பத்தாவது பாராளுமன்றில் முஸ்லிம் பிரதிநிதித்துவம்

0 13

எஸ்.என்.எம்.சுஹைல்

இலங்கை ஜன­நா­யக சோசலிச குடி­ய­ரசின் 10 ஆவது பாரா­ளு­மன்­றத்தின் தேசியப் பட்­டியல் உறுப்­பி­னர்­க­ளாக கடந்த திங்­க­ளன்று 5 பேர் பதவிப் பிர­மாணம் செய்­து­கொண்­டனர். இத­னை­ய­டுத்து, அனைத்து கட்­சி­களின் தேசியப் பட்­டியல் உறுப்­பி­னர்கள் அடங்­க­லாக 225 பேருக்கான பாரா­ளு­மன்ற கதிரைகள் பூர்த்­தி­யா­கின. இதற்கமைய புதிய ஜன­நா­யக முன்­னணி மற்றும் ஐக்­கிய மக்கள் கூட்­டணி என்­பன தேசியப் பட்­டியல் பிர­தி­நி­தி­களை நிய­மித்த பிறகு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் தொகை 22 ஆக உயர்­வ­டைந்­தது.

இலங்கை சனத்­தொ­கையில் முஸ்­லிம்கள் 9.7 வீதம் (2012 சனத்­தொகை மதிப்­பீட்­டின்­படி) ஆகும். பத்­தா­வது பாரா­ளு­மன்றில் 22 உறுப்­பி­னர்கள் தெரிவானதை­ய­டுத்து பாரா­ளு­மன்றில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வமும் 9.8 வீத­மா­கி­யுள்ளது. 12 வரு­டங்­க­ளுக்கு முந்­தைய சனத்­தொகை கணக்­கெ­டுப்­புக்கும் தற்­போ­துள்ள முஸ்லிம் சனத்­தொ­கைக்கும் தசம அடிப்­ப­டை­யி­லான வித்­தி­யா­சங்கள் இருக்க வாய்ப்பு இருக்­கி­றது. அத்­தோடு, முஸ்லிம் வாக்­காளர் தொகை, வாக்­க­ளித்த முஸ்­லிம்­களின் தொகை மற்றும் செல்­லு­ப­டி­யான வாக்­குகள் என்­ப­வற்றில் வித்­தி­ய­சங்கள் இருக்க வாய்ப்­புண்டு.

ஆளும் தேசிய மக்கள் சக்தி ஊடா­கவே அதி­க­மான முஸ்லிம் பிர­தி­நி­திகள் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வா­கினர். கண்டி மாவட்­டத்தில் இரு­வரும், கொழும்பு, கம்­பஹா, குரு­நாகல், புத்­தளம் மற்றும் மாத்­தறை மாவட்­டங்­க­ளி­லி­ருந்து தலா ஒரு­வ­ரு­மாக நேர­டி­யாக முஸ்லிம் பிர­தி­நி­திகள் தே.ம.ச. ஊடாக வெற்றி பெற்­றனர். எனினும், முஸ்­லிம்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகா­ணத்தில் ஆளும் கட்­சிக்கு முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை உறுதி செய்ய முடி­ய­வில்லை. இந்­நி­லையில், அக்­கட்­சிக்கு கிடைக்­கப்­பட்ட 18 தேசியப் பட்­டி­யலில் ஒரு முஸ்லிம் உள்­ளீர்க்­கப்­பட்­டுள்ளார். அதன்­படி, தேர்­தலில் திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் போட்­டி­யிட்டு தோல்வி அடைந்த ஆதம்­பா­வா­வுக்கு மாத்­திரம் தேசியப் பட்­டியல் நிய­மனம் வழங்­கப்­பட்­டது. எது எவ்­வா­றா­யினும், கடந்த 2020 ஆகஸ்ட்டில் நடை­பெற்ற பொதுத் தேர்­தலில் போட்­டி­யிட்ட தேசிய மக்கள் சக்தி மூலம் எந்­த­வொரு முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வமும் கிடைக்­காத நிலையில் இம்­முறை அக்­கட்சி பூச்­சி­யத்­தி­லி­ருந்து எட்­டாக தனது முஸ்லிம் பாரா­ளு­மன்றப் பிர­தி­நி­தித்­து­வத்தை உயர்த்­தி­யி­ருக்­கி­றது.

கட்சிகள் அடிப்படையில் பாராளுமன்றை
பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் உறுப்பினர்கள்
கட்சிகள் அடிப்படையில் வாக்கெடுப்பு மூலம் தெரிவான முஸ்லிம் உறுப்பினர்கள்

அடுத்­த­ப­டி­யாக ஐக்­கிய மக்கள் கூட்­டணி ஊடாக 6 முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் தேர்தல் மூலம் நேர­டி­யாக பெற முடிந்­தது. அக்­கூட்­ட­ணியின் தலைமைக் கட்­சி­யான ஐக்­கிய மக்கள் சக்தி நேர­டி­யாக 4 பிர­தி­நி­தித்­து­வத்தை பெற்­றது. கொழும்பில் இரு­வரும், திரு­கோ­ண­மலை மற்றும் கேகாலை மாவட்­டங்கள் ஊடாக ஐ.ம.ச. நேரடி பிர­தி­நி­தித்­து­வத்தை பெற்­றது. எனினும், கடந்த 2020 பொதுத் தோர்­தலில் 5 நேரடி பிர­தி­நி­தித்­துவம் உறுதி செய்­யப்­பட்ட நிலையில் இம்­முறை கண்டி மாவட்ட நேரடிப் பிர­தி­நி­தித்­து­வத்தை ஐ.ம.ச. இழந்­துள்­ளது. கூட்­டணி ஊடாக முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் என்­ப­னவும் வன்­னி­யிலும் கண்­டி­யிலும் தலா ஒவ்­வொரு பிர­தி­நி­தித்­து­வத்தை உறுதி செய்­தன. எனினும், கடந்த பொதுத் தேர்­தலில் திரு­கோ­ண­மலை, அநு­ரா­த­புரம் ஆகிய மாவட்­டங்­களில் இந்த கூட்­டணி ஊடாக முஸ்லிம் கட்­சிகள் பெற்றுக் கொண்ட பிர­தி­நி­தித்­துவம் இழக்­கப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு கட்சிகளின் தேசியப்பட்டியல் ஒதுக்கீடு

இது இவ்­வா­றி­ருக்க, தேசியப் பட்­டியல் ஊடாக ஐக்­கிய மக்கள் கூட்­டணி இரு பிர­தி­நி­தித்­து­வத்தை முஸ்லிம் சமூ­கத்­திற்கு வழங்­கி­யி­ருக்­கி­றது. கூட்­டணி கட்­சி­க­ளான மு.கா.வுக்கும், அ.இ.ம.கா.வுக்கும் தனக்கு கிடைக்­கப்­பெற்ற 5 தேசியப் பட்­டி­யலில் இரண்டை பகிர்ந்­த­ளித்­தது. கடந்த 9 ஆவது பாரா­ளு­மன்றில் தமக்கு கிடைக்­கப்­பெற்ற 7 தேசியப் பட்­டி­யலில் ஒன்றை முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கி­யி­ருந்­தது. எனினும், இம்­முறை ஐந்தில் இரண்டு வழங்­கப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­சுக்கு திகா­ம­டுல்ல மற்றும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டங்­களில் தலா ஒவ்­வொரு பிர­தி­நி­தித்­துவங்கள் கிடைத்­தன. அத்­துடன், ஒரு தேசி­யப்­பட்­டி­யலும் ஒதுக்­கப்­பட்­டன.

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் அம்­பாறை மாவட்­டத்தில் ஒற்றை பிர­தி­நி­தித்­து­வத்தை பெற்­றுக்­கொண்­டது. அத்­துடன், இலங்கை தொழில் கட்சி வன்னி மாவட்­டத்தில் ஒரு பிர­தி­நித்­துவம் (மஸ்தான்) பெற்­றது.

சிலிண்டர் சின்­னத்தில் தேர்­தலில் கள­மி­றங்­கிய ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான புதிய ஜன­நா­யக முன்­னணி சார்பில் எந்­த­வொரு முஸ்லிம் பிர­தி­நி­தியும் பாரா­ளு­மன்­றுக்கு தெரி­வா­காத நிலையில் அக்­கட்­சிக்கு கிடைத்த இரண்டு தேசியப் பட்­டி­யலில் ஒன்றை முஸ்லிம் சமூ­கத்­திற்கு அந்த கூட்­டணி வழங்­கி­யுள்­ளது.

இவ்­வாறு அனைத்துக் கட்­சி­க­ளிலும் மொத்­த­மாக நேர­டி­யாக வாக்­க­ளிப்பு மூலம் 17 மக்கள் பிர­தி­நி­திகள் தெரி­வா­கினர். அத்­தோடு, கட்­சி­க­ளுக்கு கிடைத்த தேசியப் பட்­டியல் ஊடாக அனைத்துக் கட்­சி­க­ளி­லு­மாக 5 பேர் தேசியப் பட்­டியல் ஊடாக மக்கள் பிர­தி­நி­தி­க­ளாக தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.

விகிதாசார தேர்தல் முறை மூலமான பாராளுமன்ற முஸ்லிம் பிரதிநிதித்துவம். 1989 – 2024

தேசிய மக்கள் சக்­தியில் 159 பிர­தி­நி­தி­களில் 8 பேர் முஸ்­லிம்­க­ளாவர். இது, அக்­கட்­சியில் தெரிவு செய்­யப்­பட்ட மக்கள் பிர­தி­நி­தி­களில் நூற்­றுக்கு 5.03 % முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளாவர். நேர­டி­யாக வாக்­க­ளிப்பு மூலம் தெரி­வான 141 பேரில் 7 பேர் அதா­வது, நூற்­றுக்கு 4.96 % இனர் முஸ்­லிம்கள். தேசி­யப்­பட்­டியல் ஊடாக 18 இல் ஒன்று முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது. பட்­டியல் உறுப்­பி­னர்­களில் 5.55 வீதம் முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய மக்கள் கூட்­ட­ணியின் 40 பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தி­களில் 8 பேர் முஸ்­லிம்­க­ளாவர், இது நூற்­றுக்கு 20 வீத­மாகும். அத்­தோடு, நேர­டி­யாக தெரி­வான 35 பேரில் 6 பேர் முஸ்­லிம்­க­ளாவர், இது 17.14 வீத­மாகும். அக்­கூட்­ட­ணிக்கு கிடைக்­கப்­பெற்ற ஐந்து தேசியப் பட்­டி­யலில் இரண்டு, அதா­வது நூற்­றுக்கு 40 வீதத்தை முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

10 ஆவது பாராளுமன்றில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்ட விதம் முழு விபரங்களுடன்

மு.கா.வுக்கு கிடைக்­கப்­பெற்ற 2 பிர­தி­நி­தித்­து­வமும் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் அத்­துடன் தேசியப் பட்­டி­யலின் ஊடா­கவும் முஸ்லிம் பிர­தி­நிதி பாரா­ளு­மன்று தெரி­வா­கினார். அதேபோல், அ.இ.ம.கா. மற்றும் இ.தொ.க. மூலம் ஒரு முஸ்லிம் பிர­திநிதி என அக்­கட்­சிகள் ஊடாக நேர­டி­யாக தெரி­வா­ன­வர்கள் 100 வீத முஸ்லிம் பிர­தி­நி­தித்து­வ­மாகும்.
எனினும், புதிய ஜன­நா­யக முன்­னணி மூன்று ஆச­னங்­களை நேர­டி­யாக பெற்­றுக்­கொண்­டது. அவர்­க­ளுக்கு முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் நேர­டி­யாக கிடைக்­கா­த­போ­திலும் அக்­கட்­சிக்கு கிடைத்த இரண்டு தேசியப் பட்­டி­யலில் ஒன்றை முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கி­யது. அக்­கட்சி தமக்கு தேசியப் பட்­டி­யலில் 50 வீதத்தை முஸ்லிம் சமூ­கத்­திற்கு ஒதுக்­கி­யுள்­ளது.

அத்­தோடு, மொத்­த­மாக நேர­டி­யாக தெரி­வான 196 உறுப்­பி­னர்­களில் 17 முஸ்லிம் பிர­தி­நி­திகள் என்­பது 8.67 வீத­மாகும். அதேபோல், தேசியப் பட்­டியல் ஊடாக தெரி­வான மொத்த முஸ்லிம் உறுப்­பி­னர்கள் தொகை ஐந்து. இது, 29 மொத்த தேசி­யப்­பட்­டியல் பிர­தி­நி­தித்­து­வத்தில் ஐந்து வீத­மாகும். இவ்­வாறு தெரி­வான 225 பேரில் 22 முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் மொத்த உறுப்­பி­னர்­களில் 9.78 வீதத்தை காட்டி நிற்­கி­றது. எனவே, தற்­போ­தைய இலங்கை முஸ்லிம் சனத்­தொ­கைக்கு ஏற்ப முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் கிடைக்­கப்­பெற்­றுள்­ளதை காண முடி­கி­றது. இதன்படி, இலங்கை முஸ்லிம்களுக்கு விகிதாசார தேர்தல் முறையே மிகவும் சாதகமானதாக அமையும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.

கடந்த 2020, 2015 மற்றும் 2010 பொதுத் தேர்தல்களை பார்க்கிலும் இம்முறை பிரதிநிதித்துவம் அதிகரித்து முஸ்லிம்களின் சனத்தொகைக்கும் ஏற்ப அமைந்துள்ளது. எனினும், 2000, 2001, 2004 ஆம் ஆண்டுகளில் 10 வீதத்திற்கும் அதிகமான பிரதிநிதிகள் பாராளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கின்றனர். குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி அதிகமான முஸ்லிம்களை தேசியப் பட்டியல் ஊடாக உள்ளீர்த்தமையும் முஸ்லிம் காங்கிரஸும் தேசியப் பட்டியலை பெற்றுக் கொண்டதையும் குறிப்பிடலாம். எனினும், விகிதாசார தேர்தல் முறை மூலம் முஸ்லிம் சமூகம் பிரதிநிதித்துவத்தை ஓரளவு உறுதி செய்திருக்கின்றமையை சுட்டிக்காட்டலாம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.