எமது நாடு புதிய மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி பயணிக்கும்

எம்மை அர்ப்பணிக்க தயார் என்கிறார் ஜனாதிபதி

0 16

(எம்.வை.எம்.சியாம்)
எமது நாடு இந்த வரு­டத்­தி­லி­ருந்து புதிய மறு­ம­லர்ச்சி யுகத்தை நோக்கி பய­ணிக்கும் என தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திஸா­நா­யக்க, அதற்­கான பாரிய பொறுப்பும் சவால்­களும் எம்முன்னுள்ளது என்றும் தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன், தானும் தனது அமைச்­சர்கள் பிரதி அமைச்­சர்கள் மற்றும் அர­சியல் அதி­கா­ர­சபை என அனை­வரும் முழு­மூச்­சாக தம்மை அர்ப்­ப­ணிக்க தயா­ராக இருப்­ப­தாக ஜனா­தி­பதி மேலும் தெரி­வித்­தார்.

கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்­திட்டம் நேற்று முற்­பகல் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­க­வினால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அங்­கு­ரார்ப்­பணம் செய்து வைக்­கப்­பட்­டது. இந்­நி­கழ்வில் விசேட உரை­யாற்­றிய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில், 2025க்குள் காலடி எடுத்து வைக்கும் இந்த சந்­தர்ப்பம் புதிய வரு­ட­மொன்றின் ஆரம்பம். புதிய வரு­டத்தின் உதயம் என்று கூறலாம். எனவே பல தசாப்­தங்­க­ளாக, எமது நாட்டில் இவ்­வா­றான பல வரு­டங்கள் கடந்து சென்­றுள்­ளன. நாம் நல்ல விட­யங்­க­ளுக்குள் காலடி வைத்­தோமா என்ற கேள்­விக்­குறி எமக்குள் இருக்­கி­றது. கடந்த ஒவ்­வொரு வரு­டங்­களும் சிறந்த விட­யங்­க­ளுக்­காக புதுப்­பித்துக் கொண்டு முன்­னோக்கிச் சென்­றோமா? இன்றேல் மோச­மான விட­யங்­களை புதுப்­பித்து கடந்த காலத்­திற்குச் சென்­றோமா? என்ற பிரச்­சினை எம்முன் உள்­ளது. அதனால் இந்த புத்­தாண்­டுடன் எமது நாட்டை புதிய மாற்­றத்­துக்கு உட்­ப­டுத்தும் நிரந்­த­ர­மான நோக்கம் எமக்கு உள்­ளது. அதற்­கான கட­மையும் பொறுப்பும் எம்மை சார்ந்­தி­ருக்­கி­றது. நானும் எனது அமைச்­சர்­களும் பிரதி அமைச்­சர்­களும் அனைத்து அர­சியல் தரப்­புக்­களும் இதற்­கான அர்ப்­ப­ணிப்பை செய்வோம்.

எமது நாட்டில் புது வருடம் புதி­ய­தொரு அர­சியல் கலாச்­சா­ரத்­துடன் ஆரம்­ப­மா­கி­றது. இந்த நாட்டை கட்­டி­யெ­ழுப்ப நாங்கள் அடித்­தளம் இட்­டி­ருக்­கிறோம். அர­சியல் கலா­சாரம், வீண் விரயம், குடும்ப வாரி­சுகள், எல்­லையை மீறி அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தல், அதி­கா­ரத்தை மக்­க­ளுக்கு எதி­ராக பயன்­ப­டுத்தல், மக்­க­ளுக்கு மேலாக இருக்கும் அர­சி­யல்­வா­தி­க­ளாக இருத்தல் என்ற அனைத்­தையும் இல்­லாமல் செய்து மக்­களின் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­யக்­கூ­டிய, மக்­களின் தேவை­யுடன் இசைந்து செல்­லக்­கூ­டிய ஒரு புதிய அர­சியல் கலா­சா­ரத்தை நாங்கள் ஆரம்­பித்­தி­ருக்­கிறோம். புதிய வரு­டத்தின் சவால்­க­ளுக்கு ஈடு­கொ­டுக்கக் கூடிய திட்­டங்­களை நாம் வகுத்­தி­ருக்­கிறோம்.

கடந்த காலங்­களில் எமது பொரு­ளா­தாரம் வங்­கு­ரோத்­தான நிலையில் காணப்­பட்­டது. தற்­போது பொரு­ளா­தா­ரத்தை மேலோட்­ட­மாக பார்க்கும் போது நிலை­பே­றான தன்­மையை உரு­வாக்­கி­யி­ருக்­கிறோம். கடந்த வரு­டத்தின் நடுப்­ப­கு­தியில் வங்­கு­ரோத்து நிலை­யி­லி­ருந்து மீள்­வ­தற்­கான வாய்ப்பு நமக்கு கிடைத்­தி­ருந்­தது. நிதி அமைச்சின் செய­லாளர், மத்­திய வங்­கியின் ஆளுநர், அதி­கா­ரிகள், அர­சியல் துறை என்­பன பாரிய முயற்­சியை மேற்­கொண்­ட­தா­லேயே அந்த இலக்கை அடைய முடிந்­தது. எனவே பொரு­ளா­தா­ரத்தை ஸ்திர­ம­டையச் செய்ய எம்மால் முடிந்­தி­ருக்­கி­றது. அது போது­மா­ன­தல்ல. எமது பொரு­ளா­தா­ரத்தில் ஏற்­பட்­டி­ருக்கும் பிரச்­சி­னைகள் புதி­ய­வை­யாக அமைந்­துள்­ளன. அதற்­காக அர­சியல் வேலைத்­திட்­டத்தை நாம் ஆரம்­பித்­தி­ருக்­கிறோம்.

அதே­போன்று எமது நாடு பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் பல வகையில் பாது­காப்பு அச்­சு­றுத்­தல்­களை எதிர்­நோக்­கி­யி­ருந்­தது. எமது நாட்டின் பாது­காப்பை மிகச் சிறப்­பாக உறு­திப்­ப­டுத்த எம்மால் முடிந்­துள்­ளது என்­பதை மிக மகிழ்ச்­சி­யு­டனும் உறு­தி­யா­கவும் கூறு­கிறோம். கடந்த வரு­டத்தில் அறு­கம்­பையை இலக்கு வைத்து தாக்­குதல் நடத்­தப்­ப­டலாம் என்ற தகவல் கிடைத்­தி­ருந்­தது. எமது பொலிஸார், எமது புல­னாய்வுத் துறை­யினர், எமது முப்­ப­டை­யினர் விறு­வி­றுப்­புடன் செய­லாற்றி நாட்டின் ஸ்திரத்­தன்­மை­யையும் பாது­காப்­பையும் உறு­தி­ப­டுத்­தி­யுள்­ளனர். அதேபோல் நாட்­டிக்குள் சட்­டத்தின் ஆட்­சியை நிலை­நாட்­டு­வ­தற்­கான பல­மான வேலைத்­திட்டம் எமக்கு இருக்­கி­றது. எமது நாட்டில் நீண்ட கால­மாக சட்­டத்தின் ஆதிக்கம் கருத்­தில்­கொள்­ளப்­ப­டாத நிலைமை காணப்­பட்­டது.

குறிப்­பாக குற்­ற­வா­ளி­களும் மோச­டிக்­கா­ரர்­களும் சட்­டத்­துக்கு மேலாக இருக்கும் வகையில் அர­சியல் துறை இருந்­தது. தனக்கு தேவை­யான மற்றும் தாம் நினைத்­த­வாறு சட்­டத்தை மீறிச் செல்லும் நிலைமை காணப்­பட்­டது. அர­சி­ய­ல­மைப்பை மீறினர். எமது நாட்டின் முன்னாள் ஜனா­தி­ப­திகள் அர­சி­ய­ல­மைப்பை மீறி­யி­ருப்­ப­தாக பல சந்­தர்ப்­பங்­களில் உயர் நீதி­மன்­றத்தில் தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. நாட்டின் முதல் பிரஜை சட்­டத்தின் ஆதிக்­கத்தை சிதைக்கும் நாட்டில், சட்ட ஒழுங்கு பற்றி என்ன பேசு­வதோ என்­பதை கேட்­கிறேன். எனவே நாம் சட்­டத்தின் ஆட்­சியை உறு­திப்­ப­டுத்த பாரிய முயற்­சி­களை மேற்­கொள்­கிறோம். அதேபோல் எமது நாட்டின் அரச கட்­ட­மைப்பு, அர­சியல் கட்­ட­மைப்பு மற்றும் முழு சமூ­கத்­திற்­குள்ளும் ஊழல் மோசடி, வீண் விரயம் என்­பன பர­வி­யுள்­ளன. எமது முழு நாட்­டுக்­குள்ளும் புற்­று­நோ­யினைப் போல பர­வி­யுள்­ளது.

ஊழல் மோச­டியை நிறுத்த நாம் பாரிய முயற்­சி­களை எடுக்க வேண்­டி­யுள்­ளது. அதற்குள் எமது நாட்டின் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு பெரும் பணி உள்­ளது. அதற்­கான பணியை ஆற்­று­வ­தற்கு தேவை­யான ஒத்­து­ழைப்பை சட்­டமா அதிபர் திணைக்­களம் வழங்­கு­மென நம்­பு­கிறேன்.

அதேபோல் குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­களம் நீதி­மன்றக் கட்­ட­மைப்­புக்கு மீண்டும் எமது நாட்டை ஊழல், மோசடி அற்­ற­தாக மாற்­று­வது தொடர்­பி­லான பணிக்­காக அர்ப்­ப­ணிக்கும் என்று நம்­பு­கிறோம். அர­சியல் அதி­கார தரப்பு என்ற வகையில் செயற்­பா­டுகள் வாயி­லாக ஊழலை தடுக்­கவும் மோச­டியை தடுக்­கவும் நாம் முன்­மா­தி­ரி­யாக செயற்­ப­டுவோம். ஆனால் அர­சியல் தரப்பின் முன்­னு­தா­ர­ணமும் தலை­யீடும் மாத்­திரம் போது­மா­ன­தல்ல. அதற்­கான அரச நிறு­வ­னங்கள் தம்­மீ­தான பொறுப்­புக்­களை சரி­யாக புரிந்­து­கொண்டு அந்த மாற்­றத்­திற்கு தேவை­யான உதவி, ஒத்­து­ழைப்­புக்­களை எமக்கு வழங்­கு­மாறு கோரு­கிறேன்.

எந்­த­வொரு வலு­வான வேலைத்­திட்­டத்தை ஆரம்­பிக்­கவும், வலு­வான அடித்­தளம் அவ­சி­ய­மாகும். எமது நாடும் தேசமும் அத்­தி­வாரம் இழந்த நாடாகும். அடிப்­படை இழந்த நாடாகும். அதனால் அதற்­கான ஆரம்ப பிர­வே­சத்தை குறிப்­பி­டத்­தக்க அளவு சாத­க­மாக நிறைவு செய்­தி­ருக்­கிறோம். இந்த நாட்டை மீள­மைப்­ப­தற்கு தேவை­யான அத்­தி­வாரம், அடித்­த­ளத்தை அமைக்க வேண்டும்.

அர­சியல் அதி­காரம், அரச பொறி­முறை, சட்­டத்தின் ஆதிக்கம் என்­ப­வற்றை போலவே அர­சி­ய­ல­மைப்­பிற்கு மதிப்­ப­ளித்தல் மற்றும் பாது­காத்தல் மற்றும் ஊழல்,மோச­டி­களை ஒழித்தல் என்­ப­வற்­றுக்­கான இந்த அத்­தி­வாரம் நாட்டை முன்­னோக்கி கொண்டுச் செல்ல எமக்கு தேவைப்­ப­டு­கி­றது. நாம் மிகத் துரி­த­மாக திட்­ட­மி­டலின் அடிப்­ப­டையில் இந்த அத்­தி­வா­ரத்தை கட்­டி­யெ­ழுப்பிக் கொண்­டி­ருக்­கிறோம். எமது பிர­ஜை­க­ளுக்­காக கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டுள்ள அத்­தி­வா­ரத்தின் அடிப்­ப­டையில் உரு­வா­கின்ற பெரும் பொரு­ளா­தா­ரத்தின் பலன்கள் பர­வ­லாக சென்­ற­டைய வேண்டும். அதனால் எமது நாட்டில் எமது அர­சாங்­கத்தின் பிர­தான வேலைத்­திட்­டங்கள் மூன்றும், பிர­தான மூன்று நோக்­கங்­களை மையப்­ப­டுத்தி கொண்டுச் செல்­லப்­ப­டு­கி­றது. அதன் முதன்மை நோக்­க­மாக நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் வறு­மையில் இருந்து மீட்க வேண்டும் என்­பதே காணப்­ப­டு­கி­றது.

கிரா­மிய மக்கள் வரையில் பொரு­ளா­தா­ரத்தின் பலன்கள் கொண்டு செல்­வ­தற்கு தேவை­யான பொரு­ளா­தார சீர்­தி­ருத்­தங்­களைச் செய்­யும்­போது, பொரு­ளா­தாரம் மிகச் சிறிய குழுவின் மீது குவிந்­தி­ருப்­பது சமூ­கத்­திற்குள் ஒரு­போதும் ஸ்திரத்­தன்­மையைக் கொண்­டு­வ­ராது. பொரு­ளா­தாரம் ஒரு சிறிய குழு­விடம் குவிந்­தி­ருப்­பது நாட்­டிலும் மக்­க­ளி­டமும் நிலை­யற்ற தன்­மையை உரு­வாக்கும். எனவே, பொரு­ளா­தா­ரத்தில் ஸ்திரத்­தன்மை உரு­வாக வேண்­டு­மெனில் பொரு­ளா­தா­ரத்தின் பலன்கள் கிரா­மிய மக்கள் வரையில் சென்­ற­டைய வேண்டும்.

எனவே, எதிர்­வரும் வரவு செலவுத் திட்­டத்­தினை நமது நாட்டில் வறுமை ஒழிப்பை நோக்­க­மாகக் கொண்ட திசையை நோக்கி நகர்த்தும் ஒரு பொரு­ளா­தாரத் வேலைத்­திட்­டத்தின் ஆரம்­ப­மாக்­கு­வ­தற்கு நாங்கள் தயா­ராக உள்ளோம். எமது இரண்­டா­வது இலக்கு இந்த நாட்டை டிஜிட்டல் மய­மாக்­கு­வ­தாகும். செயல்­தி­ற­னற்ற வீண் விர­யத்தை குறைத்தல் மற்றும் ஊழல்,மோச­டியை மட்­டுப்­ப­டுத்­தவும் பிர­ஜை­க­ளுக்கு மிக இல­கு­வாக அர­சாங்­கத்­துடன் இருக்­கின்ற தொடர்பை தொடர்ச்­சி­யாக பேணிக்­கொள்­ளவும் தேவை­யான அடித்­த­ளத்தை டிஜிட்டல் மய­மாக்கல் உரு­வாக்கும்.

எமது அடுத்த முக்­கிய திட்டம் Clean Sri Lanka. இது சுற்­றுச்­சூ­ழலை தூய்­மைப்­ப­டுத்­து­வது தொடர்­பி­லா­னது மட்­டு­மல்ல. இது முழு­மை­யாக சிதைந்து போயுள்ள சமூகக் கட்­ட­மைப்­பினால் அநா­த­ர­வான நிலை­யி­லி­ருக்கும் எமது தாய்­நாட்டை மீள­மைப்­ப­தற்­காக அனைத்துத் துறை­க­ளிலும் செய்­யப்­படும் தூய்­மை­யாக்­கலை காண்­பதே எமது நோக்­க­மாகும்.

நான் சில விட­யங்­களை எடுத்­துக்­கூ­று­கிறேன். அது எவ்­வ­ளவு முக்­கி­ய­மா­னது என்­பதை நீங்கள் புரிந்­து­கொள்­வீர்கள். குறிப்­பாக நமது நாடு மிக அழ­கான சுற்­றுச்­சூழல் கட்­ட­மைப்பைக் கொண்­டுள்­ளது. நமது நாடு மிக முக்­கி­ய­மான அமை­வி­டத்தை கொண்­டுள்­ளது. அது மிக உயர்­வான முக்­கி­யத்­து­வ­மாகும். எந்­த­வொரு வெளி­நாட்­ட­வரை சந்­தித்­தாலும், உங்­க­ளுக்கு அழ­கான இலங்கை இருக்­கி­றது என்றே கூறுவர்.

ஆனால் இந்த இலங்­கையில் இன்று என்ன நடந்­துள்­ளது? சிறந்­த­தொரு சுற்­றுச்­சூழல் கட்­ட­மைப்பு உள்ள நாட்டில் 2023ஆம் ஆண்டு யானை – மனித மோதலால் நூற்று எண்­பத்­தி­ரண்டு பேர் கொல்­லப்­பட்­டுள்­ளனர். மேலும் 2023 ஆம் ஆண்டில் 484 யானைகள் மனி­தர்­களால் கொல்­லப்­பட்­டுள்­ளன. சிறந்த அழ­கி­ய­லுடன் கூடிய சுற்­றுச்­சூழல் கட்­ட­மைப்பு இருந்­தாலும் வரு­டத்­திற்கு 484 யானைகள் இறக்கும் நாடாக இருக்­கிறோம்.

யானை­க­ளினால் 182 பேர் கொல்­லப்­பட்­டுள்­ளனர். அதேபோல், வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு கார­ண­மாக பெரு­ம­ள­வானோர் இடப்­பெ­யர்­கின்­றனர். உயி­ரி­ழப்பு, பெரும் பொரு­ளா­தார இழப்­புகள் ஏற்­ப­டுத்­து­கின்­றன. எனவே, சுற்­றுச்­சூழல் கட்­ட­மைப்பை மீள­மைப்­பதை Clean Sri Lanka வேலைத்­திட்­டத்தின் மிக முக்­கி­ய­மான அங்­க­மாக கருத வேண்டும்.

நமது நாட்­டுக்கும் நாட்டின் பிர­ஜை­க­ளுக்கும் புதிய மதிப்­புக்கள் மற்றும் புதிய நெறி­மு­றைகள் அவ­சி­யப்­ப­டு­கின்­றன. மிகத் தவ­றான விட­யங்­களை நாம் மதிப்­பாக புரிந்து கொண்­டுள்ளோம். இன்று இந்த சமு­தா­யத்­திற்குள் ஒரு புதிய மதிப்பு கட்­ட­மைப்­பொன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். இதனை எங்­கி­ருந்து ஆரம்­பிப்­பது?

முதலில், தமது வாழக்கை பற்­றிய தமது மதிப்பு அவ­சி­ய­மா­கி­றது. நான் நினைக்கும் வகையில் எமது நாட்டில் பெரும்­பா­லான பிர­ஜை­க­ளுக்கு தமது வாழ்க்கை தொடர்பில் மதிப்பு கிடை­யாது ஏன் அவ்­வாறு சொல்­கிறேன்? கடந்த வரு­டத்தில் ஐந்­நூற்று தொண்­ணூற்­றைந்து பேர் கடலில் அல்­லது நீர்த்­தேக்­கங்­களில் அல்­லது கிணற்றில் அல்­லது குளத்தில் விழுந்து இறந்­துள்­ளனர்.நீரில் மூழ்கி ஐந்­நூற்று தொண்­ணூற்­றைந்து பேர் இறந்­துள்­ளனர் என்­ப­தி­லி­ருந்து என்ன தெரி­கி­றது? 2321 பேர் விபத்­துக்­க­ளினால் இறந்­துள்­ளனர். நாளொன்­றுக்கு ஏழு பேர் வாகன விபத்­துக்­களால் இறக்கும் நாடு உரு­வா­கி­யுள்­ளது. அதனால் வாழ்வின் மதிப்­புக்­களை பற்றி அறி­யாத சமு­தாயம், பிறர் வாழ்வு குறித்து அக்­கறை இல்­லாத சமூகம் உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

எனவே, இந்த சமூ­கத்தை மீண்டும் குணப்­ப­டுத்த வேண்டும். இந்த சமூ­கத்தில் புதிய நெறி­மு­றையும்,புதிய மதிப்பு முறையும் உரு­வாக்­கப்­பட வேண்டும். எமது Clean Sri Lanka வேலைத்­திட்­டத்தின் கீழ், சமூ­கத்­திற்கு ஒரு புதிய நெறி­முறைக் கட்­ட­மைப்­பையும், மதிப்புக் கட்­ட­மைப்­பையும் உரு­வாக்­குவோம். வாகன விபத்­து­களை குறைக்க வேண்டும். அதற்­காக, நான் முதலில் சட்­டத்தின் மீது நம்­பிக்கை கொள்­ள­வில்லை. மக்கள் மீதே நம்­பிக்கை கொண்­டுள்ளேன்.

அதற்­காக மக்­களின் ஒத்­து­ழைப்பும் தலை­யீடும் அவ­சியம். அவர்கள் அவ்­வாறு செய்­யா­விட்டால் நாம் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த தயார். மிகவும் நெகிழ்வுத் தன்­மை­யுடன் இந்த மாற்­றத்தை ஏற்­ப­டுத்த நாம் தயார். நெகிழ்வுத் தன்­மை­யுடன் இந்த திருப்­பு­மு­னையை ஏற்­ப­டுத்த எவ­ரேனும் தடை­யாக நிற்கும் பட்­சத்தில், இந்த சமூ­கத்தை மீண்டும் குணப்­ப­டுத்த கடு­மை­யான முறையில் திருப்­பு­மு­னையை ஏற்­ப­டுத்­தவும் நாம் தயார்.

அதேபோல், எமது நாட்டின் பிர­ஜை­க­ளுக்கு தாம் சந்­தை­களில் கொள்­வ­னவு செய்யும் உணவுப் பொருட்கள் குறித்து நம்­பிக்கை உள்­ளதா? அதனால் எமது நாட்டு பிர­ஜை­க­ளுக்கு விச­மற்ற உணவு வேளையை வழங்கும் பொறுப்பு நாடு என்ற வகையில் எமக்கு இருக்­கி­றது.

பொறுப்பை நிறை­வேற்­று­வதும் இந்த Clean Sri Lanka வேலைத்­திட்­டத்தில் உள்­ள­டக்கப்பட்­டுள்­ளது. மேலும், ஒரு சமூ­கத்­தினால் நமது பிர­ஜைகள், நம் நாட்டின் அங்­க­வீ­ன­முற்ற சமூ­கங்கள் என்­ப­வற்றை பரா­ம­ரிக்க வேண்டும். இது சமூக நீதி தொடர்­பான பிரச்­சி­னை­யாகும். வயது முதிர்ந்­த­வர்கள் என்ற கார­ணத்­தினால் அவர்­களை சமூ­கத்தில் இருந்து ஒதுக்கி வைக்க முடி­யுமா? அவர்கள் அங்­க­வீ­ன­ம­டைந்­துள்­ளதால் சமூ­கத்­திற்கு பங்­க­ளிப்­ப­வ­ராக இல்­லாமல் இருப்­பதால் அவர்­களை ஒதுக்­கி­வைக்க முடி­யுமா? அப்­ப­டிப்­பட்ட சமு­தாயம் ஒரு­போதும் நல்ல சமு­தா­ய­மாக மாறாது. தங்­க­ளுக்கு அருகில் உள்ள மாற்­றுத்­தி­ற­னாளி சமூகம், தங்கள் அருகில் உள்ள முதி­ய­வர்கள், தங்கள் அருகில் இருக்கும் பெண்கள், இளை­ஞர்கள் மீது இந்த சமூ­கத்­திற்கு கருணை இல்­லை­யென்றால் அந்த சமூகம் குறித்து அன்போ அக்­க­றையோ,பரா­ம­ரிப்போ இல்­லா­விட்டால் அந்த சமு­தாயம் நல்ல சமு­தா­ய­மாக மாறாது. அந்தச் சமூகம் பிறரைப் பற்றி குறிப்­பி­டத்­தக்க அளவில் சிந்­திக்­காத குரூ­ர­மான மனப்­பான்­மை­யுள்ள சமூகம்.

எனவே, அந்த சமூ­கத்தில் புதிய மனப்­பாங்கை உரு­வாக்க வேண்டும்.
பொதுச் சொத்­துக்­களைப் பாது­காக்க வேண்டும். நம் நாட்டில் நீண்ட கால­மாக, குடி­மக்கள் மத்­தியில் பொது சொத்­துக்கள் தொடர்பில் சிறப்­பான மனப்­பாங்கு காணப்­பட்­டது. ஆனால் இன்று என்ன நடந்­துள்­ளது என்றால் தனது தனிப்­பட்ட சொத்­துக்­களின் மீதுள்ள மதிப்பு தொடர்­பான உணர்வு பொதுச் சொத்­துக்­களை பாது­காப்­பதில் இல்லை. அர­சொன்றை உரு­வாக்­கு­வதில் அதன் பொதுச் சொத்­துக்கள் மீதான அனை­வ­ரி­னதும் தேவை பற்­றிய உணர்வு உள்­ளது.

அதனை தமக்­காக மாத்­திரம் பாது­காப்­பது கிடை­யாது. இவை அனைத்தும் தற்­கா­லத்தில் வாழும் நம் தலை­மு­றைக்­காக மாத்­தி­ரமா? இவை யாவும் எமது தலை­மு­றையில் அழிந்து விடுமா? எதிர்­கால சந்­த­திக்­காக இவற்றைப் பாது­காப்­பது தற்­போ­தைய தலை­மு­றையின் பொறுப்­பாகும். அதனால் ‘’கிளீன் ஸ்ரீ லங்கா’’ திட்­டத்தில் இதனை செயற்­ப­டுத்த தயா­ராக இருக்­கிறோம். குறிப்­பாக அரச இயந்­திரம் மற்றும் அர­சியல் அதி­கா­ரத்­தினை மிக விரை­வான செயல்­தி­ற­னுக்கு கொண்டு வரப்­பட வேண்டும் என்­பதை நாம் அறிவோம். ஒவ்­வொரு குடி­ம­கனும் தனக்கு ஒதுக்­கப்­பட்ட பொறுப்­புக்கு பொறுப்புக் கூற வேண்டும். பொறுப்பை புறக்­க­ணித்தால், ஒரு­வரின் பொறுப்பின் எடை சரிந்­து­விடும்.

எனவே, இந்தக் கட்­ட­மைப்பு பல்­வேறு அரச, அர­சியல்,தனியார் துறை என பல்­வேறு கட்­ட­மைப்­பு­களில் மீது கட்­ட­மைக்­கப்­பட்டு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்த கட்­ட­மைப்பின் அங்­கத்­த­வர்கள் தங்­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட பொறுப்பை நிறை­வேற்­றா­விட்­டாலோ அல்­லது அந்த பொறுப்பை கைவிட்­டாலோ, அந்த பொறுப்பை புறக்­க­ணித்­தாலோ அது கட்­ட­மைப்­பிற்கே மிகவும் தீங்கு விளை­விக்கும் சூழ்­நி­லையை உரு­வாக்­கு­கி­றது. எனவே, நீங்கள் உங்கள் பொறுப்­பிற்கு பொறுப்புக் கூற தயா­ரா­கு­மாறு குறிப்­பாக அரச சேவை­யிடம் கோரு­கிறோம். அதற்கு இன்று பல முன்­னு­தா­ர­ணங்கள் உள்­ளன.

இன்று, இலங்­கையில் பொரு­ளா­தார ரீதி­யா­கவும் பாது­காப்பு விட­யத்­திலும் மிக முக்­கி­ய­மான பல துறை­களை நிர்­வ­கிக்கும் நிறு­வ­னங்­களை எமது அர­சாங்கம் கொண்­டுள்­ளது. அந்த நிறு­வ­னங்­களில் பெரு­ம­ள­வான நிறு­வ­னங்­களின் தலை­வர்கள் தாமாக முன்­வந்து தொண்டர் அடிப்­ப­டையில் பணி­யாற்­று­கின்­றனர். எயார் லங்­காவின் தலை­வரைப் போன்றே டெலிகாம் நிறு­வ­னத்தின் தலைவர், போர்ட் சிட்டி நிறு­வ­னத்தின் தலைவர், முத­லீட்டுச் சபையின் தலைவர், எரி­வாயு நிறு­வ­னத்தின் தலைவர் போன்ற பல திற­மை­யா­ன­வர்கள் மிகவும் தொழில்­முறை திறன்­களைக் கொண்­டுள்­ள­வர்கள் தொண்டர் அடிப்­ப­டையில் பணி­யாற்­று­கின்­றனர்.

அதே போன்று தனிப்­பட்ட ரீதியில் நோக்­கினால் எனது ஆலோ­ச­கர்கள் மூவரும் அர­சிடம் இருந்து ஒரு ரூபாய் கூட சம்­பளம் பெறாமல் பணி­பு­ரி­கின்­றனர். டிஜிட்டல் மய­மாக்­கலில் அனு­பவம் உள்ள இலங்­கையில் பிறந்த மிக சிரேஷ்ட நிபு­ண­ரான அவர், தொண்டர் அடிப்­ப­டையில் பணி­யாற்­று­கிறார். அறி­வியல் மற்றும் ஆராய்ச்சி தொடர்­பான அமெ­ரிக்கப் பல்­கலைக் கழ­கத்தில் பணி­பு­ரிந்த அவர், அத்­து­றையில் பல ஆய்­வு­களை மேற்­கொண்­டுள்ளார்.அவர் தொண்டர் அடிப்­ப­டையில் பணி­யாற்­று­கிறார்.பொரு­ளா­தாரம் தொடர்பில் நிறைய நடை­முறை அனு­ப­வங்­களைக் கொண்­டி­ருக்கும் அவர் தொண்டர் அடிப்­ப­டையில் பணி­யாற்­று­கிறார்.

இவ்­வா­றான அர­சியல் தான் நம் நாட்­டுக்கு தேவை. இந்த நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப, இது­போன்ற புதிய அனு­ப­வங்­களைக் கொண்ட மாற்றம் வேண்டும். சம்­பளம் பெறாமல் ஒரு மணி நேரம் யாரும் வேலை செய்ய மாட்­டார்கள் என்ற நிலையில் இந்த புதிய அனு­பவம் காணப்­ப­டு­கி­றது.

ஆனால், அவர்கள் தங்கள் அறி­வையும், நேரத்­தையும், உழைப்­பையும், உயர்ந்த தொழில்­க­ளையும் விட்­டு­விட்டு தொண்டர் அடிப்­ப­டையில் பணி­யாற்றத் தொடங்­கி­யுள்­ளனர். ஒரு சிறந்த முன்­மா­திரி நம் நாட்­டிற்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளது. நாம் எழுச்சி பெறு­வ­தற்கு ஒரு வாய்ப்பு கிடைத்­துள்­ளது என்­பதைச் உங்­க­ளுக்கு சொல்­கிறேன். இதனை கடைசிச் சந்­தர்ப்பம் என்று நான் ஒரு­போதும் கூற மாட்டேன். மக்­க­ளுக்கு கடைசி சந்­தர்ப்பம் என்று சந்­தர்ப்பம் கிடை­யாது. மக்­க­ளுக்கு வாய்ப்­புகள் உள்­ளன. ஒரு தேச­மாக ஒரு நாடாக எழுந்து நிற்­ப­தற்கு வாய்ப்பு இன்று கிடைத்­துள்­ள­தாக நாம் நினைக்­கிறோம்.

இந்த நாட்டின் பிர­ஜை­க­ளிடம் நான் கேட்­பது என்­ன­வென்றால், இந்த வாய்ப்பை தவ­ற­வி­டப்­போ­கி­றீர்­களா?, இந்த வாய்ப்பை உறு­தி­யாகப் புரிந்­து­கொண்டு, நம் நாட்டை முன்­னேற்­றத்­திற்­காக தங்கள் பங்கை ஆற்றத் தயாரா என்ற கேள்­வியை உங்­க­ளிடம் கேட்­கிறேன். இது வெறும் நாட்டின், அரசின் பொறுப்பு மட்­டும்­தானா? இது வெறும் அர­சியல் நிகழ்ச்சி நிரலா? இல்லை இது ஒரு கூட்டு முயற்சி.

உலகின் பல்­வேறு நாடுகள் வெவ்­வேறு சந்­தர்ப்­பங்­களில் சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளன. அதன் தொடக்­கத்தில் இருந்தே சவால்கள் இல்­லாமல் பய­ணித்த எந்த ஒரு நாட்­டையும் உலகில் கண்டு கொள்ள முடியும் என்று நான் நினைக்­க­வில்லை. உலகில் உள்ள ஒவ்­வொரு நாடும் வெவ்­வேறு சந்­தர்ப்­பங்­களில் சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளன. அந்­நாட்டின் அர­சியல் அதி­காரம், அரச இயந்­திரம் மற்றும் பொது மக்கள் கூட்­டாக எழுந்து அந்தச் சவால்­களைச் சமா­ளித்து வெற்றி பெற்­றுள்­ளனர். எனவே நாம் நீண்ட வர­லாற்­றிற்கு செல்ல வேண்­டிய அவ­சி­ய­மில்லை. கடந்த 20 ஆம் நூற்­றாண்டை மட்டும் நாம் நினைத்துப் பார்த்தால், ஆசி­யாவில் அமைந்­துள்ள ஏரா­ள­மான நாடுகள் இந்த கூட்டுச் செயற்­பாட்­டினால் எழுச்சி பெற்­றுள்­ளன. ஆனால் நாம் என்ன செய்­துள்ளோம்? சண்­டை­யிட்­டுக்­கொண்டு, ஒரு­வ­ருக்­கொ­ருவர் அவ­நம்­பிக்­கையை உரு­வாக்கி, இன­வாத, மத­வாத, மிக அசிங்­க­மான அர­சியல் சூதாட்­டத்தில் நமது பொதுச் சமூ­கத்தை புதைத்து, ஒரு­வ­ருக்­கொ­ருவர் அவ­நம்­பிக்­கை­யையும், குரோ­தத்­தையும், வெறுப்­பையும் வளர்க்கும் ஆட்­சி­யையே செய்­துள்ளோம். மக்கள் ஒரு­போதும் ஒன்­று­பட்டு நிற்கத் தயா­ராக இல்லை என்றால், இந்தச் சவாலில் இருந்து எம்மால் மீள முடி­யாது. அத­னா­லேயே எமக்கு எழுந்து நிற்கும் வாய்ப்பு கிடைத்­துள்­ளது.

அனைத்து பிரி­வி­னை­க­ளையும் முடி­வுக்கு கொண்டு வர நாம் தயா­ராக உள்ளோம். நாம் ஒன்­றாக இலங்­கையில் பிறந்­த­வர்கள் என்ற வகையில் இந்த நாட்டை கட்­டி­யெ­ழுப்ப நாம் ஒன்­றி­ணைய தயா­ராக உள்ளோம். எனவே, இந்தக் ‘’கிளீன் ஸ்ரீ லங்கா’’ வேலைத்­திட்­டத்தை பொது­மக்­களின் செய­லூக்­க­மான பங்­க­ளிப்­புடன் மட்­டுமே வெற்­றி­கொள்ள முடியும். இல்­லை­யெனில், அர­சாங்­கத்­தி­னாலும் அர­சாங்கம் இயற்றும் சட்­டங்­களால் மற்றும் அரசால் நிய­மிக்­கப்­படும் அதி­கா­ரி­களால் மாத்திரம் இதனை முழுமைப்படுத்த முடியாது. இதற்காக அரசாங்க பொறிமுறை தேவை. அதற்காக பதினெட்டு பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் தொண்டர் அடிப்படையில் பணியாற்றுகிறார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். மேலும் இந்த நோக்கத்திற்காக கிளீன் ஸ்ரீ லங்கா செயலகத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம். மேலும், கிராமம் வரை மக்களை ஒன்று திரட்டுவதற்காக ‘’கிளீன் ஸ்ரீ லங்கா ‘’சபைகளை உருவாக்க எதிர்பார்க்கிறோம். இந்த திட்டம் எப்போது முடிவடையும்? இது நிறைவடையும் திட்டமல்ல. இது மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படும் உலகின் புதிய நிலைமைகளுக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் தம்மை மாற்றிக் கொண்டு அரசை மாற்றியமைக்கும் ஒரு வேலைத்திட்டம். இது ஓரிரு வருட திட்டம் அல்ல. உலகம் வேகமாக மாறி வருகிறது. உலகம் பாரிய சாதனைகளை அடைந்து வருகிறது. சமூக மனப்பாங்குகள், புதிய பெறுமதிகள் மற்றும் புதிய மதிப்புக் கட்டமைப்புகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. அந்த விடயங்களையெல்லாம் உள்வாங்கிய புதிய இலங்கைத் தேசம் இந்த நாட்டில் கட்டியெழுப்பப்படுகிறது.

குறிப்பாக இந்த முயற்சிக்காக தனியான நிதியமொன்றை நிறுவுகிறோம். இந்நாட்டு குடிமக்கள் அந்த நிதியத்திற்கு பங்களிக்கலாம். நிதியமைச்சினால் மேற்பார்வை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

எனவே, இப்பணி நாம் கூட்டு முயற்சியுடன் வெற்றிகொள்ள வேண்டிய பணியாகும், அதற்காக அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறேன். இவற்றைச் சிறப்பாக நிறைவேற்ற முடியும். இந்த வருடம் இனிய வருடமாக அமைய வாழ்த்துகிறேன் என்றும் தெரிவித்தார்.
“கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டத்திற்காக இதன் போது நன்கொடையாளர்கள் நிதி அன்பளிப்புச் செய்தனர்.

மகா சங்கத்தினர், மத குருமார்கள், அமைச்சர்கள், தூதுவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பல்வேறு துறைசார் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.