119 மாண­வர்­களின் பெறு­பேறு நிறுத்தம்

பரீட்­சைகள் திணைக்­களம் அறி­விப்பு

0 879

2018 ஆம் ஆண்­டுக்­கான கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தரப் பரீட்­சைக்குத் தோற்­றிய 119 மாண­வர்­களின் பரீட்சை முடி­வு­களை வெளி­யி­டாது நிறுத்­தி­வைத்­துள்­ள­தாக பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

பல்­வேறு கார­ணங்­க­ளுக்­கா­கவே குறித்த மாண­வர்­களின் பரீட்சை முடி­வு­களை வெளி­யி­டாது ஒத்­தி­வைத்­துள்­ள­தாவும் பரீட்சைத் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தரப் பரீட்சை பெறு­பே­றுகள் நேற்று முன்­தினம் நள்­ளி­ரவு வெளி­யி­டப்­பட்­டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்­பெற்ற உயர்­தரப் பரீட்­சையில் 3 இலட்­சத்து 21 ஆயி­ரத்து 469 பேர் தோற்­றி­யி­ருந்­தனர். பரீட்சை முடி­வு­களின் அடிப்­ப­டையில் இம்­முறை 167,907 பேர் 3 பாடங்களிலும் சித்தி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.