நுவரெலியாவில் கைது செய்யப்பட்ட 8 பேரின் விவகாரம் : குற்றமில்லாமல் குற்றவாளிகளாக்க‌ எடுக்கப்பட்ட முயற்சியின் பின்னணி என்ன?

0 30

எப்.அய்னா

நுவ­ரெ­லியா பொலிஸ் பிரிவில், தப்லீக் பணி­களில் ஈடு­பட்­ட­தாக கூறி 8 இந்­தோ­னே­ஷி­யர்கள் கைது செய்­யப்­பட்டு 14 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்ட பின்னர், கடந்த திங்­க­ளன்று குற்­ற­மற்­ற­வர்கள் என விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். இந்தச் சம்­ப­வத்தின் பின்னால் பாரிய சதிகள் இருந்­துள்­ளமை தொடர்பில் சந்­தே­கிக்க முடி­யு­மான பல்­வேறு தக­வல்கள் கிடைத்­துள்­ளன.

இலங்­கையில் 1950 களில் இருந்து தப்லீக் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், இந்த பணிகள் முஸ்லிம் அல்­லது இஸ்­லா­மிய சமூ­கத்­துக்குள் மட்டும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. 1999ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க சட்­டத்தின் ஊடாக கூட்­டி­ணைக்­கப்­பட்­டுள்ள மர்கஸ் மத்­திய நிலையம் ஊடாக இந்த நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

இந்த தப்லீக் பணி­க­ளுக்­காக (பிர­சாரம்) இலங்­கையில் இருந்து வெளி­நா­டு­க­ளுக்கு முஸ்­லிம்கள் செல்­வதும், வெளி­நா­டு­களில் இருந்து முஸ்­லிம்கள் இங்கு வரு­வதும் காலா கால­மாக நடந்து வரும் ஒரு செயற்­பா­டாகும்.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே ஆன்­மீக சுற்­றுலா என வீசா பெற்று இலங்­கைக்கு வந்த‌ 8 இந்­தோ­னே­ஷி­யர்­களை பொலிஸார் கைது செய்­தமை அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்த சம்­பவம் தொடர்பில் பீ 12408/24 எனும் இலக்­கத்தின் கீழ் இந்த வழக்கு நுவ­ரெ­லிய நீதிவான் நீதி­மன்றில் முதல் தகவல் அறிக்கை ஊடாக (பி அறிக்கை) பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. நுவ­ரெ­லியா பொலிஸ் அத்­தி­யட்சர் பணி­ம­னையின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் கே.எல்.எஸ். நிஷாந்த ஊடாக இந்த அறிக்கை நுவ­ரெ­லிய நீதிவான் பிர­புத்­திகா நாண­யக்­கா­ர­விடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த பீ அறிக்கை பிர­காரம், கடந்த 2024.12.02 ஆம் திகதி நுவ­ரெ­லியா சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் எச்.டி.டப்­ளியூ.பி.ஏ.டப்­ளியூ.ஜி.ஆர்.பீ.எச்.டப்­ளியூ.ஏ.பீ. ஹக்­மன, வயல சுற்­றுலா பிரி­வூ­டாக ஒரு தக­வலை எழுத்து மூலம் நுவ­ரெ­லிய பதில் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரண­துங்­க­வுக்கு அனுப்­பி­யுள்ளார். அந்த தகவல் குறித்தே உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் கே.எல்.எஸ். நிஷாந்த தலை­மை­யி­லான குழு­வினர் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

அதன்­படி, மத்­திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்­தி­நா­யக்க, நுவ­ரெ­லியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்­ளியூ.எஸ்.பி. டி சில்வா ஆகி­யோரின் மேற்­பார்­வையில் நுவ­ரெ­லியா சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் எச்.டி.டப்­ளியூ.பி.ஏ.டப்­ளியூ.ஜி.ஆர்.பீ.எச்.டப்­ளியூ.ஏ.பீ. ஹக்­ம­னவின் அறி­வு­றுத்­தலின் கீழ் இந்த விசா­ர­ணைகள் நடாத்­தப்­பட்­டுள்­ளன.(கடந்த வாரம் இது தொடர்பில் முழு­மை­யான தர­வுகள் விடிவெள்ளியில் பிர­சு­ரிக்­கப்­பட்­டன)

இந்த நிலையில் இந்த விவ­கார வழக்கு கடந்த 16 ஆம் திகதி நுவ­ரெ­லிய நீதிவான் நீதி­மன்றில் மீள விசா­ர­ணைக்கு வந்­தது.

முறைப்­பாட்­டாளர் அல்­லது விசா­ர­ணை­யா­ளர்கள் சார்பில் பொலிஸ் சட்டப் பிரிவின் மத்­திய மாகாண பிரிவின் பணிப்­பாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி நிலுபுல் சோம­சிறி ஆஜ­ரானார். விசா­ரணை அதி­கா­ரி­யான, நுவ­ரெ­லியா பொலிஸ் பொறுப்­ப­தி­காரி ஆஜ­ரா­காமல், சட்டப் பிரிவில் இருந்து உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஒருவர் ஆஜ­ராக காரணம் இருக்­கின்­றது. இந்த சம்­ப­வத்தின் பின்னால் இருந்த சதி தொடர்­பி­லான தக­வல்கள் வெளிப்­பட்­டதால், பொலிஸ் மா அதி­பரின் நேரடி உத்­த­ரவில் இவ்­வாறு சட்டப் பிரிவின் மத்­தி­ய ­மா­காண பணிப்­பாளர் ஆஜ­ரா­ன­தாக தக­வல்கள் உள்­ளன.

இந்த நிலையில் ஆஜ­ரான உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் மன்றில் விட­யங்­களை முன் வைக்கும் போது,
‘கடந்த 2 ஆம் திகதி, நுவ­ரெ­லியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்­ப­தி­காரி, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ரி­ட­மி­ருந்து கிடைக்கப் பெற்ற தக­வல்­க­ளுக்கு அமைய அல் கபீர் ஜும் ஆ பள்­ளி­வா­சலில் இருந்த வெளி­நாட்­ட­வர்கள் தொடர்பில் விசா­ரணை செய்­துள்ளார். அவர்­க­ளிடம் கடவுச் சீட்டு இருக்­கின்­ற‌தா என பார்த்­த­போது, அந்த சந்­தர்ப்­பத்தில் அவர்­க­ளிடம் அவை காணப்­ப­ட­வில்லை. இவர்கள் இந்­தோ­னே­ஷி­யர்கள் என தெரி­ய­வந்­தது. இந்த நிலையில் அவர்கள் கைது செய்­யப்­பட்­டனர். அவர்கள் எதற்­காக அங்கு தங்­கி­யி­ருந்­தனர் என மேல­திக விசா­ரணை செய்­யப்­பட்­டது.

குடி­வ­ரவு குடி­ய­கல்வு கட்­டுப்­பாட்­டா­ள­ரிடம் விசா­ரணை அதி­கா­ரிகள் அறிக்கை கோரிய நிலையில் அவ்­வ­றிக்கை கிடைக்கப் பெற்­றுள்­ளது. அதன்­படி அவர்­க­ளுக்கு 2025 ஜன­வரி 2 மற்றும் 3 ஆம் திக­தி­வரை விசா அனு­மதி இருப்­பது உறுதி செய்­யப்பட்­டுள்­ள‌து.
அவர்கள் தங்­கி­யி­ருந்த பள்­ளி­வா­சலில், அவர்­க­ள‌து ஆன்­மீக நட­வ­டிக்­கை­க­ளையே முன்­னெ­டுத்­துள்­ளனர். எந்த ஒரு பிர­சா­ரங்­க­ளையோ அல்­லது சட்ட விரோத செயல்­க­ளையோ அவர்கள் முன்­னெ­டுத்­த­தாக விசா­ர­ணை­களில் எந்த வெளிப்­ப‌­டுத்­தல்­களும் இல்லை. இவ்­வி­சா­ர­ணை­களில் சுமார் 8 பேரின் வாக்கு மூலங்­களை பதிவு செய்­துள்ள போதும் எந்­த­வொரு குற்றச் செயலும் அதில் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. எனவே விசா­ர­ணை­களை நிறைவு செய்­வ­துடன் இந்த 8 பேரையும் குற்­ற­வியல் நடை­முறை சட்டக் கோவையின் 120 (3) ஆம் அத்­தி­யாயம் பிர­காரம் விடு­விக்­கு­மாறு கோரு­கின்றேன்.’ என தெரி­வித்தார்

இதற்கு முன்­ன­தா­கவே, நுவ­ரெ­லியா நீதிவான் நீதி­மன்றில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் தலை­மையில் சட்­டத்­த­ர­ணி­க­ளான வஸீமுல் அக்ரம், ஷஹ்மி பரீட், சிந்­தக்க மக­நா­ராச்சி, சந்­தீப கம எத்தி ஆகியோர் அடங்­கிய குழு 21 பக்­கங்­களை கொண்ட எழுத்து மூல சமர்ப்­ப­ணங்­களை முன் வைத்­தி­ருந்­தது. அதில் மிகத் தெளி­வாக குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்­டத்தின் கீழ் எந்­த­வொரு குற்­றமும் இந்த 8 பேர் தொடர்­பிலும் வெளிப்­ப­ட­வில்லை என்ற விடயம் மிகத் தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்தது.

குறிப்­பாக பொலிஸார் பீ அறிக்கை ஊடாக கூறி­யி­ருந்த குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்­டத்தின் 10 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழான குற்றம் தொடர்­பிலும் எந்த வெளி­பப்­டுத்­தலும் இல்லை என இந்த எழுத்து மூல சமர்ப்­ப­ணத்தில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் தலை­மையில் சட்­டத்­த­ர­ணி­க­ளான வஸீமுல் அக்ரம், ஷஹ்மி பரீட், சிந்­தக்க மக­நா­ராச்சி, சந்­தீப கம எத்தி குழு சுட்­டிக்­காட்­டி­யி­ருந்த நிலையில், டெனி எதிர் சிறி­னிமல் சில்வா வழக்குத் தீர்ப்பை முன்­னி­றுத்தி நீதிவான் பொலி­ஸாரின் இறப்பர் முத்­தி­ரை­யாக செயற்படக் கூடாது என்­பதை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர்.

இத­னை­விட மேலும் பல வழக்குத் தீர்ப்­புக்­க­ளையும் முன்­னி­றுத்தி 8 இந்­தோ­னே­ஷி­யர்­களும் விடு­விக்­கப்­பட வேண்டும் என குறிப்­பிட்­டி­ருந்­தனர்.

இவ்­வா­றான நிலையில் கடந்த 16 ஆம் திகதி சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் மற்றும் சட்­டத்­த­ரணி வஸீமுல் அக்ரம் ஆகி­யோரின் அறி­வு­றுத்­தல்கள் பிர­காரம் இந்­தோ­னே­ஷிய பிர­ஜை­க­ளுக்­காக சட்­டத்­த­ர­ணி­க­லான‌ சஜீவ கெள­ஷல்ய டயஸ், சிந்­தக்க மக­நா­ராச்சி, சந்­தீப கம எத்தி ஆகி­யோ­ருடன் சட்­டத்­த­ரணி ஷஹ்மி பரீட் ஆஜ­ரானார்.

சட்­டத்­த­ரணி ஷஹ்மி பரீட் இதன்­போது, ‘இவர்கள் ஆன்­மீக சுற்­றுலா எனும் அடிப்­ப­டையில் இலங்­கைக்கு வந்த இந்­தோ­னே­ஷிய நாட்டு முஸ்­லிம்கள். இவர்­களை கைது செய்து விசா­ரிக்கும் போது பொலிஸார் முறை­யான, அர­சினால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட மொழி பெயர்ப்­பா­ள‌ரின் உத­வியைப் பெற்­றுக்­கொள்­ள­வில்லை. அதனால் பிரச்­சாரம், ஒன்­று­கூடல் , அனுஷ்­டானங்கள் போன்ற விட­யங்கள் தவ­றாக புரிந்­து­கொள்­ள‌ப்பட்­டுள்­ளன.

இவர்­க­ளுக்கு செல்­லு­ப­டி­யான கடவுச் சீட்டு மற்றும் வீசா இருப்­பதால், இவர்கள் இலங்­கைக்குள் எந்த சட்ட விரோத செயற்­பா­டு­க­ளிலும் ஈடு­ப­ட­வில்லை என்­பதை விசா­ர­ணை­யா­ளர்­களே ஏர்­றுக்­கொண்­டுள்ள பின்­ன­ணியில் இவர்­களை குற்­ற­வியல் நடை­முறை சட்டக் கோவையின் 120 ( 3) ஆம் அத்­தி­யாயம் பிர­காரம் அவர்­களை விடு­விக்­கு­மாறு கோரு­கின்றேன்.’ விட­யங்­களை முன் வைத்­தி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து விட­யங்­களை ஆராய்ந்த நீதிவான் பிர­புத்­திகா நாண்­யக்­கார,
‘ இந்த விவ­கா­ரத்தில் குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்­டத்தின் கீழ் மன்­றுக்கு விட­யங்கள் முன் வைக்­கப்பட்­டி­ருந்தன. இப்­போது முறைப்­பாட்­டாளர் தரப்பு குற்­ற­வியல் நடை­முறை சட்­டத்தின் 120 (3) ஆம் அத்­தி­யாயம் கீழ் விசா­ர­ணை­களை நிறைவு செய்து அறிக்கை சமர்ப்­பித்து, எந்த சட்ட விரோத செயற்­பா­டு­களும் நடக்­க­வில்லை என கூறி­யுள்­ளனர். இவர்­க­ளுக்கு செல்­லு­ப­டி­யான கடவுச் சீட்டு மற்றும் வீசாவும் இருப்­ப­தாக உறுதி செய்­யப்பட்­டுள்­ளது.

குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்­டத்தின் 16 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமைய, மத பிரச்­சாரம், பிர­சங்கம் செய்­வது குற்­ற­மாகும். அது அச்­சட்­டத்தின் 45 (1) ( அ) பிரிவின் கீழ் தண்­டனைக்குரிய குற்றம் என்­பதால் அது தொடர்பில் முறைப்­பாட்­டா­ளர்­க­லிடம் அவ்­வா­றான விட­யங்கள் ஏதும் வெளிப்­பட்­டுள்­ளதா என வின­வினேன். எனினும் அவ்­வாறு எந்த குற்­றங்­களும் இடம்­பெ­ற­வில்லை எனவும், மொழி பெயர்ப்பு சிக்கல் கார­ண­மாக இதற்கு முன்னர் அது தொடர்பில் சில விடயங்கள் அறி­விக்­கப்பட்­ட­தாக அவர்கள் தெரி­விக்­கின்­றனர்.

இந்த நிலையில் செல்­லு­ப­டி­யான கடவுச் சீட்டு, வீசா காணப்­படும் நிலையில், எந்த சட்ட விரோத செயல்கள் குறித்தும் விசா­ர­ணையில் வெளிப்ப­டுத்­தப்­ப­டாத பின்­ன­ணியில் குற்­ற­வியல் சட்­டத்தின் 120 (3) ஆம் அத்­தி­யாயம் பிர­காரம் இந்த நீதி­மன்றம் விடு­விக்­கின்­றது. என அறி­வித்து வழக்கை முடி­வு­றுத்­தினார்.

உண்­மையில் இந்த விவ­கா­ரத்தை வெறு­மனே வீசா விதி மீறல் சம்­ப­வ­மாக அல்­லது தற்செய­லாக பொலிஸார் கைது செய்­ததன் விளை­வாக பார்க்க முடி­ய­வில்லை. இதன் பின்னால் ஒரு சதி இருந்­தி­ருப்­பதை இவ்­வி­சா­ர­ணை­களின் ஆரம்பம் முதல் பார்க்கும் போது தெளி­வாக அவ­தா­னிக்க முடி­கின்­றது.

குறிப்­பாக இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த நுவ­ரெ­லியா பதில் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் உள்­ளிட்­டோரின் செயற்­பா­டுகள் இது தொடர்பில் சந்­தே­கிக்­கத்­தக்­கது. குறித்த இந்­தோ­னே­ஷி­யர்கள் விவ­கா­ரத்தில் வீசா பிரச்­சி­னைகள் எதுவும் இல்லை என்று தெரிந்­து­கொண்டே இதனை வேறு ஒரு கோணத்­துக்கு திசை திருப்ப இந்த பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் தலை­மை­யி­லான குழு முயன்­ற­தாக தோன்­று­கின்­றது.

எனினும் இந்த விட­யத்தில் மர்கஸ் மத்­திய நிலையம் மற்றும் அகில இலங்கை ஜம் இய்­யதுல் உலமா சபை ஆகிய தலை­யீடு செய்து விட­யத்தை கையாண்­டி­ருந்­தன. அத்­துடன் மன்றில் ஆஜ­ரா­காத பல ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணிகள் இந்த விட­யத்­துக்கு தேவை­யான அறி­வு­றுத்­தல்கள் உத­வி­களை வழங்­கி­யி­ருந்த நிலையில், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் தலை­மை­யி­லான குழு முழு மூச்சாக இந்த விட­யத்தில் சட்டப் போராட்­டத்தில் ஈடு­பட்­டது.

குறிப்­பாக எந்த சட்டவிரோத செயல்களிலும் ஈடு­ப­டாத இந்த இந்­தோ­னே­ஷி­யர்­களை குற்­ற­வா­ளி­க­ளாக காட்ட பாரிய முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

எமக்கு கிடைத்த தக­வல்கள் பிர­காரம், கடந்த 16 ஆம் திகதி வழக்கு மீள விசா­ர­ணைக்கு அழைக்­கப்பட்ட போது, குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்­டத்தின் பிர­காரம் குற்­றத்தை ஒப்­புக்­கொண்டால் வழக்கை ஒரே நாளில் முடி­வு­றுத்­தலாம் என பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் தரப்பில் இருந்து தகவல் பறி­மாற்­ற‌ப்­பட்­டுள்­ளது. எனினும் குற்றம் எதுவும் செய்­யாமல் எதற்­காக இவ்­வாறு பொலிஸ் தரப்­பி­லி­ருந்து மூன்றாம் தரப்­பொன்­றூ­டாக இவ்­வாறு குற்­றத்தை ஒப்­புக்­கொள்­ள­வைக்க முயற்­சிக்­கப்­பட்­டன என்­பது தொடர்பில் பாரிய சந்­தேகம் எழுந்­துள்­ளது. குறிப்­பாக எந்த நியா­ய­மான கார­ணி­களும் இன்றி கைது செய்­யப்­பட்ட இந்த 8 பேருக்கும் பிணை­ய­ளிப்­பதை கூட தடுப்­ப­தற்கு இரு வேறு சந்­தர்ப்­பங்­களில் இந்த பொலிஸ் குழு எந்த அடிப்­ப­டையும் இன்றி எதிர்த்­தி­ருந்­தது.

அவ்­வாறு அவர்கள் செய்­யாத குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டி­ருப்பின் அதன் விளைவு முழு நாட்டு முஸ்­லிம்­க­ளையும் வேறு வித­மாக பாதித்­தி­ருக்­கலாம். எனினும் குறித்த இந்­தோ­னே­ஷிய பிர­ஜைகள் சார்பில் நீதி­மன்றில் ஆஜ­ராகும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணிகள் குழு­வினர், பொலி­ஸாரின் குறித்த நிலைப்­பாட்டை நிரா­க­ரித்­துள்­ளனர்.
செய்­யாத குற்­றத்தை ஏற்க முடி­யாது எனவும், அவ்­வா­றெனில் குற்றப் பத்­தி­ரி­கையை தாக்கல் செய்தால் சட்ட ரீதியாக அதனை எதிர்க்கொள்ள தயார் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான பின்னணியிலேயே, இந்த சதி தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கும் தகவல் கிடைத்துள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த நிலையிலேயே அவரின் ஆலோசனைக்கு அமைய 16 ஆம் திகதி வழக்கில், வழமையாக மன்றில் ஆஜராகும் நுவரெலிய பொலிஸ் அதிகாரிகளை தவிர்த்து, மத்திய மாகாண பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதானியாக செயற்படும் உதவி பொலிஸ் அத்தியட்சர் மன்றுக்கு அனுப்பப்பட்டு, கைது செய்யப்பட்டவர்கள் எந்த குற்றமும் அற்றவர்கள் எனபதை அறிவித்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இந்த நிலைமை மிக ஆபத்தானது. நுவரெலியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியின் தேவைக்காக இவ்வாறு நடந்து கொண்டார், அதன் பின்னணி என்பன குறித்து பொலிஸ் திணைக்களம் ஆராய வேண்டி உள்ளதுடன், முஸ்லிம் சமூகமும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகும் போது விழிப்புடன் செயற்பட வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.