக்­குள்­ளாகி மர­ண­ம­டைந்த முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை கட்­டாய தகனம் செய்­த­மையை தவ­றான முடிவு அல்­லது தன்­னிச்­சை­யான ஏற்­றுக்­கொள்ள முடி­யாத நட­வ­டிக்கை என அனைத்து தரப்பும் இப்­போது ஏற்­றுக்­கொள்ளும் நிலையில், அதற்­கான பரி­காரம் அல்­லது நீதியை வழங்க தயக்கம் காட்­டப்­ப­டு­வது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

இலங்­கையில் கொரோ­னாவால் முதல் மரணம் கடந்த 2020 மார்ச் 28 ஆம் திக­தி­யன்று பதி­வா­னது. மார­வில பகு­தியை சேர்ந்த 60 வய­தான நபர் ஒரு­வரின் மர­ணமே அது. எனினும் 2020 மார்ச் 27 ஆம் திகதி கொரோனா தொற்று நோய் தொடர்பில் வழி­காட்­டல்­களை வெளி­யிட்ட, சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் அந்த தொற்றால் உயி­ரி­ழப்­ப­வர்­களை அடக்கம் செய்­யவோ அல்­லது தகனம் செய்­யவோ முடியும் என்ற உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் நடை­மு­றையை அங்­கீ­க­ரித்­தி­ருந்தார். ஆனால் 2020 மார்ச் 31 ஆம் திகதி, கொரோனா தொற்றால் பாதிக்­கப்­பட்ட முஸ்லிம் ஒருவர் நீர்­கொ­ழும்பு பகு­தியில் உயி­ரி­ழந்­ததை தொடர்ந்து, எந்த முன்­ன­றி­வித்­தலும் இன்றி சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் 2020.03.27 அன்று வெளி­யிட்ட வழி­காட்­டல்­களை திருத்தி, கட்­டாய தக­னத்தை வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

கொரோனா தொற்று கார­ண­மாக உயி­ரி­ழந்த முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் கட்­டாய தகனம் செய்­யப்­பட்­டமை தொடர்பில் இன்று வரை நீதி கோரி முழு சமூ­கமும் காத்­தி­ருக்­கின்­றது. பாரா­ளு­மன்­றத்­துக்கு உள்ளும் வெளி­யேயும் இதற்­கான குரல்கள் ஒலித்த போதும், அப்­போ­தைய கோட்­டா­பய அர­சாங்கம் (2020) அறி­வியல் ஆதா­ரங்­க­ளுக்கு அப்­பால்­பட்டு எடுத்த முடிவு என அதற்கு விளக்கம் சொல்லி கடந்து செல்ல தற்­போ­தைய அர­சாங்கமும் முயற்­சிப்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அமைச்­ச­ரவை, இந்த விட­யத்தில் முஸ்­லிம்­க­ளிடம் மன்­னிப்பு கோர அமைச்­ச­ரவை தீர்­மானம் எடுத்து மன்­னிப்பு கோரி­யது. ஆனால் வெறும் மன்­னிப்பு என்ற அமைச்­ச­ரவை தீர்­மானம் ஊடாக, முஸ்லிம் சமூ­கத்தின் காயங்­க­ளுக்கு மருந்­திட முடி­யாது.

முஸ்­லிம்­களின் உணர்­வு­க­ளோடு மிக மோச­மாக விளை­யா­டிய தரு­ணங்­களில் ஒன்றே, ஜனா­ஸாக்­களை எரித்­த­மை­யாகும்.

கொரோனா கார­ண­மாக இலங்­கையில் மொத்­த­மாக 13183 சட­லங்கள் தகனம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக அமைச்­ச­ரவை பேச்­சாளர் அமைச்சர் நளிந்த ஜய­திஸ்ஸ பாரா­ளு­மன்­றத்தில் குறிப்­பிட்­டி­ருந்த்தார்.

இதில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தக­வல்­க­ளின்­படி சுமார் 200 க்கும் மேற்­பட்ட முஸ்லிம் ஜனா­ஸாக்கள் தகனம் செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்த நிலையில், கொரோனா பரவல் ஆரம்­பித்து சுமார் ஒரு வருட காலத்தின் பின்னர் அர­சாங்கம் முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை விஷேட மைய­வா­டி­யொன்றில் அடக்கம் செய்­வ­தற்கு அனு­மதி வழங்­கி­யது. இதற்­கென ஓட்­ட­மா­வடி கோற­ளைப்­பற்று மேற்கு பிர­தேச சபை எல்­லைக்­குட்­பட்ட சூடு­பத்­தின சேனை மஜ்மா நகரில் காணி­யொ­துக்­கப்­பட்­டது.

மஜ்மா நகர் கொவிட் 19 விஷேட மைய­வா­டியில் 2021 மார்ச் மாதம் 5 ஆம் திகதி முதல் ஜனா­ஸாக்கள் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது. இம் மைய­வா­டியில் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி வரை ஜனா­ஸாக்கள் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்டு வந்­தன. இம்­மை­ய­வா­டியில் 2986 முஸ்­லிம்­க­ளி­னது ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன. இத­னை­விட 293 பெளத்­தர்­க­ளி­னதும், 269 இந்­துக்­க­ளி­னதும், 86 கிறிஸ்­த­வர்­க­ளி­னதும் சட­லங்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன. 2022 மார்ச் மாதம் 5ஆம் திக­தி­யுடன் இவ் ஏற்­பா­டுகள் முடி­வுக்கு வந்­த­துடன் கொவிட் ஜனா­ஸாக்­களை நாட்டின் எப்­பா­கத்­தி­லு­முள்ள மைய­வா­டி­களில் அடக்கம் செய்­யலாம் என அனு­மதி வழங்­கப்­பட்­டது.

இந்த அனைத்து நிலை­மையின் போதும், முஸ்­லிம்கள் இறுதிக் கிரி­யை­களை நிறை­வேற்றிக் கொள்­வதில் பல்­வேறு சவால்­களை சந்­தித்­தார்கள்.

இவ்­வா­றான நிலையில் தான் கொரோனா தொற்றின் முதல் முஸ்லிம் மரணம் பதி­வான 2020 மார்ச் 31 முதல் 2021 மார்ச் 5 வரை, கொரோ­னாவால் உயி­ரி­ழந்த முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் கட்­டாய தக­னத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது. இந்த கட்­டாய நட­வ­டிக்­கை­யா­னது, ஒரு திட்­ட­மிட்ட சதியின் வெளிப்­பாடு என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக, கொவிட் தொற்றால் மர­ண­ம­டையும் நபர்கள் தொடர்பில் நிபு­ணர்கள் குழு மற்றும் தொழில் நுட்பக் குழுவின் நட­வ­டிக்­கைகள் இச்­ச­தியின் ஒரு அங்­கமா என சந்­தே­கிக்க தோன்­று­கின்­றது. இதன் வெளிப்­பாடே, உயர் நீதி­மன்றம், சட்ட மா அதி­பரை இந்த விவ­கார வழக்கின் போதும் தவ­றாக வழி நடாத்த ஏது­வா­னதா என எண்ணத் தோன்­று­கின்­றது.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே, கொரோனா தொற்றால் உயி­ரி­ழந்­த­வர்­களின் ஜனா­ஸாக்­களை கட்­டாய தகனம் செய்த நட­வ­டிக்­கையின் பின்னால் உள்ள சதியை வெளிப்­ப­டுத்­தவும், இன­வாத நோக்­கங்­களை கண்­ட­றிந்து நீதியை நிலை­நாட்­டு­மாறும் கோரி பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்­பா­டொன்று பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

மனித உரி­மைகள் செயற்­பாட்­டாளர் சிரந்த ரன்மல் என்­டனி அம­ர­சிங்க இந்த முறைப்­பாட்டை கடந்த 2024 டிசம்பர் 22 ஆம் திகதி பதிவு செய்­துள்ளார்.
இந்த குற்­ற­வியல் நட­வ­டிக்கை கோரும் முறைப்­பாட்டில் கடந்த 2020 மார்ச் 31 ஆம் திக­தி­யாகும் போது சுகா­தார அமைச்­ச­ராக இருந்த பவித்ரா வன்னி ஆரச்சி, அதே காலப்­ப­கு­தியில் சுகா­தார அமைச்சின் செய­லாளர், சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் ஆகி­யோரும் 2021.02.14 அன்று சுகா­தார அமைச்சின் செய­லா­ள­ராக இருந்­தவர், கொரோ­னாவால் உயி­ரி­ழந்­த­வர்­களின் சட­லங்­களை தகனம் செய்­வது தொடர்பில் முடி­வெ­டுத்த தொழில்­நுட்பக் குழுவின் உறுப்­பி­னர்கள், கொரோ­னாவால் உயி­ரி­ழந்­த­வர்­களை தகனம் செய்ய வேண்டும் என முடி­வுக்கு வர கார­ண­மாக இருந்த நிபு­ணர்கள் குழுவில் இருந்தோர் (சட்ட வைத்­திய ஆலோ­சகர் சன்ன பெரேரா, வைத்­திய ஆலோ­சகர் ஆனந்த விஜே­விக்­ரம, சட்ட வைத்­திய ஆலோ­சகர் ரொஹான் ருவன்­புர, சட்ட வைத்­திய ஆலோ­சகர் பி.பீ. தச­நா­யக்க, நுண்­ணு­யி­ரியல் ஆலோ­சகர் ஷிரானி சந்­ர­சிறி, நுண்­ணு­யி­ரியல் ஆலோ­சகர் மாலிக கரு­ணா­ரத்ன, வைத்­தியர் துல்­மினி குமா­ர­சிங்க, சட்ட வைத்­திய ஆலோ­சகர் பிரபாத் சேன­சிங்க, சட்ட வைத்­திய அதி­காரி சிரி­யந்த அம­ர­ரத்ன, பேரா­சி­ரியர் மெத்­திகா விதா­னகே, வைத்­தியர் ஹசித்த திசேரா) ஆகி­யோரை பொறுப்புக் கூற வேண்­டி­ய­வர்கள் என பெய­ரிட்டு குற்­ற­வியல் விசா­ரணை கோரி­யுள்ளார்.

குறிப்­பாக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி தொடர் தாக்­கு­தலின் பின்னர் முஸ்­லிம்கள் மீதான இன­வாத அடக்­கு­முறை, அரச அங்­கீ­கா­ரத்­தோடு வியா­பித்­த­தாக குறித்த முறைப்­பாட்டில் சுட்­டிக்­கட்­டி­யுள்ள மனித உரி­மைகள் செயற்­பாட்­டாளர் சிரந்த ரன்மல் என்­டனி அம­ர­சிங்க, அதன் தொடர்ச்­சியே கொவிட் தொற்­றினால் மர­ண­ம­டைந்த ஜனா­ஸாக்­களை தகனம் செய்த நட­வ­டிக்கை எனவும், அது முற்று முழு­தாக முஸ்­லிம்­களை இலக்­கு­வைத்­தது எனவும் சுட்­டிக்­கட்­டி­யுள்ளார்.

அதனால் இந்த விடயம் குறித்து முழு­மை­யான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வேண்டும் எனவும் அவர் கோரி­யுள்ளார்.

இந்த முறைப்­பாடு தொடர்பில் பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் புத்­திக மன­துங்­கவை விடி­வெள்ளி தொடர்­பு­கொண்டு வின­விய போது, அது குறித்து ஆராய்ந்து பதி­ல­ளிப்­ப­தாக கூறினார்.

இந்த விவ­காரம் இலங்­கையில் இன நல்­லி­ணக்கம், மனித உரி­மைகள், மற்றும் அரசின் கொள்கை அமுல்­ப­டுத்­தலின் நம்­ப­கத்­தன்மை ஆகி­ய­வற்றை பிர­தி­ப­லிக்கக் கூடி­ய­தாக அமையும். கொரோனா தொற்றால் உயி­ரி­ழந்­த­வர்­களின் ஜனா­ஸாக்­களை கட்­டாய தக­னத்­திற்கு உட்­ப­டுத்­திய நட­வ­டிக்­கைகள் முன்­னைய அரசின் தவ­றான முடிவு மற்றும் இன­வாத நோக்­கத்­துடன் செயல்­பட்ட சதி­யாக கரு­தப்­ப­டு­கின்­றன. இதன் மூலம் முஸ்லிம் சமூ­கத்தின் மத, கலா­சார உரி­மைகள் மறுக்­கப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் மக்­களின் கோபத்தை சமா­ளிக்க ரணில் அர­சாங்­கத்தால் கையா­ளப்­பட்ட மன்­னிப்பு தீர்­மா­னங்கள் போது­மா­ன­வை­யாக அமை­ய­வில்லை. இதற்­கான நீதியும் நஷ்­ட­ஈடும் வழங்­கப்­ப­டாமல் விட்­டு­வி­டு­வது தொடர்ந்தும் சமூகப் பிரச்­சி­னை­க­ளுக்கு வழி­வ­குக்­கக்­கூடும். அதனால், முறைப்­பாட்டின் அடிப்­ப­டையில் முழு­மை­யான, வெளிப்­ப­டை­யான மற்றும் சுதந்திரமான விசாரணைகள் மேற்கொண்டு, குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க, இனவாத மற்றும் இன அடக்குமுறைகளை நீக்குவதற்கான நீண்டகால நடவடிக்கைகள் தேவை. சமத்துவமான மற்றும் நீதி நிறைந்த சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் அரசு, சமூக அமைப்புகள், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.